news-details
சிறப்புக்கட்டுரை
‘என் ஆன்மா’ பாடலும் ‘நம் வாழ்வு’ பணியும்!

தென்னிந்திய திருச்சபை மேனாள் பேராயர் தேவசகாயம் அவர்கள் நம் வாழ்வு வார இதழுக்கு அளித்த வாழ்த்துச் செய்தி!

முதலாவதாக, அனைவருக்கும் என்னுடைய பொன்விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான்நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவராக இருக்கின்ற ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களைநம் வாழ்வுஅலுவலகத்தில் சந்திக்க வந்தபோது, நம் வாழ்வின் முதன்மை ஆசிரியர் இராஜசேகரன் அவர்கள்நம் வாழ்வுஇதழை எனக்குக் கொடுத்தார். நான் இவ்விதழை என் இல்லத்திற்குக் கொண்டு சென்று படித்தபோது, ‘இவ்வளவு சிறப்பான இதழ் வந்து கொண்டிருக்கின்றதே!’ என்று நான் வியந்துபோனேன். எல்லா இதழ்களும் மிக உயர்ந்த தரத்தில் இருக்கின்றன. சமுதாய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றவைகள். அடித்தட்டு மக்களுடைய கரிசனைகளை ஆழமாக எடுத்து இயம்புகின்ற கட்டுரைகள். தொடர்ந்து ஐம்பது ஆண்டு பயணத்திலே சமுதாயத்திற்கும் திரு அவைக்கும் மிகச் சிறப்பான பங்களிப்புச் செய்துவருகின்ற இந்தநம் வாழ்வுஇதழ் மென்மேலும் வளர வேண்டும், இன்னும் சிறப்பாகப் பலருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். முதன்மை ஆசிரியரையும், உதவி ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன்.

எல்லாருக்கும் தெரிந்தஎன் ஆன்மா...’ பாடல் அல்லதுமரியன்னையின் பாடல்என்று சொல்லப்படுகின்ற பாடல்களிலிருந்து ஒரு சில சிந்தனைகளைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். நான் பேராசிரியராக இருந்தபோது, ஒரு கத்தோலிக்க நண்பர் என்னைப் பார்த்து கிண்டலாகச் சொன்னார். அதில் வருகின்ற சில வரிகளில்From  Now on all generation  shall  call me  Blessedஎன்று வரும். அதை அவர்From Now on All 
generations expect the protestant  shall  call me  Blessed
  என்று கூறினார். அதாவது, புரோட்டஸ்டன்ட் திருச்சபையினர் மரியன்னைக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை என்பதைப் போன்று கருத்து நிலவுகிறது. இந்தப் புரோட்டஸ்டன்ட் திருச்சபையினை நிறுவின மார்டின் லூதர் சொல்வார், “We must honor the Mother of God, and through her we Should  reach  Jesus who is   the  center of  all powersஅதாவது, “இறைவனுடைய தாயை நாம் மதிக்க வேண்டும்; ஏனென்றால், அவர் வழியாக ஆற்றலின் மையமாக இருக்கின்ற இயேசுவை அடைய முடியும்என்று அவர் குறிப்பிடுவார்.

இன்றைக்கு நாம் இயேசுவைப் புகழ்கிறோம்; அன்னை மரியா மட்டும் இல்லையென்றால், இயேசுவைப் புகழ்வதற்கான வாய்ப்போ அல்லது இயேசுவின் வழியாக நாம் பெற்றிருக்கின்ற ஆன்மிகக் கொடைகளுக்கோ வாய்ப்பே இருந்திருக்காது. இயேசுவின் சிறப்பைப் பற்றி நாம் கூறும்போது, அவர் இறைத்தன்மையும்  மனிதத்தன்மையும் பெற்றிருக்கிறார். எனவே, இறைத்தன்மையைப் பெற்றதனால் நம் மீட்பராக இருக்கிறார்; மனிதத்தன்மையைப் பெற்றதனால் நமக்கு  உதவி செய்யக்கூடிய நிலையைப் பெற்றிருக்கிறார். எப்படி இவரால் இந்த இரு தன்மைகளையும் பெற முடிந்ததுஅன்னையின் வழியாக மனிதத்தன்மையிலே இயேசு பங்கேற்கிறார். இயேசுவின் வழியாக அன்னை இறைத்தன்மையில் பங்கேற்கிறார். ஆகவேதான், மரியாவை  ‘இறைவனுடைய அன்னைஎன்று திரு அவை  போற்றிப் புகழ்கிறது.

