news
சிறப்புக்கட்டுரை
அன்னையின் உதவி யாருக்கு?

தொங்கும் தோட்டம்

எங்கும் தோட்டம்

ஏதேன் தோட்டம்

ஏமாந்த தோட்டம்

அந்தத் தோட்டத்தின் நடுவே

அழகிய பழமரங்கள்

அந்த மரங்கள் நீரால்

வேர் வாழ்கிறது;

வேரால் மரம் வாழ்கிறது;

மரத்தால் கிளை வாழ்கிறது;

கிளையால் பூ வாழ்கிறது; பூவால் காய் வாழ்கிறது;

காயால் கனி வாழ்கிறது.

அந்தக் கனியால் வாழ்வுபோனது!

போன வாழ்வைப் பெற்று தந்தவர்தான் மரியா என்ற பெண். அவர்தான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டு இயேசுவின் தாயாக, ஏன் மனுக்குலத்தின் தாயாக, காலமெல்லாம் காத்து நிற்கும் செபமாலைத் தாயாக, செயம் தரும் தாயாக, வெற்றித் திலகமிட்டு நம்மிடம் வருவோரை வரவேற்கும் செபமாலைத் தாயாக, கருமுத்தான் நகரில் குடி கொண்டுள்ளார். கடைகோடி மக்களையும் கைவிடப்பட்டவர்களையும் கரைசேர்க்கும் தாயாக இருகரம் நீட்டி வாஞ்சையுடன் வரவேற்கும் அந்தத் தாயின் அன்பை, ஆசிரைப் பெற்றிட வாருங்கள்.

ஏதேன் தோட்டத்தில் அறிமுகமான மரியா 1595-இல் கொங்குத் தோட்டத்தில் செபமாலை அன்னையாக வலம்வர, மதுரை மறைப் பணித்தளத்தில் பணி செய்த தெ நோபிலி அடிகளாரின் பெரும் முயற்சியால் தந்தை பல்தசார் வழியாக உருவானது என்பது வரலாறு. அன்று முதல் இன்றுவரை அன்னையின் புகழ் அகிலமெங்கும் பரவியதன் விளைவாக இன்று பசிலிக்காவாக உயர்ந்துள்ளது.

அரசியின் ஆட்சி: அன்னை மரியாவை வீரமாமுனிவர்மழையானவளாய், பேரன்பு பொருந்தியவளாய், வருத்தத்தை ஒழிக்கும் மகிழ்ச்சியானவளாய், ஞானமாகிய நிறை ஒளியானவளாய், மகிழ்ச்சி பொங்கும் தாவீது அரசரின் மாளிகையானவளாய், நீர் வற்றாத கடலானவளாய், துன்ப இருள் போக்கும் பிறை நிலவாய், செபமாலையைச் செங்கரத்தில் ஏந்தி நம் தாய், நம் அனைவரின் அரசியாய் இருந்து ஆட்சி செய்கிறார்என்கிறார்.

மரியாவின் உதவி யாருக்கு? மரியாவின் உதவி மனிதருக்குத்தானே என்று சொல்வார்கள். உண்மையில் சிந்தித்துப் பார்க்கும்போது கடவுளுக்குத்தான் முதலில் தேவைப்பட்டது. “விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவளத்தை நிறைவேற்றுபவரை என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் (மத் 12:50) எனும் இயேசுவின் இறைவார்த்தையை இதயத்தில் சுமந்த என்னை மரியா கடவுளுக்கே முதல் உதவி செய்தார். மேலும், விண்ணகத்திற்கும் உதவி செய்கிறார்கள். “உன் சொற்படியே எனக்கு ஆகட்டும்என்று கூறிய அந்த நிமிடம் முதல் மரியாவின் பணிவாழ்வு தொடங்கியது எனலாம். இந்த நிகழ்வின் வழியாக உலகம் மீட்படையத் தொடங்கியது. மரியாவைப்போல் இறைவிருப்பம் அறிந்து செயல்படும்போது நாமும் மீட்புப் பணியில் பங்குப் பெறுகின்றோம் என்பதை உணர்ந்திடுவோம். தந்தை, மகன், தூய ஆவியின் குடும்பத்திற்குத் துணை நின்று பொறுப்பேற்று வாழ்ந்தவர்தான் மரியா. எனவே, கடவுளுக்கு முதற்பணியாக மரியாவின் வாழ்வு அமைந்தது.

மரியாவின் பிறர்நல பணிகள்: அன்னை மரியாவின் பிறரன்புப் பணிகள் கானாவூர் திருமண நிகழ்வில் காணமுடிகிறது. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா 2:5)  என்றார்கள். நாமும் அவர் சொல்வதை எல்லாம் செய்யும்போது மரியாவின் பிள்ளைகள் ஆகிறோம், அன்னை மரியா கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதனுக்கும், இயேசுவின் இறப்பின்போதும் உதவிக்கரம் நீட்டுகிறார். அதனால்தான், மரியாவை நமக்குத் தாயாகத் தந்தார். இறையருளால் மகிழும் அன்பு பொருந்திய பக்தர்களை விண்ணகம் சேர்க்கக் காத்து நிற்கும் செபமாலை அன்னை அவரே. நமக்காகத் தம் மகனிடம் பரிந்து பேசி, விண்ணக வாழ்வைப் பெற்றுத் தருகின்றவராக இருக்கின்றார்.

ஆகவே, அன்னையிடம் செல்வோம்; அவர் வழி நடப்போம்; விண்ணக வாழ்வைப் பரிசாகப் பெறுவோம். மரியே வாழ்க!

news
சிறப்புக்கட்டுரை
செபமாலையின் முக்கியத்துவம்!

