news
உலக செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் மறைவு: உலகத் தலைவர்களின் இரங்கல்

உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான மக்களால் கருணை, பரிவு, ஆன்மிகத்தின் கலங்கரை விளக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரின் அர்ப்பணிப்பால் பெரிதும் நான் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவருடைய அன்பு எப்போதும் போற்றப்படும்.”

- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

போப்  பிரான்சிஸ் அமைதியாக உறங்கட்டும்! அவருக்கும் அவரை நேசித்த அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்!

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பியூனஸ் அயர்ஸ் முதல் உரோம் வரை ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவர வேண்டும் எனப் போப் பிரான்சிஸ் விரும்பினார். மனிதர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.”

- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்

மனிதநேயம் மற்றும் நீதியின் உறுதியான பாதுகாவலராகப் போப் பிரான்சிஸ் விளங்கினார். பழைமைவாத மற்றும் கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்த அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

- இரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்

போப் பிரான்சிஸ் உக்ரைனுக்காகவும் உக்ரைன் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்தவர். அவரின் மறைவு கத்தோலிக்கர்கள் மட்டுமின்றி, அனைத்துக் கிறித்தவர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

- உக்ரைன் அதிபர் வொலோ திமீர் ஸெலன்ஸ்கி

போப் பிரான்சிஸ் ஆழ்ந்த நம்பிக்கையும், அளவற்ற இரக்கமும் கொண்டவர். மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை மேம்படுத்துவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார்.”

- இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

பணிவையும் ஏழைகளுக்கு அன்பையும் காட்டியதன் மூலம், கத்தோலிக்கத் திருச்சபைக்கு அப்பாற்பட்டு, கோடிக்கணக்கான மக்களைப் போப் பிரான்சிஸ் ஊக்கப்படுத்தினார்.”

- ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண் டெர்லியென்

போப் பிரான்சிஸின் மனிதநேயம் ஆழமானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். அவர் காட்டிய இரக்கத்தின் நினைவு நீண்ட காலம் நிலைத்திருக்கும்.”

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி

அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க அயராத முயற்சிகளை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், சிறந்த நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளார். உலகமும் திரு அவையும் சிக்கலான மற்றும் சவாலான நேரத்தை எதிர்கொண்டபோது, தனது துணிச்சலான தலைமையாலும் பணிவாலும் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டார். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களுக்கான திருத்தந்தையாக அவர் இருந்தார்.”

- பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர்

நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாத வர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.”

- நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப்

போப் பிரான்சிஸ் காசாவில் இஸ்ரயேலின் இனப் படுகொலையைக் கண்டித்து, மனிதாபிமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவரது நினைவு சுதந்திரத்தை விரும்புவோரின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.”

- ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்

போப் பிரான்சிஸ் அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தின் குரலாக விளங்கினார். அவர் மாபெரும் மனித பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.”

- எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிஸி

அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்பதற்கான உறுதிப்பாட்டுடன் வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்.”

- ஸ்காட்லாந்து பிரதமர் ஜான் ஸ்வின்னி

ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இரக்கம், அமைதி மற்றும் மனித மாண்பைக் காட்டியவர் திருத்தந்தை பிரான்சிஸ்.”

- ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டின்

முக்கியமான உலகளாவியப் பிரச்சினைகளில் பகிரப்பட்ட மனிதநேயத்திற்கான காரணமாக இருந்தவர்.”

- அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ்

இரக்கத்தையும் அமைதிக்கான திருத்தந்தையின் ஆதரவையும், குறிப்பாக, புனித வெள்ளி ஒப்பந்தமும் நினைவுகூரத்தக்கது.”

- வடக்கு அயர்லாந்தின் பிரதமர் மிஷேல் நீல்

சமூக நீதி மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் திருத்தந்தையின் சிறப்பு அக்கறையை எடுத்துரைத்ததுடன், கனடாவில் உள்ள பூர்வகுடி மக்களின் சார்பாகப் பல முயற்சிகளை மேற்கொண்டவர்.”

