news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள மசூதி மற்றும் மதராஸா மீது கல்வீச்சு நிகழ்வுகள் அரங்கேறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. தீயவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர்; அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தியா மதச்சார்பற்ற நாடு; அனைத்துச் சமூகத்தினரும் தங்களது மத நம்பிக்கையைப் பின்பற்ற அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே, வகுப்புவாத வன்முறையைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்.”

திரு. ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்

பல நூற்றாண்டுகளாக வடமேற்கு இந்தியாவின் பசுமை நுரையீரலாக ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. அந்த மண்டலத்தின் சமூகப் பொருளாதார முதுகெலும்பாகவும் திகழும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பது நம் கடமை. எனவே, ஆரவல்லி மலை மற்றும் மலைத்தொடர் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு அளித்த பரிந்துரைகள், அதை ஏற்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால் சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கொண்ட புதிய உயர்நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடப்படுகிறது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து அடுத்தகட்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை அங்குப் புதிதாகச் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளவோ, பழைய குத்தகைகளைப் புதுப்பிக்கவோ கூடாது.”

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி அகஸ்டின், ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். அவர்களது கோரிக்கைகளை முதல்வரும் பரிசளிக்க வேண்டும். சமூகநீதி, பெரியார், அம்பேத்கர், மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆர்.எஸ்.எஸ், பா... மற்றும் மதவாதச் சக்திகளை, தமிழ்நாட்டில் காலூன்றச் செய்ய .தி.மு.. உள்ளிட்ட கட்சிகளும், சில அமைப்புகளும் துணை போகின்றன. தமிழ்நாட்டில் பா... வலுப்பெற்றால் .தி.மு.. இல்லாமல் போகும்; பெரியார் அரசியலும் போய்விடும்.\"

தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி