news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (17.11.2024)

புலம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்பட வேண்டும்; அவர்களுடன் நாம் செல்ல வேண்டும்; அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும்; ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

- அக். 28, மறைப்பணியாளர் சந்திப்புச் செய்தி 

திருமுழுக்கு என்பது பிறப்பின் அருளடையாளம் என்றால், உறுதிப்பூசுதல் என்பது வளர்ச்சியின் அருளடையாளம்; சான்று வாழ்வின் அருளடையாளம்; முதிர்ச்சியான கிறித்தவத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள ஒன்று.”

- அக். 30, திருப்பயணிகளுக்கான மறைக்கல்வி உரை

தகவல் தொடர்பாளர் பணி என்பது ஓர் அழைப்பு, மறைப்பணி, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாகக் கிடைக்கும் வழிமுறைகளை அறிவாற்றலுடன் பயன்படுத்துவது எல்லாவற்றிற்கும் மேலாக இதயத்துடன் தொடர்பு கொள்வது.”

- அக். 31, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் சந்திப்புச் செய்தி

இயேசுவின் மலைப்பொழிவில் வரும் நற்பேறுகள் ஒவ்வொரு கிறித்தவரின் அடையாள அட்டை, புனிதத்துவத்திற்கான பாதை

- நவ. 01, மூவேளைச் செபவுரை

இறந்தவர்கள் இறைவனில் வாழ்கிறார்கள், பூமியில் புதைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் ஒரு நாள் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்குகொள்ளும்.” 

- நவ. 02, லௌரென்தினோ கல்லறைத் திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (10.11.2024)

குடும்பத்தில் எப்போதும் உரையாடல்கள் இருக்க வேண்டும்; மோதல்கள் இருந்தாலும் தங்களுக்குள் உரையாடல் மேற்கொள்பவர்களாகக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இருக்கவேண்டும். உரையாடல் இல்லாத குடும்பம் இறந்த குடும்பம் போன்றது.”

- அக்டோபர் 25, 16-வது ஆயர்கள் மாமன்றத்தின்போது குடும்பத்தில் சினேடாலிட்டி காணொளியில் எடுத்துரைத்தது

ஏழைகள் எண்களாகவோ, பிரச்சினைகளாகவோ, நிராகரிக்கப்படு பவர்களாகவோ கருதப்படக்கூடாது; என்றும் நமது உடலாக இருக்கும் உடன் சகோதரர்கள் போன்று கருதப்பட வேண்டும்.”

- அக்டோபர் 25, உரோமை தூய இலாத்தரன் பெருங்கோவிலில் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான செய்தி

பார்வையற்றவரைக் கண்ட இயேசு உடலாலும் உள்ளத்தாலும் அவரின் குரலுக்குச் செவிமடுத்தார். நாம் தெருவில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களை விலக்குகின்றோமா? நிராகரிக்கின்றோமா? அவர்களது குரலுக்குச் செவிசாய்க்கின்றோமா? என்று சிந்திப்போம்.”

- அக்டோபர் 27, வத்திக்கான் ஞாயிறு மூவேளைச் செப உரை.

வாழ்வது என்பது எப்போதும் தன்னை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளுதல், புறப்படுதல், கனவு காணுதல், திட்டமிடுதல், எதிர்காலத்திற்காகத் தன் இதயத்தைத் திறந்திருத்தல்.”

- அக்டோபர் 27, 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவு திருப்பலி மறையுரை

 “புலம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்பட வேண்டும், அவர்களுடன் நாம் செல்ல வேண்டும், அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும், ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

- அக்டோபர் 28, புனித சார்லஸ் மறைப்பணியாளர்கள் சபை உறுப்பினர்களுடன் சந்திப்புச் செய்தி


news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (03.11.2024)

“இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே, உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.”

- அக்டோபர் 16, புதன்கிழமை மறைக்கல்வி உரை

“ஏழைகளைத் தயவு செய்து மறந்து விடாதீர்கள்,  நீர், உணவு, வேலை, மருந்து, நிலம், வீடு என ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் உலகத்தைக் கனவு காண்போம்.”

- அக்டோபர் 17, உலக வறுமை ஒழிப்பு நாள் குறுஞ்செய்தி

“அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குதல் என்பது கட்டமைப்புகளை மாற்றியமைப்பது அல்ல; மாறாக, மாற்றுத் திறனாளிகள் பற்றிய நமது மனப்போக்குகளை மாற்றுவதன் வழியாகச் சமூக வாழ்வின் முழு பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்றுதல்.”

- அக்டோபர் 17, G7 இத்தாலி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கான சந்திப்புச் செய்தி 

 “அனுதின செபம் மற்றும் நற்கருணை நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றுகின்றன; தந்தை கடவுளில் நிலையான முடிவற்ற வாழ்வை நோக்கி நம்மை வழிநடத்துகின்றது.”

- அக்டோபர் 19, ‘செப ஆண்டு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தி 

“நாம் விலகினாலும் நம்மை விட்டு விலகிச் செல்லாத, நம்மை ஒருபோதும் கைவிடாத இயேசுவே நமது மிகப்பெரிய உண்மையான உற்ற நண்பர்.”