தூய ஆவியால் நிரப்பப்பெற்று மரியன்னையின் அனுமதி பெற்ற சாமிநாதர், அது முதல் செபமாலையின் மேன்மை பற்றி மக்கள் மனங்களில் தனது போதனையின் மூலம் ஆழமாக வலியுறுத்தி வந்தார். தினமும் செபமாலை செபித்தார். செபமாலைதான் அவரது போதனையின் முன் ஆயத்தமாகவும், முடிந்தபின் அன்னையுடன் உரையாடுவதாகவும் இருந்தது.

ஒருநாள் அவர் பாரீஸ் பட்டணத்தில் உள்ள மாதாவின் பேராலயத்தில் போதிக்க வேண்டியிருந்தது. அன்று நற்செய்தியாளரான புனித யோவானின் திருநாள். சாமிநாதர் அவ்வாலயத்தில் பெரிய பீடத்தின் பின்னால் உள்ள சிற்றாலயத்தில் உருக்கமுடன் செபமாலை செபித்து ஆயத்தம் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது அன்னை அவருக்குத் தோன்றி, “மகனே சாமிநாதா! நீ சொல்ல நினைத்திருக்கும் செய்தி நல்லதுதான். ஆயினும், அதைவிட சிறந்த செய்தி ஒன்றை உனக்கு நான் தருகிறேன்என்றார். அப்போது அன்னை கொண்டு வந்திருந்த புத்தகத்தை, சாமிநாதர் கரத்தில் வழங்கினார். சாமிநாதர் அதைக் கவனமுடன் வாசித்தார்; பின் அதைத் தியானித்தார்; அன்னைக்கு நன்றி கூறினார். ஆலயத்தில் வேத சரித்திர வல்லுநர்களும், மேல்நிலைச் சிந்தனையாளர்களும் கூடியிருந்தனர். சாமிநாதர் பிரசங்க மேடையில் ஏறி, “யோவான் விண்ணக அரசியான மரியன்னையின் காப்பாளராக இருக்கும் தகுதி பெற்றார்என்று மட்டுமே கூறினார். மேலும்,  “ஞானமும் அறிவும் மிகுந்த அறிவுரைகளை நான் இப்போது போதிக்க வரவில்லை. தூய ஆவியின் சக்தி கொண்டு அவரது எளிமையில் பேசப்போகிறேன்என்று கூறினார்.

உயர்குல மக்களே, அறிவில் சிறந்தவர்களே, அறிவுமிக்க சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டு நீங்கள் பழக்கப்பட்டு இருக்கிறீர்கள். மனித அறிவின்படி மொழிகளில் பேசி வந்த நான், இன்று அப்படிப் பேச விரும்பவில்லை. மாறாக, கடவுளின் தூய ஆவியையும், அவரது பெருமைகளையும் எளிமையான முறையில் பேசவே விரும்புகிறேன்என்று கூறினார். சாமிநாதர் சம்மனசு கூறிய மங்கள வார்த்தை செபத்தை உதாரணங்களுடன் அன்றாட வாழ்வில் காணப்படும் நிகழ்வுகளைக் கொண்டு விளக்கினார்.

பாவிகளையும் மூடநம்பிக்கை கொண்டோரையும் மனம் திருப்பவும், பாவத்தை அழிக்கவும் ஏதுவாக செபமாலையின் மேன்மையை எடுத்துச் சொல்- இப்படி அன்னையும் நமது இறைவனும் சாமிநாதருக்குப் பலமுறை தோன்றிக் கூறியதாக முத் ஆலன் குறிப்பிடுகின்றார்.

சாமிநாதர் தேவ அன்னையின் காட்சியைப் பெற்ற பின் இயேசுவும் அவருக்குக் காட்சியளித்தார். அப்போது இயேசு, சாமிநாதரிடம், “சாமிநாதா, நீ மனிதரின் புகழ்ச்சியைத் தேடாமலும், உன் பலத்தில் செருக்குறாமலும், ஆன்மாக்களின் மீட்புக்காக மிகுந்த தாழ்ச்சியுடன் உழைப்பது குறித்து நான் மகிழ்கிறேன். ஆனால், பல குருக்கள் மனிதர்களின் கனமான பாவங்களை எடுத்து உடனேயே இடித்துப் பேசுகின்றனர். கசப்பு மருந்தை நோயாளிக்குக் கொடுக்கும் முன், அவனுக்கு அதனை ஏற்றுக் கொள்வதற்குரிய மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. குறிப்பாக, செபமாலை செபத்தின்மீது மக்களுக்கு விருப்பத்தைக் குருக்கள் ஏற்படுத்த முயல வேண்டும். செபமாலை செபிக்கத் தொடங்கி, தொடர்ந்து செபித்து வருவார்களானால், இரக்கமுள்ள இறைவனாகிய நான் அவர்கள் கேட்கும் வரத்தை மறுக்க மாட்டேன். ஆகவே, நீ செபமாலையின் மேன்மையை எடுத்துரைக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்என்று கூறினார்.

ஒருமுறை அன்னை சாமிநாதரிடம், “என் அன்பு மகனே, உன் போதனைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று ஆதங்கப்படாதே. நீ மழை பெய்யாத நிலத்தில் விவசாயம் செய்ய முயல்கிறாய். எல்லாம் வல்ல இறைவன் இப்பூமியைப் புதுப்பிக்க திட்டமிட்டபோது முதலில் மோட்சத்திலிருந்து மழையை அனுப்பினார். வானதூதரின் மங்கள வார்த்தைதான் அந்த மழை. அதைக்கொண்டே இறைவன் உலகைப் புதுப்பித்தார். ஆகவே, நீ போதிக்கும்போது, மக்கள் செபமாலை செபம் செபிக்கும்படி தூண்டு. அப்படி நீ செய்தால், உன் வார்த்தைகள் ஆன்மாக்களுக்கு அதிகப்பலனைப் பெற்றுத் தரும்என்று கூறினார்.

