news
சிறப்புக்கட்டுரை
விழித்தோமெனில் பிழைப்போம்!

இது என்ன தலைப்பு? யார் விழித்துக் கொள்ளவேண்டும்? ஏன் விழித்துக் கொள்ளவேண்டும்? யாரை எச்சரிக்க இக்கோரிக்கை?

இன்றைக்கு  இந்துத்துவக் கொள்கை மீது அரசியல் செய்துவரும் இந்துத்துவர்கள் முன் வைத்து நடத்தும் தேசியம் (Nationalism) பற்றி நம்மவர் எத்தனை பேர் தெளிவு பெற்றுள்ளனர்? ஆயிரக்கணக்கான இளைஞர்களை இறையியல் பயிற்சியென்றும், இன்னும் பல்வேறு பயிற்சிகள் மூலம் நாடெங்கும் பயிற்றுவிக்கப்பெறும் இளம் மாணவர்கள், இளம் குருமட மாணவர்கள், பொதுநிலையினரை முன்னிறுத்தி நடத்தப்பெறும் பணிக் குழுக்கள்... இவற்றிலெல்லாம் இக்கருத்தியல் பற்றிப் பேசுகின்றோமா?

தமிழ்நாட்டில் தேர்தல்சூடு வேகமெடுத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரிய பரப்புரைகளை முன்னெடுத்துவரும் கட்சிகள் கடுமையான வெப்பத்தையும் கண்டுகொள்ளாது பணியாற்றி வருவது கண்டு, நம் போன்ற மதச்சிறுபான்மையினருக்கு ஒரு பாடத்தைத் தந்திருக்க வேண்டுமே!

இக்கட்டுரையில் மதச்சிறுபான்மையினரின் நிலைப்பாடு பற்றியே கவலைகொள்ள வேண்டிய அவசியம் நோக்கி எச்சரிக்கும் வகையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

அனல் பறக்க நடத்தப்பெறும் பரப்புரைகளின் வேகம் கிறித்தவர்களின் மீதும் சில தாக்கங்களை உருவாக்கி வரும் என்பதும் உண்மையே. அண்மையில் ஊடகங்களின் செயற்பாட்டு வழி நம்மவர்களும் புதிய செய்திகளை அறிந்திருப்பர்; ஒருவகை நிலைப்பாட்டை எடுத்திருப்பர்.

திரு அவைதேர்தல் நிலைப்பாடுஒன்றை முன்னெடுத்து மக்களுக்குத் தந்தாலும் கிறித்தவருள் பெரும்பான்மையோர் உறுதியாக மோடியை உள்ளடக்கிய பாரதிய சனதா கட்சிக்கு உறுதியாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டில் வாழும் இசுலாமியர் கட்சி ரீதியாக அல்லது அமைப்பு ரீதியாகப் பிளவுபட்டுக் கிடப்பினும் பாரதிய சனதா எனும் மதவாத கட்சியினை எதிர்ப்பது என்பதில் மிகத் தெளிவோடு செயல்படுவர் என்பதே உண்மை. கிறித்தவர்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லையெனினும், கிறித்தவர் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் கட்சிகளோடு அமைப்புகளோ உருவாகவில்லையெனினும், இசுலாமியரைப் போன்று பெரும்பான்மைவாதம் பேசும் பாரதிய சனாதன எதிர்ப்பிற்குக் கிறித்தவருக்கு யாரும் பாடம் நடத்த வேண்டுவதில்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் பாரதிய சனதா கட்சி வேரூன்றாமைக்கும், ஆட்சியைப் பிடிக்க முடியாமைக்கும், மதச்சார்பற்றக் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கும் மதச் சிறுபான்மையினரின் தேர்தல் நிலைப்பாடு ஒரு காரணம் என மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. மேனாள்  .தி.மு.. அமைச்சர்கள் இருவர் தம் தோல்விக்கு, .தி.மு.. பாரதிய சனதாவோடு கொண்ட தேர்தல் உடன்பாடே காரணம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

கற்க வேண்டிய பாடம்

மண்டைக்காட்டைக் கலவர பூமியாக்கி நடத்தப்பட்ட கலவரத்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாட்டுக் கிளையான இந்து முன்னணி முன்னெடுத்த வகுப்புவாத நச்சினால் குமரி மாவட்டம் மதரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டது. குமரி மாவட்ட மக்கள் எப்போதும் மதரீதியாகத் தம் வாக்குகளைச் செலுத்தாத நிலையில், 80-கள் தொடங்கி குமரி மாவட்டம் மதத்தை அடிப்படையாகக்கொள்ளத் தொடங்கியது. மதரீதியாகப் பிளவுபட்ட குமரிச் சமூகம், பிரிவினைவாத அரசியலுக்கு ஆட்பட்டது.

குமரி மாவட்டக் கிறித்தவம் மதம் மறந்து, தாம் விரும்பிய கட்சிகளின் அடிப்படையில் தம் தேர்வை அல்லது தெரிவை எப்போதெல்லாம் செலுத்தியதோ, அப்போதெல்லாம் மதவாத பாரதிய சனதாவின் வேட்பாளர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற இவர் கடுமையான கிறித்தவ எதிர்ப்பாளர். கிறித்தவர்கள் கட்சி ரீதியாகப் பிளவுபட்டு மதவாதக் கட்சிக்கு வெற்றிக்கனியைத் தந்ததால், ஒன்றிய அரசியல் அமைச்சரும் ஆனார். மதச்சிறுபான்மையினர் சம அளவிற்கும் மேலான எண்ணிக்கையினராக இருந்தும் மதவாத எதிர்ப்பு, மதச்சார்பின்மைக்கு ஆதரவு, வகுப்புவாத எதிர்ப்பு என்ற அளவில் கிறித்தவர்கள் அணிதிரளாமல் அல்லது அணி திரட்டப்படாமல் விட்டதன் விளைவைக் கிறித்தவர்கள் இப்போதும் புரிந்துகொண்டார்களா? என்பது தெரியவில்லை. குமரிமுனையில் நடந்தேறிய அரசியல், தேர்தல் களத்தில் கிறித்தவர்கள் முன்னெடுக்க வேண்டிய யுக்திகளை அறிய வேண்டியுள்ளது.

குமரி மாவட்டத்தில் தேர்தல் காலத்து குமரிக் கிறித்தவர்கள் தம் பேதம் மறந்து கிறித்தவர்களாக ஒன்றுபட்ட போதெல்லாம் வெற்றி கண்டனர். தமிழ் நாட்டுத் தேர்தலில் நாம் கிறித்தவர்களாக ஒன்றுபடுவது மிக அவசியமாகிறது.

குமரிக் கிறித்தவர் சாதிபேதம் மறந்து, மதத்தால் ஒன்றுபட்டமையால் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற்றன. இதுபோன்று தமிழ்நாட்டுக் கிறித்தவர் ஒன்றுபடுவரா? கிறித்தவத்துள் புரையோடிப் போன சாதிப்பிரிவு இதனை ஏற்குமா? சாதியைக் கடந்தும், நாம் ஏற்றிருக்கும் கிறித்தவ அடையாளத்தை ஆதாயமாக்கி வெற்றியைக் கவர நினைக்கும் நபர்களை எப்படிப் புறந்தள்ளப் போகிறோம்?

தமிழ்நாடு முழுவதும் எட்டும் அளவிலான இளைஞர் படையோடு வலம் வரும் ஒரு நடிகர், தி.மு.. எனும் கட்சியைப் பெரிய தீய சக்தியாகச் சுட்டிக்காட்டி பரப்புரை நிகழ்த்துகிறார். தன் வாழ்வின் எப்பகுதியிலும் கிறித்தவச் சாயலே இல்லாத இவர், இவர் அறியாக் குழந்தைப் பருவத்தில்ஜோசப்என்ற பெயரைச் சூட்டியமையால் கிறித்தவராகிவிட்டாராம்! ‘ஜோசப்என்ற பெயர் திருச்சியின் ஒரு தொகுதியில் விலைபோகும் என்பதை அறிந்து கொண்ட இவரும் களம் காண்கிறார். ‘ஜோசப்எனும் பெயரைக் கொண்டாடுகின்ற கிறித்தவர் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்படுகின்றபோது காதடைந்துபோன இம்மனிதர், திருச்சி கிழக்குத் தொகுதியிலிருந்து சில கல் தொலைவு அருகிலிருக்கும் விரகாலூர் என்ற சிற்றூரைச் சார்ந்த அருள்பணியாளர் ஸ்டான் சாமி பற்றி அறிவாரா? நுனி நாக்கில் கூட உச்சரிக்க மறுக்கும் மதவாத பாரதிய சனதாவின் கொடுங்கோல் சட்டத்தினால் மரணித்தார் என்பது இவர் அறிவாரா? மூன்றாண்டுகளுக்குமுன் இறந்து போன இந்த அருள்பணியாளருக்கு, விரகாலூரில் கடந்த சூலை மாதம் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

ஜோசப்எனும் அடையாளத்தைத் தேர்தல் விலைபொருளாக மாற்றத்துடிக்கும் இவர், இவ்வருள்பணியாளருக்கு அஞ்சலி செலுத்துவாரா? கிறித்தவர்களுக்குக்கிறித்தவர்என்ற அடையாளம் கட்டிக்காக்கப் பெறவேண்டிய ஓர் உன்னத அடையாளம். இவ்வுண்மை அடையாளத்தைச் சுய ஆதாய நோக்கில் எவரேனும் சுரண்ட இடம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதே நம் நோக்கம்.

