“எதிர்காலத் தலைமுறையைப் பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவேண்டும்.”
உயர்திரு. மு.க.
ஸ்டாலின்,
தமிழ்நாடு முதல்வர்
“பார்வையாளர்களை
ஈர்க்கவும், நமது பாரம்பரியப் பொறுமையை வெளிப்படுத்தவும் இசையை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இசையை உருவாக்குவது ஓர் அம்சம். அதேபோல, அதை உலகம் இரசிக்கும் வகையில் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானது. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை என எதுவாக இருந்தாலும்,
அனைத்தும் பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருந்து வருகிறது.”
இசை அமைப்பாளர்
ஏ.ஆர்.
ரஹ்மான்
“அனைத்து
நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்பதை உலகளாவிய நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நாடும் காலநிலை அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க உரிய கவனத்துடன் செயல்படவேண்டும்.
எந்தவொரு
நாடும், தனது நிலப்பரப்பை மற்றொரு நாட்டின் நிலப்பரப்புக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த உரிமை இல்லை. சுற்றுச்சுழல் தொடர்பாக ஒவ்வொரு நாடும் இதர நாடுகளை மதிப்பதும், சுற்றுச்சுழல் பாதிப்பைத் தடுப்பதும் தங்கள் பொறுப்பு, கடமையாகக் கருதவேண்டும். காலநிலை மாற்றத்தில் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து நாடுகளுக்கிடையே கூட்டுப் பொறுப்பும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.”
உலகளாவிய நீதிமன்ற
நீதிபதி
லியோனார்டோ
நெமர்
கால்டீரா
பிராண்ட்