news-details
சிறப்புக்கட்டுரை
போர்முனையில் (உலகம் உன் கையில் – 15)

போர்முனையிலுள்ள இராணுவப் பிரிவு ஒன்றை எதிரி நாட்டினரின் ஏவுகணைகள் துளைக்கும் நிலை;  அங்குள்ள இராணுவ வீரர் ஒருவர் தங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு ரேடியோ மூலம் தகவல் கொடுக்கிறார். சில நொடியில் ஈக்கள் மொய்ப்பது போன்று வெடிகளுடன் சிறிய ட்ரோன்கள் வந்து அங்கிருக்கும் கட்டடங்களைத் துருவி, எதிரிகளிருக்கும் இடத்தைத் தாக்குகின்றன. இது தான் இன்றைய போர்முனை நிலவரம்.

உக்ரைன் நாட்டின் இராணுவம் இன்று நடந்து கொண்டிருக்கும் இரஷ்யா-உக்ரைன் போரில், இதேபோன்று இரஷ்ய எண்ணெய் கிணறுகளை அங்குச் செல்லாமலே தாக்கியதாகக் கூறப்படுகிறதுஉலக வரலாற்றில் பல போர்கள் நடந்தேறின. கடந்த நூற்றாண்டில் உலகளாவிய இரண்டு பெரும் போர்கள் நூற்றாண்டின் இறுதியில் வளைகுடா  போரும் சேர்ந்துகொண்டது. இவை மேலோட்டமாக நாடுகளிடையே ஏற்பட்ட மோதல் என்பதாகப் பார்க்கப்பட்டாலும், ஒரு பின்னணியைக் கொண்டில்லாமல் இல்லை. அடுத்துவரும் இருபது ஆண்டுகளில் நாடுகளிடையே ஏற்படும் மோதல்கள் இதுவரை இருந்தது போலவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் வளங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கொள்கை உடன்பாடின்மை போன்ற காரணங்களுக்காக இருந்தாலும், எவ்வாறு போர்கள் இருக்கப்போகின்றன என்பதைப் புதிய தொழில்நுட்பங்கள், அவைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய நாடுகள் இத்தொழில்நுட்பங்களில் திறன் பெற்று முந்திக்கொள்ளுதல் போன்றவை தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது.

தானியங்கி போர்க்கருவிகள்

.. தொழில்நுட்பம் சார்ந்த போர்க்கருவிகள் காலப்போக்கில் மனிதர்தம் கட்டுப்பாட்டை இயந்திரங்களிடம் விட்டுவிடும் நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. போர்க்கருவிகள்தானியங்கிகள் (Autonomous) என்ற தர்க்கம்  பலர் மனத்தில் இருந்தது; இப்போது .. இயந்திரங்கள் மனித ஆணையில்லாமலேயே செயலாற்றுபவை என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு கட்டத்தில் இராணுவ அமைப்புகளுக்கு இவ்வகைக் கருவிகள் தங்கள் புழக்கத்தில் வந்துவிட்டால் அதைக் கைவிட இயலாத நிலைக்குள்ளாவார்கள் என்பது நடைமுறை. இதேவேகத்தில் இராணுவப் பயன்பாட்டின் .. சமுதாய சட்டம்-ஒழுங்கிற்கு ஊடுருவி விடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இன்று .. தொழில்நுட்ப மொய்க்கும் ட்ரோன்கள், ரோபோக்கள் போன்ற தானியங்கிகள் போர்க்களத்தில் மனிதரால் முடியாதவற்றைச் செய்து, போரின் போக்கை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. நடந்து கொண்டிருக்கும் இரஷ்யா-உக்ரைன் போர் மட்டுமன்றி (2022) .. பொருத்தப்பட்ட ட்ரோன்கள் வெடிகளைச் சுமந்து சென்று எதிரிகளின் நிலைகளைத் தாக்குவதை சிரியா, ஏமன் நாடுகளில் வான்வெளிப் போரிலும் (2024) நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மத்தியகிழக்கு, காசா பகுதிகளில் (2024) இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இதேபோன்ற .. வழிமுறைகள் பயன்படுத்துவது செய்தியாக வந்துகொண்டிருக்கின்றன. பல காலமாகப் புகைந்துகொண்டேயிருந்து, திடீரென்று வெடித்த இஸ்ரேல்-ஈரான் (2025) மோதல் ஒரு பெரும் போரின் ஆரம்பநிலைதான். பாரம்பரியப் போர் போன்று நாட்டின் எல்லைகளில் இல்லாமல், வான்வழித் தாக்குதலே அதிகமாயிருந்ததைக் கண்டோம். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல வல்லரசுகள் இருந்தாலும், தீவிர சமரச முயற்சியில் அவை ஈடுபட முடியவில்லை. ஒருபுறம் சுயநலம்; மறுபுறம் போரிடும் நாடுகளை மேம்பட்ட ஆயுதங்கள் வழிநடத்தின என்பதாகவே இருந்தது. இந்நூற்றாண்டின் தொடக்கப்போர்கள் வான்வெளித் தாக்குதலைச் சார்ந்த ட்ரோன்கள், ஏவுகலன்கள், ஏவுகணைகள் போன்றவை சைபர் தாக்குதல் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தின.

