துன்ப துயரங்கள் இல்லாத கிறித்தவ வாழ்வைத் தேடுகிறது இன்றைய உலகம். இத்தகையோருக்குச் சவாலாக, தூய உதாரணமாக கேரளாவில் மலர்ந்து நறுமணம் வீசும் துறவியாக வலம் வந்து, எம் கார்மல் தோட்டத்தை அலங்கரித்தவர்தான் எம் சபை நிறுவுநர் அன்னை எலிஸ்வா.
கேரள மண்ணில்
மலர்ந்த
தூய
மலர்
“ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று தளிர்விடும். அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும்”
(எசாயா 11:1).
கேரள
மாநிலத்தில் ஓச்சன்துருத்துவிலுள்ள குருஸ்மிலாகிரிஸ் பங்கில் தொம்மன் மற்றும் தாண்டா என்பவர்களுக்கு 15.10.1831-இல் பக்தியுள்ள குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர்தான் அன்னை எலிஸ்வா. ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’
என்பதற்கிணங்க
சிறுவயதிலேயே பக்தி முயற்சிகள், ஏழை எளியோருக்குச் செய்யும் சேவை ஆகியவற்றில் மகிழ்ச்சி கண்டார்.
துறவறப் பயணத்திற்குள்
புனித
நிலை
சிறுபிள்ளைகளுக்குச்
சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கேரளாவில் இருந்த சூழ்நிலையில் பிறரன்பு, தன்னடக்கம், இரக்கம் ஆகிய போற்றுதற்குரிய குணங்களைப் பெற்றிருந்த இவர் ஏழைகளில் இயேசுவைக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர், பெற்றோரின்
விருப்பத்தால் இல்லற வாழ்வில் இணைந்து அழகான பெண் குழந்தையை ஆண்டவர் வழங்க தன்னுடைய வாழ்க்கைத் துணையின் பிரிவால் துறவறப் பயணம் மேற்கொண்டார். செபம், அமைதி மற்றும் தனிமையில் ‘நிலையிலா இன்பம் கண்டேன், நிலத்திடை எதுவும் வேண்டேன், நலமெல்லாம் நல்கும் இயேசு நாதனுக்குரிமை நானே, என்பது இத்துறவியின் அசையாத அன்பு நிலை.
எதிர்கால நலனைக்
கொண்டு
துறவற
வாழ்வு
துறவற
வாழ்வு என்பது மகிழ்ச்சியின் பயணம் அல்ல; 19-ஆம் நூற்றாண்டில் கேரளத் திரு அவையின் அவசரத் தேவையாக இருந்த பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதநேயம் மற்றும் பற்றின்மை ஆகியவற்றைக் கண்முன் கொண்டு எல்லாவற்றையும் கடவுளுக்காக விட்டுவிட்டு, பல மடங்கு கடவுளிடமிருந்து
பெற்று கடவுளின் பராமரிப்பினால் TOCD இலத்தீன் கிளையின் வளர்ச்சியை, தூய தெரசாவின் கார்மல் சபை (CTC) என்ற பெயரில் தொடர்கிறது.
அன்று
கேரள மண்ணில் மலர்ந்து மணம் வீசிய துறவியின் புனித வாழ்வு எம் CTC தெரேசாவின்
கார்மல் சபை துறவிகளுக்குப் பாதை காட்டும் கலங்கரை விளக்கு என்பது உண்மை. அதிலும், எம் விமலா மறைமாநிலத் துறவிகளுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை ஊட்டுகிறது (மத் 7:24). நல்ல சமாரியனைப் போல் இயேசுவைப் பின்பற்ற ஆற்றல் அளிக்கிறது. இம்மனநிலையில் இயேசுவைப் பின்பற்ற விரைந்து வருவோம், நம் தமிழ் மண்ணில் புனிதம் மலரட்டும்!