தற்கால தமிழ் அகராதியான ‘க்ரியா’ அரசியல் பற்றி பின்வருவாறு குறிப்பிடுகிறது: நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உள்கூறுகளைப் பொதிந்திருக்கும் ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளுமே அரசியல் எனப்படுவது என்று.
நீதி
இலக்கியங்களுள் திருக்குறள், அரசியல் பற்றிப் பேசும் பொழுது மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல்,
‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு’
என்னும்
ஓர் அரசின் அரசியல் பற்றி, உலகப் பொதுமையாய் எல்லாருக்கும் பொருந்துவனவாய் பேசுகிறது.
இதன்
பொருளைச் சற்று உற்றுப் பார்த்தால், அரசுக்குச் சொல்லியிருக்கும் இந்த அரசியலின் நெறிமுறைகள் ஓர் அன்றாடங்காய்ச்சியான தனி மனிதருக்கும், அவர் சார்ந்த வாழ்க்கைக்கும் பொருத்தமுடைய அரசியலாக விளங்குவதை மறுக்க இயலாது.
வாழ்கின்ற
தனது வாழ்க்கைக்கான பொருளைச் சேர்க்க வேண்டும்; அப்படிச் சேர்த்த பொருளைச் சேமிக்க வேண்டும்; அவற்றைத் தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும்; பாதுகாத்தவற்றைத் தக்க செலவுகளுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று, ஓர் அரசுக்குப் பொருந்தும் அரசியலை, ஒரு தனி மனிதனின் வாழ்வியலுக்கும் பொருந்தும் வகையில் அமைத்துத் தந்திருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
“நான் அரசியல் பேசமாட்டேன். அரசியல் எனக்குப் பிடிக்காது. அரசியலுக்கும் எனக்கும் வெகு தூரம்” என்பவர்கள், தாங்கள் பொய்பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள வள்ளுவர் தந்த வாய்ப்பு தான் மேற்கண்ட குறளின் பொருள்.
‘வானமே இல்லாத இடத்தில் வாழப்போகிறேன்’ என்று
சொல்வதற்கு நிகர்தான், அரசியல் இல்லாத வாழ்வியல். அன்றாட மனித வாழ்க்கையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத தத்துவம் அல்லது கருத்தியல்தான் அரசியல்.
நமது
கலாச்சாரத்திலும் நமது பண்பாட்டிலும் நமது பாரம்பரியத்திலும் ஊடுருவி நிற்கிறது ஒரு நுட்பமான அரசியல். ஆனால், வாழ்வியலில் இந்த நுட்பமான அரசியல் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
நம் அன்றாட வாழ்க்கையோடு ஓர் இரும்புச் சங்கிலியாய் பிணைக்கப்பட்டிருக்கிறது.
எங்கும்,
எதிலும் அரசியல் என்பது ஒரு சித்தாந்தமாகவே பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது. அந்த ‘எங்கும்’ என்பதிலும், ‘எதிலும்’ என்பதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது நம் வாழ்வியல் நடைமுறைகள். எப்படியெனில், கடற்கரைமீது மணலில் நின்று கொண்டிருக்கும் உங்கள் பாதத்தின் அடிமண்ணை ஒரு மென்மையான அலை வந்து உங்களையும் அறியாவண்ணம் இழுத்துச் செல்வதைப் போன்றுதான் அரசியல் உங்கள் வாழ்க்கையில் உங்களைத் தழுவிச் சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கைக் கரையின் எந்த ஓரத்திற்கு நீங்கள் சென்றாலும் இது நிகழும். நீங்கள் அதை அலட்சியம் செய்ய முடியாது, அதை மறந்து விடவும் முடியாது. உங்களின் அன்றாட வாழ்வில் நிகழும் பல பணிகளில் எல்லாம்,
அது உங்கள் தோள்பற்றித் தொற்றிக் கொண்டிருக்கும்.
அரசியலே
ஒரு வாழ்வியல்தான் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். மனிதன் ஓர் அரசியல் விலங்கு என்றே தத்துவஞானி சாக்ரடீஸ் குறிப்பிடுகிறார்.
ஒரு
தாயின் வயிற்றிலிருந்து ஒரு மழலையின் பாதம் இந்த மண்ணைத் தொட்ட அடுத்த நொடியிலிருந்து உங்கள் அரசியல் சாதகம் கணிக்கப்படுகிறது.
ஒரு
தனிமனிதனின் மற்றும் மனிதக் கூட்டத்தின் செயல்பாடுகள், உளவியல் தேவைகள், உறவாடல்கள், வேலை, குடும்பம் என்ற வாழ்வியல் சுழற்சிகளின் மையப்புள்ளியே அரசியல்தான். தீய மனிதர்களின் பேராசையும் சுய நலமும் முறைகேடுகளும், நல்லவர்களின் நீதியும் நேர்மையும் பொதுநலமும் இந்தச் சமுதாயத்தில் எப்படி இரண்டறக் கலந்து நிற்கின்றனவோ, அப்படியே இவை அனைத்தும் அரசியல், வாழ்வியல் களங்களிலும் இரண்டறக் கலந்து நிற்கின்றன. அந்த அளவிற்கு இரண்டுக்கும் இடையிலான ஒற்றுமை இன்றைய சமூகத்தில் ஊறிக்கிடக்கின்ற காலம் இது.
அடிப்படைச்
சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மக்களின் கண்களுக்கு எட்டிய வரை அது தென்படாதபோது, தங்களின் அன்றாட வாழ்வியலின் அரசியலைத்தான் ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைப் பெரும்பான்மை மக்கள் உணர்வதற்கு வாய்ப்பில்லை. அதன் வெளிப்பாடுதான் ‘அரசியல் வேறு, வாழ்வியல் வேறு, அரசியல் ஒரு சாக்கடை’ என்ற வெற்று வாதங்கள்.
இந்த
வாதங்களில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை அலசிப் பார்ப்பதற்கான முன்னுரைதான் இந்த முதல் கட்டுரை. ‘அரசியல் இல்லாத வாழ்வியலா?’ என்ற இந்த அர்த்தம் பொதிந்த தலைப்பை வைத்துதான், இனி வரும் எழுத்துகள் பூக்கும். ‘எதுவெல்லாம் அரசியல்?’ என்ற கேள்விக்கு ‘எல்லாமே அரசியல்தான்’ என்ற
பதில் கிடைக்கும்.
இலக்கிய
அழகியல், இயற்கையின் அரசியல் என்பதைப் போல, வாழ்வியலின் பல அழகியல்கள்தான் மனிதர்களின்
அரசியல். இப்படிப்பட்ட அழகியல் கூறுகள் என்பது இல்லாததை இருப்பதாக்குவதல்ல; இருப்பதை உணர்த்துவதாகும்.
கலாச்சார
அரசியல் தொடங்கி
காறித்துப்பும்
அரசியல் வரை...
குடும்ப
அரசியல் தொடங்கி,
குழிதோண்டும்
அரசியல் வரை...
உணவு
அரசியல் தொடங்கி
உடை
அரசியல் வரை...!
(பயணம் தொடரும்)