நாம் மதவாதிகளல்லர்...

நாம் கிறித்தவர்களாக ஓர் அரசியல் நிலைப்பாடு ஒன்றினை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையானது, நாம் மதரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக அல்ல; ஏனெனில், பெரும்பான்மை மதவாதத்தை எதிர்க்க ஒருங்கிணையவேண்டிய நாம், மதரீதியாக ஓர் அமைப்பை உருவாக்கி, மதவாதத்தை எதிர்த்திட முடியாது. வகுப்புவாதக் கருத்தியலை அடிநாதமாகக்கொண்டு இயங்கும் பெரும்பான்மை மதவாதத்தைச் சிறுபான்மை மதவாதத்தால் (Minority Communalism) எதிர்க்கவும் முடியாது.

பெரும்பான்மை மதவாதம், சிறுபான்மை மதவாதம் இரண்டும் மக்களின் சமத்துவத்திற்கு அறிவுப்பூர்வப் பார்வைக்கு எதிரானதுதான். மதரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பெரும்பான்மைவாதம் சனநாயகத்திற்கு, சமயச்சார்பின்மைக்கு எதிரானது என்பதில் தெளிவு ஏற்படுமானால்இன்று வளர்ந்து நிற்கும் மதப்பெரும்பான்மைவாதத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல், மதச்சார்பின்மை எனும் உயிர்க்கொல்லிக்கும், சனநாயகம் எனும் உயர்மாந்த மதிப்பீட்டிற்கும் உண்டு என்பதால், நாம் மதம் காக்கும் மனிதர்களாக, குழுக்களாக மாற வேண்டுவதில்லை என்பதனைப் புரிந்து கொள்வோம்.

மதவாதம், மத அடிப்படைவாதம், வகுப்புவாதம், மதவாதத் தேசியம் என்பனவெல்லாம், இன்று மிகப் பெரிய சிந்தனைக்குரிய செய்திகளாக (Discourse) மாறவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மத உணர்வைத் தூக்கிப்பிடித்து, மக்களை மடையர் களாக்கும் மதவாத அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாடு திரு அவை என்பது வெறும் நகரங்களில் செயல்படுகின்ற அமைப்பல்ல; நம் திரு அவை வெறும் திருக்கோவில்களோடு நின்று விடும் அமைப்பும் அல்ல. திரு அவை இந்நாட்டில் கால்கோள் கொண்ட காலத்திலிருந்து எங்கெல்லாம் வழிபாட்டுத் தலங்களை நிறுவியதோ, அங்கெல்லாம் சென்றடைந்த மக்களின் முழுவளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்தத்  திரு அவை என்பதனை வரலாறு அறியும். இந்த உண்மையை  எத்தனை பேருக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்?

இந்திய நாட்டில் வளர்ந்திருக்கிற இந்திய மதப்பெரும்பான்மைவாதம் வரலாற்றைத் திரிக்கிறது. இல்லையெனில், வரலாற்று உண்மைகளைக் கொச்சைப்படுத்துகிறது. வெறும் புராணக் காலத்துப் புனைவுகளை உண்மையெனத் திணிக்க முயற்சிக்கிறது. நாடு முழுவதும் நடத்தப்பெறும் நம் கல்வி நிறுவனங்கள் மூலம் இப்புனைவுகளை உடைக்கவும் தகர்க்கவும் என்ன செய்துவருகிறோம்?

இந்தியாஎன்ற நாட்டிற்குபாரதம்எனும் புதுப் பெயரிட்டு, இத்தேசத்தைஇந்துநாடென்று கூறிஇந்நாட்டில் இயங்கும் மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அமைப்பை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா?

இந்திய சனநாயகத்தையும், சனநாயகத்தின் உள்ளீடான சமயச்சார்பின்மையையும் போற்றும் தேசத்தில்தான், மதச்சார்பின்மையும் மதச்சார்பின்மையின் உள்ளீடான சமத்துவமும் பேணப்பெறும் என்பதில் மதச்சிறுபான்மையினர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மதவாதம் எனும் பிரிவினைக் கொள்கைஇந்தியாஎனும் அடிப்படைக் கொள்கைக்கு (Idea of India) எதிரானது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வாழும் நாட்டை நேசிக்கிறோம். நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக் காப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

மதரீதியாக மக்களை ஒருங்கிணைத்து (Polarize) மதச் சிறுபான்மையினரை அந்நியராக்கி, எதேச்சதிகார அரசு ஒன்றினை உருவாக்கும் முயற்சியினை, ‘வாக்குஎனும் அதிகாரத்தால் முறியடிப்போம் என்று உறுதியேற்போம்.

news
சிறப்புக்கட்டுரை
Ai உலகில் மக்களாட்சி (உலகம் உன் கையில்! – 20)

ஒரு கணிப்பு என்னவென்றால், 2030-க்குள், ஏறக்குறைய 75% மக்கள், சீனாவில் தயாரித்து உலகெங்கிலும் வினியோகிக்கப்பட்டு வரும் .. கண்காணிப்பு அமைப்புக்கு (Surveillance) அடிமைகளாகிவிடுவர் என்பது. இக்கருவி உலகின் ஒவ்வொரு குடிமகனின் அனைத்து அசைவுகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் திறன் பெற்றது. இதற்குடிஜிட்டல் சர்வாதிகாரம்  (Digital Authoritarianism)  என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, தொழில்நுட்பம் என்பது அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இது ஒன்றை மேம்படுத்தவும் அல்லது பலவீனப்படுத்தவும் கூடிய திறனையும் கொண்ட தொழில்நுட்பம், மக்களாட்சி முறைக்கு எவ்வாறு ஏற்புடையதாய் இருக்கிறதென்பதைச் சற்று ஆராய்வோம்.

ஆட்சியும் - அதிகாரக் குவியலும்

அனைத்து மக்களும் வெளிப்படையாகச் செய்திகளைப் பெறுவதும் பகிர்வதுமே மக்களாட்சி முறைக்கு அடித்தளமாக அமைகிறது. சமூக ஊடகங்கள் தவறான செய்திகளைப் பெரிய அளவில் (Mass) அவிழ்த்து விடுவதென்பது இதன் அடித்தளத்தை அசைக்குமென்பதும், நம்பத்தகுந்த செய்திகளை மக்கள் எளிதில் பெற இயலாமையும் மக்களாட்சி முறைக்கு ஆபத்தாக அமையும் என்கிறார் ஓர் ஆய்வாளார்.

சுதந்திரமும் நியாயமான (Free and Fair) தேர்தல்களை நடத்துவதாகக் காணப்பட்டாலும் வாக்காளர்கள் அரசு இயந்திரங்களுடன் போட்டியிட இயலாமலாகிவிடுவது நடைமுறை. ஆட்சி முறையில், அரசு இயந்திரங்கள் மூலம் கண்காணிப்பு நடைமுறையிலிருக்கும் நிலையில், தனிமனித உரிமை, சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் என்பவைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் நடு நிலை வகிக்க இயலுமா? என்கிற அச்சமும் உள்ளது.