அன்னையின் வேண்டுகோளை ஏற்று, உடனே அவர் அதனைச் செயலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மேற்கண்ட நிகழ்வுகள்செபமாலை புதுமைகள்என்ற இத்தாலிய நூலில் காணப்படுகின்றன. புனித சாமிநாதரின் வழிகாட்டுதலின்படி குருக்கள் செபமாலையின் மேன்மையை எடுத்துரைத்து வந்த காலகட்டத்தில், இறைமக்களின் உள்ளங்களில் பக்தியும் ஆன்மிக எழுச்சியும் செழித்து வளர்ந்தது. இதைக் கைவிட ஆரம்பித்த பின்னர்தான், பாவம் உலகைச் சூழ்ந்து நின்று நெருக்கியது.

 

news
சிறப்புக்கட்டுரை
கல்லறை மனிதர்கள்! (வலையும் வாழ்வும் – 28)

அந்தத் தனியார் கல்லறைத் தோட்டத்தில் செங்கல் சூளையில் புதிதாக அறுத்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களைப்போல வரிசையாகக் காணப்பட்டன கல்லறைகள். புதிதாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஒன்றில் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தது தந்தையை இழந்திருந்த அந்தக் குடும்பம்.

அடைமழைக்கிடையில் கேட்கும் பள்ளிவாசல் சத்தம்போல அந்த ஒப்பாரி அழுகைக்கு மத்தியில் எங்கிருந்தோ வந்த சிரிப்புச் சத்தம் அந்தக் குடும்பத்தினரை ஆத்திரமடையச் செய்தது. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அதன் சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ‘எங்கிருந்து சிரிப்புச் சத்தம் வருகிறது?’ என்று கூர்ந்து கவனிக்கும்போது, அங்குக் கல்லறைத் தோட்டத்தின் மூலையில் சில குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

யார் இவர்கள்? இங்கு இவர்களுக்கு என்ன வேலை? ‘அங்க என்ன பண்ணுறீங்க? ஏன் இவ்வளவு சத்தம்? இரண்டு பேரும் இங்க வாங்கஎன்ற தன் தாயின் குரல் கேட்டு இரண்டு குழந்தைகளும் தாயிடம் ஓடிவந்தன.

அந்தக் கல்லறைத் தோட்டத்தில் குடும்பம் ஒன்று கல்லறைப் பராமரிப்புப் பணிகளுக்காகப் பல ஆண்டுகளாக அங்கேயே தங்கவைக்கப்பட்டிருந்தது. கல்லறைத் தோட்டத்தைச் சுத்தம் செய்வது, அந்நியர்கள் உள்ளே வராமல் பார்ப்பது போன்ற பணிகளைச் செய்து வந்தனர்.

அங்கு வாழ்ந்து வந்த ரவி மற்றும் கலா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் ரூபா, இளையவன் ரூபன். அங்கு ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு அடக்கங்கள் நடக்கின்றன. அழுகைகளும் கண்ணீரும் அங்கு அன்றாடக்காட்சிகள். யாருடைய துயரமும் இந்தக் குடும்பத்தை எப்போதும் துக்கப்படுத்தியதே இல்லை. யாருடைய கண்ணீரும் இவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. அங்கு யாருக்கும் இறப்பு பற்றிய அச்சம் இல்லை. இரவு நேரத்தில் ஆவி குறித்த பயமும் இல்லை.

இப்படியே நாள்கள் பல ஓடின. ஒன்றுமே விளையாத அந்தக் கல்லறைத் தோட்டத்தில் வாழ்க்கையை விளைவித்துக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

ஐயோ! யாராவது வாங்களேன்...’ ரவி மற்றும் கலாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கல்லறைக் காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே வந்து பார்த்தனர். இளைய மகன் ரூபன் இறந்துகிடந்தான். இறப்புக்கான காரணம் தெரியவில்லை. ‘சாயங்காலம் ஐந்து மணிவரை எம் புள்ள நல்லாதான் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டிருந்திச்சு. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான்என்று ரவி விவரம் கேட்க வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, ‘என் பிள்ள எனக்கு வேணும்என்று சொல்லி, தலையிலும் நெஞ்சிலும் பலமுறை கைகளால் அடித்துக்கொண்டு தரையில் விழுந்தாள் கலா.

இறப்புக்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. சிலர்ஆவி ஏதாவது அடிச்சிருக்கும்என்றார்கள். வேறுசிலர்அந்தக் குடும்பத்துல ஒரு சாவு விழாதானு இருந்தேன்; இப்போதாவது அந்தக் குடும்பத்திற்குச் சாவின் வலி புரியட்டும்என்றார் ஒருவர்.

இத்தனை ஆண்டுகள் அந்தக் கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்திருந்தாலும் ரூபனின் உடலை அந்தக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய அந்தஉறவுமுறையார்கல்லறைத் தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

ரூபனின் மறைவிற்குப் பிறகும் வேறு வழியில்லாமல் ரவி-கலா குடும்பம் அந்தக் கல்லறைத் தோட்டத்தில்தான் வசித்து வந்தது. இப்போதெல்லாம் அங்கு யார் இறந்து கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டாலும், அவர்களின் கண்களில் ஒரு சிறு துளி கண்ணீரேனும் வராமல் இருந்த தில்லை. அந்தக் கண்ணீருக்கான காரணம் கடைசிவரை யாருக்கும் புரியவேயில்லை.

