தமிழ்நாட்டுத் தேர்தல் களப் பெரும்பான்மைக் கருத்துக்கணிப்புகளில் ஆளும் தி.மு.க. அரசு முந்துகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த அந்தக் கருத்துக்கணிப்புகளே தேர்தல் களத்தை வெப்பமாக்கி உள்ளன.
தி.மு.க. ‘மதச்சார்பற்ற
கூட்டணி’ எனத்
தன்னை அடையாளப்படுத்துகிறது. தி.மு.க.
கூட்டணி 2017 முதல்
14 தொடர் வெற்றிகளில் தலை நிமிர்கிறது. எதிர் உள்ள 16 கட்சிகளைக் கொண்ட தேசியச் சனநாயகக் கூட்டணி
(என்.டி.ஏ.) அ.தி.மு.க.
தலைமையில் உள்ளது. ஆனால், என்.டி.ஏ. கூட்டணி
முடிவுகளை அமித்ஷா எடுக்கிறார். அங்கேயே அது முரண்பட்டு நிற்கிறது. சரி, வாருங்கள்... தமிழ்நாட்டின் இரு பெரும் அணிகளின் நிறை-குறைகளை நோக்குவோம்.
தி.மு.க. கூட்டணிக்
கட்சிகள் அனைத்துமே சமத்துவம், சமதர்மம், சமூகநீதி பேசும் இடதுசாரிக் கட்சிகள். தி.மு.க.
கூட்டணி சிறுபான்மை மக்கள் வாக்கு, தலித் மக்கள் வாக்கு, மகளிர் வாக்கு எனப் பெரும் வாக்கு வங்கியைக் கொண்டது. தி.மு.க.
நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களிடையே அதிக மதிப்பெண் பெறுகிறது. பெண்களைக் குறிவைத்த மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் என வெளுத்து வாங்குகிறது.
‘விடியா அரசு’ என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விடியலில் அதிர்ச்சி தந்தது. பா.ச.க.
மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தனது அடியாள்கள் வழி இடைக்காலத் தடை வாங்க முயற்சி செய்தது. இதை மோப்பம் பிடித்த தமிழ்நாடு அரசு மத்திய உளவுத்துறையின்
கண்களில் மண் தூவி, மகளிர் உதவி தொகை ரூ. 5000 வழங்கியது.
இளைஞர்களுக்குத்
தமிழ்ப் புதல்வன், ‘நான் முதல்வன்’
என்ற திட்டங்களும் தி.மு.க.வைத் தேர்தல் களத்தில் முன் தள்ளுகிறது. தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் உலக அளவில் கவனம் பெற்றது. இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசு தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைத் தொடர்ந்து பிடிக்கிறது. “எங்களுக்குப் போட்டி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் இல்லை; வளர்ந்த அயல் நாடுகள்” என நெஞ்சு நிமிர்த்துகிறது
தமிழ்நாடு.
தி.மு.க. வலுவான
கட்டமைப்பும் அடித்தளமும் கொண்ட கட்சி என்பதால், தி.மு.க.வின் நுண்நிலை தேர்தல் பணிகள் வியப்பு தருபவை. ஒரு வாக்குச் சாவடிக்கு 350 ஓட்டுகளைப் பெறுவது என்ற இலக்கில் தேர்தல் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடக்கிறது. ஒரு வாக்குச்சாவடிக்கு பத்து தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.
முதல்வரின் தேர்தல் பிரச்சாரம், நலத் திட்டங்கள் வழங்குதல் எனக் களத்தில் மேலும் பரபரப்பு கூட்டப்படுகிறது. இடையே தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை தாங்கவேண்டும் என்ற குரல்கள், அவரது தேர்தல் கால உருவத்தை
(இமேஜ்) உயர்த்துகிறது.
மாநில
சுயாட்சி என்ற தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கத்தை முதல்வர் ஓங்கி ஒலிக்கிறார். மாநில சுயாட்சி முழக்கம் தேசிய அளவிலும், தமிழ்நாடு தேர்தல் களத்திலும் கவனம் பெறுகிறது. நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற குரல், உலகத் தமிழர் மத்தியில் கவனம் பெறுகிறது. மேலும், ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு கேட்ட நிதியைத் தருவதில்லை; மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடக்கிறது எனப் பா.ச.க.
எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு
உள்ளது.
‘தி.மு.க.
மீது குறைகள் இல்லையா?’ என்ற முணுமுணுப்புகள் கேட்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. உட்கட்சிப் பூசல்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற செயல், அடிப்படை மக்கள் பணிகளைச் செய்யாத செயலற்றத்தன்மை போன்றவை மக்கள் மனத்தில் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. தி.மு.க.
ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரிகிறது என்பது தி.மு.க.வுக்கு உள்ள சாதகமாகும்.
அ.தி.மு.க.-வுடனான பா.ச.க.
கூட்டணியை ‘எலி-தவளை கூட்டணி’ என்கிறார் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். இது காரிய கூட்டணி கொள்பவர்கள் என்பதும் உண்மையே. 2021-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, சிறு சேதாரம் இருந்தாலும் அப்படியே உள்ளது. இக்கூட்டணி ஆளும் தி.மு.க.
அரசு மீதான வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறது. அதற்கான முழு பிரச்சார வலிமையையும் பயன்படுத்தும். அதில் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதா ராமன் ஆகியோர் வருவார்கள்.
கடந்த
காலங்களில் 41 முறை மோடி பிரச்சாரத்திற்கு வந்தும் பயன் எதுவும் இல்லை.
“நூறுமுறை மோடி வந்தாலும் எதுவும் நடக்காது”
என்கிறார் தொல். திருமாவளவன். அது உண்மையே! பா.ச.க.வோடு அ.தி.மு.க.வும் வெறுப்பு
பிரச்சாரத்தைத் தேர்தல் களத்தில் கட்டவிழ்த்து விடும். எப்படியாவது முதல்வராகி விடவேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு, நடுநிலை வாக்காளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுகிறது. அதுவே அ.தி.மு.க. கூட்டணியின்
தேர்தல் பிரச்சாரமாக இருக்கிறது. அதற்கேற்பத் தொடர் பிரச்சாரம் நடக்கிறது. தமிழ்நாட்டில் வாரிசு அரசியல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை; போதைப்பொருள் புழக்கம்; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் காரணங்களை அடுக்குகின்றனர். தி.மு.க.வோ பா.ச.க. ஆளும் மாநிலங்களைவிட
குறைவுதான் எனப் பதிலடி தருகிறது.
தி.மு.க. தலைவர்,
“தி.மு.க.வைத்
தவிர யார் ஆட்சி அமைத்தாலும், அது டெல்லி ஆட்சியாக இருக்கும்”
என எச்சரிக்கை தருகிறார். அதற்குப் பதிலடி தந்த அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார்: “டெல்லி ஆட்சி தானே, இருந்துட்டுப் போகட்டும்.” அடிமைகளிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? இதே மேனாள் அமைச்சர் “மோடிக்காக எங்களுக்கு வாக்களிக்காம விடாதிங்க”
எனக் கெஞ்சுகிறார்.
அ.தி.மு.க.
மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய வார்த்தைகள் உண்மையானவை: “நான் சென்னை - இராயபுரம் பகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்
தோற்றுப்போனேன்.” இதுதான் தேர்தல் களத்தில் பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்தவர்களின் நிலையாகும்.