சமூக ஊடகங்களும் - அரசியலும்

இன்று உலகளவில் வெகுசிலரே தொழில்நுட்பத்தை வழிநடத்துகின்றனரென்ற நிலை கேட்பதற்கு வியப்பாக இருக்கலாம். கூகுள், முகநூல், அமேசான் மற்றும் சில தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று வியப்பூட்டும்-மேட்டுக்குடியினருக்கான பரப்புரை (elite-propaganda) மற்றும் ஏற்க இயலாத செய்திகள் மூலம் கலாச்சாரத்தைச் சுற்றி வளைத்துக் குடியாட்சிமுறை தளர்விற்குப் பங்களிப்பதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ..யின்போலியின் போலி காணொளிகள்  (Deep Fake-videos) மேலும் வலுசேர்த்து நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன.

யூடியூப்மற்றும்டுவிட்டர்போன்ற வலையமைப்புகளும் தங்கள் வருவாய்த் திரட்டும் போட்டியில் சளைக்காமல் ஓடும் நிலையில், அரசியல்வாதிகள் தங்கள் விளம்பரத்திற்கும் பிரபலமாவதற்கும் பக்கபலமாக விளங்கும் இவற்றைக் குறித்துக் கண்டும் காணாமலிருப்பது, இதற்கான ஒழுங்கு வரையறைபின் வரிசையிலிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. பொதுவாக ..யும், இயந்திரச் செயலாற்றல் சார்ந்த தொழில்நுட்பக் கட்டுப்பாடும், முழுமையாக அவற்றை உருவாக்கியவர்களிடமே இருப்பதாலும், இவை முழுமையான வெளிப்படைத்தன்மை பெற்றவையென்று கூறமுடியாது. தொழில்நுட்ப வளங்களை உடையவர்கள் மக்களை வசப்படுத்தும் திறனையும் பெறுகிறார்கள் என்பது இயல்பு. முன்பு ஒருநாள், குடியாட்சி முறைக்குத் தூண்களென்று கருதப்பட்ட ஒருசில நாடுகளை இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் அசைக்கும் நிலையிலிருப்பதையும் பார்க்கிறோம்.

மக்களாட்சியும் புதிய தொழில்நுட்பங்களும்

தொழில்நுட்பம் பல தடைகளைத் தகர்த்து மக்களாட்சி அமைப்புகளையும் வழிமுறைகளையும் மேம்படுத்த உதவுகிறதென்றாலும், இவைகளின் இயல்பான வடிவமைப்புகள், அதாவது .தணிக்கை, கண்காணிப்பு போன்றவை சுதந்திர மக்களாட்சி முறைக்கு எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. இதனால் மக்களாட்சி முறைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்கும் நிலையும் உருவாகிறது. உலகளவில் இன்று தரவுகள் எப்போதையும் விட வலிமை பெற்றிருக்கும் நிலையில், இதனைச் சேகரிப்பதில் நிலவும் உலகளவிலானஎலிப் பந்தயம் (rat race) அனைத்து உரிமைகளையும் ஒடுக்கும் கருவியாக உருவெடுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

முதலாளித்துவமும் மக்களாட்சியும்

உலகளவிலான ஆட்சியமைப்புகள் வலிமையான முதலாளித்துவம்தளர்ந்த குடியாட்சிமுறையைச் சார்ந்தே உள்ளதென்பதை இன்று தொழில்நுட்பத்தின் பின்னால் மனிதன் செல்வதிலிருந்தே அறிந்துகொள்கிறோம். ஆனால், தளர்ந்த முதலாளித்துவம் - வலிமையான குடியாட்சி என்று ஒரு வேளை உருவாகும் தொழில்நுட்பமுமே குடியாட்சிக்கு ஏற்புடையதாயிருக்கும் என்று கருதப்படுகிறது. இன்று நடைமுறையிலிருக்கும் பெரும்பாலான தொழில் அமைப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வலிமையான முதலாளித்துவ நோக்கில் உருவாக்கி இயக்கப்பட்டு வரும் மாடலமைப்பைச் சார்ந்தும், தொடர்ந்து வளர்ச்சியடைந்தும் வருகின்றன. இது மேலும் விரிவடைதல் எவ்விதத்தில் மக்களாட்சிக்கு ஏற்ப அமையும்? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

தனிமனிதச் சுதந்திரமும் மக்களாட்சியும்

இன்று உலகம் தொழில்நுட்ப முதலாளித்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள்மீது மட்டுமன்றி, திரளான வாடிக்கையாளர் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், எல்லையில்லாக் கண்காணிப்பு என்பது இயல்பாகிவிடும். எனவே, தொழில்நுட்ப அடையாளப்படுத்துதல், கண்காணிப்பு அதிகரிப்பு என்பவை சமுதாயத்தில் தனிமனிதச் சுதந்திரத்திற்கான இடத்தைக் சுருக்கிவிடுவதாகப் பார்க்கப்படுகிறது.

நாம் இணையதளத்தையோ அல்லது கணினி தன்னியக்கத் தொழில்நுட்பத்தையோ அல்லது ..யோ குறைகூற முடியாது; ஆனால், இத்தொழில்நுட்பங்களைத் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாக அமைத்துக்கொள்பவர்களே சமத்துவ மற்றும் சம மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாய் இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார் ஓர் ஆய்வாளர்.

news
சிறப்புக்கட்டுரை
எண்ணெய்க்கும் நீருக்கும் இணைப்பை ஏற்படுத்தும் ஹோர்முஸ் நீரிணை

இயற்கையின் அமைப்பில் அதன் கொடைகளைஎல்லாருக்கும் எல்லாமுமேஎன்று மனிதகுலத்திற்குக் கடவுள் வழங்கியிருக்கையில், ஒரு நீரிணை, உலகையே உற்றுப்பார்க்க வைத்துள்ளது. எண்ணெய்க்கும் நீருக்கும் என்றுமே ஒட்டுறவு கிடையாது என்ற நிலையில், கச்சா எண்ணெய்க்கும், கடல் தண்ணீருக்கும் தொடர்பு உண்டு என்று ஹோர்முஸ் ஜலசந்தி  உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயைச் சுமந்து வரும் கப்பல்களுக்குக் கடல் நீரில் வழிவிடும் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையின்மீது தற்போது உலகத்தின் பார்வை திரும்பியுள்ளது.

புவியியல் அமைப்பு

ஹோர்முஸ் நீரிணை ஓமன் நாட்டின் முசந்தம் தீபகற்பத்திற்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு நீர்வழிப் பாதையாகும். இந்த நீரிணை ஆழம் மிகுந்ததும், கடல் சார்ந்த ஆபத்துகள் குறைவானதாகவும் உள்ளது. இதன் ஆழம் முசந்தம் தீபகற்பத்திற்கு அருகில் மிக அதிகமாகவும், ஈரானிய கடற்கரை நோக்கி வடக்கே செல்லச் செல்ல குறையவும் செய்கிறது. பாரசீக வளைகுடாவிற்கும், ஓமன் வளைகுடாவிற்கும் இடையே உள்ள இந்த நீர்வழித்தடம் வடக்கில் ஈரான், தெற்கில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளதுஇந்த வழித்தடம் தன் நுழைவுப் பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் ஏறக்குறைய 50 கி.மீ. அகலம் கொண்டுள்ளது. குறுகலான இடம் 33 கி.மீ. அகலத்தை உடையது. இதன் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் ஈரான் (வடக்கு), ஓமன் (தெற்கு) நாடுகளின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. இது பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கிறது.

ஈரானிய வளைகுடா கடற்கரைப் பகுதி, அதன் நில அமைப்பு மற்றும் காலநிலை காரணமாக, பொதுவாக மக்கள் அங்கே வாழ்வதற்கும், வளர்ச்சி அடைவதற்கும் உகந்ததாக இல்லை. இப்பகுதி ஆண்டு முழுவதும் வானிலை வறண்டதாகவும், வெப்பம் மிகுந்ததாகவும் உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் காணப்படும். புழுதியும் புகைமூட்டமும் காலைநேர மூடுபனியும் இந்த நீரிணையைக் கண்காணிப்பதைக் கடினமாக்கும். வறண்ட கோடை மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்கரையில் புழுதிப் புகை மூட்டம் மிகுந்திருக்கும். இங்கு வீசும் நிரந்தரமான கடற்காற்று ஈரப்பதத்தையும் புழுதியையும் கொண்டு வருகிறது. எனினும், தெற்கு ஈரானில் நடைபெறும் எண்ணெய் தொடர்பான செயல்பாடுகள், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தொடர்வதால் இப்பகுதிக்கு ஓரளவு வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது.              

