news
ஆன்மிகம்
கிறிஸ்து தமது பணியைப் பகிர்ந்துகொள்ளப் பெண்களை அழைக்கின்றார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 41)

1. மெசியாவின் மீட்புப் பணியில் மரியாவின் பங்கு பற்றி அறிவிக்கும் வயது முதிர்ந்த சிமியோனின் வார்த்தைகள், மீட்பின் மறையுண்மையில் பெண்ணின் பங்கை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. உண்மையில் மரியா ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமல்ல; இயேசுவின் பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஆவியில் கடவுளின் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் மீட்பரின் பக்கத்தில் துணையாக நிற்கின்ற ஒரு புதுமைப் பெண்ணாக, ‘சீயோனின் மகள்இருக்கின்றார். இந்த உண்மையானது மரியாவின் இதயத்தை ஏழு அம்புகள் குத்திக் கிழிக்கின்ற வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கின்ற புகழ்பெற்ற ஓவியத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது: இந்த ஓவியமானது சீயோனின் மகளோடும் திரு அவையோடும்  அடையாளப்படுத்தப்படுகின்ற ஒரு தாய்க்கும், மனுவுருவான வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் துயரமிக்க முடிவிற்கும் இடையேயானதோர் ஆழமான தொடர்பைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

கடவுளிடமிருந்து கொடையாக அவர் பெற்றுக்கொண்டவரை, அவரின் மீட்புப் பணிக்காக அர்ப்பணிப்பதன் வழியாகத் திரும்பவும் அவரிடமே கொடுப்பதற்காக மரியாவும் இந்தப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணிக்கின்றார். இந்தச் செயலானது இயல்பிலேயே உள்ளதொரு தாய்மைப் பாசத்தின் கனியான ஆத்மார்த்தமானதொரு பகிர்தலாக மட்டும் இல்லாமல், கிறிஸ்துவின் மீட்புப் பணிக்கான புதுமைப் பெண்ணின் ஒப்புதலையும் வெளிப்படுத்துகின்றது.

இயேசுவின் துன்பத்தில் மரியாவும் பங்குகொள்வார்!

2. இவை அனைத்தும் நிகழும், “இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும் (லூக் 2:35) என்ற வார்த்தைகளில் இயேசுவினுடைய அர்ப்பணத்தின் மற்றும் மரியாவினுடைய துன்பத்தின் நோக்கத்தை சிமியோன் சுட்டிக்காட்டுகின்றார். அவரின் தாயையும் அவரது துன்பத்தில் ஈடுபடுத்துகின்றஎதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கின்ற (லூக் 2:34) இயேசு, அவரது இந்த நிலைப்பாட்டில் ஆண்களையும் பெண்களையும் முக்கியமானதொரு முடிவை எடுக்க அழைத்து அவர்களை வழிநடத்துகிறார். உண்மையில்அவர் இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கிறார் (லூக் 2:34).

இவ்வாறு, மீட்புப் பணியின் பொருட்டு இந்த முரண்பாட்டில் அவரது இறைமகனோடு இணைக்கப்பட்டு இருக்கின்றார். உண்மையிலேயே கிறிஸ்துவை மறுப்பவர்களுக்கு அழிவின் ஆபத்தானது நிச்சயம். ஆனால், பலரது உயிர்ப்பானது மீட்பின் அற்புதமானதொரு பலனாக இருக்கின்றது. இந்த அறிவிப்பு மட்டுமே  அர்ப்பணத்தின் கனியானது யாருக்கெல்லாம்  ஏற்கெனவே சாட்சியம் கூறுகின்றதோ, அவரது இதயங்களில் மிகப்பெரியதொரு நம்பிக்கையைத் தூண்டுகின்றது

சடங்கு சம்பந்தமானதோர் அர்ப்பணத்திற்கு முன்பு இத்தகைய மீட்பின் எதிர்பார்ப்புகளை நோக்கி தூய கன்னியின் கவனத்தைத் திருப்புவதன் வழியாக, மனுக்குலத்தின் மீட்பிற்கான அவரது பங்களிப்பாகவே இந்தச் செயலை அவர் செய்கின்றார் என்பதை மரியாவுக்குச் சிமியோன் அறிவுறுத்துவதாகத் தோன்றுகின்றது. உண்மையில், அவர் சூசையிடமோ அல்லது சூசையைப் பற்றி மரியாவிடமோ பேசவில்லை; அவரின் வார்த்தைகள் அவரது மகனின் முடிவோடு அவர் தொடர்புபடுத்துகின்ற மரியாவுக்கு  மட்டுமே கூறப்பட்ட வார்த்தைகளாக இருக்கின்றன.

3. கால வரிசைப்படி முதன்மை பெறுகின்ற மரியாவின் இந்தச் செயலானது இயேசுவின் முதன்மை நிலையை மங்கச் செய்யவில்லை. மீட்புத் திட்டத்தில் மரியாவின் இந்தப் பங்கை இரண்டாம் வத்திக்கான் சங்கமானதுமீட்பினுடைய மறைத்திட்டத்தை நிறைவேற்றுவதில், அவருடைய மகனின் சேவையில் அவருக்குக் கீழும் அவரோடு இணைந்தும்முழுமையாகத் தன்னையே ஒப்படைத்தார் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56) என்று விவரிக்கின்றது.

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில், மரியா கிறிஸ்துவுக்குக் கீழும் கிறிஸ்துவோடும் மீட்பின் மறைத்திட்டத்திற்காக உதவுகின்றார். உண்மையில் மீட்பில் அவர் முதன்மையான பங்கை வகிக்கின்றார். எனவே, சடங்கு முறை காணிக்கையால் மட்டுமே  அவர் மீட்கப்பட வேண்டும். அவரது ஆன்மாவை ஊடுருவுகின்ற வாளினால்  மரியா அவருடைய மகனின் பலியோடு இணைக்கப்படுகின்றார்.

