நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36.596 சதுர கிலோ மீட்டர் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்திற்கான கொள்கையின் கீழ் 9-வது ஏல அறிவிப்பை ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 03.01.2024 அன்று வெளியிட்டிருக்கிறது. இந்த ஏல அறிவிப்பு திறந்தவெளி அனுமதிக் கொள்கையின் (Open Acreage Licensing Policy) கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 2014 -ஆம் ஆண்டு திறந்தவெளி அனுமதி என்ற புதிய அனுமதி வந்தது. இதுவரை 8 சுற்று ஏலங்கள் விடுக்கப்பட்டிருந்தன. அது டெல்டா பகுதிகள், விழுப்புரம், இராமநாதபுரம் பகுதிகளில் ஏலம் விடப்பட்டிருந்தது. இந்த 9-வது ஏலத்தில் தமிழ்நாட்டின் நான்கு வட்டாரங்களில் 32,485 சதுர கி.மீட்டர் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஆழமற்ற கடற்பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும், ஆழமான இந்தியக் கடற்பகுதிகளில் 95 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் மூன்று தொகுதிகளும், சென்னைக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் ஒரு தொகுதியும் அமைந்துள்ளன. இந்த நான்கு ஆழ்கடல் தொகுதிகளையும் கபளீகரம் செய்வதற்கு ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.
சட்ட விதிகளிலிருந்து
விலக்கு:
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment) அறிக்கை 2020- இல்
கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, அ)
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவையில்லை. ஆ)
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை. இ)
சுற் றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தேவையில்லை. நில அதிர்வு சோதனையால் ஏற்படக்கூடிய தீங்குகளை மதிப்பிடல் வேண்டும்.
ஹைட்ரோ கார்பன்
எப்படி
எடுக்கப்படுகிறது?
ஹைட்ரோ
கார்பன் நீரியல் விரிசல் முறை (Hydraulic fracturing) என்ற
மிக ஆபத்தான முறையில் எடுக்கப்படுகிறது. பூமியில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்தான் கடலுக்கடியிலும் பயன்படுத்தப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைத் தேடுவதற்கு நில அதிர்வு (Seismic Surveys), ஏர்
துப்பாக்கிகள் (Air Guns) கடல்
நீரில் 250 டெசிபல்களில் வெடிக்கும் பயன்பாடுதான் இந்தச் சோதனை. மேப்பிங் தொழில்நுட்பம் இது வரை வந்துவிட்ட நிலையில், கடல்நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கு இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் பெரிய அளவிலான துல்லியமற்ற முறைகள் ஏன் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரே பதில் இலாபமும் இலாப வெறியுமே. கடலின் அடியில் மணலுக்குக் கீழே பத்து கி.மீட்டரில் ஏர்
துப்பாக்கிகள் செலுத்தப்படுகின்றன. மிகப்பெரிய இரைச்சலுடன் அவை அதிர்வலைகளை ஏற்படுத்தும். பத்து கி.மீட்டருக்குள் அவை
புவியின் தன்மை, எண்ணெய் மற்றும் வாயு இருப்புகளை உறுதிப்படுத்தும். கனிமங்களின் இருப்பை உறுதிசெய்து திருப்பும் அதிர்வலைகளை அளவிடும் கருவிகள் ஏற்கெனவே அளவிடும் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும். உள் வாங்கும் (Receiver) கருவிகள்
பெற்றுக்கொள்ளும். இந்தச் சோதனையில் ஒவ்வொரு 4 மற்றும் 10 வினாடிகளிலும் 24 மணி நேரத்தில் வாரத்தின் 7 நாள்களும் சத்த அலைகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்தச் சோதனை ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நீடிக்கலாம்.
திறந்தவெளிக்
கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கி.மீட்டர் தூரம்
இந்த இரைச்சல் அதிர்வுகள் இருக்கும். இதனுடைய இரைச்சல் அளவைப் பொறுத்து பாலூட்டிகள், திமிங்கலங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் கேட்கும் திறன், ஒலி எழுப்பும் திறன், தன் இணையை, தனது உறைவிடத்தைத் தேடும் திறன் குறைந்தோ, முழுமையாகவோ பாதிக்கப்படும். இந்த அதிர்வுகளுக்கு முதலில் இரையாவது மிதவை வாழிகள் (Plankton). ஒட்டு மீன்கள் (Crustaceans) இதனால்
உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறைந்த சத்த அதிர்வுகளை எழுப்பி தொடர்புகொள்ளும் உயிரினங்கள் 100 மீட்டருக்கு அப்பால் கடலில் மேற்பரப்பிலிருந்து கடலுக்குள் விழும் உணவுகளைத் தனது உணர்திறன் ஆற்றலால் (sensitive acoustic system) புரிந்துகொள்ளும்
கடல் உயிரினங்கள் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உட்படும். இது போன்று கடலுக்கு அடியில் பயன்படுத்தப்படும் வெளிச்சம், பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த வட்டாரத்தின் ஒட்டுமொத்த மீன் வளங்களையே அழித்துவிடும்.