புரியாத புதிர்கள் இணைய உலகில் பல உள்ளன. ‘இணைய உலகின் அரசன்என்று அழைக்கக் கூடியகூகுள்தேடுபொறியை (Google Search Engine) ஓர் ஆண்டில் மட்டும் ஐந்து டிரில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையே கூகுள் தேடுபொறியின் மதிப்பைக் கூட்டுவதோடு, இணைய உலகின் ஆட்சிப்பீடத்தில் தொடர்ந்து நீடிக்கச்செய்கிறது. கூகுள் தேடுபொறியின் முதல் பக்கத்தில் எந்தெந்த இணையதளங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றனவோ அந்தந்த இணையதளங்கள் பிரபலமடைகின்றன. இதனால் கூகுளின் தயவிற்காய் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போடுவதோடு நில்லாமல், முதல் பக்க வரிசையில் தங்களின் இணையதளங்களைக் கொண்டு வருவதற்குடிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) நிறுவனங்களுக்குப் பணத்தை வாரி வழங்குகின்றன. ஆனால், இத்தகைய அணுகு முறைகளுக்கெல்லாம் கூகுள் அண்மையில் அறிமுகம் செய்தசெயற்கை நுண்ணறிவு முறை (AI Mode) உலை வைத்துவிட்டது என்றே கூறவேண்டும். ‘Pew Research Centerஎன்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தேடும் முறை 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு வரை இணையதளப் பயனர்களை இழந்திருக்கின்றன என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொருவரும் கல்விக்காக, மருத்துவத்திற்காக, தரவுகளுக்காக, பொழுதுபோக்கிற்காக, இன்னும் பல்வேறு தேவைகளுக்காக இணைய தளங்களின் உரலியை அதாவது இணையதள முகவரியைச் (URL – Unique Resource Locatorசொடுக்கி (click) பயன்படுத்துகின்றனர். ஆனால், இப்போதெல்லாம் பலரும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களையே தேடுதலுக்குப் பயன்படுத்துவதால் சொடுக்கிப் பயன்படுத்தும் முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்றே சொல்லலாம்.

செயற்கை நுண்ணறிவுதேடல் பொறிஇணையத்திலிருக்கின்ற பலருடைய பல்வேறுபட்ட தரவுகளைத் தேடி தன் பாணியில் தருகிறது. ஆனால், எந்த இணையப் பக்கங்களிலிருந்து அல்லது யாருடைய கருத்தை நமக்குத் தருகிறது என்பதை அது பல நேரங்களில் குறிப்பிடுவதில்லை. இதனால், கருத்துருவாக்கத்திற்குச் சொந்தக்காரர்களும், அந்தக் கருத்தைப் பதிவு செய்த இணையதளப் பக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்ற சூழல் உருவாகுகின்றது. இத்தகைய நிலை இணைய உலகில் பெரும் விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

கூகுள் நிறுவனம் இந்த ஆய்வின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்திருக்கிறது. உண்மை எதுவாக இருந்தாலும், தற்போதைய இணையச் சூழலைக் கூர்ந்துநோக்கும்போது பெரும்பாலான இணையதளங்கள் இருளுக்குத் தள்ளப்படுவது உறுதி. இணையதளங்களின் அழிவிற்குக் காரணம், நாம் தவறான லிங்கைக் கிளிக் செய்து விட்டோம் என்பதால் அல்ல; மாறாக, .. யின் வளர்ச்சியினால் கிளிக் செய்வதையே நிறுத்தி விட்டோம் என்பதாலேயே!

news
சிறப்புக்கட்டுரை
ஓசோன் படலம் உயிர்காக்கும் கவசம்! (செப்டம்பர் 16: அனைத்துலக ஓசோன் தினம்)

ஓசோன் என்பது ஒரு கிரேக்கச் சொல். இதற்குநாற்றம் கொண்டதுஎன்பது பொருள். ஓசோன் படலத்தை பிரான்சு நாட்டைச் சார்ந்த இயற்பியலாளர்கள் சார்லஸ் ஃபாப்ரி மற்றும் ஹென்றி புயிசன் என்பவர்கள் 1913-ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். ஓசோனை அளவிடப் பயன்படுத்தும் கருவியின் பெயர்ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர்(Spectro photometer). இதைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து வானியல் ஆய்வாளர் டோப்சன் என்பவராவார்.

ஓசோன் படலம் படை மண்டலத்தில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 15-35 கி.மீ. தூரத்தில் பூமியை இளம் நீலநிற குடைபோல் அல்லது ஒரு வலைபோல் சூழ்ந்து நின்று காப்பாற்றுகிறது. எனவேதான், .நா. சபை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் நாளை அகில உலக ஓசோன் படல நாளாகக் கொண்டாடுகிறது.

ஓசோன் படலம் வளிமண்டலத்திலுள்ள படை மண்டலத்தில் (Stratosphere) உருவாகிறது. படை மண்டலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 10-50 கி.மீ. தூரத்திலுள்ளது. ஓசோன் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் (O3) சேர்ந்த கலவை ஆகும். இது கதிரவனின் ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களைத் (UV) தடுத்து நிறுத்தி, பூமியில் உள்ள உயிரினங்கள் நோயின்றி வாழத் துணைபுரிகிறது.

ஓசோன் ஓட்டை என்றால் என்ன?

