1. திரு அவையினுடைய புனிதத்தின் முன் மாதிரி அன்னை மரியா (நாள்: 6 செப்டம்பர் 1995)
1) திரு
அவையின் அடையாளம் மற்றும் பணியை இன்னும் ஆழமாகச் சிந்திப்பதற்காக முந்தைய மறைக்கல்வியில் அதைச் சார்ந்த சிந்தனைகளை வழங்கிய பிறகு, திரு அவையின் புனிதத்தன்மையையும், அதன் மாதிரியையும் முழுமையாக உணர
கன்னி மரியாவை நோக்கி நம் பார்வையைத் திருப்ப வேண்டியதன் அவசியத்தை நான் இப்போது உணர்கின்றேன்.
இதைத்தான்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கெடுத்த தந்தையர்களும் செய்தார்கள். அதாவது, மீட்பின் வரலாற்றில் இறைமக்களுடைய நிலையைப் பற்றி விவரிக்கின்ற கோட்பாட்டிற்குப் பிறகு, இம்மீட்பின்
வரலாற்றில் மரியாவின் பங்கு பற்றிய விளக்கத்துடன் அதை நிறைவு செய்யவும் திருச்சங்கத் தந்தையர்கள் விரும்பினார்கள். உண்மையில், இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடான ‘Lumen Gentium’அதாவது இறைத் திட்டத்தில் திருச்சபையினுடைய எட்டாவது இயலின் நோக்கமும் திரு அவையியலில் மரியா கோட்பாட்டினுடைய முக்கியத்துவத்தை (ecclesiological significance of Marian doctrine) முன்னிலைப்படுத்துவதிலும் மற்றும் திரு அவையினுடைய மறைபொருளைப் புரிந்துகொள்வதிலும் மரியா எத்தகைய பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றார் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதிலும்தான் இருக்கின்றது.
2) மரியா
பற்றிய திருச்சங்கத்தினுடைய வழிகாட்டுதலை விளக்குவதற்கு முன், நான் திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டிருப்பதைப் போன்று திரு அவையினுடைய தொடக்கத்தில் வாழ்ந்த மரியாவை நோக்கி என்னுடைய சிந்தனையைச் சீர்தூக்கிப் பதிக்க விரும்புகின்றேன். தொடக்க கால கிறித்தவச் சமூகத்தினுடைய வாழ்க்கையை விவரிக்கின்ற இந்தப் புதிய ஏற்பாட்டு நூலின் தொடக்கத்தில், திருத்தூதர்களுடைய
பெயர்களை ஒவ்வொன்றாகப் பதிவு செய்தபின் (திப 1:13), அதன் ஆசிரியராகிய நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறுகின்றார்: “அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்”(திப
1:14).
இந்த
இடத்தில் மரியா ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெறுகின்றார்; அதாவது, திருத்தூதர்களோடு மரியா மட்டுமே பெயரோடு குறிப்பிடப்படுகின்றார். இவ்வாறு அவர் படிநிலை பண்புக்கூறு (hierarchical aspect) மற்றும்
பணிமுறை பண்புக்கூறு (ministerial aspect) இவற்றிலிருந்து வேறுபட்ட மற்றும்
ஈடு செய்யக்கூடிய திரு அவையினுடைய ஒரு முகத்தை நமக்குப் பிரதிபலித்துக் காட்டுகின்றார்.
3) உண்மையில்
நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகள் எருசலேம் நகரில் ஒரு வீட்டின் மேல் மாடி அறையில் சில பெண்கள் இருந்ததாகக் கூறுகின்றன. இவ்வாறு தொடக்க காலத்திலிருந்தே திரு அவையினுடைய வாழ்வில் பெண்களுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை நற்செய்தியாளர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். இந்த உடனிருப்பானது மரியா, குழுமத்தினுடைய ஒற்றுமை மற்றும் செபத்தில் கொண்டிருந்த ஆர்வம் இவற்றோடு மிக நெருக்கமாக இணைக்கப்பட்டது. இந்தப் பண்புகள் திரு அவையினுடைய வாழ்விற்குப் பெண்களுடைய சிறப்புமிக்கப் பங்களிப்பினுடைய இரண்டு நிலைகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அதாவது, வெளி உலகக் காரியங்களுக்கு மிகவும் பொருந்துகின்ற ஆண்கள், தங்கள் உள்ளங்களின் ஒன்றிப்பை விண்ணகம் நோக்கி முன்னேறிச் செல்வதற்கும், தனிமனித உறவுகளுக்குள் அவனை மீண்டும் கொண்டு செல்வதற்கும் பெண்களுடைய உதவி மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
மரியாவின் பங்கு
குறிப்பிடத்தக்க
முக்கியத்துவம்
பெற்றது!
