இந்தியா மக்களாட்சியாக மாறிய பின்பு, 1955-இல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், மொழிவாரியாக இந்தியா முழுவதும் மாநிலங்கள் ஒன்று சேர்க்கப்பட்ட நிலை என்பது, நாம் அந்நியர் ஆட்சியில் இருக்கும் போதே 1921-களில் தொடங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்வோம். அதேவேளையில், 1930-இல் இருந்தே இந்தி எதிர்ப்பும் இம்மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் மறுக்க இயலாது.
நமது
நாட்டில் குறைந்தபட்சம் 10,000 மக்கள் பேசக்கூடிய மொழி மட்டுமே ஒரு தனிமொழியாக அறிவிக்கப்பட்டாலும், பேச்சு மொழியென, எழுத்துரு இல்லாத மொழிகளும் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1,624
மொழிகள் ஏற்கப்பட்டவைகளாக இதுவரை இருந்து வருகின்றன. இதை ஒருபுறம் ஏற்கும் வேளையில், நாட்டின் விடுதலைப் போரில் பங்காற்றிய வட மாநிலங்களை ஒன்றுசேர்க்கும்
விதமாக இந்தியில் பத்திரிகைகள் வெளிவந்ததும் வரலாறு. அதுவே காலப்போக்கில் இந்தியைத் தொடர்புமொழியாக ஏற்றுக்கொண்டதற்கும் தங்கள் மொழிகளின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் இழந்துபோனதற்குமான காரணம் என்பதையும் அறிந்து வருந்துகிறோம். இந்தி மொழி உருவாவதற்கு முன்பாகவே பிறந்த ப்ரஜ், அவாதி, இராஜஸ்தானி, பஃபேலி, போஜ்புரி, புரிதேலி, மைத்திலி, சட்டீஸ்காரி, கார்வாலி, ஹர்யான்வி , கனாவ்ஜி, குமவுனி, மகாதி, மார்வாரி போன்ற மொழிகள் இன்றளவும் நலிந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இந்தி மொழியின் ஆதிக்கமே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. மகாவீர் பிரசாத், திவி வேதி, பாலமுகுந்த் குப்தா நு அம்பிகா பிரசாத்
பாஜ்பயி, சோட்டே இராம் சுக்லா போன்றோர்கள் இந்தி மொழி எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களாக இருந்து மற்ற மொழிகள் மற்றும் வழக்காற்று மொழிகளைப் புறந்தள்ளவும், இந்தி மொழி எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக மாறவும் காரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மிகவும்
வருந்தத்தக்க விசயம் ஒன்று இருக்குமென்றால், உருது
மொழியை ஏனோ இசுலாமிய மதப் பிரிவினரின் மொழியாக மாற்றிவிட்டதென்பதே. உருது எழுத்தாளர்களான பி.எஸ். ஜெயின்
ஜவஹர், அமீர் சந்த், பகவான் தாஸ் இஜாஸ், சோஹன் ராஹி, இந்திராமோகன் தீபக்குமார், ஆஷா பிரபாத், காமினி தேவி, இராஜேந்தர் நாத், ஜயன்றி பராமர் போன்றோர் இசுலாமிய மதம்
சாராத
எழுத்தாளர்கள் என்பதை எப்படி எளிதாக நம் நாடு மறந்துவிட்டது?
இருப்பினும்,
மாநிலங்களின் அமைப்புகள் மற்றும் வரையறைகள் எல்லாம் அந்தந்தப் பகுதியில் மொழிவாரி இனங்கள் அதிகம் குடியேறியதை முன்னிட்டு பிரிக்கப்பட்டு, இன்றைய
சூழலில் 28 மாநிலங்களும், எட்டு
யூனியன் பிரதேசங்களும் இணைந்த மாநிலங்களின்
ஒன்றியமாகவே இந்தியா பார்க்கப்படுகின்றது.
இதில்
ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு இவற்றைக் காத்திடவும், வரும் தலைமுறையினருக்கு அதை வழங்கிடவும் வழிவகை செய்யும் வண்ணமாக, தாய்மொழியில் மட்டுமே கல்வி என்பதை இந்தச் சமூகம் ஏற்க வேண்டிய நிலை மாறி, தொடர்பு மொழியாகக் கடந்த நானூறு ஆண்டுகளாக நமது பயன்பாட்டில் இருக்கும் ஆங்கிலமானது அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதை நாம் ஏட்டளவில் ஏற்றுக்கொண்டு விட்டோம். எனினும், தாய் மொழியை விடுத்து ஆங்கிலம் மட்டுமே கல்வி பயிலும் மொழியாக மாறும் வேளையிலும் அல்லது இந்தி முதலிய வேறு மொழிகளின் கற்பித்தல் மொழிப்பாடத்தில் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் CBSE பள்ளிகளில் அந்தக் கொள்கையை வைத்துக்கொள்வதிலே நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை. ஆனால், மாநிலங்களின் உரிமையாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிப் பள்ளிகளிலும், அரசு நடத்துகின்ற ஆங்கில வழிப் பள்ளிகளிலும் கூட, மூன்றாவதாக மற்றொரு மொழியைப் புகுத்த நினைப்பதை எவ்வாறு நாம் வளர்ச்சியாகப் பார்க்க முடியும்?
எடுத்துக்காட்டாக,
ஆங்கிலத்தையும் வெல்ஷையும் அதிகமாகப் பேசக்கூடிய பிரிட்டனில் கூட 91 விழுக்காட்டினர் மட்டுமே ஆங்கிலம் புரிந்து பேசக்கூடியவர்கள் என்பதும், அதிகமாகப் பேசக் கூடிய மற்ற மொழிகளில் போலிஷ், உரோமேனியன், பஞ்சாபி, உருது ஆகிய மொழிகள் ஆங்கிலத்திற்கு அடுத்த நான்கு இடங்களில் பெருகி வருகின்றன என்பதும் அதிகாரப்பூர்வமான தகவல்கள். இது மொழிகளுக்கும், அதைப் பேசிவரும் இனங்களுக்கும் நாம் தரக்கூடிய முதன்மைத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவை
எத்தனையோ அரசர்கள் கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பு இருந்தாலும், வட பகுதியைச் சார்ந்த
பேரரசுகள் ஒருகாலும்
தமிழ்நாட்டில் கோலோச்ச முடியாமல் போனதற்குக் காரணம், இம்மண்ணைச் சார்ந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் பேரரசுகள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதும், அதன் பின்புலமாகத் தமிழ்மொழி இருந்ததுமே காரணம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு
மொழி ஆட்சி வழியாக ஓர் இனமே நடத்தப்படுவது என்பதைக் கருத்தளவில் நாம் ஏற்றுக் கொண்டாலும், இந்தியா போன்ற பல மொழிகள் பேசும்
பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் தொடர்பு மொழி ஒன்று வேண்டும் என்பதை யாராலும் மறுக்க இயலாது. எனினும், அந்தத் தொடர்பு மொழியானது ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வேறு வழியில்லாமல் ஆங்கிலமாக நிறுவப்பட்ட நிலையில், தொடர்பு மொழிக்கென மற்றொரு மொழியைத் தேர்வு செய்வது அவசியமற்றது எனவும், அதுவும் ஓர் ஏகாதிபத்தியத் திணிப்பே எனத் தமிழ்நாடு முதல்வர் கூறுவதில் இருக்கும் நியாயத்தையும் நாம் பார்க்க வேண்டும். மேலும்,
மூன்றாவதாகத் திணிக்கப்படும் மொழியானது நமக்கு எந்தவிதத்திலும் அறிவு மற்றும் திறன் வளர்ச்சிக்கு வித்திடாது என்ற நிலையில், இந்தி மட்டுமல்ல, வேறெந்த இந்நாட்டு அல்லது வெளிநாட்டு மொழிகளுக்குமே இது பொருந்தும் என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
இந்தியா
என்பது பன்மொழி, பல பண்பாடுகள், சமயங்கள்,
நம்பிக்கைகள், வரலாறுகளின் கூட்டு என்பதையும், அதில் ஒரு சமூகத்தின் மொழி என்பதை மதிப்புடனும், அதைப் பரவலாக்கும் நோக்குடனுமே பார்க்க வேண்டுமே ஒழிய, ஒருகாலும் மற்றொரு மொழித் திணிப்பினால் அழித்து விடவோ, ஒதுக்கித் தள்ளிவிடவோ கூடாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக்கெள்ள வேண்டும்.
ஆகவே,
ஒரே மொழி மற்றும் மும்மொழிக் கொள்கையால் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என்பதெல்லாம் மற்றொரு மொழிப்போருக்கு இம்மண்ணிலே வித்திடும் என்பதையும் நாடாள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.