“நாம் அனைவரும் பல செய்திகளில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் சனநாயகம். எந்த ஒரு செய்தியிலும் கருத்து வேறுபாடு இல்லை என்றால், அங்கு சனநாயகம் இருக்காது. அனைவரும் எல்லா நேரங்களிலும் ஒரே கருத்தில் உடன்பட்டால் அது வேறுபாடுகளுக்குதான் வழி வகுக்கும். அதேநேரம், நாம் மாறுபடும் விதம் சம்பந்தப்பட்ட கருத்துகளைச் செம்மைப்படுத்துவதாக இருக்கவேண்டும். கட்டாயத்தின் பேரில் எவரையும் எதிர்க்கக்கூடாது. அணுகு முறையில் நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதுதான் சமூகத்திற்கு நல்லது.”
மாண்புமிகு சி.பி.
இராதாகிருஷ்ணன்,
குடியரசு துணைத் தலைவர்
“இளைஞர்களின்
எதிர்காலத்தைச் சீரழிக்கின்ற போதைப் பொருள்களை நாம் நிச்சயம் ஒழிக்கவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் பயன் கிடைத்திருக்கிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்புகளை உணர்ந்து, அதிலிருந்து வெளியே வர வேண்டும். உடன்
இருப்பவர்கள் அவர்களைத் திருத்தவேண்டும். போதைப் பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அதனை அழிக்க ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும். போதைப்பொருள் வருகின்ற நுழைவாயில்களை அடைக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளுக்கு எல்லாருமே கைகோர்க்க வேண்டும்.”
மாண்புமிகு மு.
க.
ஸ்டாலின்,
தமிழ்நாடு
முதல்வர்
“சமூக
ஊடகங்களால் எந்த அளவுக்கு நன்மையும் பயனும் கிடைக்கின்றனவோ அதே அளவிற்குத் தீமையும் நிறைந்துள்ளது. இதில் முக்கியமானது, சமூக ஊடகங்கள் வாயிலாகப் பயங்கரவாத இயக்கத்தினர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் பக்கம் ஈர்க்கப் பயன்படுத்தும் போக்காகும். இதைத் தடுக்க ஏதுவாக சந்தேகத்திற்கு இடமான சமூக ஊடகக் கணக்குகளின் செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட பலரும் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருக்கப் பாலமாக இருந்தவை சமூக ஊடகத் தளங்களே!”
தமிழ்நாடு காவல்துறை