4. கிறிஸ்துவின் முதன்மை இடமானது ஈடு செய்யப்பட முடியாத பெண்ணின் பங்கைத் தகுதியற்றதெனத் தள்ளாமல், அதற்குத் துணைநின்று சரியானதொன்றைக் கோருகின்றது. அவரது சொந்தப் பலியில் தமது தாயை ஈடுபடுத்துவதன் வழியாக, கிறிஸ்து அந்தப் பலியின் ஆழமானதொரு மனிதநிலை அடிப்படையை வெளிக்கொணரவும், சிலுவையின் குருத்துவப் பலிக்கான முன்னோட்டத்தை நமக்குக் காட்டவும் விரும்புகிறார்.

மீட்புப் பணியில் பெண்ணின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கான தெய்வீக நோக்கத்தைப் பலியாக ஒப்புக்கொடுக்கின்ற அந்தச் சடங்கில் யோசேப்பு கலந்துகொண்ட போதிலும் சிமியோனின் தீர்க்கத்தரிசனம் மரியாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதிலிருந்து காணலாம்.

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் இந்த நிகழ்வின் முடிவானது, மீட்புத் திட்டத்தில் பெண்ணினுடைய உடனிருப்பின் மதிப்பு மற்றும் அர்த்தத்தை உறுதிப்படுத்துவதாகத் தோன்றுகின்றது. அன்னா என்னும் பெண்ணுடனான சந்திப்பு, பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிடம் ஒப்படைக்கப்படுவது போன்ற சிறப்புத் தருணங்களை நிறைவு செய்கிறது.

சிமியோனைப்போல, இந்தப் பெண்ணும்  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுள் சிறப்பானதொரு நிலையைப் பெறவில்லை; ஆனால், அவரது வாழ்வானது கடவுளின் பார்வையில் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்றது. ஒருவேளை, அவரின் ஆழ்ந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் கொடையின் பொருட்டும் தூய ஆவியாரின் தூண்டுதலின்கீழ் அவர் நடத்திய அந்தப் புனித வாழ்வின் பொருட்டும் அநேகப் பேர் அவரிடம் ஆலோசனை பெற்றதனால், தூய லூக்கா மரியாவை  ஓர் இறைவாக்கினராக அழைக்கின்றார்.

அன்னா 84 வயது நிறைந்தவராகவும், பல ஆண்டுகளாக விதவையாகவும் இருந்தார். தன்னையே முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்து, “கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார் (காண். லூக் 2:37). அவர் மெசியாவை மிகவும் ஏக்கத்தோடு எதிர்பார்த்து வாழ்ந்து வந்ததனால், அது இயேசுவில் நிறைவேறுவதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த பலரையும் பிரதிபலிக்கின்றார். இதையே நற்செய்தியாளர், “அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்தார் (லூக் 2:38) என்று குறிப்பிடுகின்றார்.

ஆலயத்தில் தொடர்ந்து தங்கியிருந்ததால், ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டதும், திருவசனத்தைக் கேட்பதாலும் செபத்தாலும் செழுமைப்படுத்தப்பட்டதுமான ஒரு வாழ்வின் முடிவில் சிமியோனை விடவும் ஒருவேளை அவரால் எளிதாக இயேசுவைச் சந்திக்க முடிந்தது.

மீட்பின் தொடக்கத்தில் தனது புனித வாழ்வாலும், செபத்தோடு கூடிய எதிர்பார்ப்பாலும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளவும், அவரது முடிவில்லா இரக்கத்தால் பெற்றுக்கொண்ட அற்புதங்களுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளைப் புகழவும் தயாராக இருக்கும் எல்லாப் பெண்களையும் இந்த இறைவாக்கினரான அன்னாவில் காண முடியும்.

அன்னா: நற்செய்தியைப் பரப்புகின்ற பெண்களின் அடையாளம்

குழந்தை இயேசுவைச் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிமியோனும் அன்னாவும், மரியா மற்றும் சூசையோடு இயேசுவின்  உடனிருப்பினுடைய மகிழ்ச்சியைப் பகிர்வதிலும், அதை அவர்கள் வாழ்ந்த இடத்தில் பரப்புவதிலும் ஆழமானதோர் அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, அவரது சாதாரண மற்றும் அசாதாரணமான நம்பிக்கையினால் சான்றுபகர்வதன் வழியாக, அன்னா இயேசுவைப் பற்றிப் பேசுவதில் வியக்கத்தக்கதோர் ஆர்வத்தைக் காட்டுகிறார். இந்த நம்பிக்கை மற்றவர்களும் அவர்கள் வாழ்வில் மெசியாவை ஏற்றுக்கொள்வதற்கான முன்தயாரிப்பாக இருக்கின்றது

எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார் (லூக் 2:38) என்ற தூய லூக்காவின் கருத்தானது, நற்செய்தியைப் பரப்புவதில் தங்களை அர்ப்பணித்து, மீட்பிற்கான நம்பிக்கையைத் தூண்டி வளர்க்கும் பெண்களின் அடையாளமாக அவரைக் கருதுவதாகத் தெரிகிறது.

மூலம்: Pope John Paul II, Christ calls women to share his mission, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 15 January 1997, p.11.

news
ஆன்மிகம்
இயேசுவின் மீட்புப் பணியில் மரியாவின் பங்கு (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 40)

1. “இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32) என்பதை உணர்ந்த பிறகு, சிமியோன் மரியாவிடம் அந்த மீட்பராகிய இயேசு அனுபவிக்க வேண்டிய மிகப்பெரும் துயரத்தையும் அந்தத் துன்பியல் நிகழ்வில் அவரின்  (மரியாவின்) பங்களிப்பையும் முன்னறிவிக்கின்றார்.

அவரின் மீட்புப் பலி பற்றிய குறிப்பானது இயேசுவின் பிறப்பு பற்றிய அறிவிப்பு நிகழ்வின் பொழுது சுட்டிக்காட்டப்படாமல் மரியின் மகனுடைய மறையுண்மைகளை அவர் புரிந்துகொள்ள உதவிய கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது அறிவிப்பு (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண்.16) என்று கூறப்படும் சிமியோனின் தீர்க்கத்தரிசனத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது

அதுவரை அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சிமியோன், யோசேப்புவையும் மரியாவையும் ஆசிர்வதிக்கையில் மரியாவிடம் மட்டும் அவரது மகனின் பாடுகளை அவரும் பகிர்ந்துகொள்வார் என்று முன்னறிவிக்கின்றார். தூய ஆவியாரால் தூண்டப்பட்டு அவர் மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் (லூக் 2:34-35) என்கிறார். தாய் என்கிற முறையில் மரியாவின் துன்பமானது அவரது மகனின் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.

