news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.12.2024)

சமூகத்திலும் திரு அவையிலும் பெண்களின் குரல்கள் அதிகமதிகமாகச் செவிமடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.”

- நவம்பர் 15, திருப்பீடக் கருத்தரங்கின் உரை

குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்; வறுமை, கல்வியறிவு, போதைப்பொருள் ஆதிக்கம் போன்ற பிரச்சினைகளால் சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் எதிர்காலம் பற்றிக் கனவு காண முடியாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.”

நவம்பர் 16, இத்தாலிய தேசிய இளையோர் உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அறிவை மேம்படுத்துவதிலும் நூலகர்களின் முக்கியப் பங்கு உள்ளது. நூலகங்கள் அமைதியின் இடங்களாகவும், சந்திப்பின் சோலைகளாகவும், சுதந்திரமான கலந்துரையாடல்களாகவும் இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.”

- நவம்பர் 16, திருப்பீட நூலகத்தாருக்கான செய்தி

இன்னல்கள், நெருக்கடிகள், தோல்விகள் போன்றவற்றில் கூட, இயேசுவின் நற்செய்தியானது பயமின்றி, மகிழ்ச்சியில் நிலைத்திருப்போம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.” 

நவம்பர் 17, ஞாயிறு மூவேளைச் செப உரை

தூய ஆவியார் செபத்தின் வழியாக நம்முள் நுழைந்து நமது வாழ்க்கையை மாற்றுகின்றார். நாம் நமது இதயத்தைத் திறக்க வேண்டும்; தூய ஆவியாருக்கு இதயத்தில் இடமளிக்க வேண்டும்.”

- நவம்பர் 18, ‘எக்ஸ்தளப்பதிவு