‘பெண்களுக்குள் பேறு பெற்றவள்’(லூக் 1:42). மரியா பெண்களுக்கே உரிய முறையில் அனைவரையும் ஒன்றிணைத்துச் செபத்தில் நிலைத்திருக்கச் செய்யும் பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றார். மரியாவைவிட வேறு யாரால் கிறித்துவில் நம்பிக்கைகொண்ட அனைவரையும் செபத்தில் நிலைத்திருக்க உற்சாகமூட்ட முடியும்? அவரைவிட வேறு யாரால் அன்பையும் ஒற்றுமையையும் பரப்ப முடியும்?
பதினொரு
திருத்தூதர்களிடமும் கிறித்துவால் ஒப்படைக்கப்பட்ட மறைப்பணியைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மத்தியிலிருந்த மரியாவோடு மேல் மாடியில் இருந்த பெண்களும், திருத்தூதர்களும் இணைந்து செபத்தில் ஒன்றித்திருந்தார்கள். அதேநேரத்தில் மறைப்பணிக்கான அழைத்தலை பெண்கள் பெறாவிட்டாலும், மக்கள்முன் திரு அவையின் சாட்சிகளாகி, கிறித்துவில் நம்பிக்கைக் கொண்டவர்களின் குழுமத்தினுடைய முழு உறுப்பினர் ஆனார்கள்.
4. தொடக்க
காலத் திரு அவையில் தூய ஆவியாரின் வருகைக்காகச் செபத்தில் காத்துக்கொண்டிருந்தபோது மரியாவினுடைய உடனிருப்பானது
(திப 1:14), தூய ஆவியாரின் வல்லமையால் இறைவார்த்தை மனுவுருவாதலில் அவருடைய பங்கை நமக்கு நினைவுப்படுத்துகின்றது (லூக் 1:35). அந்தத் தொடக்க நிலையில் மரியாவினுடைய பங்கினைப் பெந்தகோஸ்து
விழாவில் திரு அவையினுடைய வெளிப்படுத்துதலில் இருந்த அவருடைய பங்களிப்போடு நெருக்கமாக இணைத்துப் பார்க்கப்படுகின்றது.
தொடக்க
காலங்களில் திரு அவையினுடைய வாழ்வில் மரியாவினுடைய உடனிருப்பானது,
அதற்கு முந்தைய கிறித்துவினுடைய பொதுப் பணியின் பொழுது அவர் செய்த மிகவும் விவேகமுள்ள பங்களிப்போடு ஒப்பிடப்படுவதனால், குறிப்பிடத்தக்க வகையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அவருடைய மகன் தமது பணியைத் தொடங்கிய பொழுது மரியா நாசரேத்தில் தங்கியிருந்தார். ஆனாலும் இந்தப் பிரிவானது கானாவூர் திருமண நிகழ்வு போன்ற முக்கியமான நிகழ்வுகளிலிருந்து அவரைப் பிரித்துவிடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இது மரியாவைக் கல்வாரி பலியில் பங்கெடுப்பதிலிருந்தும் தடுக்கவில்லை.
ஆயினும்,
முதல் கிறித்தவக் குழுமத்தில், மரியாவினுடைய பங்கானது
குறிப்பிடத்தக்கதொரு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இயேசுவினுடைய விண்ணேற்புக்குப் பின்னும் மற்றும் பெந்தகோஸ்து நாளை எதிர்பார்த்தலிலும் இயேசுவினுடைய தாய் அவருடைய மகனால் தொடங்கப்பட்ட பணியினுடைய முதல் நிலையிலேயே தனிப்பட்ட முறையில் உடன் இருக்கின்றார்.
5) திருத்தூதர்
பணிகள் நூலானது மரியா அவருடைய சகோதரர்களோடு(திப 1:14) மேல் மாடத்தில் இருந்ததை, அதாவது திரு அவையினுடைய விளக்கம் எப்பொழுதும் இருந்து வந்துள்ளதைப் போன்று, இயேசுவினுடைய உறவினர்களோடு இருந்ததை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மரியாவின் வழிகாட்டுதலின்
கீழ், இயேசுவின் சொந்தக் குடும்பமானது கிறித்துவின் ஆன்மிகக் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறியது என்பது ஒரு குடும்பக் கூட்டம் அல்ல. “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்”
(மாற் 3:35) என்று
இயேசுவே குறிப்பிடுகின்றார்.