எடப்பாடி
பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாத ஒன்றிய அரசின் வரவு-செலவு அறிக்கையை வரவேற்றது மக்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டுப் பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வராத, நிதி ஒதுக்காத பா.ச.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி என்பது மக்கள்
விரோதக் கூட்டணி என மக்களிடையே பேசப்படுகிறது.
இந்திய மக்களைப் பாதிக்கும் உழவர் மசோதா, குடியுரிமை மசோதா, முத்தலாக் எனப் பா.ச.க.வின் அனைத்து அதிகாரச் சட்டங்களுக்கும் அ.தி.மு.க. முட்டுக் கொடுத்தது.
நூறு நாள் வேலைத்திட்டம் மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து “காந்தியோ, இராமரோ, பெயரா முக்கியம்?” என்கிறார் அ.தி.மு.க.-வின் மேனாள்
அமைச்சர் சி.வி. சண்முகம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடையாளங்களை அழிக்கிற பா.ச.க.வுக்குத் துணை போகிறவர்களும் அழிவார்கள் என்பதே தமிழ்நாட்டுத் தேர்தல் களம் கற்றுத் தரும் பாடமாகும்.
இக்கட்டுரையை எழுதுகையில், மாநிலங்கள் அவைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முனைவர் கான்ஸ்டாண்டின் அவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லத் தோன்றியது. கிறித்தவர், மீனவக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரைச் சரியாக அடையாளங்கண்டு சிறப்பு செய்த தி.மு.க.வின் பொறுப்பாளர்களுக்குச் சிறுபான்மை கிறித்தவர்களின் சார்பில் வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்!
நெருங்கி
வரும் தேர்தலில் ‘கிறித்தவருக்கென ஒரு நிலைப்பாடு வேண்டுமா?’ என்ற கேள்வி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எழக்கூடாது என்பதுதான் உண்மை நிலவரம். இந்தியக் கிறித்தவம் வெறும் வழிபாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியக் கிறித்தவர்கள் தமக்கென தனித்த அடையாளங்கொண்ட இந்திய நாட்டின் குடிமக்கள்; இக்குடிமக்கள் தமக்கெனவுள்ளத் தெரிவு செய்யும் உரிமையைப் பயன்படுத்தி, தெரிவு செய்த மார்க்கமே கிறித்தவம்.
கிறித்தவ
மறையைத் தெரிவு செய்த மக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்பதால் மதச்சிறுபான்மையினர் இந்தியா எனும் சனநாயக நாட்டின் அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட மதச்சிறுபான்மையினர். இவர்கள் மதச்சிறுபான்மையினர்; மதரீதியாக - மதம் ஏற்கும் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள். இவர்கள் வேறுபட்டவர்கள்! ஆம், ஆனால் சமமானவர்கள். இவர்கள் அடையாளத்தால், கொண்ட கொள்கையால் வேறுபட்டவர்கள் என்பதாலேயே இவர்களைப் பாகுபடுத்த எவருக்கும் உரிமையில்லை. இவர்கள் உரிமைக் குடிமக்கள்.
சனநாயகம்
வழங்கியுள்ள இவ்வுரிமைகளைச் சமமாக அனுபவிக்கும் உரிமை பெற்ற இவர்கள், சனநாயகம் அளிக்கும் தெரிவு செய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் சனநாயகத்தில் பங்குகொள்ள வேண்டுவது இவர்தம் கடமையும் உரிமையும் ஆகும். ஐந்தாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஒரு சடங்கல்ல; அது ஒரு வேள்வி.
சனநாயகம்
தந்த உரிமையின் பெயரால், அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதச்சிறுபான்மையினராகிய கிறித்தவர்கள் தேர்தல் முறையைச் சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் நிறம் மாறலாம்; கொள்கைகளில் சமரசம் செய்யலாம்; ஆனால், கிறிஸ்து வழிவந்த மதச்சிறுபான்மையினர் மிகத் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டுவது கடமையாகிறது. கிறித்தவர் சனநாயகத்தை, சமயச்சார்பின்மையை, சமத்துவத்தை, இறையாண்மையை நம்பும் கட்சிகளைத்தான் ஆதரிக்க முடியும்.
விடுதலை
பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்பும், வலுவான அரசமைப்புச் சட்டத்தைப் பெற்ற பின்பும், சனநாயகம் எனும் பெருவிழுமியத்தைச் சிதைவுபடாமல் காத்திடும் வகையில் சனநாயக நிறுவனங்கள் உருவான பின்பும், இன்று மத அடிப்படையிலான அரசு
ஒன்று, நம்மை ஆளும் அரசாக இருப்பது
முரணில்லையா?
மதவாதக்
கருத்தியலின் வெற்றி வகுப்புவாதம். அதன் அடிப்படையில் வளர்க்கப்பெறும் மதவாதம் மானுட மாண்பிற்கு, மனித உரிமைகளுக்கு, சமூகங்களின் சமாதான சகவாழ்விற்கு எதிரானது.
ஆக,
எதிர்வரும் தேர்தலில் ‘மதவாதக் கட்சிகளை எதிர்ப்போம்’ என்று
உறுதியேற்போம். மதவாதக் கட்சி ஒன்று எப்படிச் செயல்படும் என்பதை கடந்த பத்து ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம், அனுபவித்தும் வருகிறோம். நாட்டின் ஒருமைக்கு, தேசிய இனங்களுக்கு, மதச்சிறுபான்மையினருக்கு, இந்தியக் கூட்டாட்சிக்கு என்னென்ன சேதங்களை உருவாக்கி வருகின்றன என்பதையெல்லாம் அறிந்த பின்பும், வெறும் ஆட்சி அதிகாரம் கருதி இம்மதவாதக் கட்சியோடு கூட்டணி கொண்ட கட்சிகளோடு எவ்விதச் சமரசமும் இல்லை என்போம்.
மதவாத
பாரதிய சனதா என்பது வெறும் கட்சியல்ல; பெரும்பான்மைவாதம் பேசும் இக்கட்சியோடு உறவுகொள்ளும் எந்தக் கட்சியும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சிகளே!
இருவகை
அணிகள் தேர்தலைச் சந்திக்கத் தயார்நிலையில் உள்ளன. இவ்வணிகளில் மதவாதக் கூட்டணிக்கு இப்போதும் எப்போதும் ஆதரவு இல்லையென்பதே நம் நிலைப்பாடு. இவ்வணிக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியே நம் ஆதரவு கூட்டணி. ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் கறைபடாத தூய கட்சிகளா? உண்மையாக இல்லை. எனினும் பா.ச.க.
எனும் மதவாத, சனநாயகமற்ற, எதேச்சதிகார எதிரியை வீழ்த்த இம்மாதிரி நிலைப்பாடே எடுத்தாகவேண்டும்.
இன்று
தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களைப் பெருங்குழப்பத்தில் வைத்திருக்கும் சக்திகள் இரண்டினைப் பற்றிப் பேசியாகவேண்டும்.