- அக்டோபர் 21, திருத்தந்தையின் குறுஞ்செய்தி


news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.10.2024)

“வாழ்வின் கடைசி நிமிடம் வரை ஒரு நபர் மனமாற்றம் பெறமுடியும். எனவே, மரணதண்டனை என்பது மனிதனின் மீற முடியாத தன்மையையும், மாண்பையும் பாதிப்படையச் செய்யும். அதனால் அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”  

- அக்டோபர் 10, மரணதண்டனை குறித்த குறுஞ்செய்தி

“போர்களை விரும்புகின்ற, அவற்றை வழிநடத்துகின்ற, தேவையில்லாமல் நீடிக்கின்ற, அதில் இலாபத்தைச் சம்பாதிக்கின்ற மனிதர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்.”

- அக்டோபர் 12, குறுஞ்செய்தி

“உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே.”

- அக்டோபர் 13, ஞாயிறு மூவேளைச் செப உரை

“நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு அருளடையாளத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தி, நாம் வாழ்கின்ற இந்தப் பொதுவான உலகிற்கான நன்மைக்காக உழைக்கும்போது கிறிஸ்துவின் மறைப்பணியினை ஆற்றும் அவரின் சீடர்களாக மாறுகின்றோம்.”

- அக்டோபர் 11, கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிப்பாட்டில் மறையுரை

“திரு அவையில் பணியாற்றும் கர்தினால்கள் தங்களது பார்வையை உயர்த்துதல், நீடித்தல், இதயத்தை விரிவுபடுத்துதல் மிக அவசியம். இதன் வழியாக உலகளவில் அனைவரையும் தீவிரமாக அன்பு செய்ய முடியும்.”

- அக்டோபர் 12, புதிய கர்தினால்களை உரோமைக்கு அழைக்கும் கடிதம்

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.10.2024)

“ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் நாம் அனைவரும் நமது சிந்தனை, இதயம் மற்றும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பெரியவர்களாக இருந்தாலும், தாழ்ச்சியுள்ள சிறியவர்களாக நம்மை மாற்றிக்கொள்ளும்போது, நாம் விண்ணரசிலும் பெரியவர்களாகக் கருதப்படுகிறோம்.”

- அக்டோபர் 02, 16-வது உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்திற்கான ஆரம்பத் திருப்பலி மறையுரை

“தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். சோகம், அழுகை, ஆறுதல், அநீதிகள், தீமையை எதிர்க்கும் போதும் மன்னிப்பதற்கான போராட்டம், அமைதியைத் தேடும் துணிவின்மை, விரக்தி போன்ற எல்லா நிலைகளிலும் தூய ஆவியார் நம்முடன் இருக்கிறார்.”

- அக்டோபர் 02, ஆயர் மாமன்றத்தின் 16-வது பொதுப் பேரவையின் இரண்டாவது அமர்வில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரை

“நாம் வாழும் இந்தச் சுற்றுச்சூழல் விண்ணகத்திலிருந்து நமக்குக் கிடைத்த கொடை! வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கு மத்தியில், நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் அழகை இரசிக்க நமக்கு நினைவூட்டுகிறது.”                         

- அக்டோபர் 03, குறுஞ்செய்தி

“கடவுள் தம் முடிவற்ற அழகையும், நன்மைத்தனத்தையும், நமக்கு ஒரு கணநேரக் காட்சியாகத் தரும் மிக உன்னத நூலாகப் படைப்பைப் பார்க்க வேண்டும்.”

- அக்டோபர் 04, புனித அசிசியின் திருவிழா, ‘எக்ஸ்’ தளப்பதிவு

“குடும்ப வாழ்வில் சோதனையும் கவலையும் ஏற்படும் நேரங்களில் மரியாதை, நேர்மை, எளிமை என்னும் பண்புகள் அவசியமாகின்றன.  மோதல் மற்றும் தர்க்க நேரங்களில் மன்னிப்பிற்கும், நல்லிணக்கத்திற்கும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.”

- அக்டோபர் 06, ஞாயிறு மூவேளைச் செப உரை



news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.10.2024)

“இயேசு அலகையுடன் ஒருபோதும் உரையாடல் செய்யவில்லை. அதனை விரட்டுகின்றார்; அதனை அடக்கி ஆள்கின்றார்.”

- செப்டம்பர் 25 திருப்பயணிகளுக்குக் கொடுத்த செய்தி

“உங்களுக்கென ஒரு பாணியை உருவாக்கிப் படியுங்கள், பொருளுணர்ந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்து படியுங்கள். உங்களது நலனுக்காக மட்டுமன்றி, பொது நலனுக்காகப் படியுங்கள்.”

- செப்டம்பர் 28, லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஆற்றிய உரை

“நமது தூய வாழ்விற்கு இடையூறாக இருப்பவற்றை விட்டு விலகி, அன்பில்லாமல் செய்யப்படும் எல்லாம் வீண் என்பதை உணர்ந்து இறை இரக்கத்தின் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக ஒன்றித்து வாழ்வோம்.”  

- செப்டம்பர் 29,  40,000 பெல்ஜியம் மக்களுக்கு நிறைவேற்றிய ஞாயிறு திருப்பலி மறையுரை

“சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, உண்மையான அழகையும் நல்லிணக்கத்தையும் உலகிற்கு மீட்டெடுக்க வேண்டும்”

- செப்டம்பர் 30, அழகின் பாதுகாவலர்கள் பிரதிநிதிகள் மத்தியில் உரை

“பாதுகாத்தல் என்பது காத்தல், பராமரித்தல், கண்காணித்தல், தடுத்தல், கவனித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பன்முகச்செயல்.”

- செப்டம்பர் 30 இத்தாலிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி