news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (24.11.2024)

திருப்பலியில் நமது வாழ்வுக்குள் வரும் இயேசு, தம்மை நற்கருணைப் பேழையில் வெளிப்படுத்தி, அவர் குரலுக்கு அமைதியில் நம்மைச் செவிமடுக்கச் செய்கிறார். அவ்வாறே, நமக்குள் வரும் கிறிஸ்துவை இறைமக்களிடம் எடுத்துச் செல்வதையே, நற்கருணை பவனியும் குறித்துக்காட்டுகின்றது.” 

- நவ. 07, குருமட மாணவர்களுக்கு ஆற்றிய உரை

மனித மாண்பை மேம்படுத்துதல், உண்மையைத் தேடுதல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட செயல்களுக்கான விருப்பத்தின் கருவியாக உலகமயமாக்கல் விளங்குகின்றது. கல்வியின் தரத்தை நாம் மாற்றாவிட்டால் இவ்வுலகை நம்மால் மாற்ற முடியாது.”

- நவ. 09, கற்றல் மற்றும் கல்விக்கான கருத்தரங்குச் செய்தி

கடவுள் பாவிகளின் செபத்திற்கு இறுதிவரை செவிசாய்க்கின்றார். கடவுளுடைய இதயத்திற்கு நாம் திரும்புவதன் வழியாக அறிவிலிகளின் கண்களுக்கு இறந்தவர்களைப்போல் தோன்றினாலும் மீட்பின் நம்பிக்கையை நாம் காணலாம்.”

- நவ. 09, குறுஞ்செய்தி

தேவையில் இருக்கும் மக்களை அதிகார நிலையில் இருந்து பார்த்து அவர்களை அவமானப்படுத்தாமல், நம்பிக்கையையும் உதவியையும் அளிக்க இயேசுவின் போதனைகள் நம்மை அழைக்கின்றன.”

- நவ. 10, திருப்பயணிகளுக்கான மறையுரை

செய்யும் பணிகளில் நுட்பமான உணர்வுடன் செயல்பட வேண்டும்; எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். நிர்வாகத்துடன் இணைந்து நன்றாகப் பணியாற்றும்போது வாழ்வில் நாம் வளர அவை உதவுகின்றன.”

- நவ. 11, ஆலயப் பணியாளர்களுக்கு வழங்கிய செய்தி