news-details
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் உடல் நலத்திற்காகச் சிறப்பு செபமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் விரைவில் நல்ல உடல் நலம் பெற உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களால் சிறப்பு செப வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், உரோமில் உள்ள கர்தினால்கள், ஆயர்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் இறைமக்கள் அனைவரும் இணைந்து பிப்ரவரி 24, திங்கள்கிழமை இரவு 9 மணிக்குச் சிறப்பு செப மாலை செபித்தனர். புனித டொமேனிக்கோ ஆலயத்தில் நடைபெற்ற இச்சிறப்பு செப வழிபாட்டைத் தலைமையேற்று நடத்திய போலோஞ்னா உயர் மறைமாவட்டப் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பிதிருத்தந்தைக்கான இந்தச் சிறப்பு செபமாலையில் நோயாளர்கள், மறக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்கள், வன்முறை மற்றும் போர் என்னும் நோயுடன் வாழ்பவர்களையும் நினைவில் வைத்து அவர்களுக்காகச் செபிப்பதும் திருத்தந்தை அவர்களை மகிழ்விக்கும்என்றும் கூறினார்.