மார்ச் 21 அன்று திருப்பீடத்தின் வெளியுறவுத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர், திருத்தந்தை உடல் நலம் குன்றிய நிலையிலும் திரு அவைக்கும் மனித குலத்திற்குமான அவரின் பணி ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை எனத் தெரிவித்தார். திருத்தந்தையின் உடல் நலனுக்காகத் தொடர்ந்து செபித்து வரும் அனைவருக்கும் திருப்பீடம் நன்றியுரைப்பதாகத் தெரிவித்தார். பொதுநலனுக்காக உழைக்க வேண்டியது, நீதி மற்றும் அமைதிக்காக அர்ப்பணிக்க வேண்டியது போன்றவை இன்றைய காலத்தின் தேவை என்பதையும் எடுத்தியம்பினார் பேராயர் காலகர்.