news
வத்திக்கான் செய்திகள்
உடல் சோர்வு; ஆனாலும் பணியில் ஆர்வம் குறையவில்லை!

மார்ச் 21 அன்று திருப்பீடத்தின் வெளியுறவுத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர், திருத்தந்தை உடல் நலம் குன்றிய நிலையிலும் திரு அவைக்கும் மனித குலத்திற்குமான அவரின் பணி ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை எனத் தெரிவித்தார். திருத்தந்தையின் உடல் நலனுக்காகத் தொடர்ந்து செபித்து வரும் அனைவருக்கும் திருப்பீடம் நன்றியுரைப்பதாகத் தெரிவித்தார். பொதுநலனுக்காக உழைக்க வேண்டியது, நீதி மற்றும் அமைதிக்காக அர்ப்பணிக்க வேண்டியது போன்றவை இன்றைய காலத்தின் தேவை என்பதையும் எடுத்தியம்பினார் பேராயர் காலகர்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை தன் குரலிலேயே வழங்கிய நன்றி செய்தி!

பிப்ரவரி 24 முதல் திருத்தந்தை உடல்நலன் பெறுவதற்காக வத்திக்கான் அதிகாரிகள், கர்தினால்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் புனித பேதுரு பேராலய வளாகத்தில் இரவு 9 மணிக்குச் செபமாலை செபித்து வருகின்றனர். தனக்காகச் செபித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது குரலில் இஸ்பானிய மொழியில் நன்றி செய்தி வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தி புனித பேதுரு வளாகத்தில் ஒலிபரப்பப்பட்டது.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் உடல் நலத்திற்காகச் சிறப்பு செபமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் விரைவில் நல்ல உடல் நலம் பெற உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களால் சிறப்பு செப வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், உரோமில் உள்ள கர்தினால்கள், ஆயர்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் இறைமக்கள் அனைவரும் இணைந்து பிப்ரவரி 24, திங்கள்கிழமை இரவு 9 மணிக்குச் சிறப்பு செப மாலை செபித்தனர். புனித டொமேனிக்கோ ஆலயத்தில் நடைபெற்ற இச்சிறப்பு செப வழிபாட்டைத் தலைமையேற்று நடத்திய போலோஞ்னா உயர் மறைமாவட்டப் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பி ‘திருத்தந்தைக்கான இந்தச் சிறப்பு செபமாலையில் நோயாளர்கள், மறக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்கள், வன்முறை மற்றும் போர் என்னும் நோயுடன் வாழ்பவர்களையும் நினைவில் வைத்து அவர்களுக்காகச் செபிப்பதும் திருத்தந்தை அவர்களை மகிழ்விக்கும்’ என்றும் கூறினார்.

news
வத்திக்கான் செய்திகள்
சிறைப்பணியாற்ற முன்வாருங்கள்!

நவம்பர் 16 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்ற நாற்பது திருத் தொண்டர்களிடம், “அரசு சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் எண்ணெயையும், எதிர்நோக்கு என்னும் திராட்சை இரசத்தையும் வழங்கவும்,  கலாச்சாரம், சமூகம், தீமைகள், மறைக்கப்பட்ட பாவங்கள் போன்ற பல சங்கிலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கவும் முன்வர வேண்டும்” என்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

புனித வியாழனன்று, பெண்கள் சிறைக்குச் சென்று, தான் அவர்களின் பாதங்களைக் கழுவியதையும், சிறைக்கைதிகளில் இருந்த ஒரு பெண் தன்னை அழைத்து தனது மகனையே தான் கொன்றதாகக் கூறியதையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
இறைவனின் கரம் நம்மை வழிநடத்தும்!

கடந்த நவம்பர் 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த இத்தாலிய கைவினைஞர்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினரிடம், “மனிதத் தொழிலின் மதிப்பை மிக அழகான விதத்தில் வெளிப்படுத்துபவர்கள் கைவினைஞர்கள். அவர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். கைவினைத் திறமை என்பது படைப்பாற்றல் மிக்கது. அது கடவுளின் படைப்புத் தொழிலோடு ஒத்துப்போகின்றது” என்று கூறிய திருத்தந்தை, படைப்பாற்றலை அழிவுக்குள்ளாக்கும் அல்லது முடக்கிப் போடும் அச்சத்தை அனைத்துக் கைவினைஞர்களும் தூர ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், நம் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நம் திறமைகள் மட்டுமல்ல, இறைவனின் கரமும் நம்மை வழி நடத்துவதை நாம் உணர வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
இறந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்காகத் திருப்பலி

நவம்பர் 4-ஆம் நாள் அன்று திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் 2023-ஆம் ஆண்டு இறந்த ஏழு கர்தினால்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.  இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட நல்ல திருடனின் வார்த்தைகளைத் தன் மறையுரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்’ என்பதை அடிக்கடி கூறுபவர்களாக வாழ வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், இயேசு ‘இரக்கம் நிறைந்த நீதிபதி’ என்றும், ‘பாவிகளின் செபத்தை இறைவன்’ எப்போதும் கேட்கின்றார், இறுதிவரை கேட்கின்றார்’ என்றும், ‘வலியால் துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் இதயம் உலகைக் காப்பாற்றத் திறக்கிறது” என்றும் எடுத்துரைத்தார்.