1. தனது 8-வது இயலில் ‘மனுவுருவான வார்த்தை மற்றும் மறையுடல் பற்றிய மறையுண்மையில் கன்னி மரியாவின் பங்கு மற்றும் இறைவனின் தாய்க்கான மீட்படைந்தோருடைய கடமைகள்’ என்பதைப் பற்றி விளக்குகின்ற ‘இறைத் திட்டத்தில் திரு அவை’ என்ற சங்க ஏட்டைப் பின்பற்றி ‘மரியா பற்றிய ஒரு முழுமையான கோட்பாட்டைக் கொடுப்பதற்கோ அல்லது இறையியலாளர்களுடைய ஆய்வுகளால் இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படாத கேள்விகளைப் பற்றி தீர்மானிப்பதற்கோ’ (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 54) முயலாமல், மரியாவின் மேல் திரு அவை வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படைச் சுருக்கத்தைத் தர நான் விரும்புகிறேன்.
எல்லாவற்றிற்கும்
மேலாக திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள குறிப்புகளையும் திருத்தூது பாரம்பரியத்தையும் (Apostolic Tradition) மற்றும்
நம் காலம் வரையிலும் திரு அவையில் ஏற்பட்டிருக்கின்ற கோட்பாட்டு முன்னேற்றத்தையும் கணக்கில் கொண்டு ‘மனுவுருவான வார்த்தை மற்றும் மறையுடலினுடைய மறையுண்மையில் கன்னி மரியாவினுடைய பங்கு’ (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 54) பற்றி விவரிக்க எண்ணுகிறேன்.
மேலும்,
மீட்பின் வரலாற்றில் மரியாவின் பங்கானது கிறிஸ்து மற்றும் திரு அவையின் மறையுண்மையோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதால், இதனுடைய மிக விரிவான மற்றும் அளவிட முடியாத வளமையைத் தருகின்ற இந்த அடிப்படையான ஆதாரக் குறிப்புகளின் கவனத்தை இழக்காமல், மரியியல் கோட்பாட்டிற்கான சரியான சூழலமைவைத்
தருவது முக்கியமானதொன்றாகும்.
ஆண்டவருடைய
தாயின் மறையுண்மையை ஆய்கின்ற பணியானது உண்மையிலேயே விரிவானதொன்றாகும். மேலும், இது பல நூற்றாண்டுகளாகப் பல மேய்ப்பர்களையும்
(pastors) இறையியல் வல்லுநர்களையும் (theologians) உள்ளடக்கியதாகும். மரியியலுடைய மிக முக்கியமான பண்புக் கூறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற அவர்களின் பணியில் சிலர் அதைக் கிறிஸ்தியலோடும் (Christology) திரு
அவையியலோடும் (ecclesiology) சில நேரங்களில் விவரித்துள்ளனர். எவ்வாறாயினும், நம்பிக்கையின் எல்லா மறையுண்மைகளோடும் அவருக்குள்ள தொடர்பைக் கணக்கில் கொள்கையில் திரு விவிலியத்தின் மற்றும் திரு அவையின் பாரம்பரியத்தின் பின்னணியில் மீட்பு வரலாற்றில் அவரின் ஆளுமை மற்றும் பங்களிப்பை நன்கு தெரியும்படி செய்கின்ற அந்தச் சிறப்பானதொரு முறைக்கு மரியா தகுதியுள்ளவராகின்றார்.