- கனடா பிரதமர் மார்க் கார்னி

உலகளாவியத் தார்மீகத் தலைவராக விளங்கியவர்; பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையே உறவு பாலத்தைக் கட்டியெழுப்பக் கூடியவராக இருந்தவர்.”

- மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான திருத்தந்தை பிரான்சிஸின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவாக நின்றார். சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார். அன்பு மற்றும் மனிதநேயம் பற்றி தனது போதனைகளால் மதங்களைக் கடந்து கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.”

- உயர்திரு. இராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர், இந்தியா

 

news
உலக செய்திகள்
மியான்மர் நிலநடுக்கம் - உதவிக்கரம் நீட்டுவோம்!

மியான்மரில் மார்ச் 31 அன்று பேரழிவு தரும் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தால் 1,644 பேர் உயிரிழந்தனர்; 3,408 பேர் காயமடைந்தனர்; 130 பேர் காணாமல் போயுள்ளனர். 6.3 மில்லியன் குழந்தைகள் உள்பட 20 மில்லியன் மக்கள் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர். அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  உலக நாடுகள் உணவு, மருந்து, உறைவிடம் போன்ற தேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.  திருத்தந்தை பிரான்சிஸ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

news
உலக செய்திகள்
111-வது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினம்

2025-ஆம் ஆண்டிற்கான உலகப் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான மையக் கருத்தாகபுலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்என்பதைத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

மார்ச் 3, 2025 அன்று அவர் வெளியிட்ட குறுஞ்செய்தியில், அக்டோபர் மாதம் 4, 5 ஆகிய நாள்களில் யூபிலி நாள் என இந்தத் தினம் சிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். போர்கள், மோதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்காகச் செபிக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

புலம்பெயர்ந்தோர் தங்கள் வாழ்வில் கடவுளை நம்பி, எதிர்நோக்கின் சான்றுகளாக உள்ளனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
வத்திக்கான் நிர்வாகத் தலைவராக அருள்சகோதரி!

வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்சகோதரி Raffaella Petrini அவர்களை வத்திக்கான் மாநிலத்திற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும், நகர நிர்வாகத் துறைத் தலைவராகவும் திருத்தந்தையால் பணியமர்த்தப் பட்டுள்ளார். Francesca di Giovanni, Nathalie Becquart, Alessandra Smerilli ஆகிய அருள்சகோதரிகளும், Barbara Jatta, Natasa Govekar, Cristiane Murray போன்ற பெண் பொதுநிலையினரும் திருத்தந்தையால் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

news
உலக செய்திகள்
இணக்கமான சகவாழ்வே ஆன்மிகத்தின் அடித்தளம்

செனகலில் நடைபெற்ற 33-வது இஸ்லாமியக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் வால்டிமர் ஸ்டெயின்ஸ்லா, “கடவுளின் பெயரால் நாம் எப்போதும் ஒன்றுபட வேண்டும்; பிரிக்கப்படக் கூடாதுஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டதுடன், ஒவ்வொரு மத நம்பிக்கையும், வெவ்வேறு அணிகளாக இருந்தாலும், மக்களை ஒன்றிணைக்கும் பணியைத் தன்னகத்தே கொண்டுள்ளன என்றார். மேலும், “அன்பும் நல்லிணக்கமும் உறவுகளைத் தக்கவைக்கும் மதிப்புகளாக இருக்க வேண்டும்என்றும் குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
அமைதியைக் கட்டியெழுப்புவோம்! பேராயர் பால் ரிச்சர்ட் அழைப்பு

பிப்ரவரி 7 அன்று உரோம் நகரில் நடந்த மாநாட்டில், “மனித மாண்பு மற்றும் சமூகத்தின் அடிப்படையிலான கொள்கைகளைக் காப்பதும், ஒற்றுமை மற்றும் ஒழுங்கை உருவாக்குவதும் அவசியம்என்று கூறிய பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், “அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நீதி மற்றும் தொண்டு அடிப்படையில் செயல்பட வேண்டும்; அமைதிக்கான துணிவு என்பது வெறும் போர் நிறுத்தத்தை மட்டும் நாடுவது அல்ல; மோதல்களுக்குக் காரணமான விவாதங்களை நிராகரிப்பதுஎன்றும் தெரிவித்தார்.