இந்த அன்னையைப் பற்றிப் பொதுவாக, கிறிஸ்துமஸ் நாடகங்களிலெல்லாம் ஓர் அமைதியான அன்னையாக மட்டுமே சித்தரிக்கின்றோம். ஆனால், அவரைப் பற்றி படிக்கப் படிக்க அவருடைய புரட்சிகரமான ஆளுமையை நாம் திருமறையிலே பார்க்கிறோம். கபிரியேல் சந்திப்பிலே அவருடைய சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறார். ‘நான் என் அப்பாவிடம் கேட்க வேண்டும், அம்மாவிடம்  கேட்க வேண்டும்என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை. குழந்தையையும் அதே சுதந்திரத்தோடு வளர்க்கிறார்கள். காணாமற்போன நிகழ்ச்சியில் அவரைத் தேடிக்கொண்டு செல்கிறார்கள். அன்றைக்கு மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத்தேடுபவர்களாகவேவாழ்கிறார்கள். எனவே, அவர் தேடுகின்ற ஒருவர்; தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்கின்ற ஒருவர். குறிப்பாக, அன்னை மரியா எலிசபெத்தைச் சந்திப்பதாக இருக்கட்டும், கானாவூர் திருமணமாக இருக்கட்டும், எல்லாச் சூழலிலும் உதவிபுரிபவராக இருக்கிறார். மேலும், எல்லாவற்றிலும் துயரப்படுபவர்களோடு தன்னை ஒன்றித்துக் கொள்பவராகவும் இருக்கிறார். எனவேதான், சிலுவை அடியிலே நிற்கிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின்னால் சிதறிப்போன சீடர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து தூய ஆவியைப் பெறுகின்ற இடத்திலே அனைவரையும் கூட்டிச் சேர்த்தவர் அன்னை மரியா. ஆகவே, இவர் மிகப் புரட்சிகரமான ஒரு பெரிய ஆளுமையாகத் திருமறையிலே காட்டப்பட்டிருக்கிறார். அவருடைய சிறப்பான ஆளுமையின் வெளிப்பாடாக இந்த Magnificat பாடல் அமைகிறது. இந்தப் பாடலைமரியன்னையின் பாடல்  என்பர். இது தென்னிந்தியத் திருச்சபையிலும் (protestantஅதிகமாக வழிபாட்டிலே பாடப்படுகின்ற ஒரு பாடல். பழைய ஏற்பாட்டுத் திருமறைப் பகுதி முடிந்த பிறகு இந்தப் பாடல் வரும். இப்பாடலின் பொருள் என்னவென்றால், பழையதையும் புதியதையும் இணைப்பது இம்மரியன்னையின் பாடல் என்று அது மிக மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

Magnificat என்பது இலத்தீன்  மொழியில் முதல் வார்த்தை Magnificat Anima mee Dominum (My Soul magnifies the Lord).  இதை நான் பகிர்ந்து கொள்ளலாம் என்று யோசித்தபோது இது  ‘நம் வாழ்வின்பாடலாகவே இருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால், அன்னை அவர்கள் ஒரு கவிஞர்; ஒரு சிறப்பான உயர்ந்த சிந்தனையாளர்; திருமறை ஆராய்ச்சியாளர். இதில் வருகிற திருமறைகள்  எல்லாமே பழைய ஏற்பாடு என்று சொல்லப்படுபவற்றில் ஆழமாக வேரூன்றி எடுக்கப்படுகின்ற ஒரு பாடல். அதாவது, எலிசபெத்தைச் சந்திப்பதற்கு அன்னாவினுடைய பாடலைச் சிந்தித்துக் கொண்டே சென்றிருப்பார் என்று நம்பப்படுகிறதுஆகவே, அவர் ஒரு திருமறை வல்லுநர்; எதார்த்தத்தோடு தொடர்புடையவர். எனவே, ஏழைகள் சார்பிலே இருந்து இந்தப் பாடலை எழுதுகிறார். ஆகவே, தன்னுடைய பாடலை, அவருடைய விடுதலை நோக்கோடு அவர் எழுதுகிறார். ‘நம் வாழ்வுபற்றி  என்னவெல்லாம் சொல்ல நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் இப்பாடல் வழியாகப் பெற்றுக்கொள்கிறோம்அவர் எளியவர்களோடு தன்னை ஒன்றித்துக்கொள்வது, அவருடைய விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணிப்பதுஎல்லாவற்றிற்கும் மேலாக உலக முழுமைக்கும், ஒரு நம்பிக்கை ஊட்டுவது என்கின்ற நிலையிலே அவர் இருக்கிறார். இதில்என் ஆன்மாபாடலும், ‘நம் வாழ்வுபணியும் ஒத்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

இந்தஎன் ஆன்மாபாடல் இரண்டு பெண்களின் உரையாடலின் பின்னணியில்  நடைபெறுகின்றது. இரண்டு பேரும் இறையருளைப் பெற்றவர்கள், இறையனுபவத்தைப் பெற்றவர்கள். ஆனால், அதே நேரத்தில் அவர்கள் மற்றவர்களோடு தங்களின் வாழ்வை மிகவும் வெளிப்படையாகப் பெருமையாகப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்கள். ‘நம் வாழ்வுஇப்படிப்பட்டவர்களை  இணைக்கின்ற ஒரு பாலமாக அமைகிறது. அதாவது, இறையருளைப் பெற்றவர்கள், இறையனுபவத்தைப் பெற்றவர்கள், ஒரு வகையில் சமுதாயத்தால் ஏற்கப்படாதவர்கள், அப்படிப்பட்டவர்கள் இங்கே வந்து அவர்களுடைய கருத்துகளை எல்லாம் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்கின்ற மேடையாக இந்தநம் வாழ்வுஅமைகிறது.

அவர்கள் பேசும்போது என்ன நடக்கிறது? இந்த அம்மையார்களின் சிறப்பு என்னவென்றால், இருவரும் தன்னலமற்றவர்கள். ‘தான்என்ற உணர்வு சிறிதும் இல்லாதவர்கள். இப்போது அன்னை மரியா ஆண்டவருடைய தாயார்; அவரின் வயிற்றில் இருக்கின்ற கருவினால் மிக மிக உயர்ந்த நிலைக்குப் போய்விட்டார். ஆண்டவருக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் இன்று வழிபாட்டுத்தலங்கள் அவருக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. அம்மையார் நினைத்திருக்கலாம், “நான்  எதற்கு யோவானின் தாயாரைப் பார்க்க வேண்டும்? She is less them my Lord; அல்லது எலிசபெத்து நினைத்திருக்கலாம், “அன்னை மரியா ஒரு சாதாரண எளிய ஏழைப்பெண்; நான் ஓர் ஆசாரியரின் மனைவி; சமுதாயத்திலே உயர்ந்த நிலையிலே இருக்கிறவள்; வயதிலே மூத்தவள்நான் எப்படி இவரை மனதாரப் பாராட்டுவது?” ஆனால், இந்த இரண்டு பேருமே, ‘தான்என்ற உணர்வு அற்றவர்களாக மற்றவர்களைப்  பாராட்டுகிறார்கள். இது இருவரும் பாராட்டுகின்ற வாழ்த்துச் செய்தியாக இங்கே வருகிறது. They Speak and they empower others to speak. They  Speak and they enable each others to praise.  I think this is the task  of  Nam Vazhvu. Helping  people to speak  through  their writings, which will create more people  to  write  in order that they  will  also be empowered  in their own personality  and  commitment  for Christ’s service.

