news-details
சிறப்புக்கட்டுரை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பா.ச.க.வின் கழுகுப் பார்வை!

இந்தியாவில்  28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஐந்து யூனியன் பிரதேசங்களுக்குச் சட்டமன்றங்கள் இல்லை. 20 மாநிலங்களில் பா... ஆள்கிறது. ஒன்பது மாநிலங்களில்இந்தியாகூட்டணி ஆட்சி செய்கிறது. அதில்  மூன்று மாநிலங்களில் காங்கிரஸ்  ஆள்கிறது. என்.டி.. மற்றும்இந்தியாகூட்டணியில் சேராத மிசோரம் மாநிலத்தில்ஜோரம்எனும் மாநிலக்கட்சி ஆள்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இனக் கலவரங்களின்  தொடர்ச்சியாக பா... ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்பட்டு இந்திய அரசியல் அமைப்பின் சட்டப் பிரிவு 356-இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். திட்டப்படி புதிய அரசியல் அமைப்பை, ஆட்சிமுறையை, ஒரே தேர்தலை, பொதுச்சிவில் சட்டத்தைக் கொண்டுவர பா... ஆளாத மாநில சட்ட சபைகளே பெரும் தடைக்கல். அதன் காரணமாக எல்லா மாநிலங்களிலும் பா... ஆட்சி என்ற ஆட்சிவெறியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளது. வட இந்தியாவில் நன்கு கால் ஊன்றிய பா...வுக்குத் தென்னிந்தியா பெரும் சவாலாக  உள்ளது. குறிப்பாக, கேரளம் மற்றும் தமிழ்நாடே முக்கியத் தடைக்கல்.

பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பா... தமிழ்நாடு அரசியலில் தனிக்கவனம் செலுத்தும். வலுவான என்.டி.. கூட்டணியை உருவாக்கிவிடும். “அமித்ஷா தமிழ்நாடு தேர்தல் களத்தைப் புதிய கூட்டணியால் புரட்டிப் போடுவார்என வலதுசாரிகள் ஆருடம் பேசினர். .தி.மு..வைத் தவிர எவரும் பா...வின் என்.டி.. கூட்டணிக்கு நகரவில்லை என்பதே 2026-இன் தமிழ்நாடு தேர்தல் கள எதார்த்தம்.

பீகார் தேர்தல் முடிந்தவுடன் வாரம் ஒருமுறை அமித்ஷா வருவார், நிர்மலா சீத்தாராமன் வருவார், மோடி வருவார் என அரசியல் விமர்சகர்கள் அடித்துக் கூறினார்கள். ஆனால், அவர்களுக்குப் புரியாத புதிர் அரசியல்புதிய  சமூக நீதி  அரசியல் தமிழ்நாட்டில் உள்ளது. சாண் ஏறினால் முழம் இறங்குகிற தமிழ் நாடு பா.. அரசியல், எதற்கும் அசையாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கே ஆட்டம்  காட்டுகிறது. தமிழ்நாட்டில் வலுவான என்.டி.. கூட்டணிக்கான  கட்டாயம் பா...வுக்கு உள்ளது.

2024-பாராளுமன்றத் தேர்தலில்  என்.டி.. கூட்டணியில் இருந்த பா... கட்சி குடும்பச் சண்டையில் கதிகலங்கி நிற்கிறது. அன்புமணி ஐயாவும், சௌமியா அன்புமணி அம்மாவும், தனித்தனி பயணங்களில் பாட்டாளிச் சொந்தங்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், களத்தில் பெரிய ஐயா இராமதாஸ் அவர்களுக்கே செல்வாக்கு என்பது உண்மை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக டி.டி.வி. தினகரனோ, “துரோகி எடப்பாடி முதல்வர் வேட்பாளர் எனும் இடத்தில், எங்களுக்குக் கூட்டணி இல்லை; நானும் அமித்ஷாவிடம் பேசப்போவதில்லை; அமித்ஷாவும் எங்களிடம் பேசமாட்டார்என்று கூட்டணிக்  கதவை  இழுத்து மூடிவிட்டார். ஊருக்கு  பத்து பேர் உள்ள கட்சிகளான தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே. வாசனும், கல்வித்தந்தைகள், புதிய நீதிக்கட்சியின் .சி. சண்முகமும், .ஜே.கே. கட்சியின் பாரிவேந்தரும், பா...வை விட்டால் வேறு வழியே இல்லை எனத் தொடர்கிறார்கள்.

அமித்ஷா, ‘.தி.மு..வின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்என அறிவித்தார். புதிதாகத் .வெ..வில் சேர்ந்த செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு என்ற நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும் தான் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார். மேனாள் முதல்வர் பன்னீர்செல்வமோ, ‘எந்தப் பதவியும் வேண்டாம்; .தி.மு..வில் என்னை அடிமட்டத் தொண்டனாகச் சேர்த்துவிடுங்கள்என அமித்ஷாவிடம் பரிந்துரை விண்ணப்பம் போடுகிறார்.

