news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.02.2026)

கடவுளின் உடனிருப்பு அச்சத்தை நீக்கி மாற்றம், நம்பிக்கை, விசுவாசப் பயணம் மற்றும் உலக ஆசைகளை எதிர்க்கும் துணிவுக்கு அழைக்கிறது.”

சன. 6, திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியில் மறையுரை

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம், திரு அவையை இன்றைய உலகச் சவால்களுக்குப் பதிலளிக்கும் நம்பிக்கை, உரையாடல் மற்றும் பணியின் சமூகமாக மாற்றியது.”

சன. 7, புதன் மறைக்கல்வி உரை

திரு அவை அமைதி, இறைவேண்டல் மற்றும் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து, மக்களை அருளின் வழியில் நடத்தும் சமூகமாக இருக்கவேண்டும்.”

சன. 8, சிறப்புநிலைக் கர்தினால்கள் கூட்டச் சிறப்புத் திருப்பலி மறையுரை

உலகச் சவால்களை உரையாடல், நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் நீதியை முன்வைத்து எதிர்கொள்வோம்.”

சன. 9, உலகம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கிய உரை

இளைஞர்களை அன்பும் நீதியும் வழிநடத்தும் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வோம்.”

சன. 10, யூபிலி ஆண்டு பிரதிநிதிகள் சந்திப்பு

திருமுழுக்கின் மூலம் நம்பிக்கையாளர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு, கடவுளின் அன்பு மற்றும் அருளின் வழியாக ஒருமை பெறுவோம்.”

சன. 11, மூவேளை இறைவேண்டல் உரை