ஒன்று,
தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள். இவர்கள் நெற்றியில் திருநீறிட்டு முப்பாட்டன் முருகனைத் துதிக்கும் பெரும்பான்மை மத அடையாளத்தைக் கொண்டு
அரசியல் செய்பவர்கள். இன்றும் இந்தியாவில் முழுமையாக வளராத ‘இந்திய தேசியமே’ தமிழ்நாட்டுத் தேசியத்தைக் காக்காத நிலையில், ஒன்றிய அரசை ஆளும் பாரதிய சனதாவின் முதன்மைக் கொள்கையான ‘இந்து தேசியம்’ அல்லது கலாச்சார தேசியத்திலிருந்து எப்படி இவர்கள் நம்மைக் காப்பாற்றப் போகிறார்கள்?
இவர்களின்
பரப்புரைகளால் கவரப்பட்டுத் திசைமாறிப் போகும் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிப்பாக, கத்தோலிக்க இளைஞர்களை, இளம் அருள்பணியாளர்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுவது கட்டாயமாகிறது. பெரியார் மீதான அவதூறுகளும், தி.மு.க.
மீதான வன்மமும் மட்டுமே இவர்களின் கொள்கையென்பதால், இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அடுத்து
வரும் நபர் மிக மிக ஆபத்தானவர். இவருக்கு எதுவும் தெரியாது என்பது நம்முடைய பொய்யான நம்பிக்கை. தன் கொள்கை எதிரியாக அறிவிக்கும் பா.ச.க.வின் கொள்கை எதுவுமே இவர் படிக்கும் தாளில் இடம்பெறுவதே இல்லை. ‘தீய சக்தி’ என்று அடையாளம் காட்டப்பெறுவது தி.மு.க.
‘தூய சக்தி’ என்று யாரையாவது சொல்லட்டுமே! ஒரு மனிதன் நடிகன் என்பதாலேயே அவ்வப்போது மக்களுக்குத் தரிசனம் தரும் இவரை நம்பி பின்செல்வது, சனநாயகத்தைக் கேலி செய்வதே.
கொள்கை
பலமோ, அறம் சார்ந்த நிலைப்பாடோ இல்லாமல் மக்களிடம் ஏற்கெனவே இயங்கும் கட்சிகளிடம் வளர்ந்திருக்கின்ற அவநம்பிக்கையை ஆதாயமாக்கி அரசியல் செய்யும் இத்தகையோரின் அரசியலைப் புரிந்துகொள்வோம். இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்போம்.
காலை வேளைகளிலெல்லாம் என்னவோ நேரம் வழக்கத்திற்கு மாறாகவே காலில் சலங்கைக் கட்டிக்கொண்டு பேயாட்டம் போடுகிறது. அப்படித்தான் வினுவின் வீடும் இருந்தது. வேலைக்குப் போகிற அவசரத்துல அவன் வீடு போர்க்களமாய் காட்சியளித்தது.
வினு
கொஞ்சம் கோபக்காரன். நேரத்திற்கு நினைத்தது நடக்கவில்லையென்றால், அன்று வீடே இரணகளமாகிவிடும். அன்றும் அப்படித்தான்.
“வச்ச இடத்தில் ஒன்றும் இருக்கமாட்டேங்குது. ஜெசி! கார் சாவிய பாத்தியா?” என்று தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டே சாவியைத் தேடியலைந்தான். மகனுக்குச் சாக்ஸ் மாட்டிவிட்டுக் கொண்டிருந்த ஜெசி, “நான் பார்க்கலங்க. டிவி மேசையில இருக்காணு பாருங்க” என்றாள்.
எங்குத்
தேடியும் கார் சாவி கிடைக்காத ஆத்திரத்தில் பொறுமையை இழந்திருந்த வினு தன் கையிலிருந்த டிபன் பாக்சைத் தரையில் ஓங்கி அடித்தான். டிபன் பாக்சின் மூடி கழன்று லெமன் ரைசும் முட்டையும் தரையில் சிதறிக்கிடந்தன.
பயத்தில்
உறைந்து போயிருந்த வினுவின் மகன் கதறியழ ஆரம்பித்தான். ஜெசி என்ன செய்வதென்று தெரியாமல் நட்டுவைத்த கல்தூண் போலத் திகைத்துப்போய் அங்கேயே நின்றாள்.
ஆத்திரத்தில்
கதவைத் திறந்து வெளியே வந்த வினு காரின் அருகில் சென்று கார் கதவைத் திறந்து பார்த்தான். கார் சாவி காரிலேயே இருந்தது. கோபம் கொண்டு காலையிலேயே எல்லாருடைய மனத்தையும் காயப்படுத்திவிட்டோமே என்ற எண்ணம் சிறு துளிகூட இல்லாமல் காரை இயக்கிவிட்டு வேகமாகச் சாலையில் சென்று கொண்டிருந்தான்.
நகரின்
அருகில் போகப்போக மனத்தின் சலசலப்பே சாலையிலும் பிரதிபலித்தது. மனிதர்கள் சாலையை மொய்த்திருந்தனர். வாகனங்களின் எண்ணிக்கை, மெட்ரோ இரயில் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த குழிகள் என்று பல காரணங்களால் வாகனங்கள்,
சக்கரங்கள் இருந்தும் ஊர்ந்தே சென்றன. ஏற்கெனவே கோபத்திலிருந்த வினுக்கு இந்த ‘டிராபிக்’
சூழல் எரிச்சலை அதிகப்படுத்தியிருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த பைக் ஒன்று திரும்பும்போது, வினுவின் காரில் மோதி நின்றது. காதறுந்ததுபோல காரின் பக்கவாட்டிலிருந்த கண்ணாடி தொங்கிக்கொண்டிருந்தது. கோபத்தில் பொரிந்துகொண்டிருந்த வினு காரின் வெளியே வந்து கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே இருந்தான்.
வினு
அவனை விட்டப்பாடில்லை. “பார்த்துவர தெரியாது? காலையிலேயே எனக்கென்றே வருவீங்களோ? சனியன்களா! இந்தக் கண்ணாடிக்கு உன் அப்பனா காசு தருவான்?”
‘யார்மீது தவறு?’ என்று ‘நீயா நானா?’ நடத்திப் பார்ப்பதற்கு நேரமில்லை. பெருங்கூட்டம்
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது. இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசாத பைக் ஓட்டி மெதுவாகப் பைக்கிலிருந்து இறங்கினான். வினுவின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான். நலிந்த உருவம் என்றாலும், பைக் ஓட்டியின் அறை வினுவின் முகத்தைப் பளுக்கச் செய்திருந்தது.
ஒரு
நொடிப்பொழுது மண்டை அதிர்ந்து அடங்கியது. தன்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முன்னால் அவமானத்தால் நின்று கொண்டிருந்தான் வினு. திருப்பித் தாக்குவதற்கான துணிவு இல்லை அவனுக்கு.
அப்படி
ஒன்றுமே பேசாமல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கார்
இருக்கையில் வந்து அமர்ந்தான். கூட்டம் கலையத் தொடங்கியது. பைக் ஓட்டியும் கிளம்பியிருந்தான். கார் கதவை இறுக அடைத்துக்கொண்டான். எங்குத் திரும்பினாலும் அந்த பைக் ஓட்டியின் முகம்தான் கண் முன்பாக வந்தது அவனுக்கு.
