கார்மல் மலைத்தோட்டம்
கார்மல்
என்பது திருவிவிலியக் கூற்றுப்படி எலியா இறைவாக்கினர் இறைவனைச் சந்தித்த புனிதமிகு சிறப்புமிக்க இடமாகும். இறைவனின் திராட்சைத் தோட்டம் என்றும், கார்மல் அன்னையின் பாதுகாப்பை உணர்த்தும் இடம் என்றும் கூறப்படுகிறது, வனவாசம் செய்தவர்கள் வணங்கி வாழ்ந்த இடம் என்றும், உண்மைக் கடவுளை மக்களுக்கு உணர்த்திய உன்னதமான உயர்ந்த இடம் என்றும், இறையன்பில் பற்றி எரிந்து, இறைவனுக்காகக் காத்திருந்த புனித எலியா இறைவனைச் சந்தித்த இடம் என்றும் கூறப்படுகிறது.
ஆன்மிகச் சிறப்பு
12 மற்றும்
13-ஆம் நூற்றாண்டுகளில் இறையன்பால் பற்றியெரிந்து மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த துறவிகள் ஒன்றுகூடி தியானம், இறைவேண்டல், தனிமையில் இறையன்பில் இணைந்திருத்தல், ஆழ்ந்த அமைதியான சூழலில் இறைவனோடு இணைந்திருத்தல்,
இவற்றிற்காகக் கார்மல் அன்னையின் பாதுகாப்பில் குழுவாக இணைந்து வாழ்ந்த சிறப்புமிக்க ஆன்மிகத் தொட்டிலே கார்மல்!
உத்தரியம்
கார்மல்
சபையினர் துன்பப்படுத்தப்பட்டபோது
புனித சைமன் ஸ்டாக் என்பவர்
பாதுகாப்பு வேண்டி அன்னையை அணுகி வந்தபோது 1251, ஜூலை 16 அன்று உத்தரியத்தை அளித்து வாக்குறுதி அளித்தார் அன்னை மரியா.
உத்தரியத்தின்
சிறப்பம்சம்
• இந்த உத்தரியத்தை அணிபவர் எவரும் அழியா நெருப்பில் இருந்து காக்கப்படுவர்.
• அகால மரணம் அடையமாட்டார்.
• பேயின் பிடியும் பாவச் சூழலும் அகலும்.
• எந்த ஆபத்திலும் பாதுகாப்புக் கேடயமாக அமையும்.
• இறைப்பக்தியில் வாழ வழிகாட்டும்.
• இறுதியில் அவர்கள் நல்ல மரணம் அடைவர் என்பது உத்தரியம் அணிவோருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி.
கார்மல் அன்னை
கார்மல்
மலையில் காட்சி தந்த அன்னையின் பெயரில் விளங்கும் துறவற சபைகள் அன்னையை இராணியாக, பாதுகாப்புப் பெட்டகமாக, இறையன்பிலும் செப-தவ வாழ்விலும் வழிகாட்டி
வழிநடத்தும் அன்னையாகக் கொண்டுள்ளனர். புண்ணியங்களின் சிகரமாம் கார்மலில் தோன்றிய அன்னையின் பரிந்துரையால் உண்மையான கிறித்தவ வாழ்வும், பாவங்களுக்கு மன்னிப்பும், விண்ணகப் பேரின்பமும் அளிக்கவல்ல துன்பங்களில் அரவணைக்கும் அன்னை! தூயோராய் வாழ வழிநடத்தும் அன்னை!
கார்மல் சபையின்
தனிச்சிறப்பு
ஆழ்நிலை
தியானம், தவம், செபம் இவற்றிற்கு முதலிடமும், அதிலிருந்து உருவாகும் இறையன்பால் உந்தப்பட்டு பிறரன்புப் பணிக்குத் தங்களை இட்டுச் செல்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதும் இன்றுவரை மக்களின் நம்பிக்கை.
இதுவே கார்மலின் தனிச்சிறப்பு. நாமும்
இவ்வன்னையின் பாதுகாப்பில், அரவணைப்பில், வழிகாட்டலில், வழிநடத்துதலில் நம்மையும் இணைப்போம். அன்னையின் அருள்வரங்களால் நம்மை நிரப்புவோம்.