சென்ற இதழ் தொடர்ச்சி
தமிழ்நாடு கத்தோலிக்கத்
திரு அவைக்கான
வழிகாட்டு நெறிமுறை விளக்கக்
கூட்டம்
வினா 1: நமது
தமிழ்
நாடு
ஆயர்
பேரவைக்கு
‘மறைத்தூதுப்
பணி
2033’ மேய்ப்புப்பணித்
திட்டத்திற்கு
இணையான,
நமது
பொதுநிலை
இறைமக்கள்,
துறவியர்,
அருள்பணியாளர்கள்,
ஆயர்களை
உள்ளடக்கிய
ஒரு
மேய்ப்புப்
பணித்
திட்டம்
தேவையா?
எவ்விதங்களில்
அத்தகைய
திட்டத்தை
முன்னெடுக்கப்
போகிறோம்?
தமிழ்நாடு
திரு அவைக்கு இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் மேய்ப்புப் பணித் திட்டத்தோடு இணைந்த ஒரு திட்டம் கண்டிப்பாகத் தேவை. முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள்:
• தற்போது மாநில, மறைமாவட்டப் பணிக் குழுக்கள் செயல்படுத்தும் மேய்ப்புப்பணித் திட்டங்களைத் திருத்தந்தையின் கூட்டொருங்கியக்கத் திரு அவை வழிகாட்டுதல்களின் பார்வையில் மறுவாசிப்பு, மறு ஆய்வு செய்வதும், தேவைப்படின் மறு சீரமைப்பு செய்வதும் முக்கியமான ஒன்று.
•
செயல்பாடுகளின் ஒவ்வொரு நிலையையும் கண்காணித்து (Monitoring), திட்டம்
சரியான பாதையில் செல்வதை உறுதிசெய்வதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திறனாய்வு செய்து, நிறை-குறைகளைக் கண்டுணர்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்வது, செயல்பாடுகளைத் தொடர்வது.
•
மறைமாவட்ட, மாநிலத் திரு அவைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் குறுகிய / நீண்டகால திட்டங்களைத் தீட்டுவது.
• மாநில அளவில் பணிக் குழுக்களுக்கான திட்டமிடுதல், ஒருங்கிணைப்புக் குழுவை பொதுநிலை இறைமக்கள், இருபால் துறவிகள், மறைமாவட்டக் குருக்கள், ஆயர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.
• ஒருங்கிணைப்பாளர்களின் ஒருங்கிணைப்பாளர் (Coordinator of Coor
-dinators) என்ற
அமைப்பும் செயல்முறைகளும், மாநில அளவிலும், மறைமாவட்ட அளவிலும் தேவை.
வினா 2: நாம்
நமது
பணிக்
குழுக்களோடும்
மறைமாவட்டங்களோடும்
ஒத்த
கருத்துடைய
அமைப்புகளோடுமுள்ள
ஒருங்கிணைப்புப்
பணியை
எவ்விதம்
வலுப்படுத்தலாம்?
• குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பணிக் குழுக்களுக்கு இடையிலும், ஒவ்வொரு பணிக்குழுவிலும் தொடர் கூடுகைகள் மிக மிக அவசியம்.
• பணிக் குழுக்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் துறவற சபை அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள் இவர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும், துறவற சபைகளின் மேய்ப்புப் பணித் திட்டங்கள் மறைமாநில அருள்பணித் திட்டங்களோடு இணைந்தப்படி அமைத்துக்கொள்வது தேவை.
• அனைவரிடையேயும் உறவு நிலை சமத்துவத்தையும் (Sense of Equality), உரிமை
நிலை சமத்துவத்தையும் (Sense of Equal Rights) ஏற்படுத்திக்கொள்வது
தேவை.
வினா 3: தமிழ்நாடு
ஆயர்
பேரவை
வரும்
பத்து
ஆண்டுகளில்
முன்னிலைப்படுத்த
வேண்டிய
ஆக்கப்பூர்வச்
செயல்பாடுகள்
யாவை?
• தற்போது செயல்படுத்தி வரும் தலைமைத்துவப் பயிற்சிகள், களப்பணிப் பயிற்சிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், பயிற்சிகள் இல்லாத இடங்களில் புதிதாகப் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதும்.
• ‘பழையன கழிதலும்
புதியன புகுதலும்’
என்பதற்கேற்ப புதிய சிந்தனை, புதிய உறுப்பினர்கள், புதிய ஆற்றல்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உலகியல் துறைசார் மற்றும் பணிக்குழு சார்ந்த வல்லுநர்கள், நெறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.
• மறைமாவட்ட அளவில் சில சிறப்புப் பணிக் குழுக்களுக்கு முன்னுரிமை தருவதும் ஊக்கப்படுத்துவதும் வேண்டும் (எ.கா: சுற்றுச்சூழல்
பணிக்குழு, சிறைப்பணிக்குழு, மாற்றுத்திறனாளிகள் பணிக்குழு, திருநங்கையருக்கான மேய்ப்புப் பணித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்துவது காலத்தின் கட்டாயம்). அவர்களுக்கு உரிய, உயரிய பணிகளில் பணி அமர்த்துவது தகுதியும் நீதியும் ஆகும்.