அந்த
நாள் முழுவதும் அலுவலகத்தில் யாரிடமும் எதுவும் அவன் பேசவில்லை. வீடு திரும்பியவன் கார் சாவியைப் பத்திரமாக டிவி மேசையில் வைத்தான். தன் மனைவியிடம் முதல் வார்த்தையாக “சாரிமா, என்ன மன்னிச்சுக்க” என்று
கூறிவிட்டு அவளைக் கட்டியணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.
கோபமடைவது
அல்லது பிறரைக் கோபமடையச் செய்வது என்பது இன்றைய இணைய உலகில் மலிந்து கிடைக்கின்றது. யார் வேண்டுமென்றாலும் யாரையும் சீண்டலாம், வெறுப்புணர்வை விதைக்கலாம். இதன் வழியாகப் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். இத்தகைய யுக்தியைப் பயன்படுத்தி அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறது இணைய உலகம்.
இணையத்தில்
ஒரு பதிவர், உண்மையில் தனக்கு அந்தக் கருத்து இருக்கிறதோ இல்லையோ, வேண்டுமென்றே மக்களைக் கோபப்படுத்தும் வகையில் ஒரு பதிவைப் போடுவார். அதைப் பார்த்து மக்கள் ஆவேசமடைந்து கருத்தூட்டுவதாலும் (Comment), அதனை
அதிகளவில் பகிர்வதாலும் (Share) அந்தப்
பதிவு அதிக மக்களிடம் சென்றடையும். இந்த எதிர்மறை விளம்பரத்தின் (negative promotion) மூலம் தங்களின் வருமானத்தையோ அல்லது செல்வாக்கையோ உயர்த்துவதே இவர்களின் நோக்கமாகும்.
மக்களை
எரிச்சலூட்டும் விதமாகவோ, ஆத்திரமூட்டும் விதமாகவோ அல்லது புண்படுத்தும் விதமாகவோ பேசி, அவர்களின் கோபத்தை வேண்டுமென்றே தூண்டுவதற்காக இணையத்தில் பகிரப்படும் உள்ளடக்கத்தை (Content) ‘கோபத்தூண்டில்’ (Rage bait)
என்கின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் இந்த வார்த்தையை 2025-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக (Word of the Year– 2025) தேர்ந்தெடுத்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு
உதாரணமாக, அண்மையில் கேரளாவில் பேருந்தில் பயணித்தபோது தீபக் என்பவர் தன்னை உரசியதாகக் கூறி பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத் தீயைப் போல் பரவியது. தீபக் உள்நோக்கத்துடன் பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை. இறங்கும்போது பையை எடுக்கும்போது தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருக்கிறது என்று ஒரு சிலரும், சில நெட்டிசன்கள் பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில்
இக்கருத்துகளால் வேதனையடைந்த தீபக் அவமானமடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு கேரளாவில் பேசு பொருளாக மாறி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோவைப் பகிர்ந்த இளம் பெண்ணைப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கருதி கைது செய்திருக்கிறது கேரள காவல்துறை.
பேருந்தில்
தனக்குத் துன்புறுத்தல் நடப்பதாக உணர்ந்தால், உடனடியாக அதைத் தட்டிக்கேட்டு இருக்கலாம். ஆனால், வீடியோ எடுப்பதிலேதான் அந்தப் பெண் ஆர்வமாக இருந்தார் என்று சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவசரப்பட்டு அந்தப் பெண் மீது களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று மற்றொரு தரப்பினரும் வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகிறார்கள்.
எதுவாக
இருந்தாலும் இத்தகைய அல்லது இதுபோன்ற செய்திகளைச் சமூக ஊடகங்களில் பரப்புவதன் வழியாக ‘கோபத்தூண்டில்’ (Rage bait)
என்னும் யுக்தியைப் பயன்படுத்தித் தங்களின் வருமானத்தை அல்லது செல்வாக்கைச் சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள் (cyber-activists) பெருக்கிக்கொள்கின்றனர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
ஒருநாள் பேருந்தில் மாலை ஏழு மணியளவில் பயணம் செய்யும்போது, என் அருகிலிருந்த நபர் தன் மனைவியுடன் சத்தமாகச் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடலில் அவர் தன் மனைவியுடன், “நான் உன் மகளைக் காலையில் பள்ளியில் விட்டேன். மதியம் என் வேலையாளை அனுப்பி உணவு வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். மாலையில் அவளைப் பள்ளியிலிருந்து வீட்டில் சேர்த்தேன்” என்று தன்னுடைய வேலையை மட்டும் கணக்குப் போட்டுத் தன் மனைவியைத் திட்டினார்.
இந்த
நிகழ்வு சற்று என் காதுக்குள் சென்று விட்டுச் செல்லவில்லை. இந்த நவீன உலகத்திலும்
பெண்கள் இன்னும் தரக்குறைவாக நடத்தப்படுவது எனக்குக் கவலை அளித்தது, சிந்தனைகளைத் தூண்டியது.
பொதுவாகவே ஆண்கள்தான் வேலைகள் செய்வார்கள், பெண்கள் தகுதியற்றவர்கள், எளிதில் ஏமாந்து
போகக் கூடியவர்கள் போன்ற தவறான கருத்துகளைச் சில புதினங்கள், இலக்கியங்கள் மற்றும்
கதைகள் வழியாக மானுடச் சிந்தனையில் புகுத்திவிட்டார்கள். இதனால் பெண்கள்மீது ஏராளமான
சுமைகள் மறைக்கப்பட்டதாகவே உள்ளன.
தீமைக்குக் காரணமானவர்கள்
யார்?
திருவிவிலியத்தில்
அலகை எளிதில் ஏவாள் என்ற பெண்ணை ஏமாற்றிவிட்டது. அந்தப் பெண்ணால்தான் பாவம் உலகிற்கு
வந்தது. அதிலிருந்து பெண்ணைக் குறைவாகப் பார்க்கக்கூடிய சிந்தனைகள் உருவாயின.
இலக்கியத்தில்
ஈசீயோத் எழுதிய ‘உழைப்பும் ஊழிகளும்’ (work and days)
என்ற நெடும்பாட்டில் பண்டோரா என்ற பெண்மாந்தரைக் கொண்டு வருகிறார். இதில் பண்டோராதான்
முதலில் படைக்கப்பட்ட பெண் என்று கிரேக்கத்தில் நம்பப்படுகிறது. உலகிற்குத் துன்பமெல்லாம்
பண்டோராவினால்தான் வந்தது என்று சாடியைத் திறந்த கதையை ஈசீயோத் எழுகிறார். இதில் தன்
தம்பி பெர்சிஸ் தன்னை ஏமாற்றியதற்குக் காரணமாக இந்தப் பகுதி சொல்லப்படுகிறது. அண்ணனைப்
பழிவாங்குவதற்காகத் தம்பிக்கு மணம் செய்விக்கப்பட்டவள் பண்டோரா. எந்தக் காரணத்தோடும்
திறக்கக்கூடாது என்ற முன்குறிப்போடு, ஓர் அழகான சாடியைப் பரிசாகக் கொடுத்தார் கடவுள்.
ஆசை தாங்காமல் சாடியைத் திறந்து விட்டார் பண்டோரா. அந்தச் சாடியிலிருந்து தீமைகள் புறப்பட்டு
உலகத்தை நிரப்பின. பதறிப்போன பண்டோரா சாடியை அடைத்தபோது அதில் மீதி இருந்தது நம்பிக்கை
மட்டும்தான். அதுவும் அடைபட்டுவிட்டது. இவ்வாறாக, பெண்ணால்தான் தீமை உருவானது என்று
எழுதுகிறார்.