2. இந்த வார்த்தைகள் மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் துன்பத்தை முன்னறிவிக்கின்றன. உண்மையில் அவர் அவரது சமகாலத்தவர்களின் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள முன்குறிக்கப்பட்டமுரண்பாட்டின் அடையாளம் (the sign of contradiction) ஆவார். ஆனால், கிறிஸ்துவின் துன்பத்துடன் இணைத்து மரியாவின் இதயமானது வாளால் குத்திக் கிழிக்கப்படும் என்பதைக் காட்சிப்படுத்துவதன் வழியாக அவரது மகனின் துன்பமிக்க முடிவோடு அவரின் அன்னையையும் சிமியோன் இணைக்கின்றார்.  

இவ்வாறு, மதிப்புமிக்க வயோதிகரான அவர், மீட்பர் எதிர்கொள்ளவிருக்கும் பகையை முன்கூட்டியே எதிர்பார்க்கையில், அப்பகையானது தாயின் இதயத்தில் ஏற்படுத்தவிருக்கும் எதிர்வினையையும் சுட்டிக்காட்டுகின்றார். தாயின் இந்தத் துன்பமானது மீட்புப் பலியில் அவரது மகனாகிய இயேசுவோடு இணையும் அந்தப் பாடுகளில் அதன் உச்சத்தை அடைகிறது.

லூக்கா நற்செய்தி 2:32-இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ள துன்புறும் ஊழியர் பற்றிய பாடல்களை நமது மனக்கண்முன் கொண்டு வரும் பொழுது (ஒப்பிடுக: எசா 42:6; 49:6), சிமியோனின் வார்த்தைகள், “அவர் நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார் (எசா 53:5), “தம் உயிரைக் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் (எசா 53:10) போன்ற தனிப்பட்ட மற்றும் ஆன்மிகத் தியாகத்தை விளக்கும் பண்டைய சடங்குமுறைகளையும் விஞ்சுகின்ற வகையில் இருக்கும் துன்புறும் ஊழியர் பற்றிய இறைவாக்கை நமக்கு நினைவூட்டுகின்றன.

துன்புறும் ஊழியரின்துக்ககரமான எதிர்காலத்திற்கும், மரியாவின் எதிர்காலத் துன்பத்திற்கும் இடையே ஒரு தனித்துவமான ஒற்றுமை இருப்பதை சிமியோனின் இறைவாக்கானது எவ்வாறு வெளிப்படுத்துகின்றது என்பதை இங்கு நாம் கவனிக்கலாம்.

3. இயேசுவை, சிமியோன்பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32) என்று அறிவிக்கும் பொழுது, மரியாவும் யோசேப்புவும் திகைத்து நிற்கின்றனர். சிமியோனின்  வார்த்தைகளைக் கேட்ட பிறகு தன் இருதயத்தைத் துளைக்கும் வாள் பற்றிய இறைவாக்குப் பற்றி மரியா எதுவுமே சொல்லவில்லை. யோசேப்புவுடன் இணைந்து அந்தப் புரிந்துகொள்ள முடியாத இறைவாக்கு வார்த்தைகளையும் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தலின் உண்மையான அர்த்தத்தையும் அமைதியுடன் மரியா ஏற்றுக்கொள்கின்றார்.

உண்மையில், புனித லூக்கா தனது நற்செய்தியில்அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒரு சோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக் குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது (லூக் 2:24) என்று குறிப்பிடுவதைப் போன்று, அதுநான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று கூறும் இயேசுவின் பலியை முன்குறிக்கின்றது. இதில் இயேசுவின் மீட்புப் பணியில் அவரது தாயையும் இணைக்கும்உண்மையானதொரு கையளிப்பும் (லூக் 2:22) நிகழ்த்தப்பட்டது.

மரியா தனது மகனின் மீட்புப் பணியில் பங்குகொள்ள வேண்டியதாயிருந்தது...

4. சிமியோனின் இறைவாக்கைத் தொடர்ந்து இறைவாக்கினரான அன்னாவினுடனான சந்திப்பும் நிகழ்கின்றது: “அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக் குழந்தையைப் பற்றிப் பேசினார் (லூக் 2:38). “கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து (லூக் 2:37) வந்ததன் வழியாக மீட்பரின் வரவை எதிர்பார்த்திருந்த அந்த வயதான பெண்ணின் நம்பிக்கையும், இறைவாக்குரைக்கும் ஞானமும் இஸ்ரயேலின் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்குத் திருக்குடும்பத்திற்கு மேலும் ஊக்கமூட்டியது.

இந்தக் குறிப்பிட்ட தருணத்தில், அன்னாவின் செயலானது மரியாவிற்கும் யோசேப்புவிற்கும் இறைவனிடமிருந்து வந்ததோர் அடையாளமாகத் தோன்றியிருக்கும். இது நம்பிக்கையளிக்கும் ஒளியின் மற்றும் தொடர் பணியின் செய்தியாகும்.

சிமியோனின் இறைவாக்குரைக்கும் நிகழ்வு முதல், மரியா தனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் பாடுகள் நிறைந்த பணிவாழ்வில் மிக நெருக்கமாகவும், புரிந்துகொள்ள இயலாத வகையிலும் ஒன்றிணைக்கிறார்

இவ்வாறு, மனிதகுலத்தின் மீட்புக்காக மரியா தன் மகனின் உண்மையுள்ள உடன் உழைப்பாளராக மாற வேண்டியதாயிருந்தது.

மூலம்: John Paul II, Mary has role in Jesus’ saving mission, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 1 January 1997, p. 11.

news
ஆன்மிகம்
சிமியோன் ஆண்டவரின் செயலுக்கு இணக்கமுள்ளவர்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 39

சிமியோன் கடவுளின் மறைபொருளான, அன்பான திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தனது நம்பிக்கையாளர்களின்மீது தூய ஆவியைப் பொழிகின்ற ஆண்டவரின் இரக்கமுள்ள செயலைத் தியானிக்க நம்மை அழைக்கின்றார்.

