news
உலக செய்திகள்
‘சையத்’ விருது பெற்றவர்கள்!

உலகின் பல துன்பங்களுக்கான உதவி மற்றும் பராமரிப்பைச் செய்து வரும்World Central Kitchenஅமைப்பு, கரீபியன் நாட்டின் பிபர்டாஸ் பிரதமர் மியா மோட்லி மற்றும் எத்தியோப்பிய-அமெரிக்க 15 வயதான ஹேமன் பெக்கேல் ஆகியோருக்குசையத்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2019 -இல் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அல்அஸ்ஹார் தலைவரின் வரலாற்றுச் சிறப்பாகக் கையெழுத்திடப்பட்டமனித உடன் பிறந்த உணர்வு நிலைஅறிகுறியின் மகத்துவத்தை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பினால் கடந்த பத்தாண்டுகளில் உலகெங்கிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 கோடிக்கும் மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது. மியா மோட்லி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகப் பாராட்டப்படுகிறார். ஹேமன் பெக்கேல், தோல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஒரு மலிவு சோப்பைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முன்னோடி ஆகியுள்ளார். விருது பிப்ரவரி 4 அன்று அபுதாபியில் வழங்கப்பட்டது.

news
உலக செய்திகள்
குழந்தைகளுக்கான அப்போஸ்தலிக்கத் தூது மடல்

திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தைகளுக்கான அப்போஸ்தலிக்க அறிவுரைத் தூது மடல் ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். குழந்தைகள் கடும் துயர், ஏழ்மை, போர் மற்றும் கல்வி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வத்திக்கானில் நடைபெற்ற உலகக் குழந்தைகள் உரிமைகளுக்கான பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில், காசாவில் வாழும் குழந்தைகளின் துயர நிலைகளும், 96% குழந்தைகள் தங்கள் சாவு எந்நேரமும் நிகழக்கூடும் என்று அஞ்சும் நிலையும் பங்கேற்பாளர்களால் பகிரப்பட்டு, உலகம் இதற்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்கின் இறுதியில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த எட்டு இலட்சியங்களை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் உலகத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

news
உலக செய்திகள்
ஐந்தாவது உலக தாத்தா-பாட்டிகள் தினம்

ஐந்தாவது உலக தாத்தா-பாட்டிகள் தினத்திற்கான தலைப்பாகநம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர் (சீரா 14:2) என்ற வார்த்தையைத் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜூலை 27 -ஆம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள இந்த நாளில், முதியோர் குடும்பங்களில் மற்றும் திரு அவை சமூகங்களிலும் நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்படுவார்கள். 2021 -ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் துவக்கிய தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம், தலைமுறைகள் இடையே இணக்கம் மற்றும் சந்திப்பை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது.

news
உலக செய்திகள்
செயற்கை நுண்ணறிவு முன்வைக்கும் ஆபத்துகள்!

மனித அறிவால் உருவாக்கப்பட்ட நுண்ணறிவு, நல்லவைகள் மற்றும் தீயவைகளுக்கு வழிவகுக்கும் என்பதைத் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். திருப்பீடத்தின் நம்பிக்கை கோட்பாட்டுத்துறையும், கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துறையும் இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிட்ட திருத்தந்தை, “செயற்கை நுண்ணறிவு, ஏழ்மை, பாகுபாடு, சுரண்டல் மற்றும் தவறான செய்திகள் பரப்புதல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது; இயல்பான மனித தலையீடு இல்லாமல், போர் போன்ற நிகழ்வுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெரிய ஒழுக்க ரீதிப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் பாதிக்கப்படுவது,  என்ற கவலையையும் தெரிவிக்கின்றது. மோசமான தனிமைப்படுத்தல், பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் தாக்கம் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதை அவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறதுஎன்று கூறினார்.

news
உலக செய்திகள்
2025-ஆம் ஆண்டு மியான்மரில் அமைதி மலரும் ஆண்டாக இருக்கும்!

ஏறக்குறைய நான்கு ஆண்டுகாலமாக நாட்டில் நடந்து வந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, மியான்மரில் அமைதி மலரும் ஆண்டாக 2025 இருக்கும் என்று மியான்மர் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்லஸ் தெரிவித்துள்ளார். இளைஞர்களை அமைதியின் சிற்பிகள் எனக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களுக்கான வாய்ப்புகளையும் கல்வியையும் வழங்குவது அவசியம் என வலியுறுத்தினார். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டின் ஆன்மாவையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார். நல்லிணக்கம் என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல; அது ஒரு தேர்வாகும், அன்பை வழங்கும் செயலாகும் என்றும் விளக்கிய அவர், உண்மையான அமைதி என்பது போரற்ற சூழல், இது அனைவருக்கும் நீதி, பாதுகாப்பு மற்றும் மாண்பை அளிக்கும் என்பதை எடுத்துரைத்துள்ளார்.

news
உலக செய்திகள்
தென்கிழக்கு நைஜீரியாவில் இரண்டு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டனர்!

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியான அனம்பிரா மாநிலத்தில் உள்ள அமல உற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரி மரியா மற்றும் அருள்சகோதரி கிரேஸ் ஆகியோர் சனவரி 7 அன்று கடத்தப்பட்டதாகFidesசெய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இருவரும் ஓக்போஜியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் ஆயுதமேந்திய நபர்கள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இரண்டு அருள்சகோதரிகளையும் மீட்பதற்காகக் காவல்துறை கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.