மேற்கூறிய
திருவிவிலியப் பகுதியையும் ‘உழைப்பும் ஊழிகளும்’ என்ற
பாடலையும் பெண்கள் மீது சொல்லப்படுவதை மாற்றுச்சிந்தனையில் பார்க்கவேண்டும். அதை அப்படியே
பொருள் கொண்டால் நாமும் ‘பெண் புத்தி பின் புத்தி’ என்ற
தவறுதலான அடைமொழிக்குள் பெண்களை அடக்கிவிடுவோம். தொடக்கத்தில் சொல்லப்படும் பேருந்து
நிகழ்வில் வரும் நபரும் பெண்களைப் பற்றிய தவறுதலான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். அதனால்தான்
அவர் தன்னுடைய வேலையை மட்டும் எண்ணிப் பேசுகிறார். பெண்கள் செய்யும் வேலைகளை அவர் புரிந்துகொள்ளவே
இல்லை. அவர்கள் செய்யும் வேலைகள் மற்றவருக்குத் தெரியாமலே மறைக்கப்பட்ட சுமைகளாவே இருக்கிறது.
பேசுபவர்கள் மட்டும்தான் வேலை செய்யக்கூடியவர்கள் என்ற போலியான சிந்தனைகள் உள்ளத்தில்
தோன்றத் தொடங்குகின்றன. ஆனால், பெண்களின் வாழ்வில் அவர்கள் மறைமுகமாகச் செய்யும் பணிகளை
எண்ணிப் பார்த்தால் அளப்பரியவை! அவர்கள் ஒருபோதும் தங்கள் வேலைகளை வெளியில் சொல்லிக்
காட்டியதும் இல்லை, பேசியதும் இல்லை.
வெளிப்படையாகச் சுமத்தப்பட்ட
சுமைகள்
ஒவ்வொரு
நாளும் என்ன உணவு சமைப்பது, பால் எப்படி வாங்குவது, மளிகைப் பொருள்களின் செலவு, வீட்டு
வாடகை கட்டுவது, மின் கட்டணம் எவ்வளவு வரும், குழந்தைகளின் பள்ளிச் செலவு, மருத்துவச்
செலவு, தண்ணீர் வாங்குவது, இந்த ஆண்டு பண்டிகைக்கு எப்படிச் செலவு செய்வது... என்று
முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்லும் பட்டியலை ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தன் உள்ளத்தில்
எண்ணிக்கொண்டேயிருப்பார். இந்த நவீன உலகத்தில் குடும்பப் பெண்ணின் நினைவில் வைக்கும்
குடும்பப்பட்டியல் நீண்டுகொண்டேதான் செல்கிறது. ஆனால், அவர்கள் ‘நிறைகுடம் தளும்பாது’ என்ற சொல்லுக்கு இணங்க, வெளியில் தாங்கள் செய்யும் வேலைகளைச்
சொல்லால் அல்ல; உள்ளத்தால் அன்னை மரியாவைப் போன்று சிந்தித்துச் செயல்படுகிறார்கள்.
மனத்திற்குள் மறைக்கப்பட்ட
சுமைகள்
குடும்பத்தில்
ஒரு குழந்தை பிறந்தது முதல் அந்தக் குழந்தையின் அனைத்துப் பொறுப்புகளும் பெண்களின்
மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். குழந்தையின் உடல் நலம் பேணல், தடுப்பூசி மருந்துகள்
சரியாகப் போடுதல், குழந்தையின் உணவு பேணுதல், சரியான பள்ளியைத் தேர்ந்தெடுத்துச் சேர்ப்பது,
குழந்தையின் ஒழுக்கம், செயல்கள், யாருடன் குழந்தை சேருகிறது போன்ற சிந்தனைகள் பெண்ணின்
உள்ளத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும். குழந்தையின் பள்ளிக் கட்டணத்தின் கடைசி நாள், தேர்வு
நாள், குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு
ஏற்றபடிச் செயல்படுவது, பெண் பிள்ளை இருந்தால் அவர்களின் மாதவிடாய் நாள்களை நினைவில்
வைத்துக்கொள்வது, கணவரின் எதிர்பார்ப்புகளை அவர் கேட்பதற்கு முன்பே நிறைவேற்றுவது என்று
தங்களின் மனத்திற்குள் பெண்கள் சிந்தித்து, வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
பணிச்சுமையின்
காரணமாக, கணவர்கள் திருமண நாளை மறந்தாலும் பெண்கள் மறக்கக் கூடாது. பெண்கள் வீட்டிலுள்ள
அனைவரின் பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவில் வைத்துக்கொண்டு மறவாமல் வாழ்த்துகள்
தெரிவிப்பது, பரிசுப்பொருள்கள் வழங்க இருப்பின் சென்ற ஆண்டு வாங்கிய பரிசுப் பொருள்களை
நினைவில் வைப்பது; அது மட்டுமன்றி, மற்றவர்கள் நமக்கு வாங்கிக் கொடுத்த பொருள்கள்,
பணத் தொகையை நினைவில் வைத்து அதற்கு ஏற்றார் போல் அடுத்தமுறை செயல்படுவது, திருமணம்
மற்றும் மற்றக் காரியங்களுக்கான செய்முறைகளை நினைவில் வைத்துச் செயல்படுவது போன்ற செயல்கள்
பெண்களுக்குத்தான் என்று சமுதாயத்தால் மறைமுகமாகச் சூட்டப்பட்டுள்ளன. பெண்களும் தங்களின்
உள்ளத்தால் இச்செயல்பாடுகளை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளமுடியாத
சுமைகள்
பெண்கள்
தங்கள் குடும்பத்தைப் பற்றி, பல சுமைகளை எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவற்றில் உடனடியாகச்
செய்யக்கூடியவை எவை என்றும், அவற்றில் முக்கியமானவை மற்றும் முதன்மையானவை எவை என்றும்
எண்ணிச் செயல்படுவது. வீட்டில் கணவர் செய்ய வேண்டியவை, குழந்தைகள் செய்ய வேண்டியவை,
மாமியார், மாமனார் செய்ய வேண்டியவை, தன் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டியவை என்று பெண்கள்,
ஒவ்வொரு நாளும் அறிவுசார் மற்றும் உணர்வுசார் சுமைகளைச் சுமந்து செயல்படுவது. இந்தப்
புரிந்து கொள்ளமுடியாத சுமைகள் எளிதான ஒன்று அல்ல; மனித ஆற்றலை மறைமுகமாக அதிகம் உறிஞ்சும்
தன்மை கொண்டவை. மற்றவர்கள் இந்தச் சுமையைப் பகிர்ந்துகொண்டாலும், திட்டமிடல் சுமையைப்
பொதுவாகப் பகிர்ந்து கொள்வதில்லை.
சுமைகளால் ஏற்படும் தியாகம்
மேற்கண்ட
எல்லாச் செயல்களிலும் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டால் பெண்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது.
இதனால் மனச்சோர்வு, தூக்கமின்மை, உடல்சோர்வு எனப் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாக நேர்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டு வேலைகள் மற்றும் பணி வேலைகள் என்று இரண்டு சுமைகள்
இருப்பதால் வேலையில் உயர்வு ஏற்பட்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் தியாகம் செய்யும்
நிலை ஏற்படுகிறது.
