news-details
வத்திக்கான் செய்திகள்
திரு அவையின் 266-வது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு

17-12-1936 அன்று அர்ஜென்டினா நாட்டில் பியூனஸ் அயர்ஸ் எனும் நகரில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ.

இவரது தந்தை இரயில்வே துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர்.

வேதியியல் துறையில் பட்டம் பெற்றபின், 1958-ஆம் ஆண்டு தனது 22-வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.

தத்துவ இயலிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், பியூனஸில் உள்ள கொலிஜியோ டெல் சால்வதோர் என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

13-12-1969 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1972 முதல் 1973 வரை சான் மிகுவேல் என்னுமிடத்தில் உள்ள வில்லா வாரிலாரி இல்லத்தில் நவத்துறவறப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

1973 முதல் 1979 வரை அர்ஜென்டினா இயேசு சபை மாநிலத்தில் தலைவராகப் பணியாற்றினார்.

1992-ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998-ஆம் ஆண்டு அம்மறை மாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றார்.

2001-ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் இவரைக் கர்தினாலாக உயர்த்தினார்.

2013-ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று 266-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறை.

2025 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று உரோமை நேரப்படி காலை 7:35 மணிக்குச் சாந்தா மார்த்தா இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

ஏப்ரல் 26 காலை 10 மணிக்குப் புனித பேதுரு பெருங்கோவிலில் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு, தொடர்ந்து மேரி மேஜர் பெருங்கோவிலில் நல்லடக்கம் நடைபெற்றது.