news-details
வத்திக்கான் செய்திகள்
‘சாந்தா மார்த்தா’ இல்லம் திரும்பினார் திருத்தந்தை

ஏறக்குறைய 38 நாள்கள் ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கெனத் தொடர் சிகிச்சைப் பெற்று வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மார்ச் 23 அன்று உடல்நலம் பெற்று சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார். நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனையின் வெளிப்புறமான பால்கனி என்னும் மாடிமுகப்பில் இருந்தவாறே வெளிப்புறத்தில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் மெலிதான குரலில் நன்றி தெரிவித்து, திருப்பயணிகளை வாழ்த்தினார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் ஏறக்குறைய 3000 மக்கள் கூடியிருந்து திருத்தந்தையின் ஆசிரைப் பெற்றனர்.