அதே
நிகழ்வில், நற்செய்தியாளர் லூக்கா வெளிப்படையாகவே மரியாவை இயேசுவின் தாயாக(திப 1:14) விவரிக்கின்றார். கிட்டத்தட்ட விண்ணகம் சென்ற மகனது உடனிருத்தலின் (presence) அடையாளமாக ஏதோ ஒன்று தாயினுடைய உடனிருத்தலில் தங்கியிருக்க அவர் விரும்பியதாகவே நற்செய்தியாளர் காட்டுகின்றார். மரியா இயேசுவினுடைய முகத்தை அவருடைய சீடர்களுக்கு நினைவூட்டுகின்றார். மற்றும் குழுமத்தில் அவருடைய உடனிருத்தலின் வழியாக ஆண்டவர் இயேசு கிறித்துவுக்குத் திரு அவையினுடைய நம்பகத்தன்மையின்
அடையாளமாகவும் அவர் இருக்கின்றார்.
இந்த
இடத்தில் ‘தாய்’ என்ற அடைமொழியானது திரு அவையினுடைய வாழ்வை மரியா எந்தவொரு நெருக்கமான நினைவின் மனநிலையோடு பின்பற்றுகின்றார் என்பதை அறிவிக்கின்றது. மரியா அனைத்து வல்லமையும் பொருந்திய, இரக்கமுள்ள கடவுள் தன் வாழ்வில் செய்த அதிசயங்களைப் பிறருக்கு எடுத்துரைக்க திரு அவைக்குத் தன் இதயத்தைத் திறக்க வேண்டியிருந்தது.
திரு அவையின்
செபத்தின்
ஆசிரியை
அன்னை
மரியா!
தொடக்கத்திலிருந்தே
மரியா திரு அவையின் தாய் என்ற பங்கை முன்னெடுத்துச் சென்றார். அவருடைய செயல்கள் திருத்தூதர்களிடையே புரிதலை ஊக்குவித்தன. இவர்களைப் பற்றித்தான் நற்செய்தியாளர் அவர்களுக்கிடையே அவ்வப்பொழுது பிரச்சினைகள் எழுந்தாலும்,ஒத்த மனநிலை(one accord) கொண்டிருந்ததாக விவரிக்கின்றார்.
இறுதியாக,
மரியா நம்பிக்கைக் கொண்டோருடைய குழுமத்திடம் அவருடைய தாய்மையைத் திரு அவையினுடைய உருவாக்கம் மற்றும் அதனுடைய எதிர்காலத்திற்குத் தேவையான தூய ஆவியாரின் அருங்கொடைகளை, திரு அவைக்குப் பெற்றுத் தருவதற்காகச் செபிப்பதோடு மட்டுமல்லாமல், இடைவிடாது இறைவனோடு உள்ள உறவைப் பற்றி இயேசுவினுடைய சீடர்களுக்குக் கற்பிப்பதன் வழியாகவும் அறிவிக்கின்றார்.
இவ்வாறு
மறைப்பணியாளர்களுடைய மற்றும் நம்பிக்கைக் கொண்டோருடைய செயலானது, அச்செயலினுடைய தொடக்கம் மற்றும் அதனுடைய உள்நோக்கத்தை ஆண்டவரில் எப்பொழுதும் கொண்ட முக்கியமான மற்றும் பிரிக்க முடியாத ஒன்றாக அமைய, அவர் கிறித்தவ மக்களுடைய செபத்தின் மற்றும் இறைவனை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் முன்மாதிரியாகவும் ஆசிரியையாகவும் ஆனார்.
6) இந்தச்
சிறிய குறிப்புகளிலிருந்து மரியாவுக்கும் திரு அவைக்கும் இடையேயான உறவானது இரு தாய்மார்களுக்கு இடையேயான நெருங்கிய உறவோடு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது
என்பதைத் தெளிவாகக் காண முடியும். இது மரியாவினுடைய தாய்மைப்
பணியை மற்றும் இறைவனின் தாயினுடைய (Theotokos) முகத்தைத்
தியானிப்பதில் அவருடைய உண்மையான அடையாளத்தை எப்பொழுதும் தேடுகின்ற திரு அவையினுடைய அர்ப்பணிப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மூலம்:
Pope John Paul II, Mary is pattern of Church\'s holiness, in
kL\'Osservatore Romano, Weekly Edition in English, 13
September 1995, p.7.