.. போர் ஆயுதங்களின் விளைவுகள்

..-யினால் வழிநடத்தப்படும் ட்ரோன்கள் மனிதரின்  கட்டுப்பாடில்லாமலே தன்னிச்சையாக இயங்கும் நிலையில் சில நேரங்களில் எந்தத் தர்க்க முறையும் இல்லாமல் போர்முனையில் போரை முடுக்கிவிடும் தந்திரங்களைப் பரிந்துரைக்கக்கூடும் என்ற திறன்களையும் பெற்றுள்ளன. இதனால் போரைத் துரிதப்படுத்துவது மட்டுமன்றி, மக்களுக்கும் சூழலுக்கும் கட்டிப்பாடில்லாத, வரையறையற்ற இழப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

.. தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மிஞ்சிய செயலாற்றல் கட்டத்தை அடைந்து, தகாத முறையில் பயன்படுத்த நேரிடுவது அதிகம் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே விஞ்ஞான வளர்ச்சி வேகத்தில் ஒரு கட்டத்தில் இயந்திரம், மனிதனை மிஞ்சிவிடலாமென்ற சந்தேகமும், அச்சமும் பலர் மனத்தில் உள்ள நிலையில், .. போர்முனைத் தொழில்நுட்பம் நாடுகளுக்கிடையே மற்றும் சமுதாயத்தினரிடையே உள்ள உறவைப் பெரிதும் பாதிப்படையச் செய்யுமென்றும் கருதப்படுகிறது. 15-20 ஆண்டுகளுக்குப் பின்னான நாள்களை நினைத்துப் பார்ப்போமென்றால் இன்று நாம் அபாயக் கட்டத்தின் விளிம்பில் இருக்கிறோமோ? என்ற பயம் உண்டாகிறது என்று தனியார் அமைப்பான அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வு கூடத்தின் உதவித் தலைமை அதிகாரி கூறுகிறார்.

தானியங்கிப் போராயுதங்கள் - மனித கட்டுப்பாடு?

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே போர்த் தளவாடங்களில் ..-யின் பயன்பாடு இருந்தாலும், இப்போது வேகமெடுத்து, அதற்கான முதலீடும் அதிகரித்து வருகிறது. ஒரு போராயுதம் தன்னாளுமை படைத்ததா? இல்லையா? என்பது வாதத்திற்குரியதாக இருந்தாலும், இயந்திரம் இன்று மனிதத் தூண்டுதல் இல்லாமலே முடிவெடுக்கும் திறன் பெற்றிருக்கிறது என்பதை மறுக்கமுடியாதுஉலகளவில் .. சார்ந்த இராணுவ ட்ரோன் மற்றும் விமானி இல்லாத போர் விமானங்கள், நீருக்குள் பயணிக்கும் செயலிகள் உற்பத்தியில் நிறுவனங்கள் கழுத்தை நெரிக்கும் போட்டியில் முதலீடு செய்வது, இதன் அபார வளர்ச்சியையும், பெரும் தொழில் தளமாக உருவெடுத்து விட்டதையும் காட்டுகிறது. இந்த முன்னேற்றம் விஞ்ஞான சாதனையாக இருந்தாலும், உலக அமைதிக்குக் கவலையளிப்பதாக உணரப்படுகிறது. இதில் மற்றோர் அனுபவம் என்னவென்றால், அண்மையில் நடந்த போரில் (2024), ஒரு நாடு, மென்பொருள் இயக்கத்தில் 10% பிழை இருக்கும் என்று தெரிந்தும், .. தரவுகளை நம்பிப் போரில் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சில .. சாதனங்கள் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவது இன்று  நடைமுறையிலிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. .. சார்ந்த கருவிகளின்  தன்மையைப் பற்றி ஆராயும்போது இன்று கூறப்படுவது:  “முடிவெடுப்பதில் எப்போதும் மனிதத் தலையீடு இருக்கவேண்டும்.” அதாவது இயந்திரத்திற்கு முழு கட்டுப்பாட்டைக் கொடுக்கக்கூடாது என்பதுஇந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் ஓர் உதாரணத்தை முன்வைக்கின்றனர்: ஓர் ஓட்டுநர் இல்லாத மோட்டார் வாகனத்தில் ஒரு மனித ஓட்டுநரோடு பயணிக்கும்போது, ஏதாவது நெருக்கடியில் மனித ஓட்டுநர் அந்த வாகனக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வார் என்பது பொதுவான யூகம். ஆனால், ஒருவேளை அந்த வாகனம் தானாகத் தவறும்போது அல்லது ஓட்டுநரை வசப்படுத்திவிட்டால் அந்த நிலைக்கு யார் பொறுப்பேற்பது? அல்லது  எதிர்பாராத விதமாகத் தானியங்கும் மோட்டார் வாகனம் விபத்து நேரும் சடுதியில், அந்த மோட்டார் ஓட்டுநரிடம் தன் கட்டுப்பாட்டைக் கொடுத்து விட்டால் யார் தவறிழைப்பதாகக் கருதுவது? இதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுவது: “ஒரு மனிதர் அந்த இருக்கையில் இருப்பதினால், விபத்து நேரிட்டால் குற்றம் சுமத்த அவர் கிடைப்பாரல்லவா?”