1. கோவிலில் இயேசுவைக் காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வை விவரிக்கும் நற்செய்தியாளர் லூக்கா, ‘இயேசுவே வரவிருக்கும் மீட்பர்என்கிற செய்தியை வலியுறுத்துகின்றார். லூக்கா நற்செய்தியைப் பொருத்தவரை பெத்லகேமில் இருந்து எருசலேமிற்கான திருக்குடும்பத்தினுடைய பயணத்தின் முதல் நோக்கம் திருச்சட்டத்தை நிறைவேற்றுவதாகும். “மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ‘ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒரு சோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது (லூக் 2: 22-24).

இந்தச் செயலின் வழியாக மரியாவும் யோசேப்பும் கடவுளின் விருப்பத்திற்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து, அவர்களுக்கான எல்லா வகையான சலுகையையும் (privilege) மறுக்கும் தங்கள் நோக்கத்தைக் காட்டுகிறார்கள். எருசலேம் கோவிலுக்கு அவர்கள் வருவதென்பது, இறைவன் இருக்கும் இடத்திற்கு வந்து அவருக்கு அர்ப்பணிப்பு செய்வதை இலக்காகக் கொண்டிருந்தது. தனது வறுமையின் காரணமாக மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை வழங்கக் கடமைப்பட்ட மரியா, உண்மையில் பழைய சட்டத்தின் சடங்குகளில் முன்னுரைக்கப்பட்டதை முன்னதாகவே நிறைவேற்றும் விதமாக மனிதகுலத்தை மீட்கும் உண்மையான ஆட்டுக்குட்டியையே காணிக்கையாகக் கொடுக்கிறார்.

சிமியோன் தூய ஆவியாரால் உந்தப்பட்டார்

2. குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய்க்கு மட்டும் தூய்மைப்படுத்தும் சடங்கு தேவைப்பட்டதால் தூய லூக்கா நற்செய்தியாளர், ‘தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் (லூக் 2:22) பற்றிப் பேசுகிறார். இதன் வழியாக ஒருவேளை தாய் மற்றும் தலைப்பேறான மகன் இருவரையும் உள்ளடக்கிய கடமைகளை ஒன்றாகக் குறிப்பிட விரும்புகிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

 அன்னை மரியா தனி அருளால் (singular grace) நிரப்பப்பட்டதொரு தாய் மற்றும் அவர் பிறந்தது முதல் மாசற்றவராக இருந்தார். மேலும், அவரின் பிள்ளையாகிய இயேசுவும் முற்றிலும் புனிதமான நிலையில் இருந்ததாகவே குறிப்பிடப்படுவதால், இங்குதூய்மைப்படுத்துதல்என்ற வார்த்தை நம்மைச் சற்று ஆச்சரியப்படுத்தலாம். இருப்பினும், இது ஏதோ பாவக்கறையிலிருந்து மனசாட்சியைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு கேள்வி அல்ல; மாறாக, அந்தக்காலக் கருத்துகளின்படி இது எந்த விதமான குற்றத்தினாலும் இல்லாமல், பிறப்பால் களங்கமுறக்கூடிய சடங்குசார் தூய்மையை மீட்டெடுப்பதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தூய்மைச் சடங்கு பற்றி விவரிக்கும் நற்செய்தியாளர்தலைமகன் (first born) என்கிற சொல்லை (லூக் 2:7-23) இயேசுவுக்கும், கடவுளின் தூய்மைக்கும் இடையே உள்ள சிறப்புத் தொடர்பை வலியுறுத்தவும், மரியா மற்றும் யோசேப்பை ஊக்குவித்த அவர்களின் தாழ்மையான அர்ப்பணத்தைக் குறிப்பிடுவதற்கும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறார் (ஒப்பிடுக. லூக் 2:24). உண்மையில், ‘இரண்டு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகள் (லேவி 12:8) என்பவை ஏழைகளின் காணிக்கைகளாக இருந்தன.

3. யோசேப்பும் மரியாவும் கோவிலில், ‘நேர்மையான மற்றும்  இறைப்பற்றுக் கொண்ட, இஸ்ரயே லுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்த  (லூக் 2:25) சிமியோனைச் சந்தித்தனர்.

நற்செய்தியாளர் லூக்காவின் இவ்விவரிப்பு சிமியோனின் கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது கோவிலில் அவர் செய்த சேவையைப் பற்றியோ எதுவும் கூறவில்லை. அவ்விவரிப்பானது தனது இதயத்தில் பெரும் ஆசைகளை வளர்த்து, இஸ்ரயேலின் ஆறுதல் தரும் மீட்பருக்காகக் காத்திருந்த ஓர் ஆழ்ந்த இறையனுபவமுள்ள மனிதனைப் பற்றிக் கூறுகிறது. உண்மையில்தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்மற்றும்ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லைஎன்று தூய ஆவியாரால் உணர்த்தப்பட்டிருந்தார் (லூக் 2:25-26). இவ்வாறு ஆண்டவரின் புரிந்துகொள்ள இயலாத அன்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவருடைய நம்பிக்கையின்மீது ஆவியைப் பொழியும் கடவுளின் இரக்கமுள்ள செயலைக் காண்பதற்குச் சிமியோன் நம்மை அழைக்கின்றார்.

கடவுளின் செயலுக்குத் திறந்த மனதுள்ள மனிதரான சிமியோன்ஆவியாரால் ஈர்க்கப்பட்டுஆலயத்திற்குச் செல்கிறார் (லூக் 2:27). அங்கு இயேசு, யோசேப்பு மற்றும் மரியாவைச் சந்திக்கிறார். குழந்தையைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர் (லூக் 2:29) என்று கூறுகின்றார்.

சிமியோன் பழைய ஏற்பாட்டின் சொற்றொடரைப் பயன்படுத்தி, மெசியாவைச் சந்தித்ததில் அவர் அனுபவித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், அவரது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறியதாக உணர்கிறார். எனவே, அடுத்த உலகத்திற்கு அமைதியாகப் போக அனுமதிக்குமாறு அவர் கடவுளிடம் கேட்கின்றார்.

