news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.10.2024)

“வாழ்வின் கடைசி நிமிடம் வரை ஒரு நபர் மனமாற்றம் பெறமுடியும். எனவே, மரணதண்டனை என்பது மனிதனின் மீற முடியாத தன்மையையும், மாண்பையும் பாதிப்படையச் செய்யும். அதனால் அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”  

- அக்டோபர் 10, மரணதண்டனை குறித்த குறுஞ்செய்தி

“போர்களை விரும்புகின்ற, அவற்றை வழிநடத்துகின்ற, தேவையில்லாமல் நீடிக்கின்ற, அதில் இலாபத்தைச் சம்பாதிக்கின்ற மனிதர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்.”

- அக்டோபர் 12, குறுஞ்செய்தி

“உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே.”

- அக்டோபர் 13, ஞாயிறு மூவேளைச் செப உரை

“நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு அருளடையாளத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தி, நாம் வாழ்கின்ற இந்தப் பொதுவான உலகிற்கான நன்மைக்காக உழைக்கும்போது கிறிஸ்துவின் மறைப்பணியினை ஆற்றும் அவரின் சீடர்களாக மாறுகின்றோம்.”

- அக்டோபர் 11, கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிப்பாட்டில் மறையுரை

“திரு அவையில் பணியாற்றும் கர்தினால்கள் தங்களது பார்வையை உயர்த்துதல், நீடித்தல், இதயத்தை விரிவுபடுத்துதல் மிக அவசியம். இதன் வழியாக உலகளவில் அனைவரையும் தீவிரமாக அன்பு செய்ய முடியும்.”

- அக்டோபர் 12, புதிய கர்தினால்களை உரோமைக்கு அழைக்கும் கடிதம்

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.10.2024)

“ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் நாம் அனைவரும் நமது சிந்தனை, இதயம் மற்றும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பெரியவர்களாக இருந்தாலும், தாழ்ச்சியுள்ள சிறியவர்களாக நம்மை மாற்றிக்கொள்ளும்போது, நாம் விண்ணரசிலும் பெரியவர்களாகக் கருதப்படுகிறோம்.”

- அக்டோபர் 02, 16-வது உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்திற்கான ஆரம்பத் திருப்பலி மறையுரை

“தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். சோகம், அழுகை, ஆறுதல், அநீதிகள், தீமையை எதிர்க்கும் போதும் மன்னிப்பதற்கான போராட்டம், அமைதியைத் தேடும் துணிவின்மை, விரக்தி போன்ற எல்லா நிலைகளிலும் தூய ஆவியார் நம்முடன் இருக்கிறார்.”

- அக்டோபர் 02, ஆயர் மாமன்றத்தின் 16-வது பொதுப் பேரவையின் இரண்டாவது அமர்வில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரை

“நாம் வாழும் இந்தச் சுற்றுச்சூழல் விண்ணகத்திலிருந்து நமக்குக் கிடைத்த கொடை! வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கு மத்தியில், நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் அழகை இரசிக்க நமக்கு நினைவூட்டுகிறது.”                         

- அக்டோபர் 03, குறுஞ்செய்தி

“கடவுள் தம் முடிவற்ற அழகையும், நன்மைத்தனத்தையும், நமக்கு ஒரு கணநேரக் காட்சியாகத் தரும் மிக உன்னத நூலாகப் படைப்பைப் பார்க்க வேண்டும்.”

- அக்டோபர் 04, புனித அசிசியின் திருவிழா, ‘எக்ஸ்’ தளப்பதிவு

“குடும்ப வாழ்வில் சோதனையும் கவலையும் ஏற்படும் நேரங்களில் மரியாதை, நேர்மை, எளிமை என்னும் பண்புகள் அவசியமாகின்றன.  மோதல் மற்றும் தர்க்க நேரங்களில் மன்னிப்பிற்கும், நல்லிணக்கத்திற்கும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.”

- அக்டோபர் 06, ஞாயிறு மூவேளைச் செப உரை



news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.10.2024)

“இயேசு அலகையுடன் ஒருபோதும் உரையாடல் செய்யவில்லை. அதனை விரட்டுகின்றார்; அதனை அடக்கி ஆள்கின்றார்.”

- செப்டம்பர் 25 திருப்பயணிகளுக்குக் கொடுத்த செய்தி

“உங்களுக்கென ஒரு பாணியை உருவாக்கிப் படியுங்கள், பொருளுணர்ந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்து படியுங்கள். உங்களது நலனுக்காக மட்டுமன்றி, பொது நலனுக்காகப் படியுங்கள்.”

- செப்டம்பர் 28, லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஆற்றிய உரை

“நமது தூய வாழ்விற்கு இடையூறாக இருப்பவற்றை விட்டு விலகி, அன்பில்லாமல் செய்யப்படும் எல்லாம் வீண் என்பதை உணர்ந்து இறை இரக்கத்தின் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக ஒன்றித்து வாழ்வோம்.”  

