“கரூர் சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை எனக் கேட்ட விஜய்யே, தற்போது சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வரும் தேர்தலில் தங்களது கூட்டணிக்குள் விஜய்யைக் கொண்டுவர பா.ச.க. முயற்சிக்கிறது.”
திருமிகு. பெ.
சண்முகம்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச்
செயலாளர்
“தமிழ்நாட்டில்
மதவாத சக்திகள் நுழைவதைத் தடுக்க, காங்கிரஸ் பேரியக்கம் 234 தொகுதிகளிலும் களப்பணியாற்றும். மல்லிகார்ஜுன கார்கே, இராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். வரும் 36 நாள்களும் அயராது உழைத்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் தொண்டர்கள் தயாராகவேண்டும்.”
திருமிகு. செல்வப்பெருந்தகை,
தமிழக
காங்கிரஸ்
தலைவர்
“ஒன்றிய
பா.ச.க. ஆட்சியில்
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தேவையான நிதி கொடுப்பதில்லை. போதிய திட்டங்களைக் கொண்டு வருவதில்லை.”
திருமிகு. வைகோ,
மதிமுக
பொதுச்
செயலாளர்
“பிற
மாநிலங்களில் பா.ச.க.,
சங் பரிவார் நயவஞ்சகமாகக் கூட்டணி கட்சிகளை வளைப்பது போன்ற யுக்தியைக் கையாள்வர். அதை தமிழ்நாட்டிலும் செய்யப் பார்க்கின்றனர்.”
திருமிகு. திருமாவளவன்,
விசிக
தலைவர்