எருசலேமில் உள்ள புனித கல்லறைப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவுத் திருப்பலி ஏப்ரல் 23-அன்று நடைபெற்றது. இலத்தீன் வழிபாட்டு முறையில் முதுபெரும் தந்தை கர்தினால் Pieroattista Pizzaoalla திருப்பலியை நிறைவேற்றினார். ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள் ஒருங்கிணைந்து திருத்தந்தையின் அர்ப்பண வாழ்வை நன்றியுடன் நினைவுகூர்ந்தனர். அவர் மாற்றத்தைத் தூண்டி, வலுவற்றவர்களை அரவணைத்து அன்பு மற்றும் இரக்கத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததை நினைவுகூர்ந்தார் அருள்பணியாளர் Francesco Patton. திருத்தந்தையின் பணிவும், இறைவேண்டல் செய்யும் அழைப்பும் அவரின் மறையுரையில் கோடிட்டுக் காட்டப்பட்டது.