உண்மையான இறைவேண்டல் என்பது மனதார இறைவனை நம்பி, அவர்மீது முழுமையான பக்தி கொண்டு, அவரின் வழிகாட்டுதலின்படி நடப்பதாகும். இது வெறும் வார்த்தைகளால் இறைவனை வேண்டுவது மட்டுமல்ல, நம் செயல்களிலும் எண்ணங்களிலும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும்.
இறைவனோடு
உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துத் தளங்களும் இறைவேண்டலில் இணையும்போதுதான் அது முழுமையானதாக மாறுகிறது. உடலாலும் உள்ளத்தாலும் இறைவனோடு உறவாட வேண்டும் என்பதை எளிதில் புரிந்துகொள்கிற நாம், ஆன்மாவிலும் இறைவேண்டல் செய்யவேண்டும் என்பதையும் உள்வாங்கி அதைச் செயல்படுத்தவேண்டும்.
ஆன்மா என்றால்
என்ன?
என்னும்
கேள்விக்கு
நம்
கத்தோலிக்கத்
திரு
அவை
விடை
தருகிறது...
உடலையும்
ஆன்மாவையும் ஒருங்கே கொண்டவரே மனிதர்கள். அவர்களுக்குள் பருப்பொருள் சார்பற்ற, அழிவுறா ஓர் ஆன்மா இருக்கிறது என்கிறது வத்திக்கான் திரு அவையின் இன்றைய உலகில் திருச்சபை (எண் 14). எப்போதெல்லாம் நமக்குள் இறைவன் பற்றிய தேடல் ஆழப்படுகிறதோ, அப்போதெல்லாம் நம் ஆன்மாவின் சலனத்தை நாம் உணரலாம். எப்போதெல்லாம் ஆண்டவரின் சந்நிதியில் இனம் புரியாத அமைதியும் மகிழ்வும் நம்மை ஆட்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் நம் ஆன்மாவைத் தொடுவதை நாம் அனுபவிக்கலாம். “என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது” (84:2) என்னும்
திருப்பாடல் வரிகள் நமது இறைவேண்டலில்
நம் உடல், மனம், ஆன்மா
இவை மூன்றுமே இணைய வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.
இறைவேண்டலின்போது
நம் ஆன்மா அகமகிழும் என்பதை “நான்
உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர்
மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்” (திபா 71:23) என்னும் வரிகள் பறைசாற்றுகின்றன. மகிழ்ச்சியின்போது மட்டுமல்ல, துயர வேளைகளிலும் நம் உள்ளத்தோடு நம் ஆன்மாவும் இறைவனை நோக்கி உயர வேண்டும். எனவே தான், “இஸ்ரயேலின் கடவுளே, கடும் துயரில் உழலும் ஆன்மாவும் கலக்கமுறும் உள்ளமும் உம்மை நோக்கி கூக்குரலிடுகின்றன” (பாரூ
3:1) என்கிறார் இறையடியார் பாரூக்கு.
உண்மையான இறைவேண்டுதலின்
அம்சங்கள்
இறைநம்பிக்கை:
கடவுள் இருக்கிறார், அவர் வல்லமை மிக்கவர், அவர்மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும்.
பக்தி: இறைவனை நேசிப்பதும், அவரை எப்போதும் நினைவில் கொள்வதும், அவருடைய கட்டளைகளை மதிப்பதும் பக்தி.
வேண்டுதல்:
இறைவனிடம் மனம் திறந்து பேசுவது, நம் குறைகளைச் சொல்வது, அவருடைய ஆசிர்வாதத்தை வேண்டுவது.
நன்றி செலுத்துதல்:
இறைவன் நமக்கு அளித்த அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றி செலுத்துவது. கடவுள் வழிநடத்தல், இறைவனால் போதிக்கப்பட்ட வழியில் நடப்பது, அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவது.
உண்மையான இறைவேண்டுதலின்
பயன்கள்
மனஅமைதி,
துன்பங்களிலிருந்து விடுதலை, சந்தோஷம், சரியான வழிகாட்டுதல். உண்மையான இறைவேண்டுதல் என்பது ஒரு பயணம். அது வாழ்நாள் முழுவதும் இறைவனை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணம். இந்தப் பயணத்தில் நாம் சோதனைகளையும் துயர்களையும் சந்திக்க நேரிடலாம்; ஆனால், இறைவனை நம்பி அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
குழந்தை தெரேசாவும்
இறையனுபவமும்
குழந்தைகளைப்போல
தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் எளிய ஆன்மிகத்தை உருவாக்கினார் குழந்தை தெரசா. அவரது சிறு வழி என்னும் ஆன்மிகம் அசாதாரணமான சிறப்பான செயல்களைச் செய்வதில் அல்ல; ஆனால், வாழ்க்கையில் உள்ள சாதாரண எளிய செயல்களை நன்றாகவும் சிறப்பாகவும் பேரன்புடனும் செய்வதாகும். அவர் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.
அவர்
நம்பியது, படிப்பித்தது எல்லாமே கடவுளின் அருள்தான் என்பதாகும். உண்மையான அன்போடும் ஆவலோடும் கவனித்தால், கடவுளின் திருமுகத்தையும் அவரது உடனிருப்பையும் எல்லா மனிதரிலும், நமது வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அனுபவிக்க முடியும் என்கிறார் புனித குழந்தை தெரேசா. இவரது ஆன்மிகம் எளிமையானது, சிறியது,
மிகவும் ஆழமானது. மனித
நேயம் உடையது.
அன்பான
இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஆழமாக இறைவேண்டல் செய்யக்கூடிய நல்ல மக்களாக எங்களை மாற்றுவீராக! இறைவேண்டல் செய்யும்பொழுது உமது பிள்ளைகளுக்குரிய பண்புகளோடு செய்ய அருளையும் ஆற்றலையும் தாரும்.