“அரசமைப்பு சாசனம் என்பது ஒரு சட்ட நூல் அல்ல; அது சமூக சாசனம். சமூகத்தின் கையில் இருக்க வேண்டும். பக்குவமான குடிமக்களைக் கொண்ட குடிமைச் சமூகத்தால்தான் நல்ல அரசியலை உருவாக்க முடியும். அதிலிருந்துதான் நல்லாட்சி, நிர்வாகம் என்பது சாத்தியமாகும். ஆகவே, அரசமைப்புச் சாசனத்தை மக்கள் மையப்படுத்தும் முயற்சியைத் தொடர் நிகழ்வாகக் கிராமங்கள் தோறும், பள்ளிகள், கல்லூரிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களில் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை வைத்திருந்தால், நாம் இந்தியாவின் குடிமக்கள் என்ற உணர்வை அது ஏற்படுத்தும்.”
திரு. க.
பழனித்துரை,
காந்தி
கிராமம்
கிராமியப்
பல்கலைக்கழக
மேனாள்
பேராசிரியர்
“உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தால், அதே வழக்குகளை வேறு நீதிபதிகள் மீண்டும் விசாரித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. இது வேதனையளிக்கிறது. ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதி தொடர்ந்து பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்ட காலத்திற்கும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்த காலத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கருத்தில் கொள்ளாமலும் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன. ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவர்களின் வேண்டுகோளை ஏற்று, வேறு நீதிபதிகள் அல்லது சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்வுகள் இவ்வாறு தீர்ப்புகளை மாற்றுகின்றன.”
நீதிபதிகள் தீபங்கர்
தத்தா,
அகஸ்டின்
ஜார்ஜ்
மாசி
ஆகியோர் அடங்கிய அமர்வு
“மக்களின் அடிப்படை உரிமைகளான வாக்குரிமை, மதச் சுதந்திர உரிமை ஆகியவை திரும்பப் பெறப்படுகின்றன. பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர், பொதுவான இந்திய வாக்காளர்கள் ஆகியோர் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்படுகின்றனர். உறுதிசெய்யக் கோரப்படுகிறது. குடிமக்களின் உரிமை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சனநாயகம் முடங்கியுள்ளது; மதச்சார்பின்மை அழியும் நிலையில் உள்ளது; கூட்டாட்சித் தத்துவம் சிதறடிக்கப்படுகிறது. ஆகையால் சனநாயகக் கோட்பாடுகளை மக்கள் பாதுகாக்கவேண்டும். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், மொழி, சமுதாயங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சனநாயகக் கோட்டாடுகளைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம்!”
செல்வி. மம்தா
பானர்ஜி,
மேற்கு
வங்க
முதல்வர்
“அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கான நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்கவேண்டிய அவசியமுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மௌலானா அபுகலாம் ஆசாத், இராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, பி.ஆர். அம்பேத்கர்
உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், அன்பு மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் மக்களாட்சிச் சுதந்திரத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் நிலைநிறுத்துவோம்.”
திரு. மல்லிகார்ஜுன
கார்கே,
காங்கிரஸின் தேசியத் தலைவர்