இந்தப் பாடல் பெண்களுடைய ஆற்றலை அங்கீகரித்து அதைப் பாராட்டுகின்ற பாடல். அந்தக் காலத்துப் பெண்களுடைய நிலைமையை உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. அதுவும் இப்படிப்பட்ட பெண்களைப் பற்றி விளக்கவே  தேவையில்லை. ஆனால், ஆண்டவர் இப்படிப்பட்ட பெண்களைத் தம்முடைய மீட்பின் பணியில் இணைத்துக் கொள்கிறார். அவர்கள்தாம் இறைவனுடைய மீட்பின் பங்காளிகள். இயேசுவினுடைய தொடக்கத்தில் அவர்கள்தான் கானாவிலே மீட்புப் பணியினைத் தொடங்கி வைக்கிறார்கள். இப்படியாக இவர்கள் இருவரும் தங்களை இந்த மீட்புப் பணியிலே இணைத்துக் கொள்கிறார்கள். நம்முடைய சமுதாயம் இன்றைக்கு மறுமலர்ச்சி பெறவேண்டுமானால் அவர்களுடைய இப்படிப்பட்ட பங்களிப்புகள் இப்போது மிக மிகத் தேவை. ஆண்களுடைய வாழ்வும் இதயமும் பெண்களுடைய கரங்களிலேதான் உள்ளது, அது தாயாக இருக்கலாம் அல்லது மனைவியாக இருக்கலாம். அவர்களுடைய கரத்திலேதான் ஆண்களுடைய வாழ்வு அமைந்திருக்கிறது. ஆகவே, யாரெல்லாம் சாதாரணமானவர்கள் என்று எண்ணுகின்றோமோ, அவர்கள் இறைவனின் மீட்பின் பங்காளிகள் என்பதை உறுதிப்படுத்துவது இந்தநம் வாழ்வுஇதழினுடைய மிக முக்கியக் கடமையாக நான் கருதுகிறேன்.

தனிப்பட்ட அனுபவம், திருச்சபை அனுபவம் என நீண்டு இது உலக அனுபவ மீட்பின் அனுபவமாக இது பரிணாமம் எடுக்கிறது. இந்தநம் வாழ்வுஇதழில் அதனை நான் அதிகம் பார்த்தேன். இது தனி கிறித்தவ அனுபவத்தை விளக்குகின்றது. திரு அவையினுடைய வாழ்வையும் இது பிரதிபலிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, முழு மனுகுலத்திற்குமான மீட்பையும் எடுத்தியம்புகிறது.

இறுதியாக, Transformation - from humiliation to exalt. அதாவது, தாழ்மையானவர்களை உயர்த்துவது; பசியுள்ளவர்களை நன்மைகளால் நிரப்புவது. எப்படி நம்மால் செய்ய முடியும்? என்றால், நம்முடைய எழுத்தின் வழியாக இப்படிப்பட்ட பெரிய காரியங்களைச் செய்ய முடியும். கத்தோலிக்கத் திரு அவையிலிருந்து புரோட்டஸ்டன்ட் திரு அவையின் வரலாறு மிக முக்கியமான அடிக்கல் வைத்ததற்கான காரணம் என்னவென்றால், திருமறை மொழிபெயர்ப்பு. அதில் கத்தோலிக்க மிஷனரிகள் முன்னால் வந்திருந்தாலும், முதலாவது தமிழ்மொழியில் மொழிபெயர்த்தவர் சீகன் பால்க் என்பவர். ஏன் அவர்கள் மொழிபெயர்த்தார்கள் என்றால், அந்தக் காலத்தில் பிளவுபட்ட சமூதாயத்தில் சாதியத்தின் அடிப்படையில் எல்லாரும் எங்கும் போக முடியாது. ஆனால், எழுதப்பட்ட நூல்கள் எல்லா இடத்திற்கும் செல்ல முடியும். எல்லாருடைய வாழ்விலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்படிப் போகும் போது அங்கே மகிழ்ச்சி பெருகுகிறது. இந்த மகிழ்ச்சியினுடைய அடையாளம் என்னவென்றால் புகழ் பாடல்கள் அங்கே எழும்புகின்றன.

நம்முடையநம் வாழ்வுமக்களிடையே மகிழ்ச்சியைப் பரப்புகின்ற ஒன்றாக இருக்கிறது. இதோ அனைத்து மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றதும் இடையர்கள் துதிக்கத் தொடங்கினர். அவ்வாறே, அந்த மகிழ்ச்சி வரும்போது நாம் துதிக்க ஆரம்பித்து விடுவோம். புகழ் பாட ஆரம்பித்துவிடுவோம். அதேபோலநம் வாழ்வுஇதழ் எழுத்துகள் வழியாக மக்களுக்கு மகிழ்ச்சியைத் தற்போது கொடுக்கிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக நல்ல பணிகளைச் செய்து வருகின்றநம் வாழ்வுதொடர்ந்து மிக மிகச் சிறப்பான பணிகளைச் செய்து  வாழ்கின்ற, வளர்கின்ற, வாழ்வு ஊட்டுகின்றஎன் ஆன்மாபாடலாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.