பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...
“தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும் அல்லது விதிமீறல்கள் தொடர்பாகப் புகார் அளிக்கவும் ஏதுவாக மத்திய பார்வையாளர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளது. தேர்தல் செலவினக் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கக் குழுக்கள் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\"
திருமிகு. அர்ச்சனா
பட்நாயக்,
தமிழ்நாடு
தலைமைத்
தேர்தல்
அதிகாரி