news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (03.08.2025)

சமூக அநீதிகளை எதிர்கொண்டு, தீமை மற்றும் சோதனைக்கு அடிபணியாமல், போர் மற்றும் வன்முறை நிறைந்த இக்காலத்தில் உண்மையில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும்.”

- ஜூலை 14, காஸ்தல் கந்தோல்போ காவலர் சிற்றாலயத்தில் திருப்பலி

போட்டி என்பது எதிர்த்து நிற்கும் செயலாக இருந்தாலும், எதிராளிகளைக்கூட ஒன்றிணைக்கும் ஒரு மோதல்களமே விளையாட்டு.”

- ஜூலை 15, ‘Partita del Cuoreகால்பந்தாட்டப் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் அனைத்து மக்களும் அவர்களின் வழிபாட்டுத்தலங்களுடன் பொதுத்தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

- ஜூலை 18, இஸ்ரயேல் பிரதமருடன் தொலைப்பேசி உரையாடல்

விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இரக்கம் பெறவும், தூய இறைவனின் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதியுடன் இறையாசிரை நாம் பெறவும் இறைவேண்டல் செய்வோம்.”

- ஜூலை 19, ஈராக்கின் குட் பகுதி தீ விபத்து இரங்கல் செய்தி

சேவை செய்வதும் செவிமடுப்பதுமே நம்மை இறைவனின் இதயத்தில் இணைக்கின்ற திறன்களாகும்.”

- ஜூலை 20, அல்பானோ பேராலய ஞாயிறுத் திருப்பலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.07.2025)

உலகைத் தெருக்களிலிருந்து பார்க்கவும், குரலற்றவர்களின் குரலைக் கேட்கவும், மரபுகளை உடைப்பதுமே பத்திரிகை.”

- ஜூலை 6, (L’Osservatore di strada) இத்தாலி இதழின் மூன்றாம் ஆண்டு

இயேசுவே திரு அவையின் படைப்பாளர், தலைவர் மற்றும் படைப்பைப் பராமரித்து அமைதியை மேம்படுத்தும் இறைவன்.”

- ஜூலை 9, படைப்பைப் பராமரிக்கத் திருப்பலி.

செயற்கை நுண்ணறிவு (AI), மனிதப் பகுத்தறிவைக் கொண்டு திறமையாகப் பணிசெய்தாலும், தார்மிகத் தேர்ந்துதெளிதல் மற்றும் உண்மையான உறவுகளை உருவாக்க முடியாது.”

- ஜூலை 10, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் வழியாக ITU-க்கு வாழ்த்து

முதியவர்களின் ஞானம், விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் அவர்களின் அனுபவ வாழ்க்கை தலைமுறைகளுக்கிடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது.”

- ஜூலை 11, முதியோர் நாளையொட்டி தயாரிப்பு

செபம், இணக்கமுள்ள செவிசாய்த்தல் உள்ளடக்கிய பணிகள் அனைத்தும் தூய ஆவியாரின் கனிகள், விலைமதிப்பற்ற பரிசுகள்.”

- ஜூலை 12, துறவற சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு

நிலை வாழ்வினை உரிமையாக்கிக்கொள்ள இறப்பை ஏமாற்றுவதற்குப் பதிலாக, வாழ்வை நாம் போற்றவேண்டும்.”

- ஜூலை 13, லிபெர்த்தா வளாகத்தில் மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.07.2025)

இயேசுவின் புதுமையின் அடையாளம், பகிர்வின் மூலமாகத் தானேயொழிய, பேராசையால் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள விரும்புவதால் அல்ல.”

- ஜூன் 30, .நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் கூட்டம்

உக்ரேனிய மக்களின் நம்பிக்கை, அழிவின் இடிபாடுகளுக்கு மத்தியில் கடவுளின் வல்லமை வெளிப்படுகிறது என்பதற்கான அடையாளம்.”

- ஜூலை 2, உக்ரேனிய கத்தோலிக்க ஆயர் மாமன்ற உறுப்பினர் சந்திப்பு

நாம் வாழ்வின் சரியான பாதையைக் கண்டுகொண்டு, கிறிஸ்து மற்றும் நற்செய்தியிலிருந்து நம்மைத் தூரமாக விலக்கிச் செல்பவை அனைத்தையும் அகற்றுவோம்.”

- ஜூலை 3, ஜூலை மாத செபக்கருத்து

வேற்றுமைகள் பலவற்றைக் கடந்து எல்லாரும் ஒருவரையொருவர் மதித்து வாழ்வோம்.”

- ஜூலை 4, குழந்தைகள் மற்றும் இளையோரைக் கோடை முகாமில் சந்திப்பு

வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசு கிறிஸ்துவே நமது அனைத்துக் கலாச்சார முயற்சிகளின் அளவுகோலாக இருக்கின்றார்.”

- ஜூலை 5, மறைமாநிலப் பேரவைச் சந்திப்பு

நற்செய்தியின் நம்பிக்கை அனைத்து மக்களுக்கும் உரியது.”

