மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி கிறித்துவர்களுக்கும் பெரும்பான்மை இந்துகளுக்கும் இடையே நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகளுக்கு மத்தியில், மூன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட கடத்தப்பட்ட ஆறு நபர்களின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை. நவம்பர் 12 அன்று 11 இந்துகள் கடத்தப்பட்டதற்குப் பழங்குடி கிறித்துவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர்களில் 5 நபர்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். ஆயுதக் குழுக்களின் பிடியிலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் விடுவிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்குத் தீ வைத்த போராட்டக்காரர்கள் முதல்வரின் வீடு, அரசு சொத்துகள்மீது தாக்குதல் நடத்தினர். வன்முறையைக் கட்டுப்படுத்த இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.