மனுக்குல மீட்பரை மாபரனுக்கு அர்ப்பணிக்கும் யோசேப்புவும் மரியாவும்

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் அத்தியாயத்தில், மீட்பருடனான இஸ்ரயேலினுடைய நம்பிக்கையின் சந்திப்பைக் காணலாம். கிறிஸ்துவோடு மனிதன் சந்தித்ததற்கான இறைவாக்குரைக்கும் அடையாளத்தையும் நாம் இதில் காணலாம். தூய ஆவியானவர் மனித இதயத்தில் இந்த மீட்பின் சந்திப்பிற்கான ஆசையை எழுப்புவதன் மூலமும் அதைக் கொண்டு வருவதன் மூலமும் சாத்தியமாக்குகிறார்.

முதியவரான புனித சிமியோனிடம் குழந்தையைக் கொடுக்கும் மரியாவின் பங்கையும் இங்கு நாம் புறக்கணிக்க முடியாது. இறை விருப்பத்தினால் மரியாதான் மனிதகுலத்திற்கு இயேசுவை அர்ப்பணிக்கின்றார்.

4. மீட்பரின் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் நாடுகளுக்கும் அனுப்பப்பட்டஊழியனாகநின்று சிமியோன் தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிடுகிறார். இறைவன் அவரிடம், “ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன் (எசா 42: 6) என்கிறார். மீண்டுமாக, “யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ! உலகம் முழுவதும் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன் (எசா 49: 6) என்றும் கூறுகின்றார்.

சிமியோன் தனது பாடலில், அவரின் தனிப்பட்ட எண்ண ஓட்டத்தை மாற்றியமைத்து, இயேசுவினுடைய பணியின் உலகளாவிய பொதுத் தன்மையை இவ்வாறு வலியுறுத்துகின்றார்: “மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை (லூக் 2:30-32).

இவ்வார்த்தைகள் குறித்து நாம் வியப்படையாமல் எப்படி இருக்க முடியும்? இதையே நற்செய்தியாளர் லூக்காவும் இவ்வாறு கூறுகின்றார்: “குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர் (லூக் 2: 33). ஆனால், இந்த அனுபவமானது யோசேப்பு மற்றும் மரியா இவர்கள் இருவருக்கும் அவர்கள் செய்த அர்ப்பணத்தின் முக்கியத்துவத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவியது: அதாவது, இறைவனுடைய மக்களின் மகிமையாக இருப்பவரும், மனிதகுலத்தின் மீட்பருமானவரையே அவர்கள் அர்ப்பணிக்கின்றனர்.

மூலம்: John Paul II, Simeon is open to the Lord’s action, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 18/25 December 1996, p. 9.

news
ஆன்மிகம்
பொதுநிலையினரின் ஆன்மிகம்

திரு அவை என்கிற சங்க ஏட்டின் எண் 31-இல் குருகுலத்தாரும், திரு அவையின் இசைவு பெற்ற துறவற நிலையினரும் நீங்கலாக ஏனைய கிறித்தவ நம்பிக்கையாளர்களைக் குறிப்பதேபொதுநிலையினர்என்ற சொல். திரு அவைச் சட்டம் 225:2 மற்றும் கத்தோலிக்கக் கிறித்தவ மறைக்கல்வி ஏட்டின் எண் 897 ஆகியவற்றிலும்பொதுநிலையினர்என்ற சொல் இவ்வாறே விளக்கப்படுகிறது. ஆன்மிகம் என்பது மனிதனின் அக மற்றும் புற வாழ்வைக் குறிப்பிடும் சொல். நற்செய்தி மதிப்பீடுகளுக்கு ஏற்பவும் (Gospel Values and Charisms), தனி வரங்களுக்கு ஏற்பவும் வாழும் புனித வாழ்வே ஆன்மிக வாழ்வாகும்.

மனிதனின் சிந்தனை, சொல், செயல் இவற்றை நிர்ணயிக்கும் அகக் காரணிகள் ஆன்மிகத்தை இயக்கும் சக்திகளாகும். கிறித்தவ இறைநம்பிக்கை, பிறரன்பு இவை இரண்டும் ஆன்மிகத்தின்  முக்கியப் பரிமாணங்களாகும்.

பொதுவான கிறித்தவ ஆன்மிகம் என்பது கிறிஸ்துவைமீட்பர்என அறிவித்து, அவரை அனுப்பிய தந்தையைக் கடவுளாக ஏற்று, அவரால் படைக்கப்பட்ட மனிதரைச் சகோதர அன்புடன் நேசித்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ்வதாகும்.

பொதுநிலையினரின் ஆன்மிகம் என்பது  திருமண மானவர்கள் தங்களது திருமண வார்த்தைப்பாடுகளுக்குப் பிரமாணிக்கமாக வாழ்வதும், வார்த்தையாலும் வாழ்க்கையாலும் கிறிஸ்துவுக்கு உயிருள்ள சாட்சிகளாக வாழ்வதுமாகும். திருமணமாகாதவர்கள் கிறித்தவ நம்பிக்கை, பிறரன்பு இவற்றைக் கடைப்பிடித்து, அருளடையாளங்களின் மூலம் தங்களது ஆன்மிக வாழ்வில் இறையனுபவத்தைப் பெறுவதாகும்.

இல்லற வாழ்வில் இறை வெளிப்பாட்டையும் இறைப் பாதுகாப்பையும் உணர்ந்து வாழ்வதுதான் பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.

பொதுநிலையினர் திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் வழியாகவும், நற்கருணை மற்றும் ஒப்புரவு அருளடையாளங்களின் மூலமும் ஆன்மிக எழுச்சி பெற்று, கிறிஸ்துவின் போதிக்கும் பணியிலும், புனிதப்படுத்தும் பணியிலும், ஆளும் பணியிலும் அருள்பணியாளர்களின் வழிநடத்துதலில் பங்கேற்றுத் தமது கிறித்தவக் கடமைகளை நிறைவேற்றுவதே பொதுநிலையினர் ஆன்மிகத்தின் மற்றொரு பரிமாணம்.

