news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அரசமைப்பு மக்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கொண்டுசேர்த்து, அவர்களின் சட்ட அறிவு, சனநாயகப் பங்கேற்பு, விழிப்புணர்வு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தவேண்டும். ஒரு நாட்டின் கலாச்சாரம் அதன் மக்களின் இதயங்களிலும் உணர்விலும் கலந்து வாழ்கிறது. ‘மொழி அந்த உணர்வுக்குப் பாலமாகும்என மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அதுபோல, இந்தியா பல மொழிகளைப் பேசினாலும், அது பாரதத் தாய்க்குச் சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனையிலும் நோக்கத்திலும் ஒன்றுபட்டுள்ளது என பாரதியும் குறிப்பிடுகிறார். அந்த வகையில், குடிமக்கள் தங்கள் தாய்மொழி மட்டுமின்றி, பாரதத்தின் பன்முகத்தன்மையை இணக்கத்துடன் மொழிகளின்சிம்பொனிபோலவும் கொண்டாடவேண்டும்.”

திருமிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

சட்டத் தொழிலில் ஈடுபடுவோர் சட்டம் என்பதைப் பாதுகாக்கும் கோட்டையாகப் பார்க்கக்கூடாது; அதை உயிருள்ள, பரிணாம வளர்ச்சியடையும் பொதுத்தளமாகக் கருதவேண்டும். சீரற்ற, நிச்சயமில்லாத சூழலில்களிலிருந்து தற்காத்துக்கொள்ள கோட்டைகள் கட்டப்பட்டன. ஆனால், அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்கமுடியாது. அது வேறுபாடுகளை விவாதிக்கும், உரிமைகளை வெளிப்படுத்தும் தளமாக மாறவேண்டும். சமுதாயம் பரிணாம வளர்ச்சியடையும்போது சட்டமும் பரிணாம வளர்ச்சியடைகிறது.”

திருமிகு. சூரியகாந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

அடுத்த 25 ஆண்டுகள், துணிச்சலான முடிவுகளை எடுக்கும் நிறுவனங்களுக்கே சொந்தமானது. எக்ஸ்பாக்ஸ் உருவானபோது இருந்த அந்தப் புரட்சிகரமான வேகத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறேன்.

திருமிகு. ஆஷா சர்மா, சி..., மைக்ரோ சாஃப்ட் கேமிங்