பெண்ணுக்குள் மறைந்திருக்கும்
சக்தி
ஒவ்வொரு
பெண்ணிடமும் தாய்மை என்ற வல்லமையுள்ள சக்தி பொதிந்துள்ளது. அதனால் மேற்கண்ட நான்கு
வகையான சுமைகளை ஒவ்வோர் ஆணும் அறிந்து, அதை அவர்களுடன் உணர்வு சார்ந்த முறையிலும்,
அறிவுசார்ந்த முறையிலும் பகிர்ந்துகொள்வது கடமையாகும். அப்படிச் செயல்படும்போது பெண்களுக்குள்
மறைந்திருக்கும் தெய்வீகத்தன்மை வெளிப்படும். இதனால் குடும்பமும் மகிழ்ச்சியில் நிலைத்திருக்கும்.
ஒவ்வொரு
சொல்லுக்கும் எடையும் நிறையும் உண்டு. எல்லாச் சொல்லுக்கும் பொருள்கள் உள்ளன. தொல்காப்பியத்தில்
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று எழுதுகிறார். எனவே, குடும்பத்தில்
நல்ல சொற்களையும் செயல்களையும் பயன்படுத்தி பெண்களிடம் மறைந்துள்ள சுமைகளை அகற்றுவோம்.
தெய்வீகத்தைக் கொண்டு வருவோம்.
“பெண்களின் மனித மாண்பும் உரிமைகளும் உலகளாவிய மனித உரிமைகளின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகும்” எனப் பெண்களின் மாண்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. படைப்புகளிலேயே பெண்ணும் ஆணும் மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறார்கள். மனிதர்கள் உன்னதமானவர்கள் என்பது சமூகத்தின் உன்னதச் சிந்தனை. அவர்கள் மனித மாண்புடன் நடத்தப்படவேண்டும் என்பது ஒவ்வொரு மதத்தின் அடிப்படை நோக்கமாகவும், மனித உரிமைகளின் முக்கிய அம்சமாகவும் உள்ளது. மனித மாண்பு என்பது இறைவன் உருவிலும், சாயலிலும் படைத்ததில் வேரூன்றியுள்ளது எனக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுட்டிக்காட்டுகின்றது. “மனித மாண்பு காக்கப்படும் இடத்தில்தான் உண்மையான சுதந்திரம் வாழ்கிறது” என்கிறார் மகாத்மா காந்தி. மனித மாண்பு என்பது, ஒவ்வொரு மனிதரும் இயல்பாகவே மதிப்பும் மரியாதையும் பெறவேண்டியவர் என்பதைக் குறிக்கும் ஓர் அடிப்படைக் கருத்தாகும். ஒருவரின் இனம், மதம், பாலினம், சமூக நிலை, பொருளாதார நிலை போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல், எல்லா மனிதர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதே மனித மாண்பின் மையம்.
ஆண்களை
மனித இனத்தின் அடிப்படையாக (இயல்பாக) கருதுவது, மனித சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடு
எனப் புகழ்பெற்ற பெண் எழுத்தாளரான கரோலைன் கிரியாதோ பெரேஸ், ‘invisible women’ என்னும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களைச் சமமாக நடத்தாமையே இந்த வேறுபாட்டிற்குக் காரணம்!
பெண்ணிய
மாண்பும் மதிப்பும் “பெண்களை மதிப்பதும் அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவதும் அல்லது அவர்களுடன் ‘மரியாதையாக
நடப்பது’ அல்லது அவர்களுக்கு ‘வழிவிடுவது’ போன்றது மட்டுமல்ல; அது பெண்களைச் சமமான, சுதந்திரமான மனிதர்களாக
நாம் பார்க்கும் விதத்திலும் பழகும் விதத்திலும் ஏற்படும் ஓர் அடிப்படை மாற்றமாகும்.
பெண்களை வெறும் ‘தாய்’ அல்லது ‘சகோதரி’ போன்ற உறவுமுறைப் பிம்பங்களுக்குள் மட்டும் அடைத்துப் பார்க்காமல்,
அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும், முடிவெடுக்கும் அதிகாரமும் கொண்ட
தனிமனிதர்களாகப் பார்ப்பதே உண்மையான கண்ணியமாகும்.”
மனித மாண்பு ஆண்களைக்
குறிக்கும் அடைமொழியா?
இன்றைய
காலச்சூழலில் மனித மாண்பு ஆண்களின் மதிப்பையும் சுதந்திரத்தையும் குறிக்கும் கருத்தாகச்
செயல்படுவதைக் காண முடிகிறது. மாறாக, அது பெண்களையும் உள்ளடக்கியது என்ற புரிதல் காலத்தின்
அவசியமாகிறது. “பெண்களின் சுயமரியாதைதான் சமூக விடுதலையின் அடித்தளம்” என அன்னை சாவித்ரிபாய் பூலே கூறுகிறார். ஓர் ஆணுக்கு இந்தச்
சமூகம் வழங்கும் மதிப்பும் மாண்பும் பெண்களுக்கும் சமமாக வழங்கப்படவேண்டும் என்பதே
மனித மாண்பும் நீதியும் சமத்துவமுமாகும். பெண்களின் மாண்பும் மதிப்பும் குறித்து ஆராய
வேண்டுமானால் அவர்களின் வீடுகளில் தொடங்கி அவர்களின் தலைமைத்துவம் குறித்து ஆராய்வது
நிறைவுள்ளதாக இருக்கும். சில கசப்பான உண்மைகளை அழகான மொழியில் தொகுத்தால் புரிதலுக்கு
உதவும்.
பெண்கள்
இச்சமூகத்தில் அடக்கமாக, தாழ்ச்சியுடன் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என வரையறை அளித்த
சமூகம், அதில் ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்பதைச் சொல்லித் தரவில்லையோ என்ற நிலைப்பாடு
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் உடையும் நடையும் செயல்பாடுகளும் அவளுடைய
மாண்பைத் தீர்மானிக்கும் அளவுகோலாக ஒருபோதும் இருக்கக்கூடாது. மாறாக, ஒழுக்கம், கற்பு
என்பது இருபாலாருக்குமானது என்று முழங்கிய பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் தந்தை
பெரியாரின் கருத்துகளைப்போல இருக்க வேண்டும்.
தேவையற்ற சரிபாதியா பெண்கள்?
“ஆணும்
பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பவர்கள்” சமுதாயம்
சிறப்பாக இயங்குவது அவ்விருவரின் பங்களிப்பைப் பொறுத்தே அமைகிறது. இருப்பினும், இந்தியாவின்
பல பகுதிகளில் பெண்கள் இன்னும் இரண்டாம் நிலைக் குடிமக்களாக, வேண்டாதவர்களாகவே நடத்தப்படுகிறார்கள்.
இந்தியச் சமூகத்தின் மிகவும் வேதனைக்குரிய, மிகக் குறைவாக ஆராயப்பட்ட அம்சங்களில் ஒன்றாக
இந்த முரண்பாடு நீடிக்கிறது. சில நேரங்களில் ஆண் வாரிசு இல்லாத குறையைத் தீர்க்க பெண்
குழந்தைகள் வரவேற்கப்பட்டாலும், அவர்கள் சமமாக நடத்தப்படுவதோ அல்லது கொண்டாடப்படுவதோ
அரிது.
