கடந்த நவம்பர் 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த இத்தாலிய கைவினைஞர்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினரிடம், “மனிதத் தொழிலின் மதிப்பை மிக அழகான விதத்தில் வெளிப்படுத்துபவர்கள் கைவினைஞர்கள். அவர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். கைவினைத் திறமை என்பது படைப்பாற்றல் மிக்கது. அது கடவுளின் படைப்புத் தொழிலோடு ஒத்துப்போகின்றது” என்று கூறிய திருத்தந்தை, படைப்பாற்றலை அழிவுக்குள்ளாக்கும் அல்லது முடக்கிப் போடும் அச்சத்தை அனைத்துக் கைவினைஞர்களும் தூர ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், நம் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நம் திறமைகள் மட்டுமல்ல, இறைவனின் கரமும் நம்மை வழி நடத்துவதை நாம் உணர வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.