ஹோர்முஸ் நீரிணை உலக எண்ணெய் போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. மேலும், ஆசியா-ஐரோப்பா வர்த்தக இணைப்பாகவும் விளங்குகிறது. இது சாதாரண கடல் பாதை அல்ல; உலகப் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிக்கும் முக்கியகழுத்துப்பிடிஆகும். உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான இதன் வழியாக எண்ணெய் சுமார் 20% - 30% இந்த வழியே செல்வதால் இந்த நீரிணைஉலக எண்ணெய் நரம்புஎன்றும் குறிப்பிடப்படுகிறது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழித்தடத்தின் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. சவுதி அரேபியாஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்த நீர் வழித்தடமே முக்கியமானதாகிறது. மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏறத்தாழ 40-50% வரை ஹோர்முஸ் நீரிணை வழியாக வருவதால், இந்த நீர்வழிப்பாதை இந்தியாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  

சட்டமும் கட்டுப்பாடுகளும்

ஐக்கிய நாடுகள் சபை விதிகளின்படி, நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரையிலான பகுதியைத் தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இது நிலப்பரப்பைப் போலவே கணக்கில் கொள்ளப்படும். இந்த அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணையும், அதன் கப்பல் போக்குவரத்துப் பாதைகளும் முழுமையாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகளின் பகுதிகளுக்குள் அமைந்துள்ளன. அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்திக் கண்ணி வெடிகளைப் பதிப்பதாலும், அதிவேகப் படகுகள் பெரும்பாலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆயுதங்களை ஏந்தியும் ஹோர்முஸ் நீர்வழிப் பாதையை ஈரான் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

எனினும், அனைத்து நாடுகளின் கடல்சார் சட்டத்தின்படி ஹோர்முஸ் நீரிணை ஓர் உலகளாவிய வழியாகக் கருதப்படுகிறது. அது ஈரான் நாட்டின் கடல் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அதில் பயணிக்கும் உரிமை உண்டு. அதைத் தடை செய்வது உலகளாவியத் தர நிலைகளின் விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது. தன் கடல் எல்லைக்குள் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையின் கடல்சார் பாதுகாப்புக் குறித்த கவலை ஈரானுக்கு இருந்தாலும், உலகின் சுமார் 20% கச்சா எண்ணெய் செல்லும் இந்த நீர்வழியை மூடுவது போக்குவரத்திற்கான பிற நாடுகளின் உரிமையை மீறுவதாகும். மேலும், இந்த நீர்வழிப் பாதையை மூடுவது என்பது ஈரானின் சொந்த எண்ணெய் ஏற்றுமதியையும் தடுக்கும் என்பதால், இது தற்கொலைக்கு நிகரான நடவடிக்கையாகவும் உள்ளது.

போர்ப்பதற்றங்கள் அல்லது தடைகள் காரணமாக இந்த நீர்வழியைக் கட்டுப்படுத்தும் தனது உரிமைக்காக ஈரான் வாதிட்டாலும், உலகளாவிய கடல்சார் சட்டத்தின் கீழ் அவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தப்படவில்லை. ஈரான் தன் கடற்கரைப் பகுதியைக் கட்டுப்படுத்தினாலும், வரலாற்று ரீதியாக அமெரிக்கக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை அப்பகுதியில் நிலைநிறுத்த முயற்சிக்கிறதுஇதுவே அடிக்கடி பதற்றங்களுக்கும் கடல்சார் மோதல்களுக்குமான சாத்தியக்கூறுகளுக்கும் வழிவகுக்கிறது.       

மோதல்களின் துவக்கப் புள்ளி 

ஒரு நாளில் தொடங்கியதல்ல ஹோர்முஸ் நீரிணைப் பிரச்சினை. பல ஆண்டுகளாக அரசியல், பாதுகாப்பு, போர், எண்ணெய் வணிகம் ஆகியவற்றால் உருவானது. 1970-களில் எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து மட்டுமே நடைபெற்றபோது, ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் போர்க் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்வதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால், 1980-களில் நிலைமை மாறிற்று. வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தங்கள் நாட்டின் நீர்வழிகளில் செல்வதற்கு முன் அனுமதி அவசியம் என வலியுறுத்தின.

1984-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈராக்கின் அதிபர் சதாம் ஹூசைன், ஈரானின் கப்பல் போக்குவரத்தைத் தாக்கினார். இதன்மூலம் ஹோர்முஸ் நீரிணையில் அனைத்துக் கடல்போக்குவரத்தும் இல்லாமல் செய்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தலையீட்டைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார். அவர் ஈரானின் கார்க் தீவில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் எண்ணெய்க் கப்பல்களையும் தாக்கியபோது ஈரான்-ஈராக்கின் டேங்கர் போர் தொடங்கிற்று. இதுவே ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்த முதல் கட்டமாகும். இந்தப் போரில் அமெரிக்கா ஈராக்கிற்குப் பொருளாதார, உளவுத்துறை மற்றும் மறைமுக இராணுவ ஆதரவை வழங்கியது

இத்தகு பதற்றமான சூழலில் 1988-இல் பாரசீக வளைகுடாவில் உள்ள உலகளாவிய கடல் பகுதியில் ஈரானியக் கடற்படை கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்க, அதன் விளைவாக அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று சேதமடைய, அப்போது அமெரிக்க ஆயுதப் படைகள் நேரடியாகவே ஈரானியக் கடல் எல்லைக்குள் தாக்குதல் நடத்தின. அப்போது தொடங்கியது அமெரிக்காவின் ஈரானிய போர்ச் சிக்கல்கள். ஈரான்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வழித்தடத்தை மையமாக வைத்துத் தவறான தாக்குதல்கள், அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள், எண்ணெய் மாசுபாடு போன்ற காரணங்களால் அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுடன் ஈரான் பிரச்சினைகளை ஏற்படுத்தி, தானும் பிரச்சினைகளில் சிக்கியது.

ஈராக்கில் செய்தது போலவே ஈரானிலும் அமெரிக்க வல்லரசு ஆதிக்கமிக்க அரசியல்  விளையாட்டுகளைத் தொடர்ந்தது. 2000-ஆம் ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராகப் போராடும் போராளிக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் கப்பலைக் கைப்பற்றுதல், கடற்படைத் தகராறு, எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல் எனவும், ஒருவருக்கொருவர் தடை விதித்தல் மற்றும் தடை மீறுதல் எனவும் வெவ்வேறு விதங்களில் மோதல்களும் தாக்குதல்களும் போர்களும் இன்றளவும் தொடர்கின்றன.

நெருக்கடிக்குள் இன்றைய உலகம்

2025 இறுதியில் ஈரான் நாடு பெரும் போராட்டத்தைச் சந்தித்தது. போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவும் உதவியும் அளித்தது. இதற்கிடையே அணுசக்திக் குறைப்பு குறித்த பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்தன. எனினும், 2026 பிப்ரவரியில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈராக்மீது திடீர் வான்வழித் தாக்குதல்களை நடத்திட அமெரிக்க-ஈராக் போர் தொடங்கியது. அதன் தலைவர் கமேனியும், உயர் அதிகாரிகளும் கொல்லப்பட, பதிலடியாக அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள அண்டை நாடுகள்மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது.

மார்ச் 2 அன்றுஇனி ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்ல அனுமதியில்லைஎன்று அறிவித்தது ஈரான். இதனால் பல கப்பல்கள் துறை முகத்தில் தங்கிவிட்டன அல்லது திரும்பிச் சென்றன. ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதால் எண்ணெய் சந்தைகளில், அதன் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் பல நாடுகளுக்குச் சமாளிக்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்தது. எனினும், முற்றிலும் கடல் சார்ந்த ஈரானின் பொருளாதாரமும், கடல்வழிப் பாதை வழியாக எண்ணெய் ஏற்றுமதிகளும் பொருள்கள் மற்றும் கப்பல்கள் தடையின்றிச் செல்வதைச் சார்ந்தே உள்ளதால், இந்த நீர்வழிப்பாதை ஏற்றுமதிகளுக்கு இன்றியமையாதது என்ற நிலையில் வழித்தடத்தை மூடிவைக்கும் ஈரானும் பொருளாதாரத் தற்கொலைக்கு உள்ளாக நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் பல நாடுகள் மட்டுமல்ல, இறக்குமதி, ஏற்றுமதிக்காக ஈரானும் இந்த நீர்வழிப்பாதையைச் சார்ந்திருப்பதால் நீண்டகாலம் ஹோர்முஸ் நீரிணையை மூடிவைப்பது ஈரானுக்கும் சாத்தியமில்லை.