உண்மையில் ஓசோன் படலத்தில் ஓட்டையோ அல்லது துளையோ ஏற்படுவது இல்லை. ஓசோன் படலத்தின் தடிமன் குறைந்து மெலிந்து போவதைத்தான்ஓசோன் ஓட்டைஎன்று அழைக்கிறார்கள். குளோரோ ஃப்ளோரோ கார்பன் (CFC) வளிமண்டலத்திலுள்ள படை மண்டலத்தைச் சென்றடைகிறது. இது அங்கேயுள்ள புற ஊதாக்கதிர்களால் தாக்கப்படுகிறது. இதனால் மிக அதிகமாகக் குளோரின் வாயுவும், வேறு ஒரு சில வாயுக்களும் உற்பத்தியாகின்றன. இந்தக் குளோரின் வாயு ஓசோன் படலத்தைத் தாக்குவதால், ஓசோன் படலம் தனது இயல்பான தடிமனை இழந்து மெலிந்துவிடுகிறது. இதனைத்தான் ஓசோன் ஓட்டை அல்லது துளை (Ozone depletion) என்கிறோம். இவ்வாறு மெலிந்து போவதால் ஓசோன் படலத்தால் புற ஊதாக்கதிர்களை முழுமையாகத் தடுக்கவோ அல்லது உறிஞ்சவோ முடிவதில்லை. புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைந்து உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் பல தீமைகளை விளைவிக்கின்றன. இதில் ஒரு விந்தை என்னவென்றால், குளோரோ ஃப்ளோரோ கார்பனை மரங்களும் தாவரங்களும் சுவாசிப்பதில்லை; மாறாக, மனிதர்கள் சுவாசிக்கின்றார்கள்; விலங்குகளும் சுவாசிக்கின்றன. மேலும், இந்த வாயு தோலில் உள்ள துளைகள் வழியாகவும் உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் நரம்பு மண்டலப் பாதிப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.

புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் தீமைகள்

தோல் புற்றுநோய், தோல் வறட்சி, தோல் சுருக்கம், வியர்க்குரு ஏற்படுதல், கண்பார்வை மங்குதல், கண் எரிச்சல், கண்ணில் புரை ஏறுதல், கண்ணில் நீர் வறட்சி போன்றவை ஏற்படுகின்றன. புற ஊதாக்கதிர்களின் தாக்குதலால் கடல்வாழ் உயிரினங்கள், கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. பூமியில் வாழும் விலங்குகள், மரங்கள், செடி-கொடிகள் அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது. இத்தனை தீமைகளையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஓசோனில் ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்ய வேண்டும்.

மாண்ட்ரீல் ஒப்பந்தம்

குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள், ஆழ் உறைப்பெட்டிகள், ஹேர் ஸ்பிரே கேன்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளிலிருந்து வெளியாகும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் என்ற வாயுதான் ஓசோன் படலத்தை வலுவிழக்கச் செய்கின்றன என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். ஆகவே, ஓசோன் படலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்களை நீக்குவதற்கான அனைத்துலக உடன்படிக்கை 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் ஆஸ்திரேலியாவிலுள்ள மாண்ட்ரீல் நகரில் ஏற்படுத்தப்பட்டது. எனவேதான், செப்டம்பர் 16-ஆம் நாள் அனைத்துலக ஓசோன் படல நாளாக நினைவுகூரப்படுகிறது. இந்த உடன்படிக்கையால் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உற்பத்தி 15 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பம் கொண்ட குளர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. எனினும், ஏற்கெனவே ஓசோன் படலத்தில் தங்கியிருக்கும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் முற்றிலும் அகற்றப்பட 2066-ஆம் ஆண்டுவரை ஆகலாம். ஆதலால், புதிய விடியல் வரும்வரை காத்திருப் போம்! இனிமேலும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உற்பத்தி ஆகாமலிருக்க விழித்திருப்போம்!

news
சிறப்புக்கட்டுரை
தமிழ்நாடு 2026 தேர்தல் களம்

2026 - தமிழ்நாடு தேர்தல் களம் எப்படி இருக்க வேண்டும்? சமூக நீதியா? மனு நீதியா? சமத்துவமா? சனாதனமா? மதச்சார்பின்மையா? மதவெறியா? வெறுப்பு அரசியலா? சகிப்பு அரசியலா? மக்களா? மதமா? எப்படி இருக்கவேண்டும்?

மையக்கரு மறைந்துபோனது. தமிழ்நாடு அரசியல் களம் மக்களை மறந்து, ‘யார் முதல்வர்?’ என்ற வாக்கு அரசியல், முதல்வர் பதவி எனும் வெறி அரசியல் நடக்கிறது. ஒரு புதிய கட்சிமக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்என முழக்கமிடுகிறது. காமெடி நடிகர் கவுண்டமணி கூறுவதுபோலஅந்தப் பெட்ரோமாக்ஸ் லைட்டைமட்டுமே கேட்கிறது. அந்த நான்காவது அணி ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என ஆடித் தள்ளுபடி ஆஃபர் கொடுத்தும், லெட்டர்பேடு கட்சிகள்கூட அவர்களை நோக்கி நகரவில்லை. தோற்றுத் தோற்றுப் பயிற்சி எடுக்கும் மூன்றாவது அணியின் முதல்வர் கனவு வேட்பாளரும் பேசிப் பேசியே மக்களை ஈர்க்கிறார். நேருக்கு நேர் போட்டியிடும் முதல் இரண்டு அணிகளை மட்டுமே  இங்கு நாம் பார்ப்போம். ஆட்டத்தில் இல்லாதவர்கள் குறித்து நமக்கு என்ன கவலை?

ஆளும் தி.மு.. முழுவதும் மக்கள் ஆதரவைத் தக்க வைத்துள்ளதா? இல்லை! 2021 - தி.மு.. தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றைச் செய்யவில்லை என்பதே உண்மை. தமிழ்நாடு அரசு அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகம் என்பதால் அவர்கள் அரசுக்குக் கெட்ட பெயர் வர என்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்து விட்டார்கள். முதல்வர் இதை உணரும்போது தலைக்கு மேல்  வெள்ளம் போய்விட்டது. ‘சாட்டையைச் சுழற்றுவாரா முதல்வர்?’ எனநம் வாழ்வுஇதழில் அட்டைப்படக் கட்டுரையும் வெளியிட்டிருந்தோம்.

