“புலம்பெயர்ந்தவர்கள்
வரவேற்கப்பட வேண்டும்; அவர்களுடன் நாம் செல்ல வேண்டும்; அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும்; ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”
- அக். 28, மறைப்பணியாளர்
சந்திப்புச்
செய்தி
“திருமுழுக்கு என்பது பிறப்பின் அருளடையாளம் என்றால், உறுதிப்பூசுதல் என்பது வளர்ச்சியின் அருளடையாளம்; சான்று வாழ்வின் அருளடையாளம்; முதிர்ச்சியான கிறித்தவத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள ஒன்று.”
- அக். 30, திருப்பயணிகளுக்கான
மறைக்கல்வி
உரை
“தகவல் தொடர்பாளர் பணி என்பது ஓர் அழைப்பு, மறைப்பணி, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாகக் கிடைக்கும் வழிமுறைகளை அறிவாற்றலுடன் பயன்படுத்துவது எல்லாவற்றிற்கும் மேலாக இதயத்துடன் தொடர்பு கொள்வது.”
- அக். 31, திருப்பீடச் செய்தித்
தொடர்பாளர்
சந்திப்புச்
செய்தி
“இயேசுவின் மலைப்பொழிவில் வரும் நற்பேறுகள் ஒவ்வொரு கிறித்தவரின் அடையாள அட்டை, புனிதத்துவத்திற்கான பாதை”
- நவ. 01, மூவேளைச் செபவுரை
இறந்தவர்கள்
இறைவனில் வாழ்கிறார்கள், பூமியில் புதைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் ஒரு நாள் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்குகொள்ளும்.”
- நவ. 02, லௌரென்தினோ கல்லறைத்
திருப்பலி
மறையுரை