news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலட்சிய இலக்கை அடைய நாம் அனைவரும் நவீனத் தகவல் தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமான மனத்துடன் பயன்படுத்தவேண்டும். மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த நாட்டையும் சிறந்ததாக மாற்றமுடியாது. கடமையுணர்வுடன் நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக, அது நாடாளுமன்றமோ, மாநில சட்டப்பேரவைகளோ, உள்ளாட்சி அமைப்புகளோ எதுவானாலும் சரி, மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற உரையாடுவது, விவாதிப்பது மற்றும் கலந்துரையாடுவது நமது தலையாய கடமையாகும்.”

உயர்திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர் 

இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ, ஒரு கருத்தியலுக்கோ மட்டுமானதல்ல; மக்கள் அனைவருக்குமானது. அம்பேத்கரின் இந்தப் பரந்த பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் அனைத்துச் சக்திகளுக்கும் எதிராகப் போராடும் நமது மனவுறுதியை நமது அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டாட்சியியலை நிலைநிறுத்தவும், அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்நமது அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து நமது குடியரசைக் காப்பதே அரசமைப்புச் சட்டத்திற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.”

உயர்திரு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

தொகுப்பு ஊதிய செவிலியர்களுக்கும், நிரந்தரச் செவிலியர்களுக்கும் ஒரே நிலையான ஊதியம் வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அதேபோல, தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை, போதிய எண்ணிக்கையில் செவிலியர்கள் நியமிக்கப்படவும் இல்லை; மாறாக, ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்குப் பணியிடமாறுதல் அடிப்படையிலே செவிலியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். மேலும், செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதுடன், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கும் மேல் முறையீட்டு மனுவைத் திரும்பப்பெறவேண்டும்.”

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர்