விரைவில் தொழில்நுட்பமயமான புதிய சகாப்தத்தை (era) காணவிருக்கிறோம். இவ்வாறு உலகில் ‘ஏஐ’யின் (AI) மூலம் அடையப்போகும் பெரும் மாற்றத்தில் எவ்வாறு நம்மை இணைத்துக்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வி இன்று நம் முன் நிற்கிறது.
‘ஏஐ’யின் மின்னல் வேகம், ஒரு கட்டத்தில் மனித அறிவாற்றலுக்கு (Human Level Intelligence) சமமாக
உருவெடுக்க எவ்வளவு காலமெடுக்கும் என்ற கேள்வி பலரின் மனத்தில் எழுந்தது; சில ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இதற்குச் சிலர், அடுத்த சில பத்து ஆண்டுகள் ஆகலாம் என்றனர்; ஒருசிலர் நூறு ஆண்டுகள், சிலர் இது இயலாத ஒன்று என வேறுபட்ட கருத்துகளைக்
கூறினார்கள். இந்நிலையில், 2060/2070-இல் முடியலாமென்பது
பரவலாகக் கருதப்பட்டாலும், சிலர் அதற்கு முன்பே நிகழலாம் என்கின்றனர்.
1903-ஆம் ஆண்டு
மனிதன் ஆகாயத்தில் பறக்க முடியும் என்பதை முதன் முதல் பறந்த விமானிகளான வில்பர் ரைட், ஆர்வில் ரைட் (Wilbur Wright - Orville Wright) செய்து காட்டினர்.
ஆனால், 1901-ஆம்ஆண்டு வில்பர் தன் சகோதரரான ஆர்வில்லிடம், இச்சாதனை நடைமுறைக்கு வர இன்னும் 50 ஆண்டுகள்
ஆகலாமென்று கூறினாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்துவிட்டது. வரலாற்றில் இவ்வாறு பல வெளிவராத நிகழ்வுகளிருப்பதால்,
புதுமைப் படைப்புகளுக்குக் காலத்தைக் கணிக்க முடியாமலிருக்கிறோம். இன்று மூலை முடுக்குகளெல்லாம் தொழில்துறை, வணிகம், மருத்துவம் என்று எல்லாவற்றிலேயும் ஊடுருவிக் கொண்டிருக்கும் ‘ஏஐ’
70 ஆண்டுகளுக்கு முன் நம்மில் பலரிடையே ஒரு பகல் கனவாக இருந்தது.
50 ஆண்டுகளுக்கு
முன் கால்குலேட்டர் (calculator) இருந்தது. மனிதரை விட துரிதமாகவும் துல்லியமாகவும் பிழையின்றி முடிவுகளைக் கொடுக்கும் ஆற்றல் படைத்து, பெரும்பாலானோரின் அலுவலக மேஜைகளை அலங்கரித்தும், பலரின் கணிதம் சார்ந்த வேலைகளுக்கு நண்பனாகவும் இருந்ததை அறிவோம். இதன் வேகம் (speed), தனித்தன்மை (generality), மாறிடும் அமைப்பு (scale) பொறுத்து அதன் செயல்பாட்டினை மதிப்பிடும்போது கால்குலேட்டரை (calculator) அறிவாற்றல் (intelligent) என்ற பெரிய தொகுப்பின் வரிசையில் இடம்பெறுவதாகவும் கருதப்பட்டது.
கைப்பேசியின்
ஆரம்பக் காலத்தில், சிலரின் கழுத்தைச் சுற்றி மாலையாக அணிவதைப் பெருமையாக உணர்ந்தனர் என்பதைப் போன்று, அதற்குமுன் கால்குலேட்டர் சிலரிடமே இருந்தது. ஆனால், இதனை இன்று நாம் காணும் அறிவாற்றலின் (intelligent) திறவுவாசலான ‘ஏஐ’-க்குச் சமமாகக் கருத முடியுமா? ஏனென்றால், ‘ஏஐ’ ஒவ்வொரு நாளும் புதிய தோற்றத்தையும் ஆற்றலையும் பெற்று உருவாகிக் (evolve) கொண்டிருக்கிறது. ஆரம்பக் காலத்தில் கல்விக்காக (academic) மட்டும் போதுமானது என்று பயின்ற நாள்கள் சென்று, இத்தொழில்நுட்பம் 21-ஆம் நூற்றாண்டில், அன்றாட வாழ்க்கையின் பயன்பாட்டிற்கும் தேவை என்று உணரப்படுகிறது.
இன்று
‘ஏஐ’
தொழில்நுட்பத்தினால்
ஒருவருடைய முகத்தையோ அல்லது பொருளையோ அறிந்துகொள்ள முடியும் (recognise).
ஒருவரின்
பேச்சை எழுத்து வடிவில் (text transcription) பெற்றிடவும், உடனடியாக மொழிபெயர்ப்பு செய்திடும்படியான தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கிறோம்.