21-ஆம்
நூற்றாண்டிலும் இந்தியாவில் கருவிலேயே பாலினம் கண்டறிவதைத் தடை செய்யும் சட்டம் (PCPNDT Act, 1994) நடைமுறையில் உள்ளது ஓர் ஆகச்சிறந்த
எடுத்துக்காட்டு. உசிலம்பட்டியில் கொடுமைகள் குறைந்தாலும் “பெண்களைத் தெய்வங்களாகப்
போற்றிப் பெருமைப்படும் இந்திய நாட்டில், ஒரு பெண் குழந்தையின் பிறப்பு இன்றும் குடும்பங்களுக்குள்
ஒரு விலக்கப்பட்ட விசயமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவின்
ஒரு குடிமகளாகவும், பாலினச் சமத்துவத்தை ஆழமாக மதிக்கின்ற பெண்களுக்கு, இந்த முரண்பாடு
மிகுந்த மனவேதனையையும் அலைக்கழிப்பையும் தரும் ஒன்றாகும். இது நேர்மையாக எதிர்கொள்ளப்பட
வேண்டிய ஒரு சமூக அநீதி. பெண்களின் உள்ளார்ந்த
கண்ணியத்தையும் ஆற்றலையும் முழுமையாக உள்வாங்கிய சமூகமாக இல்லாமல் தொடர்வது சமூகத்தின்
வளர்ச்சிக்குத் தடை எனலாம். பெண்கள் விடுதலை பெறவேண்டும், சுய சார்பு பெறவேண்டும் என்பதற்காகத்
தன் வாழ்நாளை அர்ப்பணித்து, அதற்காக அவர்பட்ட சவால்களைப் பொருட்படுத்தாமல் பெண் கல்வியை
மேம்படுத்த பெண்களுக்கான முதல் கல்விக்கூடத்தை நிறுவியவர் சாவித்ரிபாய் பூலே.
ஆண்களுக்கும்
பெண்களுக்கும் சம ஊதியம், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பெண்களின் அதிகப் பங்கு,
கல்வி மற்றும் சுகாதாரத்தில் சமவாய்ப்பு, பெண்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு போன்ற
காரணங்களால் பல ஆண்டுகளாக, World
Economic Forum வெளியிடும்
Global Gender Gap Report-இன் ஐஸ்லாந்து பாலினச் சமத்துவத்தில்
முதலிடத்தைப் பெற்று வருகிறது என்பது மகிழ்வு தரும் ஒன்றே!
கலாச்சார முரண்பாடும்
உள்வாங்கப்பட்ட அடிமைத்தனமும்
இந்தியாவில்
சாதியப் பாகுபாட்டைப் போலவே பாலினச் சமத்துவமின்மையும் ஆழமாக வேரூன்றியுள்ளது. பெண்கள்
இன்றும் சுயசார்பு கொண்ட மனிதர்களாகக் கருதப்படாமல், ஒருவரைச் சார்ந்திருப்பவர்களாகவே
பார்க்கப்படுகிறார்கள். இந்த அடிமைத்தனம் வெளியிலிருந்து திணிக்கப்படுவது மட்டுமல்லாமல்,
பெண்கள் மற்றும் ஆண்களாலேயே தங்களுக்குள் உள்வாங்கப்படுகிறது. இதன் விளைவாக, பல பெண்கள்
அறியாமலேயே ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அமைப்பைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.
பெரிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் பெண்கள் கூட மன ரீதியாக, பொருளாதார ரீதியாகச்
சார்ந்திருக்கும் கட்டாயத்திலும் உள்ளனர்.
பெண் சகிப்புத்தன்மை
குடும்பங்களில்
இன்றும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கமே எதிரொலிக்கிறது. ஓர் ஆண்பிள்ளை ‘இளவரசனாக’ கொண்டாடப்படும் அதேவேளையில், பெண் குழந்தையின் பிறப்பு மௌனமாகச் சகித்துக் கொள்ளப்படுகிறது. பிறப்பால்,
கல்வியால் மற்றும் சமூக அந்தஸ்தால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எளிய விருப்பம் கூட
இன்றும் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
அண்மையில்
ஒரு குடும்ப நிகழ்வில், பையன் பிறந்ததை உறவினர்கள் கொண்டாடிய விதம் என்னை வியப்பில்
ஆழ்த்தியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஓர் உறவினர், “கடவுள் என் வேண்டுதலுக்குச்
செவிசாய்த்துவிட்டார், இனி இக்குடும்பத்தில் பல ஆண் பிள்ளைகள் பிறப்பார்கள்” என்று கூச்சலிட்டபோது, அவரது 11 வயது மகள் “அம்மா, உங்களுக்குப்
பெண் குழந்தைகளைப் பிடிக்காதா?” என்று கேட்டது நம் சமூகத்தின் முற்போக்குத்தனத்தை வெளிப்படுத்தியது.
ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் நிலைகளிலும் முன்னேறி வந்து விட்டாலும்
ஆண் குழந்தை மேல் உள்ள மோகம் இன்னும் குறையாதது வியப்பே.
2016-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. 136 தொகுதிகளைத் தனித்தே வென்றது. அ.தி.மு.க.வை விட ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளைத் தி.மு.க. கூட்டணி பெற்றது. தி.மு.க. கூட்டணி 98 தொகுதிகளைப் பெற்று எதிர்க்கட்சியானது. 2021 - தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களைப் பிடித்து, ஆட்சிப் பீடம் ஏறியது. அ.தி.மு.க. 75 தொகுதிகளை எடுத்தது. நான்கு விழுக்காடு வாக்கு வித்தியாசமே ஆட்சி மாற்றம் ஏற்பட அடிப்படைக் காரணமானது. வாக்கு அரசியலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. வாக்குகளைக் கோர்க்க ஒவ்வொரு சிறிய கட்சியின் வாக்கும் முக்கியமானது. அதற்குத் தேர்தல் காலக் கூட்டணிகள் காலத்தே அவசியமானது.
1967 முதலே கூட்டணி
அமைப்பது, வெற்றி காண்பது தி.மு.க.வின் தேர்தல் யுக்தி. தமிழ்நாடு முதல்வர் கூட்டணிக் கலையில் வித்தகம் பெற்றவர் என அரசியல் விமர்சகர்கள்
சொல்கிறார்கள். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு ‘சீட்’ இறுக்கிப் பிடிப்பதில் வல்லவர் என்ற பெயரும் உண்டு. வெவ்வேறு கட்சிகள், வெவ்வேறு கொள்கைகள் என்றாலும், அதிக இடங்கள், அதிக வெற்றி மட்டுமே கட்சிகளின் இலக்கு.
2026 - தமிழ்நாடு தேர்தல்
கூட்டணியில் வலதுசாரி, இடதுசாரி, மையம் என்று பிரிந்து இருக்கிறது. தி.மு.க.
தலைமையில் உள்ள இடதுசாரிக் கூட்டணி சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம், மனித உரிமைகள், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் அனைவருக்கும் எனக் களம் காண்கிறது. ‘இந்தியா’ கூட்டணி என்பதைவிட ‘மதச்சார்பற்ற கூட்டணி’ எனத் தன்னைத்தானே பிரகடனம் செய்கிறது. மாநில மற்றும் மனித உரிமைகளை நசுக்குகிற, ஒன்றிய பா.ச.க.