.. நடைமுறையில் இன்று இராணுவத்தில் பல உருவங்களில் இயங்கத் தொடங்கிவிட்டது. தானியங்கி வாகனங்கள், கப்பல்கள், ட்ரோன்கள், விண்வெளிக் கலங்கள், ஆயுதங்கள், .. விமான ஓட்டி, .. விமானக் கட்டுப்பாட்டு அறை மட்டுமன்றி ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், செயற்கைக்கோள் மேலாண்மை என்று கூறிக்கொண்டேபோகலாம்.

எந்த நாட்டிலும் இராணுவம் என்பது எப்போதும் தயார் நிலையிலும் புதுப்பித்துக்கொண்டும் இருக்கும் பிரிவு. .. - அல்கோரிதம் அவ்வப்போது ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் அவை உண்டாகும் பின்னணி குறித்துத் தரவுகள் அடிப்படையில் முன்கூட்டியே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.

போர்முனையில் ட்ரோன்ஸ், இராக்கெட்டுகள் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்ட இந்நாள்களில், போர்முனைக்குச் செல்லும் போர் வீரர்களின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது என்பதை இப்போது நடக்கும் உச்சகட்ட இஸ்ரேல்-ஈரான் மோதலில் (2024) இந்நாடுகளின் போர் வீரர்கள் எல்லையில் இருப்பதைக்காட்டிலும் உள்நாட்டில் கவனம் செலுத்துவதைப் பார்க்கமுடிந்தது.

இப்படியாக, இலக்குகளைத் திரும்பத் திரும்பத் தாக்குதல் நடத்துதல் தொடங்கி, சென்ஸார்ஸ் துணையோடு கடினமான தரைப்பகுதிகள் வரை போர்க்களம் புதிய தொழில்நுட்பத்தோடு முன்னெடுப்பதில் .. பெரும் பங்கு வகிக்கிறது.

சைபர் போர்

சைபர் தாக்குதலிலிருந்து அதிமுக்கிய இரகசிய இராணுவத் தரவுகளைப் பாதுகாப்பது, இராணுவத்தினரை முகஜாடையில் அறிதல், இராணுவப் போர் வீரர்களுக்குத் தடையில்லா அனைத்து ஆயுதம், உணவு, உடை முதலியவைகளைத் தரவுகள் அடிப்படையில் கண்காணிக்க .. உதவுகிறது. தரை, வான், கடல் என்றிருந்த காலம் சென்று, சைபர் முனையிலும் வேகமெடுத்து போர்முனையில், சைபர் தாக்குதல் மூலம் எதிரியின் ஆயுதக் கருவிகளைச் செயலிழக்கச் செய்தல், பலவீனப்படுத்துதல் போன்றவை பயன்பாட்டில் இருக்குமென்பதை இஸ்ரேல்-ஈரான் போர் (2025) உறுதி செய்தது. அண்மையில் இங்கிலாந்து இராணுவத்தினரின் தரவுகள் களவாடப்பட்டதும், அது சீனாவின் கைவரிசையாய் இருக்கலாமென்று இங்கிலாந்து யூகித்தாலும் சீனா மறுத்திருக்கிறது.