தமிழ்நாடு வந்த மோடியைதங்களைக் காணும் பாக்கியம் வேண்டும்என்ற பன்னீரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே தமிழ்நாடு முதல்வரை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாற்றிய பா...-விடம் பன்னீர்செல்வம் தஞ்சம் புகுவது வீண். .தி.மு..வைச் சுக்கு நூறாக உடைத்து, பா... தமிழ்நாட்டில் இரண்டாமிடம் பெறுவதே ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமித்ஷாவின் செயல்திட்டம். .தி.மு.. 2026-இல் தோல்வி அடைந்தபின் .தி.மு..வை உடைக்க இரண்டாம் கட்ட மூத்த தலைவர்களையும் பா... வளைத்துள்ளது.

2024 - பாராளுமன்றத் தேர்தலில் .தி.மு. . கூட்டணியில் இருந்த பிரேமலதா விஜயகாந்தின் தே.தி.மு.. ‘கூட்டணி ஆட்சிஎன்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லாச் சிறு கட்சிகளுக்கும், ‘நடிகர் விஜய்யின் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்குஎன்ற சிறப்புச் சலுகைப் பிடித்திருக்கிறது. ஆனால், வாக்கு பலம் நிரூபிக்காத விஜய் பக்கம் நகர்வதில் தயக்கம் கொள்கிறார்கள்.

பீகார் வெற்றிக்குப் பின் நான்கு நாள்கள் கழித்துப் பிரதமர் மோடி பூட்டர்பதி சத்யசாய் பாபாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவிற்காக ஆந்திரா வருகிறார். அதன்பின் கோவையில் தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் ஏற்பாடு செய்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். கோவையில் தடையை மீறி, கறுப்பு பலூனைப் பறக்கவிட்டு மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மோடி, “விவசாயிகள் துண்டைச் சுழற்றி என்னை வரவேற்றனர்; பீகார் காற்று இங்கும் வீசுகிறதுஎன இவ்வளவான, அதிகபட்சமான வார்த்தைகளில் அரசியல் பேசினார். அதேநாளில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிறைவேற்ற சாத்தியமில்லை என்ற அறிவிப்புகள் ஒன்றிய அரசிடமிருந்து வந்தது.

தமிழ்நாடு  மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணிக்கப்படுவது குறித்த விவாதம் சூடானது. கோவை, மதுரையைவிடக் குறைவாக மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, இலக்னோ, இந்தூர், போபால் போன்ற நகரங்களுக்கு எந்த அடிப்படையில் மெட்ரோ வழங்கப்பட்டது? என்று தமிழ்நாட்டு மக்கள் கொதித்தனர். ‘வரிப்பகிர்வில் உரிய பங்கீடு தருவதில்லை; தமிழ்நாடு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை; தமிழர் நாகரிகம், தொன்மை  குறித்துத் தடங்கல் செய்வதுஎன தமிழ்நாடு மக்கள் மாநில உரிமைகள் பேசினர்.

வட இந்தியாவைப் போல ஆர்.எஸ்.எஸ். சாதி ரீதியான வாக்குகளைஒருங்கிணைக்க முயல்கிறது. மறுபுறம், ‘இந்துகளே! ஒன்றிணைவீர்என அவர்களுக்குக் கைவந்த மத அரசியலையும் கையில் எடுக்கிறது. தமிழ்நாட்டில்இந்தியாகூட்டணிக் கட்சிகளின் பலம் பெரும் சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கும் 18 முதல் 20 விழுக்காடு வாக்குகளைக் கொண்ட சிறுபான்மை மக்கள் பா... எதிர்ப்பில் ஓரணியாக நிற்கிறார்கள்.

பா...வின் எந்தவிதச்  சித்து விளையாட்டுகளும் பலிக்காதபோது, திருப்பரங்குன்ற தீபம் போன்ற தன் கடைசி மத கலவர ஆயுதத்தை எடுக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.. ஆட்சிக் கலைப்பு, ஆளுநர் ஆட்சியில் தேர்தல் என்ற புதிய கலவர வெறியில் தமிழ்நாடு தேர்தல் களத்தை அமைக்க அடிப்படைப் பணிகளைச் செய்கிறார்கள். மதக்கலவரங்கள், ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல; சிறுபான்மையினரின் பாதுகாப்பை உள்ளடக்கியது. தமிழ்நாடு அரசு தன் இரும்புக் கரம் கொண்டு காவி தீவிரவாதிகளை அடக்கவேண்டும். அது 2026 - தேர்தல் நாள்வரை தமிழ்நாடு அரசிற்குப் பெரும் சவால் என்பதில் ஐயமில்லை.

சிறுபான்மைச் சமூக மக்களான நாம், நம் சனநாயக உரிமையான வாக்குகள் வழி இந்து மத வாத பா...வை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும்  தவிர்க்கவேண்டும். அது நம் தார்மீகக் கடமையாகும்.