பொதுநிலையினரின் ஆன்மிகத்தின் தனித்தன்மைகள்

1) பொதுநிலையினர் உலகக் காரியங்களில் ஈடுபட்டு உழைக்கும்போது கிறிஸ்துவின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, நேர்மை, பணிவு, துணிவு, உள்ளத்தூய்மை, கீழ்ப்படிதல், தாழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து மறு கிறிஸ்துவாக வாழ்வதாகும்.

தொடக்கத் திரு அவையில் முதல் பொதுநிலையினர் மற்றும் மறைச்சாட்சிப் புனிதருமான ஸ்தேவான் (திப 7:60) முதல் இக்காலத் திரு அவையில் பொதுநிலையினரின் புனிதரான தேவசகாயம் வரை எத்தனையோ பொதுநிலையினர், கிறித்தவ நம்பிக்கைக்காகத் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர் என்று திரு அவை வரலாறு கூறுகின்றது.

புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் (4:8-9) கூறியிருப்பதுபோல, பொதுநிலையினராகிய நாம் உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்பு உடையவை எவையோபோற்றுதற்குரியவை எவையோ அவற்றையே மனத்தில் நிறுத்தி, சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்துவதே பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.

பொதுநிலையினரின் ஆன்மிகம் அருள்பணியாளர்களின் மற்றும் துறவறத்தாரின் ஆன்மிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அருள்பணியாளர்கள் தங்கள் வார்த்தைப்பாட்டிற்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்து, தங்களது அருள்பணிகளை ஆற்றுவதில்தான் அவர்களின் ஆன்மிகம் உள்ளது. துறவறத்தார் தங்களது வார்த்தைப்பாட்டிற்கு ஏற்ப தூயவாழ்வு வாழ்ந்து தங்களது தனிவரத்திற்கேற்ப நற்செய்திப் பணியாற்றுவதே அவர்களின் ஆன்மிகமாகும்.

அருள்பணியாளரும் துறவறத்தாரும் பொதுநிலையினரும் கிறித்தவ ஆன்மிகத்தைக் கடைப்பிடித்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் புனித வாழ்வு வாழ - மறு கிறிஸ்துவாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் கிறித்தவ ஆன்மிகமாகும். அதுவே, கிறிஸ்துவின் ஆன்மிகமும் ஆகும்.

எனவே, புனித மாற்கு நற்செய்தியில் (16:17-18) கூறப்பட்டுள்ளதுபோல, முழு நம்பிக்கையுடன், புனித பவுல் 1கொரிந்தியர் 13:4-8-இல் கூறியிருக்கும் அன்பின் பண்புகளை வாழ்ந்து காட்டி, புனித மத்தேயு 25 35, 36 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட் டுள்ள அறச்செயல்கள் அனைத்தையும் வாழ்க்கை நெறியாக்கி, இறைவனின் ஆசிர் பெற்றவர்களாய் நிலைவாழ்வைப் பெறத் தகுதியான புனித வாழ்வு வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிக வாழ்வு.

புனித பவுல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிறித்தவர்களுக்குக் கூறிய அறிவுரைகள் அனைத்தும் இன்று வாழும் நமது வாழ்வுக்கும் பொருந்துமானால், அதைக் கடைப்பிடித்து, “இனி வாழ்வது நானல்ல; கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்என்று துணிவுடன் கூறும் அளவுக்கு நமது வாழ்வு நம்பிக்கை, அன்பு, நிறைந்த வாழ்வாக இருந்தால், அதுவே பொதுநிலையினராகிய நமது ஆன்மிகம் ஆகும்.

புனித மாற்கு நற்செய்தியில் (16:17-18) இயேசு குறிப்பிடும் நம்பிக்கை கொண்டோராய் வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகத்தின் அளவுகோல். அதாவது, “நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும்அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்; கொல்லும் நஞ்சைக் குடித்தாலும், அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. அவர்கள் உடல்நலமற்றோர்மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்.” நாம் இத்தகைய இறைநம்பிக்கையுடன் வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகமாகும்.

புனித மத்தேயு நற்செய்தியில் (25:35,40) நமது ஆண்டவர் இயேசு கூறுவதுபோல, “என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமையோடு பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், தணித்தீர்கள்; அந்நியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையிலிருந்தேன், என்னைத் தேடிவந்தீர்கள்என்பார். ‘மிகச் சிறியோராகிய என் சகோதர-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்என்பார்.

தூய ஆவியாரின் துணையுடன் ஊனியல்பின் செயல்களான பரத்தமை, கெட்டநடத்தை, காம வெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவற்றை விலக்கி (கலா 6:19-21), தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலா 6:22) நிறைந்த தூய வாழ்வு வாழ்வதே பொதுநிலையினரின் ஆன்மிகம்.

பொதுநிலையினரின் புனிதர் தேவசகாயம் போல மறைச்சாட்சியாக வாழ்வதுதான் முழுமையான சாட்சிய வாழ்வு, நமது கிறித்தவ நம்பிக்கை, பிறரன்புடன் தூய வாழ்வு வாழ்வது; அதுவே பொதுநிலையினரின் ஆன்மிகம்.

news
ஆன்மிகம்
அன்னை மரியா நிறையன்பின் முன்மாதிரி (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 37)

1. இயேசுவின் பிறப்பானது தூய ஆவியானவர் மற்றும் கன்னித் தாயின் ஒத்துழைப்பால் நிகழ்ந்திருந்தாலும், இப்பிறப்பு நிகழ்வானது மற்ற மனிதர்களின் பிறப்பைப் போன்றே கருத்தரித்தல், கர்ப்பத்தில் தாங்குதல் மற்றும் மகப்பேறு போன்ற கட்டங்களைக் கடந்துதான் நிகழ்ந்தது. மேலும், மரியாவின் தாய்மை என்பது வெறும் குழந்தையைப் பெற்றெடுக்கும் மனித உடல் சார்ந்த செயல்முறையோடு மட்டும் நின்றுவிடவில்லை; மாறாக, மற்ற எல்லாத் தாய்மார்களுக்கும் நிகழ்வது போலவே, தன் மகனின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவரும் ஓர் இன்றியமையாத பங்களிப்பை வழங்கினார்.

ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் மட்டுமல்ல; அக்குழந்தையை வளர்ப்பவள் மற்றும் கற்பிப்பவள். உண்மையில், இறைவனின் திட்டத்தின்படி குழந்தைக்குக் கல்வி புகட்டும் பணியானது, குழந்தையைப் பெற்றெடுக்கும் செயலின் இயல்பான தொடர்ச்சியே என்று நாம் உறுதியாகக் கூறலாம். மரியா இயேசுவைக் கருத்தரித்ததாலும், பெற்றெடுத்ததாலும் மட்டுமல்ல; மாறாக, அவரின் மனித வளர்ச்சியில் அவருக்குத் துணையாய் இருந்ததாலும்இறைவனின் தாய் (Theotokos) என்று அழைக்கப்படுகின்றார்.

மரியா ஆசிரியையாக இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்

2. தெய்வீகத்தின் முழுமையை இயேசு தம்முள் கொண்டிருந்ததால், அவருக்கு ஆசிரியர்கள் தேவையில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், மனுவுருவாதலின் மறைபொருள், பாவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நம்மைப் போலவே மனித நிலையில் இறைமகன், இந்த உலகிற்கு வந்தார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றது (ஒப்பிடுக. எபி 4:15). ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுவதைப் போலவே, இயேசுவின் வளர்ச்சிக்கும் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயது வரை (ஒப்பிடுக. லூக் 2:40) அவருடைய பெற்றோரின் கல்விசார் உருவாக்கமும் தேவைப்பட்டது

இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்து குறிப்பிடத்தக்க வகையில் விவரிக்கும் லூக்கா நற்செய்தியானது, நாசரேத்தில் இயேசு யோசேப்புவிற்கும் மரியாவிற்கும் கீழ்ப்படிந்திருந்தார் என்று கூறுகின்றது (ஒப்பிடுக. லூக் 2:51). இச்சார்பு நிலையானது, அவரின் தாய் மற்றும் கடவுளின் திட்டத்திற்குத் திறந்த மனதோடிருந்து தந்தை என்கின்ற முறையில், அவரின் கடமையைச் செய்த யோசேப்புவிற்கு இயேசு கீழ்ப்படிந்திருந்தார் என்பதைக் காட்டுகின்றது

3. கடவுள் மரியாவிற்குக் கொடுத்த சிறப்புக் கொடைகள், தாய் மற்றும் ஆசிரியராக இருந்து அவர் தனது பணியைச் செய்ய மிகவும் உதவியாக இருந்தன. அன்றாட வாழ்க்கையின் உறுதியான சூழ்நிலைகளில், இறைவனைப் பின்பற்றுவதற்கும் பின்தொடர்வதற்கும் இயேசுவுக்கு மரியா கற்றுக் கொடுத்திருக்கவேண்டும். மேலும், கடவுளுக்கும், தனது சகோதர-சகோதரிகளுக்குமான உண்மையான அன்பின் முன்மாதிரிக்கானதோர் எடுத்துக்காட்டான வாழ்வையும் மரியாவிடம்  இயேசுவால் காண முடிந்தது.

மரியாவின் தாய்மைநிறை உடனிருப்புடன், கல்வி சார்ந்தவைகளில் தேவையான சமநிலையை வழங்கிய ஒரு நியாயமான மனிதரான (மத் 1:19) யோசேப்புவின் பங்களிப்பின்மீதும் இயேசு நம்பிக்கையோடிருக்கலாம். ஒரு தந்தையாகத் தனது பங்கைச் செய்த யோசேப்பு, நாசரேத்தில் உள்ள தனது வீட்டை, மனிதகுல மீட்பரின் வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முதிர்ச்சிக்கும் ஏற்றதொரு சூழல் உள்ளவாறு மாற்றுவதில் அவர் தனது மனைவியுடன் ஒத்துழைத்தார். பின்னர் தச்சுத் தொழிலை அவருக்குக் கற்றுக் கொடுத்ததன் வழியாக, யோசேப்பு இயேசுவை உழைப்பாளர் உலகிலும் சமூக வாழ்விலும் ஆர்வத்துடன் ஈடுபட உதவினார்.

4. நற்செய்தியில் மரியாவைப் பற்றி ஒருசில கூறுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளதால், மரியா தனது தெய்வீக மகனுக்குக் கற்பித்த வழிகளை நாம் நன்கு அறிந்து அவரை முழுமையாகப் பாராட்ட இயலவில்லை. உண்மையில், மரியா யோசேப்புவுடன் இணைந்து மோயிசனின் சடங்குகள் மற்றும் பரிந்துரைகளையும், சங்கீதங்களைப் பயன்படுத்தி உடன்படிக்கையின் கடவுளிடம் செபிக்கவும், எகிப்திலிருந்து வெளியேறியதை மையமாகக் கொண்ட இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றையும் இயேசுவிற்கு அறிமுகப்படுத்தினார். மரியாவிடமிருந்தும் யோசேப்புவிடமிருந்தும் தொழுகைக்கூட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும், பாஸ்கா விழாவிற்காக வருடாந்திரத் திருப்பயணம் செய்யவும் இயேசு கற்றுக்கொண்டார்.

இவ்வாறு, இயேசுவின் செயல்பாடுகளை வைத்து, மரியாவின் போதனை ஆழமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்றும், இயேசுவின் மனித உளவியலில் நல்லதொரு வளர்ச்சியைக் கண்டது என்றும் உறுதியானதொரு முடிவுக்கு நம்மால் வரமுடியும்.

உண்மைப் பெற்றோரின் முன்மாதிரிகள் யோசேப்பு-மரியா

5. தனித்துவமிக்கவரான இயேசுவைப் பொறுத்தவரை, மரியாவின் கல்விப்பணி மற்ற தாய்மார்களின் பங்களிப்போடு ஒப்பிடுகையில் பல சிறப்பு அம்சங்களை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. தனது மகனிடம் ஏற்கெனவே இயல்பாகவே அமைந்திருந்த வளர்ச்சிக்கு இன்றியமையாத மதிப்புகளும் ஆற்றல்களும் வளர்வதற்கான சாதகமான சூழலை மட்டுமே அவர் ஏற்படுத்தித் தந்தார். எடுத்துக்காட்டாக, இயேசுவிடம் எவ்வகையான பாவமும் இல்லாதிருந்ததால், மரியாவிடமிருந்து எப்போதும் நேர்மறையான ஒரு மனப்பாங்கை வேண்டி நின்றது. இது எவ்வகையான திருத்தத்திற்கோ மற்றும் தலையீட்டிற்கோ இடமில்லாமல் செய்தது.