.நா.வின் வரம்புகளைப் பொருட்படுத்தாமல், அணு ஆயுதச் சோதனையை ஈரான் தொடர்ந்து வரும் நிலையில், ‘ஸ்டக்ஸ்நெட்என்ற உயர்தர கணினி வைரஸ் புரோகிராம் வழியாக ஈரான் நாட்டின் அணு உலை சோதனைச் சாலையில் கண்காணிப்போருக்குத் தெரியாமல் ஊடுருவச் செய்யப்பட்டு, அணு சோதனை சேதம் அடைந்து, இயக்கம் தடைபட்டது. ஈரான் அணு சோதனையை நேரடியாக எதிர்த்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், அந்நாடுகள் மறுத்துவிட்டன. இத்தாக்குதல் டிஜிட்டல் கட்டமைப்பு வளர்ச்சியையும், பிற நாட்டின்மீது மறைமுகத்தாக்குதலில் ஈடுபடுவதற்கு நெறிமுறைகள் இல்லை என்பதையும் காட்டுவதோடு, எவ்வாறு சிறிய கோட் (Code) பெரிய போரை நிறுத்தும் திறன் பெற்றிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

விண்ணில் ஆயுதங்கள்

நாடுகளுக்கிடையே தரை, கடல் வழியாக யுத்தங்கள் நடந்த காலம் சென்று, இப்போது பெரும்பாலும் வானில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. போராயுதங்களைக் கண்காணிப்பதில் வான் வழிச் செயற்கைக்கோள்களின் செயலாற்றலும் பெருகிவிட்டன. நாளுக்கு நாள் நாடுகளின் தேவைக்கும், வணிகப் பயன்பாட்டிற்கும் செயற்கைக் கோள்களினால் விண்வெளி சூழப்பட்டு வருகிறது.

2022-ஆம் ஆண்டு தொடங்கிய இரஷ்யா-உக்ரைன் போரின்போது, இரஷ்ய இராணுவம் தரைமார்க்கத் தாக்குதலைத் தொடுக்க ஒருமணி நேரத்திற்கு முன்னரே, உக்ரைன் நாட்டின் தொழில்நுட்ப மையத்தை முடக்கிவிட்டதை விண்வெளி ஆயுதங்களின் திறனுக்குச் சான்றாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா, இரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்களுக்குத் தற்காப்பு என்று கூறி அதிவேக விண்வெளி ஆயுதப் போட்டியில் இறங்கியிருப்பது விண்வெளியை முற்றிலும் ஆயுதமயமாக்கும் நாள்கள் தொலைவில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. இப்போட்டியில் மேலும் பல நாடுகள் வரிசைகட்டிக் கொண்டிருப்பது வருங்காலங்களில் விண்வெளியில் அதிகளவில் போர் நிகழ வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

இரஷ்யா 2050-க்குள் 6-வது தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிப் பயன்பாட்டில் கொண்டுவரும் என்று இரஷ்ய செய்திப் பிரிவானடாஸ்கூறுகிறது. இது மனிதர் அல்லது மனிதரல்லாத விமானமாயிருக்கும். ஜப்பான், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளும் 6-வது தலைமுறை விமானத்தைடெம்பஸ்ட்என்ற பெயரில் உருவாக்கவிருக்கின்றன. மற்றொருபுறம் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் என்ற நாடுகள் தனியாக இதில் இறங்கியுள்ளன.

போர் மூட்டம்

வார் க்ளௌட்என்பது ‘Dictionaryபொருள்படிசீக்கிரத்தில் போர் மூள்வதற்கான அறிகுறிகள்.’ கணினி வட்டாரத்தில்வார் க்ளவுட்என்பதுசெர்வர்ஸ்வலைத்தள உதவியுடன் வகைப்படுத்தப்பட்ட இராணுவத் தரவுகளை இணையதளத்தில் சேமித்து, ஆய்வு செய்வது. இது  ‘க்ளௌட் கம்ப்யுடிங்போன்று வேறு எங்கேயோ ஓரிடத்தில் சேமித்து வைத்திருக்கும் தரவுகளைப் பயன்படுத்தப்படும் வழிமுறை. இத்திறனைக் கொண்டு .. அடிப்படையில் போர்த் திட்டங்கள் வகுக்கலாம்.

க்ளவுட்உலகளாவிய கட்டமைப்பின் அடிப்படை அங்கம் என்பதால் போர்க்களத்திலிருக்கும் போர்வீரருக்குத் தேவையான இராணுவத் தொழில்நுட்பத் தரவுகளையும் தொழில்நுட்பங்களையும், உதாரணமாக, இராணுவத்தினருக்கு மிக சக்திவாய்ந்த .. கணினிகளைக் கொடுப்பதன் மூலம் போர்க்களத்திலிருப்போர் அவர்களே ஏற்ற திட்டங்களைத் தீட்டவும், வகைப்படுத்தப்பட்ட இராணுவ இரகசியங்களை அறிந்துகொள்ளவும் முடியும். இவ்வழிமுறைகள் கடுமையாக மறைக்கப்பட்ட திரைச் சொற்களால் எதிரிகளின் கையில் விழாதபடி அமைந்திருக்கும்.