• தொழில் நுட்பங்களை மேய்ப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவது, பயிற்சிகளை அளிப்பது மிக மிகத் தேவை.
வினா 4: தமிழ்நாடு
ஆயர்
பேரவை
இந்திய
ஆயர்
பேரவைக்கு
அளிக்கக்கூடிய
சிறப்பான
பங்களிப்புகள்
யாவை?
• பணிக்குழுசார் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து, தமிழ்நாடு திரு அவையிலிருந்து தேசிய பணிக்குழுவை வலுப்படுத்துவதற்கான கருத்தாளர்களைத் தயார்படுத்தி அனுப்பலாம்.
• பணிக்குழுக்களின் வளர்ச்சிப் பணிகள் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இந்திய ஆயர் பேரவை தமிழ்நாடு திரு அவையை அழைப்பது, நம்மிடையே உள்ள கட்டுமான வளங்களை அளிப்பது.
•
புதிய முறைகளில் அனைவரையும் ஈர்க்கும்படி நற்செய்தி அறிவிப்பை உருவாக்கி ஊக்குவிப்பது, அவைகளைத் தேசிய அளவில் இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மூலம் கொண்டு செல்வது.
பொது அமர்வில்
எழுந்த
முக்கியக்
கருத்துகள்
மற்றும்
உடனடிச்
செயல்பாட்டுக்கான
தீர்மானங்கள்
அனைவரின்
சம்மதத்தோடு
நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி...
• ‘மறைத்தூதுப் பணி
2033’ மேய்ப்புப்பணித்
திட்டத்தை நம் தமிழ்நாடு திரு அவையின் சூழலுக்கு ஏற்ப தன்னுருவாக்கம் (Personalize) செய்வது.
• வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கும் பிற மாநிலங்களின் மேய்ப்புப்பணித் திட்டங்களைத் தழுவி, தமிழ்நாடு திரு அவை தனது மேய்ப்புப் பணித் திட்டத்தை உருவாக்குவது.
• ‘மறைத்தூதுப் பணி
2033’ என்கிற அனைத்து பணிக்குழுக்களுக்குமான மேய்ப்புப்பணித் திட்டத்தை அந்தந்தப் பணிக்குழு வாரியாகப் பிரித்துக் கொடுத்து செயலாக்கம் பெறச் செய்வது.
• மேய்ப்புப் பணிக்கான ஆர்வத்தை ஆயர்கள், அவரவர் மறைமாவட்டப் பணிக்குழுச் செயலர்களுக்கும், குருக்களுக்கும் ஊட்டி வளர்ப்பது காலத்தின் கட்டாயம்.
• இதன் அடிப்படையில் வரும் 2025, பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனைத்து மாநில பணிக்குழுக்களின் செயலர்கள் அனைத்து மறைமாவட்டங்களிலும், தான் சார்ந்த அந்தந்த மறைமாவட்ட பணிக்குழுக்களின் செயலர்களோடு திட்டமிடுதல், பரவலாக்கம் குறித்த கூடுகை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒரே மனதாக முடிவு செய்யப்பட்டது. அதைக் குறித்து ஒரு செயல்பாட்டு அறிக்கை தமிழ்நாடு ஆயர் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு
வரும் ஆண்டுகளில் இந்த மேய்ப்புப் பணித்திட்டத்தைச் சரியான விதத்தில் செயல்படுத்த நம் அனைவரின் பங்கேற்பும் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாததாகும். திரு அவையின் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, புதியதாய் புலர்ந்துள்ள இந்த யூபிலி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நாம், நமது இலக்கை நோக்கிய தெளிவான மேய்ப்புப்பணித் திட்டங்களோடு இறையாட்சியின் கருவிகளாகச் செயல்படுவோம். இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை தனது ‘மறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப் பணித்திட்டத்தின் வழியாக மக்களின் மனங்களில் விதைத்த விதைகள் புதிய உத்வேகத்தோடு கிளர்ந்து முளைத்தெழுந்து, ஒரு சில முப்பதும், ஒரு சில அறுபதும், ஒரு சில நூறுமாகப் பலன் கொடுத்து, 2033-ஆம் ஆண்டில் நமது மீட்பின் மாபெரும் யூபிலியைக் கொண்டாடும்போது, குறிப்பிடும்படியான மாற்றத்தைத் தனி மனிதனிலும், பங்கு அளவிலும், மறைமாவட்ட, மாநிலத் திரு அவையிலும் ஏற்படுத்தியிருப்பதை நாம் கண்கூடாய்க் காண முடியும். நாம் முன்னெடுத்த இச்செயல்பாடுகள் வழியாக, ஒன்றியத் திரு அவையின் கூட்டொருங்கியக்கத்திற்குச்
சான்றாகவும், கிறித்தவம் ஒரே திருஅவையாக நம் நாட்டில் வளர்ச்சி காணவும், ஒவ்வொருவரும் இறையாட்சியில் பொறுப்புள்ள உறுப்பினராகவும், தமிழ்த் திரு அவைத் தழைத்தோங்கவும், இறைவன் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியாரின் ஆற்றலில் நம்மை நடத்திச் செல்லட்டும்.
- திரு.
வில்லியம், திரு. ஜூட் இவர்களின் உதவியோடு
அருள்பணி. பிரான்சிஸ்
ஜோசப்