சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்சகோதரி மௌரா, திருவிவிலியத்தின் அனைத்துப் பக்கங்களையும் தனது கைப்பட எழுதி மகத்தான ஆன்மிகச் சாதனையைப் படைத்துள்ளார். பல ஆண்டு கால செபம், இடைவிடாத முயற்சியின் விளைவாக இப்பணி சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அருள்சகோதரி மௌரா, “இதை வெறும் எழுத்துப் பணியாக நான் கருதவில்லை; இது இறைவனுடனான ஓர் ஆழமான உரையாடல் மற்றும் தவக்காலப் பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.