மேலும், இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரம்-மரபுகளை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியது அவருடைய தாய் என்றாலும்கூட, உலகில் உண்மையைப் பரப்பவும், தந்தையின் விருப்பத்தை முற்றிலும் பின்பற்றவும் எருசலேம் ஆலயத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே இறைமகன் பற்றிய முழு விழிப்புணர்வைப் பெற்றிருந்ததையும் அவரே வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு தன் மகனின் ஆசிரியையாக இருந்து, மரியா அவர் பெற்றெடுத்த இறைமகனின் தாழ்ச்சிமிகு சீடராகின்றார்

கன்னித்தாயினுடைய பணியின் முக்கியத்துவம் என்னவென்றால், இயேசுவின் குழந்தைப் பருவத்திலிருந்து வளர் பருவத்தை அடையும் வரை தனது மகன் இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளரவும் (லூக் 2:52) மற்றும் அவரின் பணி வாழ்வுக்குத் தயாராகவும் அவர் உதவினார்.

எனவே, மரியா மற்றும் யோசேப்பு இவர்கள் இருவரையும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் முன்மாதிரியாகக் காணலாம். இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் பெரும் சிரமங்களில் யோசேப்புவும் மரியாவும் பெற்றோருக்குத் துணைநின்று, குழந்தை வளர்ப்பில் சரியான மற்றும் பயனுள்ள உருவாக்கத்திற்கான வழியை அவர்களுக்குக் காட்டுகின்றார்கள். அவர்களின் கல்வி அனுபவமானது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளில் தங்கள் குழந்தைகளின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியில் தங்களை அர்ப்பணிப்பதற்காக அழைக்கப்படும் கிறித்தவப் பெற்றோருக்கு ஒரு திடமான முன்னுதாரணமாகும். இதனால் கிறித்தவப் பெற்றோர் மனிதனுக்குத் தகுதியான மற்றும் கடவுளின் திட்டத்திற்கேற்ற  வாழ்க்கையை வாழ்வார்கள்.

மூலம்: John Paul II, Blessed Virging Is Model of Perfect Love, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 11 December 1996, p. 11.

 

news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

அவர் ஒளியில் இருப்பது போல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம் (1யோவா1:7).

ஒளி உள்ள இடத்தில் உண்மை நிலைக்கும். இறைவார்த்தையே உண்மை. இயேசுவே இதனைத்  தம் செபத்தில்  வெளிப்படுத்தியுள்ளார் (யோவா 17:17).

நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் ஒளியாக இறைவார்த்தை காட்டும் வழியில் மட்டுமே நடப்பர் (திபா 119:105).

இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றதுஎன் காலடிக்கு உன் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவேஎன்ற இறைவார்த்தை.

நம் தலைவரும் மீட்பருமாகிய இயேசு ஆண்டவர் கூறுகிறார்: “நானே உலகில் ஒளி; என்னைப் பின்செல்பவர் இருளில் நடவார்; உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார்.”

பின்வரும் வார்த்தைகளில் இயேசு  நம்முடைய கடமையையும் உரிமையையும் உறுதிப்படுத்துகிறார்: “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்....” “உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க(மத் 5:14, 16).

இறைவனை முற்றிலும் சார்ந்து, உண்மையாம் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரே ஒளியாகச் சுடர்விட முடியும். திருமுழுக்கின் கடமையை நிறைவேற்ற முடியும். இறைத்தந்தை கொடையாக வழங்கும் உரிமையை அனுபவிக்க முடியும்.

திருமுழுக்கின் கடமை என்ன? உரிமை என்ன? என்பதைத் தெளிவாக நாம் உணர்ந்து அறிந்திருந்தோம் என்றால், நம்பிக்கை நிறைந்த இறைத்தந்தையின் மக்கள் என்பதில் மகிழ்ந்து பெருமை கொள்வோம்.

எதிர்நோக்குடன் உடன் பயணிக்கும் நம்பிக்கையாளர்கள் அனைவருமே உடன்பிறப்புகள் என்ற உண்மையைக் கண்டுகொண்டு, அன்புறவில் வாழ்வோம், வளர்வோம்.

திருமுழுக்கின் முதல் கடமை, அனைத்திற்கும் மேலாக இறைவனின் பேரன்பை அனுபவித்து, அவர் விருப்பத்தை நிறைவேற்றும் அன்பு மக்களாக வாழ்ந்து நன்மை மட்டுமே செய்வது. இயேசுவின் சீடராக அவரைச் சார்ந்து வாழும் ஏழையர் உள்ளத்தினராக எளிய வாழ்க்கை வாழ்வேன் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்வதுகத்தோலிக்கத் திரு அவையின் உண்மையான உறுப்பினர் எனத் தன் செயல்களின் மூலம் அனைத்து நம்பிக்கையாளர்களுடன் அன்புறவில் வாழ்வது. புனித பவுலடியார் கூறுவதுபோல் நம்மேல் சுமத்தப்பட்ட கடமை. இறைச்சமூகத்திலும்  இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களிடமும் நற்செய்தி அறிவிக்கும் பணியைச் சொல்லிலும் செயலிலும் முழுமையாக, பொறுப்பு நிறைந்த அர்ப்பண உணர்வுடன் செய்தல்.

 மறைத்தூதுப்பணி ஞாயிறு அன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் மறைத்தூதுப் பணிக்காகவும், மறைத்தூதுப் பணியாளர்களுக்காகவும் செபிப்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கடமை என்பதைப் பொறுப்புடன் உணர்வோம்.

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர் (மாற்16:15). “உலகம் முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் (மத் 28:20) என்ற இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துச் செயல்படுவோம். தந்தையாம் இறைவனை மாட்சிப்படுத்துவோம். தலைவராம்  இயேசுவின் சீடராவோம். தூய ஆவியாரால் இயக்கப்படுவோம்; இறையாட்சி மலர நம்மை அர்ப்பணிப்போம்.