ஒருசில
தூண்டுதல் (prompts) மூலம் ‘ஏஐ’ மாடல்களிடமிருந்து வரைபடங்களை (images) மற்றும் தெளிவான, விளக்கமான தகவல் தொகுப்புகளை உருவாக்க முடியும். ‘ஏஐ’ வழிமுறைகள் (systems) சிறிதும் மாறாத குரல்களை உருவாக்கவும், வியத்தகு இசையை அமைத்திடவும் திறன் பெற்றவைகளாக உள்ள நாள்களில் வாழ்கிறோம்.
இன்று
பலர் ஸ்மார்ட் ஃபோன் (smart phones) மூலம் தொட்டுப்
பேசுவதைக் காண்கிறோம். ‘ஏஐ’
-யின் கிளைப்பிரிவில் உருவானதே நாம் பரவலாகப் பயன்படுத்தும் கணினிப் பார்வை (computer vision). ஆன்லைன் மூலம்
கல்வி என்பது (online classes) ‘ஏஐ’-யின் மற்றொரு பிரிவு.
பொழுதுபோக்குக்கென்று
தொடங்கி, ஓட்டுநரில்லாத கார் (self driven cars),
ரோபோட்ஸ் (Robots), ட்ரோன்ஸ்
(Drones) என்று
2030 போல் ‘ஏஐ’ போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு என்று பல துறைகளில் அன்றாடப்
பயன்பாட்டிலிருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஏஐ’-யின் ஊடுருவல் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சமுதாயம் இதன்மூலம் பயன் பெற தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.
பொருளாதாரத்தின்
வலிமை முன்பு ஒரு நாட்டின் நிலம், வேளாண்மை, அதனை நிர்வகிக்கும் திறனில் இருந்தது; இது உலகளவில் பரந்து விரிந்தும் இருந்தது. காலத்திற்கேற்ப பொருள்களின் முக்கியத்துவமும் மாறிக்கொண்டிருப்பதற்குத் தரவு (Data) ஓர்
எடுத்துக்காட்டு.
இன்று
நாம் பயன்படுத்தும் தரவுகள் (datas) வலிமையும் வேகமும் கொண்டதாக உள்ளன. தனி மனிதனின் அனைத் துத் தரவுகளையும் இயந்திரம் வைத்திருப்பது ஒருவரின் வாழ்வின் முறையைக் கணிக்க, வசப்படுத்த உதவிடும் என்பதோடு இல்லாமல் ‘ஏஐ’ எது சரி? எது இல்லை? (redefine what is right
and wrong) என்பதைத்
தீர்மானிக்கும் இடத்தையும் பெற்று விடுகிறது.
‘ஏஐ’ என்பது இயந்திரங்களை அறிவாற்றலடையச் (intelligent) செய்து, அந்த அறிவாற்றல் சூழலுக்கேற்ப எதிர்நோக்குடன் செயலாற்றச் செய்வதாகும். ‘ஏஐ’ மனிதர்களை விட மேன்மையாக, குறைந்த செலவில் தன்னிச்சையாகச் செயலாற்றும் இயந்திர உருவாக்கமும் கூட (unaided machines being
able to accomplish every task better and more cheaply than human).
‘ஏஐ’ இயந்திரங்களான ரோபோக்கள், ட்ரோன்கள் (Robots and Drones) இயங்குவது
மட்டுமன்றி, ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றும் (collective intelligence) திறன்பெற்றிருப்பதை அவைகளின் சில செயல்களான ஜோடிகளாகப் பறப்பதில் (flying formation)
காணமுடிகிறது. எதிர்காலத்தில் இன்னும் பல ‘ஏஐ’ இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வது நடைமுறையில் வருவது தொலைவில் இல்லை.
இன்று
கணினி உலகில் பரவலாகப் பேசப்படும் அல்கோரித தொழில்நுட்பத்திற்கு அதிக இடம் (space) ஒன்றும் தேவைப்படாது. ஒரு நாட்டிலிருந்தே பொறியாளர்கள் கோட் (code), அல்கோரித சாவியை (keys) வைத்து அனைத்துலக நிலைமையைக் கண்காணிக்கலாம். இதனால் ஏழ்மை நாடுகள் ஒதுக்கிவிடப்பட்ட நிலையிலும், வலிமையான நாடுகள் மேலும் வலிமை பெறவும் வழிவகுக்கும். இதே நிலைதான் உலகளவில் தொழிலாளர்களுக்கும் ஏற்படும்.
இந்த
டிஜிட்டல் வளர்ச்சி எங்கு கொண்டு சேர்க்கும்? என்று திகைக்கும் நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயந்திரம் தரவுகளைத் தன் வசம் வைத்து, உலகளவில் அனைவரின் சொந்தத் தகவல்களைப் பெற்றிருப்பது எந்த நாட்டில் யார் வாழ்வது? ஒரு வேளை நாம் டிஜிட்டல் நாட்டில் வாழ்கிறோமா? என்பதாகக்கூட இருக்கும்.
இந்த
ஓட்டத்தில் சேர்ந்துகொள்ள இயலாதோர் சமுதாயத்தில் தானாகவே ஒதுங்கி நிற்கும் சூழலும் ஏற்படலாம்.