news-details
சிறுகதை
அழையா விருந்தாளி! (காவல் அன்னை – 13)

வாங்க... வாங்க... என்ன திடீர்னு வர்றீங்க?” என்று வரவேற்றாள் அருளம்மா.

வாங்க... வாங்க... உட்காருங்கஎன்றாள் அமலி.

கருணாகரனும் இந்திராதேவியும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள்.

இங்கே இராகவேந்திரா திருமண மண்டபத்திலே எங்க சொந்தக்காரப் பொண்ணுக்குக் கல்யாணம்... அதுக்கு வந்தோம். பக்கத்திலே உங்க வீடு இருக்கே, ஒரு பார்வை பாத்திட்டுப் போகலாம்னு வந்தோம்என்றாள் இந்திரா.

என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டாள் அமலி.

ஒண்ணு வேண்டாம், கல்யாணத்திலே நல்ல விருந்து, டாக்டர் சேவியர் இல்லையா?” என்று கேட்டாள் இந்திரா.

சாப்பிட்டுவிட்டு மேலே ரெஸ்ட் எடுக்கிறார்என்றாள் அருளம்மா.

உங்க சொந்த ஊர் எதுங்க?” என்று ஆரம்பித்தாள் அமலி.

அதை ஏன் கேட்கிறீங்க? எங்களுக்குத் திருநெல்வேலிதான் சொந்த ஊர். அங்கே பி.டி. ஆசிரியையாக நான் இருக்க, இவர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராய் இருந்தார்என்றாள் இந்திரா.

அப்போ எங்க ஊருக்குப் பக்கம்தான் போங்கஎன்றாள் அருளம்மா.

ஆமாங்க, என் பொண்ணுக்கு பதிமூணு வயதாகும் போது கழுத்திலே கட்டி வந்திருச்சி. ஆஸ்பத்திரியிலேஇது கேன்சர் கட்டி, நீங்க சென்னை அடையாறு போங்கஎன்று சொல்லிட்டாங்கஎன்றார் கருணாகரன்.

நாங்க அடையாறு போய் அந்தக் கட்டிக்கு ரேடியேஷன் வெச்சிட்டு ஒரு வாரம் தங்கி இருந்திட்டு வருவோம்என்றாள் இந்திரா

அப்ப ஐந்து தடவை மாதா மாதம் போய் வைத்தியம் பண்ணி யாழினியைக் காப்பாத்தினோம்என்றார் கருணாகரன்.

யாழினி நல்லா படிச்சாள், ஆனா இவளுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்கலேஎன்றாள் இந்திரா.

அடப்பாவமே, நல்லா படிச்சவளுக்கே மெடிக்கலில் இடம் தரலியா?” என்றாள் அருளம்மா.

இருந்தாலும் யாழினிநான் டாக்டருக்குப் படிப்பேன்என்று அடம் பிடித்தாள். தெரிந்தவர்கள் மூலம் சீனாவில் டாக்டருக்குப் படிக்க அனுப்பினோம்என்றார் கருணாகரன்.

சீனாவிலே போயா டாக்டருக்குப் படிச்சது?” என்று ஆச்சரியமாய் கேட்டாள் அமலி.

ஆமாங்க, அங்கே போய் நான் கேன்சருக்கு வைத்தியம் பார்க்கிறதுக்குத்தான் படிப்பேன்னு கேன்சர் டாக்டராய் படிப்பை முடித்து வந்தாள் யாழினிஎன்றாள் இந்திரா.

ஆஹா, எவ்வளவு வைராக்கியம் பாருங்க யாழினிக்கு!” என்றாள் அருளம்மா.

அப்போ எங்க வீட்டுக்காரர் சி...வாக மதுரையில் இருந்தார். அதனால் மதுரை வடமலையான் ஆஸ்பத்திரியில் யாழினியை வேலைக்குச் சேர்த்து விட்டார்என்றாள் இந்திரா.

மதுரையில்தான் முதல்லே யாழினி டாக்டராய் இருந்ததா?” என்றாள் அமலி.

ஆமாம், யாழினியோட படிச்ச பொண்ணு சென்னை ஆஸ்பத்திரிக்கு வம்பு பண்ணி வரச் சொல்லி சேர்த்துவிட்டாள். நாங்களும் ரிட்டையராகி இங்கே வந்துவிட்டோம்என்றார் கருணாகரன்.

நீங்க போய் டிவியைப் பாருங்க, இவங்கட்டே பேசிட்டு நாம கிளம்பலாம்என்றார் இந்திரா.

என் கணவர் பெரிய வேலையில் இருந்ததால் பலரோடு சேர்ந்து குடிக்கப் பழகிட்டார்என்றாள் இந்திரா.

இப்படித்தான் நிறையப்பேர் கெட்டுப் போறாங்கம்மாஎன்றாள் அருளம்மா.

இவர் வேலையிலே கரெக்ட்தான். ஆனால், ராத்திரின்னா தண்ணி போடணும்... என்ன செய்ய? நான் சமாளிச்சு ஓட்டிக் கிட்டிருக்கேன்என்றாள் இந்திரா.

ஆமாங்க, நிறைய வேலைக்குப் போறவங்க பார்லே நிக்கிறதைப் பார்க்கிறோம். குடி குடும்பத்தைக் கெடுக்கும்னு உணராமல் அழிஞ்சு போறாங்கஎன்றாள் அமலி.