news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அறிவுசார் மூலதனம் இல்லாமல் இலட்சியத்தை அடைய முடியாது. தொழில்நுட்பம், உற்பத்தி, எண்ம மாற்றம், .. உள்ளிட்ட களங்களில் உலகளாவிய தலைமைக்கு நாடு விரும்புகிறது. வேலைவாய்ப்பைத் தேட வேண்டும் என நாடு எதிர்பார்க்கவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சியைத் தயாரிப்புகளாகவும், சிந்தனைகளை நிறுவனங்களாகவும், அறிவைச் சமூக தாக்கமாகவும் மாற்றும் புதுமையாளர்கள் நாட்டுக்குத் தேவை. வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தல்ல; அது ஒரு சமூகப் பொறுப்பு. கல்விக்கான .. மாநாடு டெல்லியில் நடத்தப்படுகிறது. தற்போது .. வேகமாக வளர்கிறது. அதன் செல்வாக்கு என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பது முக்கியம். .. பயன்படுத்திக் கல்வித்துறைக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை முனைவர் பட்டதாரிகள் சிந்திக்கவேண்டும்.”

திருமதி. அகிலா, திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர்

மக்களவையில் குற்றப் பதிவுகள் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவேண்டும். தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி உடனே தங்கள் உறுப்பினர் பதவியை இழக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் உச்சநீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டுள்ளன. உங்கள் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நன்கு சிந்தியுங்கள். தேர்தலில் போட்டியிடுபவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்நாட்டின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. வாக்குப்பதிவு பொத்தானை அழுத்தும்போது இதைக் கவனித்தில் கொண்டு செயல்படவேண்டும்.”

திருமிகு. கோபாலசுவாமி, மேனாள் தேர்தல் தலைமை ஆணையர்

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்..ஆரால் சனநாயகப் பங்களிப்பு பலவீனமாகியுள்ளது. இதனால் சரிசமமான தேர்தல்களம் ஒருசார்புடையதாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கு வங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம் வெளிப்படைத்தன்மையுடன் எஸ்..ஆரை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மேலும் சில வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில், வாக்காளர்களின் ஆவணங்கள் மற்றும் ஆட்சேபங்களைப் பரிசீலனை செய்வதற்கான காலக்கெடு மட்டுமே நீடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவில் தீர்வில்லை. மேற்கு வங்கத்தில் எஸ்..ஆர். நடவடிக்கையால் சிறுபான்மையினர், உள்நாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வீடுகளற்ற ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எஸ்..ஆரால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தேர்தல் ஆணையமே முழுப் பொறுப்பேற்கவேண்டும்.”

திருமிகு. . சிதம்பரம், மேனாள் மத்திய அமைச்சர்