2. இது
திருச்சங்கத்தின் கட்டளைகளைப் பின் பற்றி ‘கிறிஸ்துவின் தாயும், மனுக்குலத்தின் தாயும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையாளர்களின் தாயுமாகிய, இறைவனின் தாய்மீதான மீட்படைந்தோரின் கடமைகளை’ மிகச் சரியாக விளக்குவதற்குப் பயனுள்ளதொன்றாகத் தெரிகிறது. உண்மையில்,
இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியாவுக்கென்று ஒதுக்கப்பட்டப் பங்கானது, கிறித்தவர்களின் ஏற்பு மற்றும் கவனத்தை மட்டுமல்ல, நம்பிக்கையிலும் புனிதத்திலும் திரு அவைக்கு முன்செல்கின்ற அவரின் நற்செய்தி மனநிலையை வாழ்வில் வெளிப்படுத்துவதற்கான திடமான தேர்வுகளாகவும் இருக்கின்றன. இவ்வாறு நம்பிக்கையாளர்களின் செப வாழ்வின் வழியில் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தைக் கொண்டு வருவதற்கு ஆண்டவருடைய தாயானவள் முன்குறித்து வைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நம்பிக்கையாளரின் பக்தி மற்றும் வாழ்வில் அவரின் தனிப்பட்ட இடத்தைத் திரு அவையின் திருவழிபாடே அங்கீகரிக்கின்றது. மரியியல்
போதனையும் பக்தியும் ஏதோ ஒருவித உணர்ச்சியின் விளைவால் வந்ததல்ல என்பதை வலியுறுத்த வேண்டியது முக்கியமானதொன்றாகும். மரியாவின் மறையுண்மை நம்பிக்கையாளர்களின் அறிவுத்திறனால் ஏற்கச் செய்வதற்குரியதொரு வெளிப்படுத்தப்பட்ட உண்மையாக இருக்கிறது. மேலும், இந்த மறையுண்மையை, எல்லா இறையியல் தளங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற சிறிதும் நெறிதவறாத கோட்பாட்டுச் சிந்தனை வழியாக மரியியல் படிப்பு மற்றும் போதனைப் பணியைத் திரு அவையில் செய்கின்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலும், மரியாவில்
சிறப்பாக அவர் இறைவார்த்தைக்குச் செவிசாய்த்து, அதை உள்ளத்தில் வைத்திருந்து தியானித்ததால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்றுணர்ந்து (ஒப்பிடுக. லூக்கா 11:28), அவருடைய
தாயைப் பார்க்கும் பொழுது ஆர்வத்தால் வழிநடத்தப்படாமல் (not to be led by enthusiasm) இருக்க வேண்டுமென்று இயேசுவே அவரோடு வாழ்ந்தவர்களையே அழைக்கின்றார்.
இயேசுவின்
தாய் மற்றும் மீட்புத் திட்டத்தில் அவரின் பங்களிப்பைப் புரிந்துகொள்வதில் அவர் மீதான நம் பாசம் மட்டுமல்லாமல் குறிப்பாக, ஆவியாரின் ஒளியும் நம்மை வழிநடத்த வேண்டும்.
3. மரியியல்
கோட்பாடு மற்றும் பக்தி முயற்சி இவை இரண்டிலும் கடைப்பிடிக்க வேண்டிய அளவு கோல் மற்றும் சமநிலையைப் (measure and balance) பொருத்தவரை, ‘எல்லா
வகையான தவறான மிகைப்படுத்துதலிலிருந்தும்… விலகி
நிற்பதில் கவனத்துடன் இருக்குமாறு’ (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 67) திருச்சங்கமானது இறைவார்த்தையை அறிவிக்கின்ற மறைப்பணியாளர்களையும் இறையியல் வல்லுநர்களையும் கண்டிப்புடன் அறிவுறுத்துகின்றது.
இந்த
மிகைப்படுத்துதல் (exaggeration) கிறிஸ்துவின் தனிச்சிறப்புகளையும் திரு அவையின் எல்லாத் தனிவரங்களையும் திட்டமிட்டு மரியாவுக்கும் விரிவுபடுத்த விரும்புகின்ற மிகைப்படுத்துகின்றதொரு மனப்பான்மை (those who adopt maximalist
attitude) கொண்டவர்களிடமிருந்து
வருகிறது. உண்மையில், மரியியல் கோட்பாட்டில் மரியாவின் மனித நிலைக்கும் இயேசுவின் இறைமை நிலைக்கும் இடையே இருக்கின்ற எல்லையற்ற வேறுபாட்டைப் பாதுகாப்பதென்பது எப்பொழுதும் அவசியமானதொன்றாக இருக்கிறது. ‘மிக உயர்ந்த நிலையை’ மரியாவுக்கு வழங்குவதென்பது மரியியலுக்கானதொரு வழிகாட்டு முறையாக (norm of Mariology)
முடியாது. இது (மிக உயர்ந்த நிலை) அவரின் உன்னதமான பணியின் நிமித்தம் கன்னி மரியாவுக்குக் கடவுளின் கொடைகள் எனக் கருதி திருவெளிப்பாட்டின் சான்றிற்கு (testimony of Revelation)
உறுதியானதொரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல,
திருச்சங்கமானது இறையியல் வல்லுநர்களையும் மறைப்பணியாளர்களையும் மிகவும் குறைத்துக் கூறுகின்றதொரு மனநிலையிலிருந்து … விலகி நிற்குமாறு அதாவது, மிகவும் குறைத்துக் கூறும் ஆபத்திலிருந்து (Danger of a Minimalism) குறிப்பாக
கோட்பாட்டு நிலைப்பாட்டில், இறைவார்த்தையை விளக்கும் முறையில் மற்றும் பக்தி முயற்சிகளில் சுட்டிக்காட்டப்படக் கூடிய மீட்பின் வரலாற்றில் மரியாவின் முக்கியத்துவம், அவரின் கன்னித்தன்மை மற்றும் புனிதத்தைக் குறைக்க முயல்கின்ற மற்றும் பெரும்பாலும் மறுக்கின்ற ஆபத்திலிருந்து விலகி நிற்க அறிவுரை கூறுகின்றது. திருவிவிலியம்
மற்றும் கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளவாறு வெளிப்படுத்தப்பட்ட உண்மை மீதான (revealed truth) திடமான மற்றும்
உண்மையான நம்பிக்கையின் வழியாக அத்தகைய மிகைப்படுத்தும் (extreme positions) நிலைப்பாடானது எப்பொழுதும் தவிர்க்கப்பட வேண்டும்.