உங்களுடன் ஸ்டாலின்என அரசுத் துறைகள் மக்கள் வாழ்விடங்களில் முகாமிட்டு, ஆட்சியின் இறுதிநேர  மக்கள் நலப்பணிகள், அடிப்படைத் தேவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திட்டப் பணிகளை மாவட்டந்தோறும் முதல்வரே நேரில் சென்று விரைவுபடுத்துகிறார். இடையே அப்பகுதியில்ஓரணியில் தமிழ்நாடுஎன மக்களைச் சந்தித்துரோடு ஷோநடத்துகிறார். ஆளும் கட்சி என்பதால் உள்கட்சி  பூசல்கள் அதிகம்; அதைக் கட்டுப்படுத்த தி.மு.. நிர்வாகிகளை முகத்திற்கு முகம் பார்க்கும் பணியும் தேர்தல் பணியில் உள்ளடக்கம்.

ஓராண்டுக்கு முன்பே மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வாக்குச் சாவடி முகவர்கள் என ஆளுங்கட்சி  தேர்தலுக்குப் பரபரப்பாகி விட்டது. சில முக்கிய நிர்வாகிகளுக்குநீங்கள் தான் தொகுதி வேட்பாளர், தொகுதியில் பணியைப் பாருங்கள்என அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளன. அவ்வேட்பாளர்கள் இப்போதே களத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில்இந்தியாகூட்டணி கட்டமைப்பாக இருக்க முதல்வர் ஸ்டாலின் பல சமரசங்களுக்கு உட்படுகிறார்; கூட்டணி கட்சிகளின் குரல்களுக்குக் காதுகொடுக்கிறார். முதல்வர் ஸ்டாலினை  ஜூலை கடைசி வாரம், ஆகஸ்டு முதல் வாரங்களில் சந்தித்த தே.மு.தி.. பிரேமலதா, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தொலைப்பேசியில் பேசிய மருத்துவர் இராமதாஸ் என வரிசை நீள்கிறது. ஸ்டாலின் .தி.மு., பா.., .வெ.. தவிர்த்த அனைவரோடும் இணக்கம் காட்டுகிறார். 2026 - சட்டசபை சீட்டுகளோடு, 2026 - மாநிலங்களவைச் சீட்டுகளையும் பகிர்ந்து அளித்து, புதிய கட்சிகளையும் அரவணைப்பார் என்பது நடப்பு அரசியல்.

கிராமங்களில்அவர் பெரிய தலைக்கட்டுஎன அசைக்கமுடியாத பெரும் மனிதர்களைச் சிலாகிப்பார்கள். தமிழ்நாடு அரசியலில் ஸ்டாலின் பெரிய தலைக்கட்டு என்பது தொடர்ந்து உறுதியாகிறது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு நேர்காணலில் கூறுகிறார்: “ஆளுங்கட்சியின் அதிகாரப் பலம், பணபலத்தை எதிர்த்து ஒரு வலுவான கூட்டணி அமைப்பது பெரும் சவாலாக உள்ளது.” உண்மை நிலையும் அவ்வாறே உள்ளது. .தி.மு..-வை  நோக்கி லெட்டர் பேடு கட்சிகள் கூட நகரவில்லை.

எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரை இதுவாழ்வா? சாவா?’ என்ற நிலைத் தேர்தல். வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. பா...-வைப் பொறுத்தவரை 2026-இல் தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி வெல்லாவிடிலும் சரி, .தி.மு.. தோற்கவேண்டும். தொடர்ந்து தோற்றால் .தி.மு.. தலைவர்களை ஒவ்வொருவராக இழுத்து .தி.மு..வை அழிக்கவேண்டும். பா... கட்சி .தி. மு..வுக்கு மாற்றாக, தமிழ்நாட்டில் தாமரையாக மலர வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம்.

.தி.மு.. கட்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களாலும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களாலும் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தது. அது மேற்கு மண்டலக் கட்சியாகவும், தன் சாதிக் கட்சியாகவும் மாற்றியதே பத்து தோல்வி பழனிசாமியின் ஒரே வாழ்நாள் சாதனை. எடப்பாடி பழனிசாமி புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணம் எனப் பேருந்தில் மக்கள் சந்திப்புப் பயணம் நடத்துகிறார். 2 கோடி மதிப்புள்ள அந்த உல்லாசப் பேருந்தைச்சுந்தரா டிராவல்ஸ்எனக் கிண்டலடிக்கும் தி.மு..வின் விமர்சனம் தவறானது; கண்டிக்கத்தக்கது.

எடப்பாடியாரின் பிரச்சாரத்தில் தடித்த வார்த்தைகள், முதல்வரை ஒருமையில் பேசுவது, ஆதாரமற்றுப் பேசுவது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது எனக் களமே அதகளமானது. தினமலர், தந்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றி, சாணக்யா சேனல் வழி, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்யும் ரங்க ராஜ் பாண்டேவெகுமக்கள் இரசிக்கக்கூடியதாக உள்ளதுஎன்கிறார். அதில் சில சான்றுகளைப் பார்ப்போம்.

எடப்பாடியாரின் முதல்கட்டப் பிரச்சாரம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது. அங்குப் பேசுகிறார்: “பொதுவுடைமைக் கட்சிகள் அழிந்து விட்டன.” பிரச்சாரத்தின் நடுவே சிதம்பரத்தில் பேசிய பழனிசாமி, “பொதுவுடைமைக் கட்சிகளை இரத்தினக் கம்பளம் விரித்துக் கூட்டணிக்கு அழைக்கிறேன்என்றார். அடிப்படை அரசியல் அறனுடைய பொதுவுடமைக் கட்சிகள் மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில், எங்களுக்கு வேலை இல்லை என எடப்பாடியாரின் அழைப்பை ஏற்க மறுத்தன.

