உரோமை நகரின் மையப்பகுதியில் உள்ள காஸ்ட்ரோ பிரிட்டோரியோ புனித இருதய பேராலயத்திற்குத் திருத்தந்தை லியோ கடந்த பிப்ரவரி 22 அன்று சென்றிருந்தார். இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அப்பகுதியில் நிலவும் வறுமை மற்றும் வாழ்வியல் சவால்களைக் கண்டபோது, திரு அவை அன்பின் புகலிடமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தனது
மறையுரையில், “ஒரே இடத்தில் நவீன வசதிகளுடன் பயணிப்பவர்களையும், வீடற்ற ஏழைகளையும் நாம் காண்கிறோம். காலத்தின் முரண்பாடுகள் நிறைந்த இப்பகுதியில், திரு அவை வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல ; அது பசித்தவர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கும் கருணையின் கோட்டையாக இருக்கவேண்டும்” என்றும்
தெரிவித்துள்ளார்.