கல்வி என்பது மனிதனை அறிவாளியாகவும் நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் வளர்க்கும் ஒரு சமூக அமைப்பு. கல்விப் பணியில் ஏழை எளியோர் நலன்பெற எண்ணற்ற சபைகள் இந்தியாவில் கால்பதித்து, கல்விப் பணி ஆற்றினாலும் 19-ஆம் நூற்றாண்டில் தனது 20-ஆம் வயதில் ஒன்றரை மாதக் குழந்தையுடன் தன் வாழ்விலும், செப வாழ்விலும், ஆழ்தியானத்திலும் தன்னையே முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணித்து, துறவு வாழ்வு வாழப் பல முயற்சிகளை முன்னெடுத்து, கேரளாவில் பெண்களுக்கான துறவு மடத்தினைத் தனது சகோதரி தெரேசியா மற்றும் மகள் அன்னா ஆகியோருடன் 1866-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் அன்னை அருளாளர் எலிஸ்வாவால் துவங்கப்பட்டது ‘பாதுகை அணியா மூன்றாம் நிலை கார்மல் சபை.’ இச்சபையே கேரளாவில் பெண்களுக்காக நிறுவப்பட்ட முதல் சபை.
சிறு
பருவத்தில் ‘களரி’ என்று
அழைக்கப்படும் திண்ணைப் பள்ளி பள்ளியிலும், தனது சொந்த முயற்சியினாலும் தன் சகோதரர்களின் வழிபெற்ற கல்வியினை உலகினர் காணச் செய்ய மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்க முடியாத பெண்களின் நிலையினை உணர்ந்து, விளிம்பு நிலைப் பெண்கள் வெளிச்சம் பெற, விழி
இழந்தோருக்கு வழியாக,
ஒளி இழந்தோருக்கு வாழ்வில் ஒளியேற்ற 1868, ஜூலை
20 அன்று கேரளாவில்
கூனமாவு என்ற இடத்தில் பெண்கள் கல்வி அறிவு பெற, வீர மங்கையர்களாய் வாழ்வில் வளம்பெறத் தொடங்கப்பட்டதே கேரளாவில்
பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடம். தொடர்ந்து பல பள்ளிகளை நிறுவினார்
அன்னை எலிஸ்வா.
பார்
போற்றும் நிலையில் பார்ப்போர் வியக்க
1400 சகோதரிகளையும்,
220 இல்லங்களையும் 11
மறைமாநிலங்களாகக் கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு எல்லையில்லா வழி பல வகுத்து, திறம்படக்
கல்வியில் வீரமங்கையர்களைக்
காணப் பணியாற்றி வருகிறது எம் சபை.
எம்
நிறுவனங்களில் கல்வி பயின்று, சமூக வாழ்விலும் சீர்பெற்று, பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்குகின்றனர் என்று
கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
விளிம்பு
நிலையில் இருக்கக்கூடிய பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட எண்ணற்ற பணிகளை எம் சபை முன்னெடுத்திருக்கிறது.
பள்ளிக்
கல்வியாக இருக்கலாம்; எதிர்நோக்கிய கல்வியாக இருக்கலாம்; சேமிக்கக்கூடிய கல்வியாக இருக்கலாம்; உடல் நலத்தைப் பாதுகாக்கக்கூடிய கல்வியாக இருக்கலாம். ஒட்டுமொத்த ஆளுமையிலும் வளர்ந்து வாழ்வாய் வாழ்ந்திட வழித்தடம் பதிக்கின்றது எம் சபை.
பெண்களுக்கான
பள்ளிக்கூடமும், பெண்களுக்கான கல்லூரிகளும், பெண்களுக்கான மருத்துவமனைகளும், பெண்களுக்கான விடுதிகளும் அமைத்து எண்ணற்றப் பெண் குழந்தைகள் ஏட்டுக்கல்வி பெற்று, அதன் மூலம் வாழ்க்கையில் கல்வியில் சிறந்து, சமூக வாழ்வில் வாழ்வாங்கு வாழ்ந்திட வழிகாட்டியாய்த் திகழ்கிறது எம் சபை!
வளர்க எம்
சபையின்
கல்விப்பணி!