திருவாரூரில் பேசிய எடப்பாடிபொதுவுடைமைக் கட்சிகள் தி.மு..விடம் காசு வாங்கிக் கொண்டு பேசுகிறார்கள்என, தான் சுட்ட தோசையைத் தானே கருகத் திருப்பிப் போட்டார். பா...வைக் கூட்டணிக்கு அழைத்தார். அன்புமணி இராமதாஸ் அவர்கள்ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றால் கூட்டணி பேசலாம்என்றார். எடப்பாடியார், “ஏங்க, எப்ப பா...வைக் கூட்டணிக்குக் கூப்பிட்டேன்?” என்று  ஜகா வாங்கினார். எடப்பாடியாரிடமும், தன் தந்தை இராமதாஸ் அவர்களிடமும் கோபித்துக்கொண்டு, அன்புமணி இராமதாஸ், சௌமியா மேடமைக் கூட்டிக்கொண்டுஉரிமை மீட்க, தலைமுறை காக்க...’ சுற்றுப்பயணம் புறப்பட்டுவிட்டார்.

ஒரு பிரமாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும்என்றார் எடப்பாடி பழனிசாமி. “.வெ. .வா?” என்றால், “பொறுத்துப் பாருங்கள்என்றார். அதற்குத் .வெ..வின் தேர்தல் பிரச்சார மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ச்சுனா அழகாய் பதில் கூறினார்: “.தி.மு.. தொண்டர்கள் .வெ..வுக்கு வந்துவிட்டார்கள்; ஆகவே, கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை.” இப்படியே எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டதால் தட்ட இடமின்றிப் பயணிக்கும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். பா... எனும் கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது.

2024 - மக்களவைத் தேர்தலில் இருந்த எஸ்.டி.பி.. மற்றும் தே.மு.தி.. கட்சிகள் தற்போது .தி.மு..வுடன் கூட்டணியில்  இல்லை என்கிறார்கள். தே.மு.தி. . பிரேமலதா, ‘உள்ளம் தேடி, இல்லம் நாடிஎன்ற பிரச்சாரத்தில் தேர்தல் களம் காண்கிறார். ‘தே.மு.தி.. கூட்டணி பற்றி சனவரி 2026-இல் அறிவிப்போம்எனக் கூறி தன் பேர வலிமையை அதிகப்படுத்துகிறார்.

2026-ஆம் ஆண்டு தொடங்கியபின் புதிய கூட்டணிகள் உருவாகும். திரைமறைவு அரசியல்கள் வெளிச்சமாகும். சாதிவாரி, மதவாரி, மொழிவாரி வாக்குகளைக் குறிவைத்த வாக்கு அரசியலில் மக்களுக்கான அரசியலை அடையாளம் காண்பதே சிறுபான்மை மக்களின் அதிகாரமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
விண்வெளி (Atmosphere)

விண்வெளிக் காலம் (Space Age)

விண்வெளிக் காலம் அதன் கால்பதிப்பை ஏற்படுத்தி, மெல்ல உறுதி செய்து வருகிறதை கடந்த 75 ஆண்டுகளின் நிகழ்வுகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பூமியிலிருந்து செயற்கைக்கோள்கள் பல காரணங்களுக்காகச் செலுத்தப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் செயலிலிருப்பதில்லை. சில அதன் ஆயுள் காலத்தைக் கடந்தவையாகவும், வேறு சில காரணங்களினால் முழுமையாகவோ, உடைப்பட்டோ, உதிரிப்பாகங்களாகவோ ஒரு வளையம் போன்று பூமியைச் சுற்றிப் படர்ந்து வருகிறது; நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.

இது பூமியின் காலநிலை, ஓசோன் படலம் மற்றும் பூமியில் வாழ்வதற்கான சூழல் என்பவைகளுக்கு ஏற்புடைய ஸ்டராடோஸ்பியரைப் பாதிப்படையச் செய்கிறது. இப்போது விண்வெளிக்குச் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள், விண்வெளி ஊர்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காற்றில் இயல்பாக ஏரோசோல் என்ற மாசு திடமாகவோ அல்லது திரவமாகவோ  கலந்திருக்கிறது. பூமியிலிருந்து 10 கி.மீ. உயரத்தில் பறந்த ஒரு விமானத்தின் முன்பகுதியை ஆராய்ந்து பார்த்ததில் கணிசமான அளவு இப்படலம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை மேலும் ஆராய்ந்தபோது, இவை விண்வெளி ஊர்திகளின் உலோகம் என்றும் தெரியவந்தது.

ஸ்டராடோஸ்பியரில், அதாவது முதல் மண்டலத்தில் எப்போதாவதுதான் விமானங்கள் செல்ல நேரிடும். இந்த உலோக ஊடுருவல் இதில் இவ்வளவு என்றால், இன்னும் மேலே உள்ள அடுக்குகளின் நிலையைப் பற்றி விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனர். 2023-ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 2900 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. இதனையும் சேர்த்து 14,000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவருகின்றன. இவைகளில் 80% செய்தித் தொடர்புக்கோள்கள் என்றும், இவைகளில் பெரும்பாலானவை வணிகம் சம்பந்தப்பட்ட கோள்கள் என்றும் கூறப்படுகிறது.