அரசைக் கண்டிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை
என்.டி.ஏ. கூட்டணி எதிர்
தமிழ்நாடு எனத் தி.மு.க.
கட்டமைக்கிறது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி மாநிலச் சுயாட்சி, மாநில உரிமைகள், தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவர்களுக்கான சம உரிமை, சம
வாய்ப்பு, அவர்களின் மொழி, கலாச்சார, பண்பாடு காப்பு என உரத்தக் குரல்
கொடுக்கிறது. இனவாரி, மொழிவாரி, மதவாரி சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, அடிப்படை உரிமை, வாழ்வுரிமை என்பதில் சமூகநீதி பேசுகிறது; சமத்துவம் போதிக்கிறது.
தமிழ்நாட்டில்
என்.டி.ஏ. கூட்டணி
அ.தி.மு.க.
தலைமையில் அமைந்ததாக வெளித்தோற்றம் உள்ளது. என்.டி.ஏ. கூட்டணியை
இயக்குவது அமித்ஷா. அவரை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இவர்கள் வலதுசாரிச் சித்தாந்தம் கொண்டவர்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் எந்த இழிநிலைக்கும் இறங்குபவர்கள். மனுவாதிகள். மனுதர்மப்படி சமூக நிலைகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள். தேசியவாதம் பேசுபவர்கள். பழமை, பாரம்பரியம் என்பதில் தங்கள் உயர் நிலையை விட்டு இறங்காதவர்கள். முதலாளித்துவச் சிந்தனையில் தம் பாசிசக் கொள்கைகளை வடிவு
செய்பவர்கள். தம் அனைத்துச் செயல் திட்டங்களையும் பணிகளையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து பெறுபவர்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போக என்றும் துடிப்பவர்கள். இவர்களோடு இந்த இந்துத்துவா என்.டி.ஏ.வோடு
தமிழ்நாட்டு மக்கள் எதிர் நிற்பதே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களமாகும். இதை தமிழ்நாடு முதல்வர் என். டி.ஏ. எதிர்
தமிழ்நாடு என உருவாக்கம் தருகிறார்.
பா.ச.க.வோடு
தமிழ்நாட்டில் கூட்டணி சேரும் எந்த அரசியல் கட்சியும் தோற்றுப் போகும் என்பது தமிழ்நாடு அரசியலின் பாலபாடம். தமிழ்நாடு தேர்தல் களம் வித்தியாசமானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் புரியாத புதிரானது.
தமிழகத்
தேர்தல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படும் மூன்றாவது அணி மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் கூட்டணி குறித்து ஒரு கவர்ச்சி சலுகை கொடுத்தது. அது ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்பதே. அடிப்படையில் அது ஆட்சி அதிகாரம் என்பதைப் பொதுமக்களுக்கு, விளிம்புநிலை மக்களுக்குச் சேவை என்பதைப் புறந்தள்ளும் அறமற்ற சொல்லாடல் ஆகும். இந்த மாய வலையில் எந்த அரசியல் கட்சியும் சிக்காமல், மாற்று வழியிலேயே சிந்தனை செய்தன.
தமிழ்நாட்டின்
இரு துருவ அரசியலில், இரு திராவிடக் கட்சிகளிடம் தங்கள் அதிகத் தொகுதி வேண்டும்
பேர வலிமையை இதைக் கொண்டே அதிகமாக்கினர். இது இரு கூட்டணிகளிலும் கூட்டணி வாக்குப் பரிமாற்றத்தில், அடிமட்டத் தொண்டர்கள் இணைந்து செய்யும் தேர்தல் சூழலைச் சுணக்கமாக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியும் தன் கட்டமைப்பை உருவாக்காமல், அடிமட்டத்தில் எந்தவொரு மக்கள் சேவையும் செய்யாமல் பெரிய கட்சிகளின் முதுகில் ஏறிச் சவாரி செய்கிற நிலை தமிழ்நாட்டு அரசியலின் அசிங்கம்.
தி.மு.க. தலைமையில்
உள்ள மதச்சார்பற்றக் கூட்டணி தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும், இரண்டாவது முறையாகச் சட்டமன்றத் தேர்தல்களிலும், சிறுபான்மையினர் வாக்குகளை நம்பியே களம் காண்கிறது. 2024-நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலன் என்பதில்
பா.ச.க.வோடு
கூட்டணி இல்லை என்றது. ‘எப்பொழுதும் கூட்டணி இல்லை’ எனவும் வீராப்புப் பேசியது. அழுத்தங்கள் காரணமாக மீண்டும் பா.ச.க.வோடு ஒட்டிக் கொண்டது.
செல்வி.
ஜெயலலிதா காலந்தொட்டு அ.தி.மு.க. மென்மையான போக்கு
கொண்ட இந்துத்துவா கட்சி என்பதால் அவர்கள் சிறுபான்மை மக்கள் குறித்து கவலை கொள்வதில்லை. சிறுபான்மை வாக்குகள் குறித்த அ.தி.மு.க.வின் அக்கறையின்மை
அவர்களின் தொடர்
தோல்விகளுக்குக் காரணம் என்ற உண்மையை என்றும் உணர மறுக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லும் மாண்பு கொண்டவர்கள். 2026 - ஒன்றிய வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் காலக் கட்டாய நிலையிலும் நிதி ஒதுக்காத பா.ச.க.வுக்கு அ.தி.மு.க. பாராட்டுப் பத்திரம்
வாசிக்கிறது. அ.தி.மு.க. தன் கூட்டணியால்
வென்று விடுவோம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறது.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எனும் ஆடுபுலி ஆட்டத்தால் மக்கள் வியப்பு அடைகிறார்கள். மனத்தில் ஆச்சரியங்களை மட்டுமல்ல, ‘இவர்கள் ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறார்கள்?’ எனவும் ஒருசில
அரசியல் கட்சிகளை வெறுக்கவும் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் லொடுக்குப் பாண்டி உள்பட 65 சிறு
உதிரி, சாதி லெட்டர் பேடு கட்சிகளும்
எதையாவது செய்து, எப்படியாவது சட்டமன்றத்தில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை அருவருப்பான கூட்டணி அமைப்பு அரசியலாக அமைகிறது. வருங்காலங்களில், கூட்டணித் தொகுதி பங்கீடுகள், தொகுதிகளை அடையாளம் காணுதல் போன்ற பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போகலாம். தொலைக்காட்சிகள் நொடிக்கு நொடி பரபரப்பு ஊட்டுவதும் நடக்கும். கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் கட்சிகளின் வாக்கு விழுக்காடுகள், கட்சிகளின் வெகுசன ஆதரவு, கட்சித் தலைவர்களின் புகழ் முகங்கள், ஊடக வெளிச்சம் என்பது கருத்தில் கொள்ளப்படும். அடாவடி அரசியல்வாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். மக்கள் நலனே முக்கியம் எனக் கருதாத அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு மட்டுமல்ல, அரசியலில் இருந்தே புறந்தள்ளப்பட வேண்டியவர்கள்.
அவர்களைப்
பொதுமக்கள் அடையாளம் காண்பர் என்பதே முற்றிலும் தெளிவான அரசியல் அறமாகும்.