எது எப்படியோ, எண்ணெயும் தண்ணீரும் சேர்ந்திருப்பதில்லை என்றாலும், அதிகாரப் பசியுடையோரின் இந்தப் போர் எண்ணெயையும் தண்ணீரையும் சேர்த்து வைத்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

news
சிறப்புக்கட்டுரை
மதில் பூனைகள்

மனித மனம் எதிலும் நிறைவு கொள்ளாது; குறைவில் தொக்கி நிற்கும் நிறைவையே தேடும். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் எல்லாம் இருக்கிறது; ‘ஏதோ ஒன்று குறைகிறதே?’ எனும் நிலை உள்ளது. வாக்காளர்களில் 15 முதல் 20 விழுக்காட்டினர் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். எந்தக் கட்சியையும் சாராத அவர்களே தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயம் செய்கிறார்கள். மதில்மேல் உள்ள பூனை காரணமின்றி அல்லது காரணங்களோடு இடதோ  வலதோ குதிக்கலாம்.

தேர்தல் களப் படிநிலைகள் என்பது கூட்டணி அமைப்பு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பரப்புரை செய்தல் என்பதே. தேர்தல் களத்தில் கூட்டணி என்பதே இணைந்த  கட்சிகளின் செல்வாக்கை  உயர்த்தி, சேர்ந்த கூட்டணியின் வெற்றியை உறுதி செய்கிறது. மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை இடது முன்னணி 34 ஆண்டுகள் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்து பெரும் வெற்றியை ஈட்டியது. மேற்கு வங்க இடதுசாரிக்  கட்சிகளை ஒருங்கிணைத்து 1977 முதல் 2000 ஆண்டு வரை முதலமைச்சராக, அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் ஜோதிபாசு. அதே  அரசியல் சூத்திரம் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடந்தது. சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநிலச் சுயாட்சி என்ற கொள்கை கொண்ட இடதுசாரிக் கட்சிகள் ஓரணியில் இணைந்தனர். அன்றைய ஆளும் .தி.மு..-வுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தொடங்கிய கூட்டணி, 2026 தேர்தல் களம் வரை சிறு சிறு சலசலப்புகள் இருப்பினும் தொடர்கிறது.

தேர்தல் களத்தில் சமபலம், சமவாய்ப்பு, உள்ளதா?’ எனும் கேள்விக்கு விடைகள்இல்லைஎன்பதே  பதிலாகும். தேர்தல் பெரும் செலவு செய்யும் கோடீஸ்வரர்களின்  கையில் உள்ளது. சாமான்ய மக்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்; வாக்காளர்களாக இருக்கலாம்; ஆனால், பங்கேற்பாளர்களாக இருக்க வாய்ப்பும் இல்லை, வசதியும் இல்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் சிறுபான்மையோர் மற்றும் பெண்களுக்கான பங்களிப்பு இல்லை. இசுலாமிய சமுதாயம், விடுதலைக்கு முன்னிருந்து களப்பணியாற்றிப் போராடியதால் மதச்சார்பற்ற கூட்டணியில் 11 இடங்களில் போட்டியிடுகிறார்கள். என்.டி.. கூட்டணியில் ஒரேயொருவர் மட்டுமே போட்டியிடுகிறார். இசுலாமிய சகோதரர்கள்எடப்பாடி பழனிச்சாமி  தனது நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எங்களுக்கு மந்திரி சபையில் இடம் தராதவர்தானே!” எனக் கொதிக்கிறார்கள். அது அவரது கூட்டணிக் கட்சியான பா... கட்சியின் நிலையின் பிரதிபலிப்பாகக்கூட இருக்கலாம்.

கிறித்தவச் சிறுபான்மையோர் பத்து ஆண்டுகளாக அரசியல் பேசுவதைக் காண்கிறோம். அதில் நமதுநம் வாழ்வுவார இதழ் கொடுத்த அரசியல் விழிப்புணர்வும் அடிப்படைக் காரணம் என்றால் மிகையில்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கட்சிகளின் கிறித்தவ வேட்பாளர் இனிகோ இருதயராஜ் குறிப்பிடத்தக்கவர். அவர், “நான் ஓர் இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்என்று கூறுகிற தன்னம்பிக்கை, நமது கிறித்தவ வாக்குகளின் கூட்டுச் சக்தி  தவிர, வேறு எதிலும் இல்லை எனக் கட்டியம் கூறலாம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கான சமவாய்ப்பு எல்லாக் கூட்டணிகளிலும் மறுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், நான்காவது அணியானநாம் தமிழர்கட்சியில் 50% பெண் வேட்பாளர் என்ற நிலையைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம்.

இனி தேர்தலின் அடுத்த நிலையான தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பார்க்கலாம். அனைத்துக் கூட்டணிகளின் வாக்குறுதிகளும், “நீ என்னைப் பார்த்துப் படி எடுத்தாய்எனக் குழந்தைத்தனமான குற்றச்சாட்டில் நிற்கிறது. சங் பரிவார் மற்றும் வலதுசாரிகள் அரசின் இலவசங்களை எதிர்க்கிறார்கள். மாநிலக் கட்சிகள், மாநில அரசுகள் மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகள், திட்டங்கள், மாநில அரசுகளின் கடன் சுமை உயர்கிறது என வாதம் வைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இலவசத் திட்டங்களில் உடன்பாடு இல்லை. ஆனாலும், மாநிலத் தேர்தல் வெற்றிகளுக்காக பா...வும்  இலவசத் திட்டங்களுக்குக் கட்டாயமாக உட்படுகிறது. அதுவே தேர்தல் எனும் வாக்கு வங்கி அரசியல் எனலாம்.

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் .தி.மு..வின் குளிர்சாதனப் பெட்டி என்ற வாக்குறுதியும், தி.மு..வின் ரூபாய் 8000-க்கான மின்னணுச் சாதன வீட்டு உபயோகப் பொருள் கூப்பனும் மக்கள் மனத்தில் பதிவதைக் களத்தில் கண்கூடாகக் காண்கிறேன். மகளிர் உரிமைத் தொகை உயர்வு 2000, 2500, 3000 என்ற ஏல உயர்வும் எல்லாக்  கூட்டணிகளையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்துகிறது.

வாருங்கள்... தேர்தல் பரப்புரைக்குக் காது கொடுப்போம். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். தமிழநாடு அரசை நடத்த முடியாமல் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் தலைவலி கொடுத்தவர் மேனாள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. அவர் தனது பணிமாற்றத்திற்குச் சில  நாள்களுக்கு முன்பு, “தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்எனச் சான்று வழங்கி  உள்ளார்.

தேசியக் குற்றப் பிரிவு தரவுகளின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் நடமாட்டம், போதைப்பொருள் பயன்பாடு என்ற பட்டியலில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களில் இல்லை என்பதே உண்மை. முதல் பத்து இடங்களில் பா... ஆளும் மாநிலங்களே உள்ளன என்பது மறுக்க முடியாத நிலை. கடந்த காலங்களில் .தி.மு.. ஆட்சியில் குட்கா வழக்கு, ரெய்டு, சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தலைமைச்  செயலகம் வரை நடந்ததை மறந்து, என்.டி.. கூட்டணியினர் வெற்றுக் கூச்சலிடுகிறார்கள். இது சம்பந்தமான அமைச்சர் மீதான கோப்பு ஆளுநர் மாளிகையில் தூங்குகிறது.

இந்தியாகூட்டணியினர் தமிழ்நாடு தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் மறுக்கப்படும் மாநில உரிமைகள், நிதி ஆதாரங்கள், திட்டங்கள் என்பதில் வலுத்த வாதங்களை வைக்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடைமுறை செய்யப்பட்ட பின்பு மாநில அரசின் வருவாய் 95% குறைந்துவிட்டது. ஒன்றிய அரசு வரிப்பகிர்வில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படுகிறது. பா... மற்றும் பா... கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது. தமிழ்நாடு செலுத்துகிற ஒரு ரூபாய்க்கு 23 காசுகள் திருப்பிக் கிடைக்கின்றன. பா...வின் இரட்டை இஞ்சின் ஓடுகிற பீகாருக்கு, ஒரு ரூபாய் பெற்றால் 7 ரூபாய் திருப்பித் தருகிறது. இருந்தாலும், பீகார் மாநிலத்தோடு தமிழ்நாட்டை ஒப்பீடு செய்தால், ஐம்பது ஆண்டுகள் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கிறது என்பதே கண்கூடு. பலமுறை வட மாநிலங்களில் பயணம் செய்தவன் என்ற முறையில் கூறுகிறேன்: ‘தமிழ்நாடு பூலோக சொர்க்கமாக உள்ளது.’ நாம் வளர்ச்சியின், சமூக அமைதியின் பாதையில் தெளிவாகப் பயணிக்கிறோம்.