- ஜூலை 6, மூவேளைச் செபம்

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.07.2025)

இயேசுவைப்போல் மிகச்சிறியோர், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் குரலுக்குச் செவிமடுக்க ஒருநாளும் மறவாதீர்கள்.”

- ஜூன் 24, 4000 குருத்துவ மாணவர்கள் சந்திப்பு

எதார்த்தமான வாழ்வானது மிகவும் சிக்கலானதாகவும், எதிர்கொள்ளக் கடினமானதாகவும் நமக்குத் தெரிவது ஒரு பரவலான நோயாக இருக்கின்றது.”

- ஜூன் 25, புதன் மறைக்கல்வி உரை

தீமையிலிருந்து விலகி நிற்பவர்கள் வழியாகக் கடவுள் பெரிய காரியங்களைச் செய்கிறார்.”

- ஜூன் 26, அனைத்துலகப் போதைப்பொருள் ஒழிப்பு தினவிழா

இயேசுவின் திரு இதயத்தில் மட்டுமே நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக, நமது உண்மையான மனிதகுலத்தைக் காண்கிறோம்.”

- ஜூன் 27, இயேசுவின் திரு இதயப் பெருவிழா

கடவுள் நம்முடன் இருக்கிறார், தமது இறுதி வார்த்தையை உச்சரிப்பார், வாழ்வானது இறப்பை வெல்லும் என்று நம்புவதே உண்மையான நம்பிக்கையாகும்.”

- ஜூன் 28, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருப்பயணிகள் சந்திப்பு

பிளவுபட்ட இந்த உலகில் திரு அவையானது ஒன்றிப்பிற்கான ஓர் இல்லமாகவும் பள்ளியாகவும் இருக்கும்.”

- ஜூன் 29, புனித பேதுரு-பவுல் பெருவிழா

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (06.07.2025)

போரற்ற, வெறுப்பற்ற ஒரு புதிய உலகைக் கடவுள் நமக்காக உருவாக்குகின்றார்

 - ஜூன் 16, Floribert Bwana Chui அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்வு தயாரிப்பு

செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், தரவு பொருளாதாரம் போன்றவைகளால் மனித மாண்பு பாதிக்கப்படுகிறது.”

- ஜூன் 17, இத்தாலிய ஆயர் பேரவை அங்கத்தினர்கள் சந்திப்பு

நமது வாழ்க்கையின் வரலாற்றைத் தீர்மானிப்பது நாமே.”

- ஜூன் 18, 4-ஆம் புதன் மறைக்கல்வி உரை

நம் ஆண்டவரின் பெயரால், நம் பணியாளர்களை நேசிப்போம்.”

- ஜூன் 19, திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது 43-வது குருப்பட்ட நாள் உரை

மனிதனுக்கு, இந்தச் செயற்கை நுண்ணறிவு உதவ வேண்டுமேயொழிய, இடையூறாக இருக்கக்கூடாது.”

- ஜூன் 20, செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு

நேர்மையான அரசியல் வாழ்க்கை சமூகத்திற்கும் பொது நன்மைக்கும் செய்யும் கிறித்தவ அன்பின் செயலாகும்.”

- ஜூன் 21, நிர்வாகத்தினருக்கான யூபிலி பகிர்வு

அப்பம் பிடுதல், கடவுளின் மீட்பின் பரிசு என்பதற்கான அடையாளமாகும்.”

- ஜூன் 22, இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (29.06.2025)

சிலுவை அடியில் நின்று புதிய திரு அவை உருவாக உதவியவர் அன்னை மரியா.”

- ஜூன் 9, யூபிலிக் கொண்டாட்டத் திருப்பலி

இயேசுவைக் கொடுப்பது என்பது அன்பைக் கொடுப்பதாகும்.”

- ஜூன் 10, திருப்பீடப் பிரதிநிதிகள் சந்திப்பு

இறைவன் செவிசாய்க்காத கூக்குரல்களே இல்லை.”

- ஜூன் 11, 3-ஆம் புதன் மறைக்கல்வி உரை

இயேசு என்னும் ஓர் ஆயனின் மந்தையில் வளரும் ஆடுகளாவோம்.”

- ஜூன் 12, உரோமை அருள்பணியாளர்கள் சந்திப்பு

உலக இன்பங்கள், நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது.”

- ஜூன் 13, உலக ஏழைகள் தின உரை

இயேசு நம்மைப் பிரிக்கும் சுவர் அல்ல; நம்மை ஒன்றிணைக்கும் கதவு.”

- ஜூன் 14, விளையாட்டு வீரர்களை ஜூபிலிக்கு அழைப்பு

இறைஞானம் மூவொரு கடவுளில் வெளிப்படுகிறது, ஞானம், உண்மையில் வெளிப்படுகிறது.”

- ஜூன் 15, மூவொரு கடவுள் பெருவிழா