அண்மையில் ஒரு பிரபலமான பத்திரிகையில் வந்த செய்தி. புத்தரின் இறுதி நாள்கள். அவரது சீடர்களில் ஒருவரான ஆனந்தன் அழுதவண்ணமாக இருந்தார். புத்தர் அவரிடம், “கலங்காதே ஆனந்தா! மரணத்திற்குப் பின்னும் நான் உங்களோடுதான் இருப்பேன்” என்றாராம். உலக வரலாற்றிலும் மானுடம் தொடர் சங்கிலியாகப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஒருவனுடைய பெற்றோர் இறந்தும் இறவாதவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், தங்கள் பிள்ளைகள் வழியாக வாழ்ந்துகொண்டு, தங்கள் நற்பண்புகளின் வழியாக வழிகாட்டுகின்றனர். பிற சமயத்தவரும்கூட தங்கள் முன்னோர்களின் உடனிருப்பை, முக்கியமாக அவர்கள் இறந்த நாள்களில் நினைவு கூர்ந்து, அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களைக் கொண்டு தர்ப்பணம்… செய்கிறார்கள். யூதச் சமயத்திலும்கூட ‘மேன்மை பொருந்திய நம் முன்னோர்களை மறவாது புகழஞ்சலி செலுத்துவோம்’ (சீராக் 44:1) என்று சீராக்கின் ஞானாகமம் கூறுகின்றது. இதனடிப்படையில் நற்செய்தி நூல்களும், இறைவன் இயேசு மண்ணில் பிறந்து, மக்களுக்காகத் தம்மைச் சிலுவையில் கையளித்து, உயிர்த்து எழுந்து, நம்முடன் இருந்து செயல்பட்டு நம்மை வழிநடத்துகிறார் (மாற் 16:20) என்பதை எடுத்துரைக்கின்றது.
திரு
அவை ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடுகின்றது. இது ஒரு வரலாற்று நிகழ்வின் நினைவுக் கொண்டாட்டமல்ல; நமது வாழ்வை மறுவாசிப்புச் செய்ய அழைப்பு விடுக்கும் ஆன்மாவின் வசந்தகாலம். இதன் சிறப்பைச் சுட்டிக்காட்டும் விதமாகப் புனித அத்தனாசியுஸ், “கிறிஸ்துவின்
பாஸ்கா விழாவானது மற்ற கிறித்தவ விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக விளங்குகிறது” என்றார்.
“பரிவுமிக்க நம் கடவுள், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்து, நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்” (1 பேது
1:3) என்கிறார் பேதுரு.
மக்களின் கலங்கரை
விளக்கான
இயேசு
இவ்வுலகில்
தோன்றியப் பல கோடி மக்களிடையே
விண்மீன்களாகத் தோன்றி மறைந்தவர் பலர். யாரும் பிறர் வாழத் தனக்குத் தெரிந்து தன் உயிரை இழக்கத் தயாராக இருப்பதில்லை. ஆனால், இயேசு ஒருவர் மட்டுமே இறப்பையும் எதிர்கொள்ளத் தயங்கவில்லை. அவர் சாவு நமக்கு வாழ்வானது (His death has become our life). இயேசு தன்னிலை விளக்கமாக, “வாழ்பவரும் நானே, நான் இறந்தேன்; ஆயினும் இதோ, என்றென்றும் வாழ்கின்றேன்” (திவெ
1:18) என்கிறார். இன்னும் இரத்தினச் சுருக்கமாக, “நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள்” (யோவா
14:19) என்று கூறுகின்றார். “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவா
8:12) என்று தாம் உலகிற்கு ஒளிவிளக்காகத் திகழ்வதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
திருவிவிலியத்தில்
உயிர்த்தக் கிறிஸ்துவைச் சந்தித்தவர்களுள் எம்மாவு சீடர்களும் அடங்குவர். அவர்கள் இதயமும், ஏன் அவர்கள் பயணித்த வேளையில், காரிருள் சூழ்ந்திருக்க இயேசு அவர்கள் முன்னின்று ஒளிரும் தீபமாக வழிநடத்தினார் (லூக் 24:29-32). மேலும், அவரது சீடர்களுக்கும் அப்பாற்பட்டுத் தங்கள் இறையனுபவத்தால் கிறிஸ்துவைச் சந்தித்து வழிநடத்தப்பட்ட எண்ணிலடங்காப் பலரைத் திரு அவை அங்கீகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கி.பி. 5-ஆம்
நூற்றாண்டில் திசைமாறிய பறவையாக, பாவச் சேற்றிலே வாழ்ந்த புனித அகுஸ்தினார், “இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு, பகலில் நடப்பதுபோல் மதிப்புடன் நடந்துகொள்வோம். குடிவெறி, கூடா ஒழுக்கத்தைத் தவிர்ப்போம்” (உரோ
13:12-13) என்ற இறைவார்த்தைகளால் தொடப்பட்டு, திரு அவையில் சிறந்த ஓர் ஆயராக, மறைவல்லுநராக மாறி, திரு அவையை வழிநடத்தினார் என்கிறது திரு அவை வரலாறு.