மற்றொரு செய்தி என்னவென்றால், 3,500 கோள்கள் செயலிழந்தவைகளாகவும், ஏற்கெனவே நெருக்கமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் கோள்களோடு மோதல், தானாக வெடித்தல், காலாவதியானவை என்று 120 மில்லியன் உடைச்சல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கான தற்காப்பு வேண்டுமென்றால், கோள்கள் பின்னணியை நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்கிறது .நா. சபை. பூமிக்கு அருகில் (Low Earth Orbit - LEO) உள்ள கீழ் சுற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் (85%) செயலிழந்த செயற்கைக்கோள்கள் இருக்கின்றன.

ஏறக்குறைய 22,000 மைல்கள் பூமிக்கு மேலே (Geosynchronous Orbit) உள்ள சுற்றில் செய்தித்தொடர்பு, காலநிலை இராணுவத் (Missile Defence) தேவைகளுக்குச் சில செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன என்றும் கூறப்படுகிறது. செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அவைகளின் சுற்றும், இவைகளுக்கிடையே ஏற்படும் மோதல்களும் விண்வெளிக் கழிவுகளை உருவாக்கி வருகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில், 2030-க்குள் 50,000 செயற்கைக்கோள்கள் விண்வெளிச் சுற்றில் சேர்ந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டல குப்பைகளைச் சேர்ப்பது யார்? (Space Debris)

பூமியைச் சுற்றி ஆயிரக்கணக்கில் செயற்கைக்கோள்கள் வலம் வந்துகொண்டிருப்பதாலும், உலகின் பல நாடுகள் தொடர்ந்து செயற்கைக்கோள்களைச் செலுத்துவதாலும் நாளுக்குநாள் இவைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. பொதுவாக, செயற்கைக்கோள்களில் சில செயலிழந்தவைகளாக உள்ளன (Malfunctioning). சில கொடிய காரணங்களுக்கான (nefarious) பின்னணி கொண்டும் உள்ளன. இவைகளினால் மற்ற கோள்களுக்குத் தீங்கு உண்டாவது மட்டுமன்றி, ஒன்றோடொன்று மோதி அவைகளின் உடைப்புகள் வானில் சுற்றும் நிலையும் ஏற்படுகிறது. சில வழிதப்பி பூமியின் ஈர்ப்புச் சுற்றில் வருவது இயல்பு.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இன்றளவில் 40,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் உதிரிகள் (4” மேல்), கட்டுப்பாடில்லாமல் விண்வெளியில் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது. சில விண்ணில் எரிந்து பூமியில் விழும்போது ஓசோன் மண்டலத்தைத் தாக்கும் அலுமினியம் ஆக்சைட் என்ற இரசாயனப் பொருளை உருவாக்குகிறது.

15 ஆண்டுகளுக்குமுன் சில ஆயிரம் செயற்கைக்கோள்கள் என்பதாக இருந்த எண்ணிக்கை, இன்று பலமடங்கு அதிகரித்துவிட்டதாக ஓர் ஆய்வு கூறுகிறது. ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்கள் இன்று இணையதளத் தேவைக்குச் செலுத்தப்பட்டு வருவதால் இதன் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இவைகளின் ஆயுள் காலம் முடிந்தபின் செயலிழந்துதானே சுற்றி வருவதைத் தவிர வேறு வழியில்லை.

எவ்வாறு கார்பன் வெளியேற்றம் இன்று உலகிற்குத் தீங்கு விளைவிக்கும் சக்தியாக மாறியிருக்கிறதோ, அப்படி வருங்காலத்தில் செயற்கைக்கோள்களின் உதிரிப்பாகங்கள் பூமிக்கு ஒரு தீய சக்தியாக மாறிட வாய்ப்பிருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் ..-யின் பங்கு

.. மனித அறிவாற்றலைக் கற்கும் இயந்திரம் (Machine Learning - ML) வழியாகத் தரவுகளைத் தன்னிச்சையாக, சுயமாக ஆய்ந்து நகலி செய்யும் திறன்பெற்றது. இயந்திரங்கள் தானாகப் பயின்றுகொள்ள அல்கோரிதம் வழிமுறை மூலம் கற்கும் இயந்திரம் பயிற்சி அளிக்கிறது. அல்கோரிதம் ஏராளமானத் தரவுகளை உள்வாங்கி, மேம்படுத்திக் கொள்கிறது.

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டு நரில்லா மோட்டார் முதல் பூமியைச் சுற்றித் தானாக இயங்கிக்கொள்ளும் வானூர்தி வரை .. செயலாற்றுகிறது. துல்லியமாக ஏற்புடையதை மட்டும் இலக்காகக் கொண்டு செயலாற்றுவதால் நேரத்தையும் செலவீனத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. இத்தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் .. உதவியாக உள்ளது. அது மட்டுமன்றி, வானூர்திகள் தானாக இயங்க விண்பாதையில் தடைகளைத் தவிர்த்துத் தன்னிச்சையாகப் பயணிப்பது என்ற இயக்கங்களிலும் பங்காற்றுகிறது.

ஏவுகணை தொழில்நுட்பத்தில் குறிப்பாக, ஏவுகணை எரிபொருள் நிரப்பும் முறையிலும் .. பயன்பாட்டிலுள்ளது. இப்போதிருக்கும் நெருக்கமான செயற்கைக்கோள்கள் வட்டச்சுற்றில் இன்னும் பல கோள்களை அமர்த்த கையாளும் திறன் மற்றும் இதுவரை கண்டறியப்படாத கிரகங்களை அடையாளப்படுத்துதல், விண்வெளி மண்டலங்களைப் படம் (Galaxy mapping) பிடித்தல் போன்ற பிரிவுகளிலும் ..யின் செயலாற்றல் வியக்கும்படியாக உள்ளது.

(தொடரும்....)