பொதுவளங்களுக்குத்
தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயல்பாடும் எதிர்காலத் தலைமுறையினரின் உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நில
அதிர்வுச் சோதனையிலிருந்து வெளிவரும் இரைச்சல் ஆய்வு கப்பலிலிருந்து 4000 கி.மீ. வரையிலும்
கேட்பதாக அறியப்படுகிறது. நுண்புழுக்கள் மற்றும் கடல் நத்தைகளில் வளர்சிதைவு, உடல் குறைபாடுகள் இதனால் ஏற்படுகின்றன. பல்லுயிர் வகைகளின் செயல்பாடுகள் இதனால் மிகப்பெரிய பாதிப்படைகின்றன. தொடர்ந்து வெளிப்படும் ஒலிமாசால் செங்குத்தாக இடம்பெயரும் மிதவை உயிரினங்களின் (plankton) இடப்பெயர்ச்சி பாதிக்கப்படும்.
இந்தியாவின்
அரபிக் கடலோரத்தில் கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை 22 மிக முக்கியமான மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டுகள் அல்லது மீன்பிடித்தளங்கள் இருக்கின்றன. வெட்ஜ்பேங்க் பவளப் பாறைத்திட்டு (7 00’- 8 20’
N, 76 30’- 78 00 E) கன்னியாகுமரியிலிருந்து தென்மேற்காக 36 மைல்தூரத்தில் 10,000 சதுர மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இலங்கையின் கொழும்பிலிருந்து 115 கடல் மைல் தொலைவிலிருக்கிறது. உலகின் மூன்றாவது மீன் வளமிக்கப் பரப்பாக இருக்கிறது.
வெட்ஜ்பேங்கில்
மீன்பிடிக்கச் சிறந்த காலம் ஜூலை முதல் அக்டோபர் வரை. இந்தக் காலகட்டத்தில் நெய்மீன், கலவா, சேமீன், சுறா போன்ற மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். வெட்ஜ்பேங்க் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்குச் சிறந்த இடம். இங்கே மீன்பிடிக்க வெளிநாட்டுக் கப்பல்களுக்கும் இழுவை மடிகளுக்கும் தடையில்லை.
வெட்ஜ்பேங்கை
ஒட்டியே மேற்கொள்ளப்போகும் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளால் எண்ணெய் கசிவோ, கடல் மாசுபாடுகளோ, விபத்துகளோ ஏற்படின் அது சென்னையைப்
போல 15 முதல் 20 பரப்பளவுள்ள நிலப்பரப்பு கொண்ட வயல்வெளிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதற்குச் சமமாகும்.
வெட்ஜ்பேங்க்
ஒரு நிரந்தர மீன்வங்கி. கடலன்னை அளித்திருக்கும் ஓர் அமுதசுரபி. முட்டாள்தனத்தினாலும் பேராசையினாலும் இந்த அமுதசுரபியை அழித்திட ஒன்றிய அரசு முயல்கிறது. ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் கீழ் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக மூன்று எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளை வழங்குவதற்கான ஒன்றிய அரசின் முன்மொழிவிலிருந்து வெட்ஜ்பேங்க் எதிர்கொள்ளப்போகும் அச்சுறுத்தல் புலப்படும்.
வெட்ஜ்பேங்கைச்
சார்ந்திருக்கும் இரண்டு இலட்சம் மீனவர்களும் தற்கொலை செய்ய நேரிடும். ஏற்கெனவே 100 வருடங்கள் நமக்குச் சொந்தமான வெட்ஜ்பேங்க் மீன்தளத்திலிருந்து இலங்கையும் வெளிநாட்டுக் கப்பல்களும் மட்டுமே இழுவை மடியைக் கொண்டு நமது மீன்வளத்தை வேட்டையாடி, பவளப்பாறைகளை அழித்துக் கொண்டிருக்கின்றன.
மீன்பிடித்தல்
சம்பந்தமான அனைத்துத் தொழில் வளர்ச்சிக்கும், மீன்வள வளர்ச்சிக்கும், மீன் பிடித்தத்திற்கும் ஆய்வுகளை மேற்கொள்ள மறுக்கும் அரசு, கடல்வளங்களைச் சுரண்டி ஆழ்கடல் கனிமங்களை, எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாயுக்களை எடுப்பதற்கு அதீத ஆர்வம் காட்டுவதிலிருந்தே இதன் உண்மை புலப்படும். இத்தகைய திட்டங்கள் எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்திற்காகவே அன்றி, இந்தியாவின் ஆற்றல் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காக அல்ல!