அதேபோன்று,
16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உயிர்த்த ஆண்டவரை இறைவார்த்தையாலும் திருப்பலி வழியாகவும் தியானங்களில் அகவழிப் பயணம் செய்து இயேசுவைச் சந்தித்து மனமாற்றம் பெற்றார். இயேசுவின் இதயத்திற்கேற்ற மேய்ப்பனாக மாறி (எரே 3:15), சோர்ந்துபோயிருந்த திரு அவைக்குப் புத்துணர்வையும் புதிய வழிகாட்டுதலையும் அமைத்துக் கொடுக்கும் இயேசு சபையின்… நிறுவுநராகி, திரு அவையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார் புனித லொயோலா இஞ்ஞாசியார்.
மறுபுறம்,
இயேசு கிறிஸ்துவின் வாழ்வாகும் வார்த்தையால் தொடப்பட்டவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் வாழ்ந்த டெரிக் ஃபோன்ஹோவர் என்னும் பிரிவினை சபை அருள்பணியாளர். அக்காலகட்டத்தில் நாசிசக் கொள்கையால் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அடால்ப் ஹிட்லருக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் சிறையில் பல துன்பதுயரங்களை அனுபவித்து
1945-இல் தூக்கிலிடப்பட்டார் என்பதை ‘கிறித்தவத்திற்கு உன் உயிர்தான் விலை’
(The cost of discipleship) என்னும்
புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
கால
வரலாற்றின் நீரோட்டத்தில் இயேசுவுடன் ஒன்றாகி, மக்களுக்காக வாழ்ந்து இறந்தோர் ஏராளம். அன்னை தெரசா, அருள்சகோதரி இராணி மரியா, பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, தேவசகாயம், ஸ்டான் சுவாமி போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற மாமனிதர்களையும் இயேசு தமது வார்த்தைகளால் ஆட்கொண்டார் என்பதும் வரலாறு. நாமும் இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு, அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம்.
இயேசு
திருப்பணியாற்றிய நாடுகளில் யோர்தானும் ஒன்று. அங்குப் புறப்படும் யோர்தான் ஆறு, யோர்தான் பள்ளத்தாக்கைச் செழிப்படையச் செய்து, கலிலேயா கடலில் மீண்டும் சங்கமமாகி, செல்லுமிடமெல்லாம் பசுமைப் புரட்சியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், யோர்தான் ஆற்றில் பிரியும் மற்றொரு நீரோட்டமோ சாக்கடலில் (Dead Sea) கலந்து
ஆண்டாண்டு காலமாகப் பயனற்றதாக, தனக்கு வரும் நீரை உயிர்வாழ முடியாத அளவிற்கு உவர்ப்புள்ளதாக மாற்றி, ஒன்றுக்கும் உதவாததாக (சாக்கடல் = சாவும் கடலாக) இன்றும் மாற்றிக் கொண்டுள்ளது. உயிர்த்த ஆண்டவரிடம் ஆற்றல் பெற்ற தெய்வீக நீரோட்டம் நம்மில் எவ்வாறு செயல்படுகின்றது? உயிராற்றல் மிக்க நீரூற்றாகவா? அல்லது உயிர்வாழ முடியாத உவர்ப்புள்ளதாக உள்ளதா?
ஆப்பிரிக்கப்
பாலைவனத்தில் ‘ஜெரிக்கோ ரோஸ்’ என்ற தாவரம் உண்டு. தண்ணீர் இல்லாவிட்டாலும், மணலுக்குள் தன்னையே புதைத்துக் கொண்டு தூக்க நிலையிலேயே பல ஆண்டுகள் உயிர்
வாழும். மழைத்துளி விழுந்த மறுநிமிடமே துளிர்க்க ஆரம்பித்து விடும். இதற்கு ‘உயிர்த்தெழும் தாவரம்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. இவ்வாறு ‘பட்டுப்போன செடியே’ உயிர்க்கும்போது, இயேசு நமக்காய் உயிர் தந்து, நம்மை மீட்டு, புதுவாழ்வுக்கு வழிநடத்தும் தீபமாக இருக்கின்றார் என்பதை மகிழ்வுடன் ஏற்போம். உயிராற்றல் மிக்க இயேசுவைச் சந்தித்து, எதிர்நோக்கின் பயணிகளாய் வாழ்ந்து, 2025-ஆம் யூபிலி ஆண்டின் கருப்பொருளாகிய மன்னிப்பு என்னும் பண்பிற்குச் செயல்வடிவம் கொடுப்போம். உயிர்த்த ஆண்டவர் வழங்கும் அமைதியின் தூதர்களாக மாறுவோம். ‘அல்லேலூயா’
கீதம் ஒலிக்கும் மக்களாக வாழ்வோம்.
அனைவருக்கும்
உயிர்ப்புப்
பெருவிழா
நல்வாழ்த்துகள்!