- செப்டம்பர் 29,  40,000 பெல்ஜியம் மக்களுக்கு நிறைவேற்றிய ஞாயிறு திருப்பலி மறையுரை

“சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, உண்மையான அழகையும் நல்லிணக்கத்தையும் உலகிற்கு மீட்டெடுக்க வேண்டும்”

- செப்டம்பர் 30, அழகின் பாதுகாவலர்கள் பிரதிநிதிகள் மத்தியில் உரை

“பாதுகாத்தல் என்பது காத்தல், பராமரித்தல், கண்காணித்தல், தடுத்தல், கவனித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பன்முகச்செயல்.”

- செப்டம்பர் 30 இத்தாலிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.10.2024)

“நாம் இவ்வுலகில் எந்த அளவு பயனுள்ளவர்களாக இருக்கிறோமோ அதை வைத்துதான் நாம் மதிப்பிடப்படுகிறோம் என்பது உலகப் பார்வை. ஆனால், நாம் கடவுளால் அன்புகூரப்படுகிறோம் என்ற உண்மையை நமக்கு நற்செய்தி நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது.” 

- செப்டம்பர் 20, ‘எக்ஸ்’ தளப் பதிவு

“ஒரு நாட்டின் செல்வம் என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்ல; மாறாக, அதன் இயற்கை, கலை, கலாச்சாரம், மதப் பாரம்பரியம், குழந்தைகளின் புன்னகை ஆகியவற்றில் அடங்கியுள்ளது.”

- செப்டம்பர் 21, வத்திக்கானின் பொருளாதார இராணுவ அதிகாரிகளின் 250-வது ஆண்டினை முன்னிட்டுச் செய்தி

“அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றவர்களுக்காகவும், ஏழைகள் மற்றும் பூமியின் அழுகைக்குப் பதிலளிக்கும் வகையில் பொது நன்மைக்காகப் பாடுபடுபவர்களுடனும் நான் இருக்கிறேன்.”

- செப்டம்பர் 22, ஞாயிறு மூவேளைச் செப உரை

“மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு மனப்பான்மைகள், விரோதம் மற்றும் தீவிரவாதத்தைத் தூண்டக்கூடாது, வன்முறையையோ அல்லது இரத்தம் சிந்துதலையோ தூண்டக்கூடாது.”

- செப்டம்பர் 24, அமைதிக்கான சர்வதேசக் கூட்டத்தில் செய்தி

“நம் இறைவேண்டல் சமயத்தில் எழும் ஏனைய பிரச்சினைகளில் இயேசுவின் கேள்விகளை நாம் கண்டுணர்ந்து, நன்மைத் தனத்தை நோக்கி நடைபோடும்போது, ஆழமான அன்பிற்குள் கொண்டு செல்லப்படுகிறோம்.”

- செப்டம்பர் 24, ‘எக்ஸ்’ தளப் பதிவு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (29.09.2024)

கடவுள் நம்மிடம் காட்டும் அன்பும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் அன்பும், ஏழைகளின் தேவைகளுக்குத் தாராளமாகப் பதிலளிக்கிறது, துயரத்தில் இருப்பவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கிறது.”  

- செப்டம்பர் 12, சிங்கப்பூர் தேசிய திறந்தவெளி மைதானத்தில் சிறப்புத் திருப்பலி மறையுரை

இளைஞன் என்பவன் ஒரு விமர்சனச் சிந்தனையாளராக இருக்க வேண்டும். ஆனால், உங்கள் விமர்சனம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். வெறுமனே குற்றங்களையும் குறைகளையும் மட்டுமே கூறும் விமர்சனம் புதிய வழிகளைத் திறக்காது.”

- செப்டம்பர் 13, சிங்கப்பூர் இளையோருடன் உரையாடல் செய்தி

இளமை வயது என்பது துணிவின் வயது. ஆனால், இந்தத் துணிவை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி உங்களுக்குப் பயன் தராத செயல்களைச் செய்வதற்குப் பதிலாக, உங்களின் முன்னேற்றத்திற்கும் பிறருடன் உரையாடுவதற்கும் அதனைப் பயன்படுத்துங்கள்.”

- செப்டம்பர் 13, சிங்கப்பூர் இளையோருடன் உரையாடல் செய்தி

துன்புறும் பல குடும்பங்களில் உள்ள மக்கள், போர் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், வறுமையினால் துன்புறும் குடும்பங்கள் ஆகிய அனைவர்மீதும் கன்னி மரியாவின் அன்பும் கருணையும் நிறைந்த பார்வை இருக்கும்.”

செப்டம்பர் 16, 17-வது தேசியத் திருயாத்திரையை முன்னிட்டுத் திருத்தந்தையின் செய்தி