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது அணிகள் உள்ளன. இவர்கள் கட்டுத்தொகையைத் தவறவிடுவோம் எனத் தெளிவாகத் தெரிந்திருந்தும் களம் காண்கிறார்கள், மாயம் காட்டுகிறார்கள், மாயமானாக ஓடுகிறார்கள்.

விலைமதிப்பில்லா நம் சனநாயக உரிமையான நம் வாக்குகளை நாம் இவர்களுக்கு அளித்து, வீண் விரயம் செய்யக் கூடாது. தமிழர்களின் வலிமைமிகு கூட்டு மனசாட்சி கூறுகிறது: சமூக நீதி, சமதர்மம், சமயச்சார்பின்மை கொண்ட வெற்றிப் பாதையில் நட்சத்திரமாய் உள்ள மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
2026 தேர்தல்: தமிழ்நாடு வெல்லட்டும்!

தமிழ்நாடு ஒரு புவிப்பரப்பு மட்டுமல்ல; புவிப்பரப்பு மட்டுமாயின், அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை எல்லைக்கோடுகளால் நிர்ணயிக்கலாம். காவலர்களால், அவர்கள் தரித்த கவசங்களால் காத்துக்கொள்ளலாம்.

வாழும் தேசத்திற்கு ஆபத்து என்பது பகை அரசுகளால் வரும் என்பதும், எதிர் அரசின் படைபலத்தால் எதிர்ப்படை வெல்கையில், நாட்டு வளம் சூறையாடப்படும் என்பதுவும், தமக்குத் தமக்கென்றிருந்த நாடு தம் கை நழுவிப் போகையில் சொந்தம் கொண்டாடி மகிழ்ந்த நாட்டு மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுவதையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இப்போதும் பார்த்தும் வருகிறோம்.

இந்தியா என்ற நிலப்பரப்புள் ஒருங்கிணைப்பட்ட தமிழ்நாட்டின் எல்லைக்கோட்டை நிர்ணயிக்கவும் காக்கவும் இன்று தமிழ்நாடு அரசு தனிக் காவல்படைகளை எல்லையோரத்தில் நிறுத்திட அவசியம் இல்லை; அப்படித் தேவைப்படுமாயின் தமிழ்நாடு ஏற்றிருக்கும்இந்தியாஎனும்தேசங்களின் நாடுஅப்பொறுப்பை ஏற்கும்.

இன்றைய சவால் என்ன?

தமிழ்நாடு எல்லையோரப் பாதுகாப்புப் பற்றி இன்று எங்கும் கவலைகொள்ள வேண்டுவதில்லை. இந்திய ஒன்றியமே பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும். ஆனால், எல்லையோரப் பாதுகாப்பைத் தாண்டி, தமிழ்நாடே பறிபோய்விடுமோ என்ற அச்சம் இன்று எழுந்துள்ளது. தமிழ்நாடு என்பது அதன் நிலப்பரப்பைச் சொல்லவில்லை. தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளான கலாச்சாரம், கலாச்சாரத்தின் பெரும் பகுதியான மொழி, வாழ்வு அறங்கள் என்பனவெல்லாம் கபளீகரம் செய்யப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் எழுந்துள்ளது.

இந்தியம்என்று அழைக்கப்பட்ட இந்த இந்தியத்துள், இந்திய நாட்டின் பன்மைக் கலாச்சாரப் பண்புகள் அபகரிக்கப்பட்டு, சீரணிக்கப்பட்டு, அடையாளமே தெரியாமல், சிதைவுண்ட நிலையில், தமிழும் தமிழ் மண்ணின் கலாச்சாரச் செழுமைகளும் வடவர் ஊடுருவலால் விழுங்கவிருந்த காலத்தில் தமிழ்நாடு ஆடித்தான் போனது. திராவிடக் குடும்பத்து மொழிகள் பல வழக்கிழந்த சமஸ்கிருத மொழித் தாக்கத்தால் சிதைந்து போயின. தமிழையும் தாக்கியிருந்த நிலையில், தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. ‘தெய்மொழிஎன்றும்நீச பாஷைஎன்றும் பிரித்துக் கேலி செய்யப்பட்ட நிலையில், வடமொழியே உலகத் தாய் மொழியென்று புனையப் பெற்றிருந்த சூழலில், திராவிட மொழிகளைத் தனியே இனங்கண்டு அடையாளப்படுத்தி, திராவிட மொழிக் குடும்பத்தைக் கட்டமைத்து, திராவிடத்திற்குத் தனி மதிப்பையும் அடையாளத்தையும் தந்தவர் கால்டுவெல் எனும் பேரரசன்.

ஒரு கிறித்தவ மதப்போதகர் தம் பணியின் எல்லையையும் மீறி செயல்பட்டதால் திராவிடம் அடையாளப்படுத்தப்பட்டது. திராவிடத்துள் இயங்கிய மொழிகளுள் ஒன்றான தமிழ் மேன்மையுறும் வகையில், இந்திய மொழிகளுள் தமிழ் மட்டுமே தனித்தியங்கவல்லது என்ற உண்மையையும் அறிவியல்பூர்வமாக ஆய்ந்தறிந்து வெளியிட்டார் அவர். மறைப்பணியாளர் ஒருவர் மிகவும் பின்தங்கிய பகுதியொன்றில் என்ன வசதிகளோடு வாழ்ந்திருக்க முடியும்? அவர் பணி செய்த பணித்தளங்களில் வாழ்ந்த நாடார் மக்களின் வாழ்நிலையை ஆய்வு செய்து எழுதியுள்ளதிருநெல்வேலி சரித்திரம், ‘சாணார்கள் சரித்திரம், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்பனவெல்லாம் ஒவ்வொரு தமிழனும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. இன்றைய இந்துத்துவர்கள், திராவிடத்தை அடையாளப்படுத்திய கால்டுவெல் அவர்களைபிரிவினைவாதிஎன்றழைத்தனர்.

இறையியலையும் மானுடவியலையும் மொழியியலையும் ஒரு தனிமனிதன் கற்றறிந்து, தான் தெரிவு செய்து பணியாற்றிய நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்த கால்டுவெல் பற்றித் தமிழனுக்குத் தெரியாது. கிறித்தவ மறைப்பணியாளராம் இவர் பெயரை எத்தனை கிறித்தவர் அறிவர்?

இன்று நாம் பேசும் திராவிட மாடல், கால்டுவெல் கொடுத்த கொடை. தமிழ்நாட்டில் தோன்றிய திராவிடச் சித்தாந்தத்திற்கு உள்ளடக்கம் தந்தவர். நீதிக்கட்சியென்றும், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றும், பிற்படுத்தப்பட்டோர் இயக்கம் என்றும், தனித்தமிழ் இயக்கம் என்றும், சுயமரியாதை இயக்கம் என்றும் தோன்றிய அனைத்து இயக்கங்களுக்கும்  வடிவமும் உள்ளடக்கமும் தந்தவர் இவர். திராவிடத்தைப் புரிந்து அதற்கு ஏற்றம் தந்த இந்த மனிதரை, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் எனதிராவிடஎனும் முன்னொட்டைக் (adjustive) கொண்டு இயங்கும் கட்சிகளுக்கு ஓர் ஏற்புடையமையைத் (Legitimacy) தந்தவர் கால்டுவெல். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் பேசி வாக்குகளைத் தேடியலையும் ஒருவர், கால்டுவெல் அவர்களை வெறும் மதம் மாற்றுபவராக மட்டுமே சித்தரிக்கிறார்.

திராவிட மாடல் அரசினைத் தமிழ்நாட்டில் நடத்துவதாகச் சொல்லி வருகிறார் தமிழ்நாடு முதல்வர். திராவிடத்தை முதன்மைப்படுத்தும் முதல்வருக்கும், அவரின் இயக்கம் சார்ந்தோருக்கும் திராவிடம் என்ற சொல்லாக்கம் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கலாம்; தெரிந்தோ, புரிதல் இல்லாமலோ உரத்து உச்சரிக்கப்படுகிறது என்பதால் மகிழ்ச்சியே! மட்டுமின்றி, நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் புதுடெல்லிக்குமான போர் எனறு அறிவித்துள்ளமை பாராட்டிற்குரியது.

திராவிட இயக்கமும், சமூக நீதி இயக்கமும் என்ன காரணம் பற்றித் தோற்றம் எடுத்தனவோ, அக்காரணங்கள் அனைத்தும் இன்றும் பெரியார் தோன்றிய தமிழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தவே முயன்று வருகின்றன என்பதே உண்மை.

தமிழ்நாடு வெல்லவேண்டும்

விடுதலை பெற்ற இந்தியா கண்ட சனநாயகம் எனும் கனவு, பல சமயங்களுடைய நாட்டில் பல்சமய நல்லிணக்கமும் சமத்துவமும் பேண, மதச்சார்பின்மையைப் பேணவேண்டும் என்ற கனவு, பொருளாதார ரீதியாக ஆதிக்க நாடுகளாகப் பிளவுபட்டிருந்த காலத்திலும், சோசலிசத்தை உயர் கொள்கையாகக் கொண்டிருந்த இந்திய அரசும், அவ்வரசுக்குத் தலைமையேற்ற பண்டித நேருவும், ‘அணி சேராமைஎன்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று இந்திய இறையாண்மையைக் காத்த இந்தியாவின் சனநாயக அரசு, இன்று அதன் அழகுக்கு வலுசேர்த்த அனைத்துக் கவசங்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள நிலை.

இன்றைய ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் தனித்துவத்தைப் பேணும் அரசல்ல; கார்ப்பரேட்டுகளின் நலன் நாடும் ஓர் அரசு. இந்த அரசு, சமூக நீதி காக்கும் அரசாக இருக்க முடியாது. திராவிடம் பேணிய சமூக நீதியை மறுக்கும் ஒன்றிய அரசு சனநாயகப் பண்பை நாளும் மறுக்கும் நிலையில், இதனை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கமுடியாது. பன்மையை மறுத்து, ஒற்றையைப் பேணும் ஓர் அரசு, சனநாயகத்திற்கு எதிரான எதேச்சதிகார அரசாகத்தான் இருக்க முடியும்.

தமிழ்நாட்டில் எண்பதுகளில் மண்டைக்காடு கலவரத்தைத் திட்டமிட்டு உருவாக்கி அரசியல் ஆதாயம் காண முயன்று, இன்று ஆட்சியில் வெற்றியும் கண்டுள்ளது. இன்று குமரி மண் அமைதிப் பூமி அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, திட்டமிட்டு நடத்தப்பட்ட பகை அரசியலால், இந்த மண் குமரி காவிமயமாகியது. இன்று திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பெறும் பொய்ப்பரப்புரைகளால், தமிழர் முகமான முருகப் பெருமானைக் காவியாக்கவும் அதன்மூலம் வாக்கு அரசியலில் வெற்றிபெறவும் முயற்சிகள் திட்டமிட்டே நடத்தப்பெறுகின்றன.

தமிழ்நாட்டை ஆண்ட ஒரு கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மதவாதக் கட்சிகளல்ல; ஆனால், அரசியல் இலாபம் கருதி, அதுவும் தி.மு.. என்ற ஒரே அணியை வீழ்த்துதல் என்ற ஒற்றை நோக்கில் அணிதிரண்டுள்ள கட்சிகள் யாரை நியாயப்படுத்துகின்றன? எந்தக் கோட்பாட்டிற்குத் துணை நிற்கின்றன?

சனநாயகம் மக்களின் பங்கேற்பை, சமப் பங்கேற்பை உறுதிசெய்யும் என்பர். இந்தச் சமப் பங்கேற்பில் மதச்சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக ஒதுக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் குறித்து எங்கேயாவது அல்லது எப்போதாவது இவ்வணிகள் கவலைப்பட்டதுண்டாகுரல் எழுப்பியதுண்டா?

தமிழ்நாட்டில் கிறித்தவருக்கென்று தனிக்கட்சி இல்லை; அது தேவையும் இல்லை. இன்றைய ஒன்றிய அரசு, மதச்சிறுபான்மையினரை ஏற்கும் அரசியல் என்பதனை அனைவரும் அறிந்த நிலையில், கிறித்தவர்கள் இவ்வணியினரை ஆதரிக்க மாட்டார்கள் என்பதே உண்மை. கிறித்தவர்கள் கொலை செய்யப்பட்ட ஸ்டான் சாமியை மறவார்; மண்டைக்காட்டையும், ஒடிசாவின் காந்தமாலையும், கொலை செய்யப்பட்ட அருள்பணியாளர் அருள்தாசையும், அருள்சகோதரி இராணி மரியாவையும் மறவார்கள்.

கிறித்தவப் பெயர் வைத்திருப்பதால், கிறித்தவர் வாக்குகளைப் பெற ஓடி ஓடித் திரியும் சந்தர்ப்பவாதிகளையும் நாம் புரிந்துகொள்வோம். ஒன்றிய அரசின் சிறுபான்மைச் சமயங்களின் இருப்பு பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், ‘கொள்கை எதிர்ப்புஎன்ற ஒரே சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் உச்சரித்து, ஒன்றிய அரசின் எந்தக் கொள்கையையும் விமர்சிக்கத் திராணியற்றவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டுவது கடமையாகும்.

இசுலாமியர் எனும் ஒற்றைச் சமய எதிர்ப்பில், அரசியல் நடத்தும் ஒன்றிய அரசின் போக்கைப் புரிந்துகொண்ட இசுலாமியர், அதன் எதிர்ப்பில் தீவிரம் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பல பிரிவுகளாக, கட்சி ரீதியாக இவர்கள் பிரிந்து நிற்பினும், தமிழ்நாட்டுத் தேர்தலில் பிரிவுகள் அனைத்தும் மதச்சார்பற்ற கூட்டணியுள் அணி சேர்ந்திருப்பதைப் பார்க்க  முடிகிறது. அணிகள் பலவாயினும், நோக்கம் ஒன்று என்பதனால் பிளவுபடாது நிற்கும் போக்கு மகிழ்ச்சி தருகிறது.

தமிழ்நாடு தனித்து நின்று, தன் அடையாளத்தைக் காக்கவேண்டிய தருணம் இது. எப்போதும் வடவர் ஆதிக்கத்தை, வடவர் மொழியை, வடவரை முக்கியப்படுத்துவோரின் மேலாதிக்கத்தை (Hegemony) எதிர்த்து வெற்றி கண்டு வரும் தமிழ் மண் வெற்றிபெறும்.

ஆம், வெல்லும்!

news
சிறப்புக்கட்டுரை
தமிழ்நாடு VS டெல்லி

தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைவிட, தேர்தல் கூட்டணி அமைப்பே பெரும் சவால். தி.மு.. மற்றும் .தி.மு..  என இருபெரும் கழகங்களும் சந்தித்த அழுத்தங்கள் பெரும் துன்பவியல். தேசியக் கட்சிகள் எனும் காங்கிரஸ் மற்றும் பா... கட்சிகள் மாநிலக் கட்சிகளை நசுக்கிப் பிதுக்கிவிட்டன. தி.மு..வின் கனிமொழி கருணாநிதி காங்கிரஸ் கட்சியிடம் தூது போனார். காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால், கீரிஷ் சோடங்கர் எனத் தி.மு..விடம்.வெ.. பூச்சாண்டிகாட்டி தி.மு..வை   நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

.தி.முக.வின் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச ஐந்து முறையும், கூட்டணி முடிவானவுடன் தொகுதி பேரம் பேச நான்கு முறையும் மொத்தம் ஒன்பது முறை டெல்லி சென்றார். பலமுறை இரகசியப் பயணமாக கார் மாறி கார் சென்று, இறுதியில்  தனித்துச் சென்று கூட்டணியை முடிவு செய்தார்.