4. திருச்சங்கமே
உண்மையான மரியா கோட்பாட்டை ஆய்ந்தறிவதற்கானதொரு நெறிமுறையை நமக்குக் கொடுக்கிறது: மரியா ‘திரு அவையில் கிறிஸ்துவிற்குப் பிறகு மிக உயர்ந்த மற்றும் நமக்கு மிக அருகிலுள்ளதுமானதொரு இடத்தைப் பெறுகின்றார்’ (இறைத்திட்டத்தில்
திரு அவை எண். 54).
மிகவும் உயர்ந்த
இடம்:
மீட்பின் மறையுண்மையில் மரியாவுக்குக் கொடுக்கப்பட்ட
இந்த மேன்மையான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும், இது முற்றிலும் கிறிஸ்துவோடு உள்ள உறவு சம்பந்தமான ஓர் அழைத்தலின் கேள்வியாக இருக்கின்றது.
நமக்கு மிகவும்
நெருக்கமான
இடம்:
நம் வாழ்வானது மரியாவின் முன்மாதிரி மற்றும் பரிந்துரையால் ஆழமான முறையில் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறது. இருப்பினும், அவரோடு நெருக்கமாக இருப்பதற்கான நம் முயற்சி பற்றி நாம் நம்மையே கேள்வி கேட்டுப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த மீட்பு வரலாற்றுப் போதனையும் மரியாவை உற்றுநோக்குவதற்கு நம்மை அழைக்கின்றது. கடவுளின் விருப்பத்திற்கு மிகச் சரியாக ஒத்துப்போவதன் மாதிரியாக அவரைக் கருதுவதற்கு எல்லாக் காலத்திலும் கிறித்தவ கடுந்துறவு வாழ்வானது (christian asceticism) நம்மை அழைக்கின்றது. புனிதத்தின் மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியா விண்ணகத்திற்கான பயணத்தில் நம்பிக்கையாளர்களின் காலடிச்
சுவடுகளை என்றும் வழிநடத்துகின்றார்.
நம்
அன்றாட வரலாற்று நிகழ்வுகளில் தனது உடனிருப்பின் வழியாக, மரியா எப்பொழுதும் நமக்கு நிலையான மீட்பின் இலக்கைச் சுட்டிக்காட்டி, சோதனை நேரங்களில் நம்மைத் தேற்றுகிறார். மேலும், நமது துயரங்களில் நமக்கு ஊக்கமூட்டுகிறார். இவ்வாறாக, தாய் என்ற முறையில் அவரின் பங்கானது எப்பொழுதும் மிகத் தெளிவாகப் பார்க்கப்படுகின்றது; கரிசனையுள்ள மற்றும் கண் விழித்துக் காத்திருக்கும் தாயாக யாரைச் சிலுவையிலிருந்து நம் ஒவ்வொருவருக்குமே இயேசு மீட்பர் கொடுத்தாரோ, அவரை நம்பிக்கையில் அவரின் பிள்ளைகள் என்கின்ற வகையில் நாம் வரவேற்க வேண்டும்.
மூலம்:
Pope John Paul II, Mary’s place is highest after Christ, in
“L’Osservatore Romano”, Weekly Edition in English, 10 January 1996, p.11.