“தனி நபர்களின் நேர்மையான முயற்சிகளும் முன்மாதிரியான பங்களிப்புகளும் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டால்தான் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியா அதற்கெனப் பொதுவான மதிப்புகளாலும் கூட்டு இலட்சியங்களாலும் பிணைக்கப்பட்டு, ஒன்றாகவே இருந்து வருகிறது. அது என்றென்றும் ஒன்றாகவே நீடிக்கும்.”
திரு. சி.பி.
இராதாகிருஷ்ணன்,
குடியரசு துணைத் தலைவர்
“தங்களது
சிந்தனை மற்றும் நம்பிக்கைகளை வெளியில் கூற துணிச்சல் இல்லாத பலரை நாம் காண்கிறோம். அநீதிக்கு எதிராக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகள் முன்னேற்றமடையாது. சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்தும் நாடுகளே தொடர்ந்து முன்னேறிச் செல்லும். மக்கள் துன்புறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் நான் காண்கிறேன். நமக்கு நேராதவரை அதற்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இருப்பது பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும்.”
திரு. இராகுல்
காந்தி,
மக்களவை
எதிர்க்கட்சித்
தலைவர்