புது டெல்லியில் எடப்பாடி  பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்கள் நலன் குறித்துப் பேசினாரா? தொடர் இந்தித் திணிப்புக் குறித்து வாய் திறந்தாரா? பா...வின் மதவாதம் குறித்து அறிவாரா? தமிழ்நாட்டுத் திட்டங்கள் குறித்து  அழுத்தம் கொடுத்தாரா? போதிய நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தருவாரா? சனாதனத் திணிப்பு குறித்துக் குரல் கொடுப்பாரா? போன்ற கேள்விகளுக்கு விடையாக எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவைச் சந்தித்தார். என்.டி.. கூட்டணி முடிவானது என்கிறார்கள். தமிழ்நாடு என்.டி.. கூட்டணிப் பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் பிடி கொடுக்காத எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார் என்பதே .தி.மு..வின் அடிமை அரசியலாகும்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்என்பதைப் போல, ஒரு காலத்தில் டெல்லி அரசியல் தலைவர்கள் போயஸ் தோட்டத்தில் அம்மாவின் தரிசனம் பெற அழைப்பிற்குக் காத்திருப்பார்கள். இதைப் பலரும் சுட்டிக்காட்டிய பின் அமித்ஷா ஆணைப்படி, இராயப்பேட்டை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் என்.டி.. கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமானது. 2024 - மக்களவைத் தேர்தல் முதல் .தி.மு..வுடனான பா... கூட்டணிக்குப் பாடுபட்ட ஜி.கே. வாசன் எம்.ஜி.ஆர். மாளிகை செல்லவில்லை. அவர் தனியே பியூஸ் கோயலைச் சந்தித்துத் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்கிறார்.

தேர்தல் களத்தைப் பொறுத்தவரைத் தேர்தல் திட்டமிடுதல் தொடங்கி கூட்டணி என்பதிலும், தேர்தல் பணிகளைக் கட்டமைப்பு செய்வதிலும் தி.மு.. தொடக்கம் முதலே முதல் பந்திலிருந்து கடைசி பந்துவரை ஆக்ரோச அதிரடி வெறியாட்டம் நடத்தும். பந்து வீச்சு என்றால் பவுன்சர், கட்டர், ஸ்பிளிட்ஸ் என மட்டையாளரை மடக்கும். தடுப்பாட்டம் நடத்தத் தூண்டும். தி.மு.. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எல்லா நிலைகளிலும் பூதாகரமாய் எழுந்து நிற்கிறதுமக்கள் நலத்திட்டங்கள், கட்சிக் கட்டமைப்பு, பலம் வாய்ந்த கூட்டணி, நுண்ணியல் தேர்தல் பணிகள், பணபலம், ஆட்சி பலம் என வலுவாய் உள்ளது.

.தி.மு..வைப் பொறுத்தவரை தொடர் தோல்விகளிலிருந்து மீளவேண்டும். தி.மு.. அரசின் மீதான அதிருப்தி வாக்குகளைப் பெறவேண்டும். என்.டி.. கூட்டணி ஆட்சி என்பதிலிருந்து தப்பிக்க தனிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து வெற்றி பெறுவது என்பதும் கட்டாயமானது. 2021-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் 21 தொகுதிகளில் .தி.மு..வின் வெற்றியை ..மு.. தடுத்தது. அதே வழியில், 2026 தேர்தலில் மருத்துவர் இராமதாஸ் அவர்களும், சசிகலா அவர்களும் .தி.மு.. வாக்குகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். தி.மு.. எதிர்ப்பு வாக்குகளை நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என மேலும் இருவரும் பிரிக்கிறார்கள்.

நடிகர் விஜய் அவர்களை .தி.மு.. கரூர் பெருந்துயர நிகழ்வில் தாங்கியது. .தி.மு.. கூட்டணிக்காகத் .வெ..வை விமர்சிக்க மறுத்தது. அரசியல் பிழை செய்தது. .தி.மு..வை அடிமைகள் மற்றும் பலர் என்று விஜய் பேசிய பின் விழித்தது. கரூர் பெருந்துயர நிகழ்வு சட்டமன்ற விவாதத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி குரல் உயர்த்தியது பலே இரகம்!

90 சீட்டுகள். 2.5 ஆண்டுகள் முதல்வர் எனப் பேசப்பட்டதாக, .வெ..வின் ஆதவ் அர்ஜூனா பேசியபோது, எடப்பாடி பழனிச்சாமி மறுத்தார். பா..., .வெ.., .தி.மு.. கூட்டணி எனப்  பேசிய போது எடப்பாடி பழனிச்சாமி அது என்.டி.. கூட்டணி  என்பதற்கான ஆட்சிக்கான அச்சாரம் என உணர்ந்து விழித்துக் கொண்டார், மறுத்தார்.

பிரதமர் மோடி மதுராந்தகம், மதுரை, திருச்சி  என எங்குமேஎடப்பாடி பழனிச்சாமி அவர்களே...’ என விளிக்க மறுக்கிறார். தேர்தல் களத்தில்  என்.டி.. கூட்டணி என்பது இரு வழிகளில் பயணிக்கிறது. தமிழ்நாட்டில் என்.டி.. கூட்டணி ஆட்சிக்குப் பா... முயற்சிக்கிறது. ஒன்றியத்தில் 21 மாநிலங்களில் பா... ஆட்சி நடந்தாலும், அவர்களுக்குப் பெரும் தலைவலியே தமிழ்நாட்டில் உள்ள தி.மு.. என்ற கட்சியும், அவர்களது ஆட்சியும்தான். தி.மு.. ஒன்றிய அரசின் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் எதிர்க்கிறது. மாநில உரிமை பேசுகிறது. இந்தித் திணிப்பிற்குப் போராடுகிறது. மாநில ஆளுநர்கள் அதிகாரம், முடிவெடுக்கும் காலம், இட ஒதுக்கீடு என உச்ச நீதிமன்றம் சென்று ஒன்றிய அரசிற்கு எதிரான தீர்ப்புகளைப் பெறுகிறது. எதிர்க்கட்சி முதல்வர்களுக்குக்  கடிதங்கள் எழுதுவது, திரட்டுவது, ஒன்றிய அரசிற்கு எதிரான கூட்டங்களை ஒருங்கிணைப்பது என வலுவாக உள்ளது.

பா...வின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். கொள்கையான தி.மு..வின் சனாதன எதிர்ப்பு என்பதும் அடிப்படை எதிர்வீச்சாக அமைகிறது. .தி. மு..வின் வெற்றியோ, தோல்வியோ, இரண்டாம்  கட்ட .தி.மு.. தலைவர்கள் வழி .தி.மு..வை முற்றிலும் கைக்கொள்ளும் பா... திட்டமும், என்.டி.. கூட்டணியின் உள்ளடக்கமாக உள்ளது. ‘அண்ணா தி.மு..’ என்பதுஅமித்ஷா தி.மு..’ வாகி விட்டது. தமிழக என்.டி.. கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் அமித்ஷா அவர்களே எடுக்கிறார் என்பதே நடப்பு தமிழ்நாட்டு அரசியலாகும்.

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் டெல்லிக்குப் பணிந்த மாநில அரசால் ஒன்றிய அரசின் நிதி, மாநிலங்களுக்கான திட்டங்கள் என்பதில் இரட்டை இஞ்சின் எனப் புதுப்புரளி கிளப்புகிறார்கள். வட இந்திய மாநிலங்களின் வளர்ச்சி, கல்வி, சட்டம் ஒழுங்கு, மகளிர் நிலை, சாலை வசதி, போக்குவரத்து இவைகளைக் கண்ணோக்கி ஆய்ந்தால், அத்தனையும் முழுக்க முழுக்க வடிகட்டிய பொய் என அறிய வரும்.

அண்மைக்காலத்தில், புது டெல்லி உத்தம் நகரில் நடந்த கலவரக் காணொளி பார்த்தேன். நான்கு மணி நேரமாகத் தொடர்ந்து, மதக்கலவரம் நடக்கிறது. வீடுகள் தாக்கப்படுகிறது. இருமதப் பிரிவினரும் வெறிகொண்டு தாக்கிக்கொள்கிறார்கள். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இந்திய தலைநகர், புது டெல்லியில் இரட்டை எஞ்சின் ஆட்சிதான் நடக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற இரட்டை எஞ்சின் நடக்கும் மாநிலங்களின் வறுமை உலகம் அறிந்ததே. இரட்டை எஞ்சின் சர்க்கார் நடக்கும் மாநிலங்களுக்குப் பெரும் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. அது கடலில் கரைத்த பெருங்காயமானது  என்பதே நாட்டு நடப்பாகும்.

.தி.மு.. மூகமூடி அணிந்து வருகிற என்.டி.. கூட்டணியை அடையாளம் காண்பது காலகட்டாயமானது. மத நல்லிணக்கம், சமூக நீதி என்பதில் ஒன்றிணைவோம். சிறுபான்மை மக்களாகிய நாம், மதச்சார்பற்றக் கூட்டணியை ஆதரிப்போம்.