news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (10.11.2024)

குடும்பத்தில் எப்போதும் உரையாடல்கள் இருக்க வேண்டும்; மோதல்கள் இருந்தாலும் தங்களுக்குள் உரையாடல் மேற்கொள்பவர்களாகக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இருக்கவேண்டும். உரையாடல் இல்லாத குடும்பம் இறந்த குடும்பம் போன்றது.”

- அக்டோபர் 25, 16-வது ஆயர்கள் மாமன்றத்தின்போது குடும்பத்தில் சினேடாலிட்டி காணொளியில் எடுத்துரைத்தது

ஏழைகள் எண்களாகவோ, பிரச்சினைகளாகவோ, நிராகரிக்கப்படு பவர்களாகவோ கருதப்படக்கூடாது; என்றும் நமது உடலாக இருக்கும் உடன் சகோதரர்கள் போன்று கருதப்பட வேண்டும்.”

- அக்டோபர் 25, உரோமை தூய இலாத்தரன் பெருங்கோவிலில் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான செய்தி

பார்வையற்றவரைக் கண்ட இயேசு உடலாலும் உள்ளத்தாலும் அவரின் குரலுக்குச் செவிமடுத்தார். நாம் தெருவில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களை விலக்குகின்றோமா? நிராகரிக்கின்றோமா? அவர்களது குரலுக்குச் செவிசாய்க்கின்றோமா? என்று சிந்திப்போம்.”

- அக்டோபர் 27, வத்திக்கான் ஞாயிறு மூவேளைச் செப உரை.

வாழ்வது என்பது எப்போதும் தன்னை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளுதல், புறப்படுதல், கனவு காணுதல், திட்டமிடுதல், எதிர்காலத்திற்காகத் தன் இதயத்தைத் திறந்திருத்தல்.”

- அக்டோபர் 27, 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவு திருப்பலி மறையுரை

 “புலம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்பட வேண்டும், அவர்களுடன் நாம் செல்ல வேண்டும், அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும், ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

- அக்டோபர் 28, புனித சார்லஸ் மறைப்பணியாளர்கள் சபை உறுப்பினர்களுடன் சந்திப்புச் செய்தி